ஒரு அநியாயக்கார அரசன் ஒருவன், தன்னை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக ஒரு குடிமகனைக் கைது செய்து "மூன்று மீட்டர் மாத்திரமே பரப்பளவான ஒரு தனிச் சிறையில்" அடைக்கும்படி கட்டளையிட்டான்.
நிரபராதியான அந்த குடிமகன் சிறையில் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தான்.
"நான் நிரபராதி அரசே.!"
இந்த நாட்டில் கருத்து சொன்னது ஒரு குற்றமா.?
ஏன் என்னைக் கைது செய்தீர்கள்? ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்கள்?
என்று உரக்கக் கதறினான்.
பின்னர் அவனை "ஒரு மீட்டர் மாத்திரமே விசாலமான ஒரு தனிச் சிறையில்" அடைக்கும்படி கட்டளை வந்தது.
மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தான் அந்தக் குடிமகன்.
ஆனால் இம்முறை "நான் நிரபராதி" என்ற வாதத்தை மறந்து விட்டான்.
"இது என்ன கொடுமை.! இந்தச் சிறையில் எப்படி இருப்பது.? உறங்குவது.? அமர்ந்து கொண்டுதானே உறங்க முடியும்.? இது உங்களுக்கே தப்பாகத் தெரியவில்லையா.?" எனக் கதறினான்.
சினம் கொண்ட காவலர்கள் வேறு ஒரு முடிவு செய்தார்கள்.
இன்னும் "ஒரு சிறைக் கைதி"யை அவனோடு சேர்த்து அந்தச் சிறிய கூட்டில் அடைத்து விட்டார்கள்.
இப்போது இரண்டு பேரும் இணைந்து கூக்குரலிட்டனர்.
"எங்களால் முடியாது. நாங்கள் மூச்சுத்திணறி செத்து விடுவோம். உங்களுக்கு ஈவிரக்கம் எதுவும் இல்லையா?" என புலம்பினார்கள் இப்போது.
மேலும் சினம் கொண்ட காவலர்கள் ஒரு "பன்றியை" யும் சேர்த்து அவர்களோடு சிறையில் அடைத்து விட்டார்கள்.
விரக்தியடைந்த அவர்கள், "நாங்கள் இந்த அசிங்கத்தோடு இந்தச் சிறிய கூட்டில் எப்படி இருப்பது.?
தயவு செய்து இந்த பன்றியை மாத்திரமாவது வெளியே எடுத்துவிடுங்கள்" எனக் கெஞ்சிக் கேட்டார்கள்.
இப்போது தயவு காட்டிய காவலர்கள் "பன்றியை" அந்த அறையிலிருந்து வெளியே எடுத்தார்கள்.
அடுத்த நாள் அரசன் அந்தப் பக்கமாக வந்து, "இப்போது உங்கள் நிலை எப்படி?" என்று விசாரித்தார்.
"நாங்கள் நல்ல சுகமாக இருக்கிறோம். எங்கள் பெரிய பிரச்சினை தீர்ந்து விட்டது" என்று பதில் கூறினார்கள் அவர்கள்.
இதுவே "பன்றிமயக் கோட்பாடு" எனப்படுகிறது.
அது தேவைப்படும் இடங்களில் இது மாதிரியே அமுல்படுத்தப்படுகிறது.
பன்றியை மாத்திரம் எடுத்து விட்டால் போதும் என்கிற வகையிலேயே, கோரிக்கையிலேயே பொதுவாக ஆர்ப்பாட்டங்கள் முடிந்து விடுகிறது. நினைத்ததை சாதித்தோம் என்கிற உணர்வு மேலோங்கி விடுகிறது.
அதற்கு முன்னால் இருந்த விவகாரம், அதற்கு முன்னால் இருந்த பிரச்சனை, அதற்கு முன்னால் இருந்த மூல விவகாரம், அதற்கு முன்னால் இருந்த இன்னும் பல எல்லாம்கள் எல்லாம்,
பிரச்சனைகளால் ஈர்க்கப்பட்டு போராடியவர்களால் மறக்கடிக்கப்படுகிறது.
"பன்றிமயக் கோட்டாபாடுகள் மூலம்" ஆளும் வர்க்கத்தினரால்.?
பிரச்சனைகளைக் கண்டு பொங்கி எழுபவர்களை, முடிவில் "பன்றிமய கோட்பாடு" மூலம் நிர்மூலமாக்கப்பட்டு, எதற்காக போராடினார்களோ அதை மறந்து தங்களை காத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளுவதே இந்த "பன்றிமயக் கோட்பாடு"
1994 ஜனவரி 17ல் நில நடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெரிதும் பாதிக்கப் பட்டது.
இரண்டு மூன்று நாட்கள் கழித்தும் அங்கு நிலைமை சரியாகவில்லை.
தெருக்களைக் வாகனங்கள் கடக்க மிக அதிக நேரம் தேவைப்பட்டது.
அங்கங்கே கார்கள் மணிக்கணக்கில் நின்றிருந்தன.
எங்கே சிக்கல் என்றுத் தெரியவில்லை.
ஒரு பிரபல தொலைக் காட்சி சேனல் நிருபர்கள், நின்று கொண்டிருந்த ஒவ்வொரு காரின் ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டி அழைத்து பயணிகளின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு காரோட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தார். "இந்த கலிபோர்னியா மாகாணமே மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாத இடமாகி விட்டது.!"
முதலில் தீ பரவியது.
பிறகு வெள்ளம்.
இப்போதோ பூகம்பம்.
காலையில் எத்தனை சீக்கிரம் வீட்டை விட்டுக் கிளம்பினாலும் அலுவலகம் சென்று சேர தாமதம் தான் ஆகிறது. சே, என்ன தான் செய்வது? என்று மனிதர் பொரிந்து தள்ளி விட்டார்.
அந்த நிருபர் அடுத்த காரின் ஜன்னலைத் தட்டி இதே கேள்வியைக் கேட்டார்.
சில வருடங்களுக்கு முன் ஒரு நாள், உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் கோடைகால ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தமாக எம்.ஜி.ஆர்
பாடல்களை ஒருவர் பாடுவது கேட்க ஆரம்பித்தது.
சாதாரணமான குரல் தான் அது. ஆனால் உற்சாகமாகப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன்.
குப்பை எடுத்துச் செல்லும் லாரி ஒன்று சற்று தள்ளி நின்றிருந்தது.
மூன்று துப்புரவு ஊழியர்கள் பெரிய குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை கூடைகளில் எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் பல முறை வந்து குப்பைகளை அள்ளி எடுத்துச் சென்றார்கள்.
ஒவ்வொரு முறையும் அந்த லாரியில் போட்டு வர வேண்டி இருந்தது.
அவர்களில் ஒருவர் தான் சத்தமாக எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடியவர்.
மற்ற இரு ஊழியர்களும் சுரத்தே இல்லாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்க இவரோ அந்த வெயிலையும், செய்யும் வேலையின் பளுவையும்
பொருட்படுத்தவேயில்லை.
"கீழே சொல்லப்பட்டவை யாவும் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டவை என்றால் உங்களால் நம்ப முடியாது."
இவை ஆருடம் அல்ல, ஏற்ற தாழ்வுடைய தன் சமூகத்தைப் பற்றி சதா காலமும் சிந்தித்த ஒரு கிழவனின் பெருங் கனவு அது.!
"போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதி வேக சாதனமுமாகவே இருக்கும்"
"கம்பியில்லா தந்தி சாதனம் ஒவ்வொரு சட்டைப் பையிலும் இருக்கும்"
"உருவத்தை தந்தியில் அனும்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்"
"மேற்கண்ட சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் தொடர்பு கொள்ள முடியும்.
உலகம் எங்கும் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும். உணவுகளுக்குப் பயன்படும்படியாக உணவு, சத்துப் பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும்"
"மனிதனுடைய "ஆயுள் நூறு" வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம்.