தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பின் குற்றச் செயல்கள் அதிக அளவில் நடந்து வருகின்றது. கடந்த 10 நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் ஒரு பெண் உட்பட 4 பேர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஸ்வேதா என்ற 19 வயது மாணவி ஒருவர் ஒரு
தலை காதல் விவகாரத்தால் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கடந்த13-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் 38 வயது சங்கரசுப்ரமணியம் என்பவரும், அடுத்த 2 நாளில் மாரியப்பன் என்கிற 32 வயது விவசாயியும், 22-ம் தேதி, திண்டுக்கல்லில் 70 வயது நிர்மலாதேவி என்ற பெண்ணும்,
மறுநாள் அதே மாவட்டத்தில் ஸ்டீபன் என்கிற 38 வயது ஜவுளி வியாபாரியும் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி, கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் தினமும் குறைந்தபட்சம் 2 படுகொலைகள் நடப்பதாகவும், அந்தக் கணக்கின்படி பார்த்தால் இதுவரை குறைந்த பட்சம் 180 முதல் 200
கொலைகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதுவும் ஒருவரின் தலையை துண்டித்து கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிகள் துணிகிறார்கள் என்றால், அவர்கள் எத்தகைய வன்மத்தை கொண்டிருக்க வேண்டும் என்ற கேள்வியையும் இந்த கொலைச் சம்பவங்கள் எழுப்புகின்றன. இப்படி பயங்கரவாதிகள் போல்
தலையைத் துண்டித்துக் கொலை செய்பவர்கள் பொதுவில் கூலிப்படையினர் தாம். ஆணவக்கொலை, கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை, முன்விரோதத்தில் கொலை, பழிக்குப் பழிவாங்க கொலை, சொத்து தகராறில் கொலை, பணத்துக்காக ஆட்களை கடத்திக் கொலை என்று கொலைக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போனாலும் கூட ஒருவரின்
உயிரை எடுப்பது மிகவும் வேதனை தரும் ஒன்று. கொலை மட்டுமின்றி சாப்பிட்டதற்கு காசு கேட்டால், உணவு பரிமாற தாமதம் ஏற்பட்டால் உணவகங்களை (திமுகவினர்)சூறையாடுதல், கடைகள், வாகனங்களை அடித்து நொறுக்குதல், வீடு புகுந்து தாக்குதல், பெண்களிடம் தங்க சங்கிலி அறுப்பு, கத்தியை காட்டி மிரட்டி செல்
போன்களை பறித்தல், வீடு, கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு போன்ற குற்றச் செயல்களும் தமிழகத்தில் அன்றாட நிகழ்வுகளாக உள்ளன. இது குறித்து தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்த அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக ஆங்காங்கே அன்றாடம் கொலை
குற்றங்கள் நிகழ்ந்து வருவது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அதுமட்டுமின்றி சட்டம் -ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் காவல் துறையினரையே திருப்பித் தாக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்றும் இருக்கின்றன என்று ஒபிஎஸ் கூறியிருந்தார். இங்கே மிக முக்கியமான நிகழ்வை
குறிப்பிட்டாக வேண்டும். தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்ட ரவி, சட்டம்- ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவை சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து பேசினார். பொதுவாக, புதிய ஆளுநர்கள் பதவி ஏற்ற பின்பு மாநில முதலமைச்சரையோ அல்லது தலைமைச் செயலாளரையோதான் அழைத்துப்
பேசுவது வழக்கம். மாறாக ஆளுநர் ரவி, டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதன்பின் முதலமைச்சர் ஸ்டாலினை, சைலேந்திரபாபு சந்தித்துப் பேசினார். இவர்கள் சந்திப்பின்போது பேசப்பட்ட விவரங்களும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தான் தமிழக
போலீசார் அதிரடியாக ரவுடிகள் வேட்டையில் இறங்கினர். தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்கும் விதமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி என பல மாவட்டங்களில் நள்ளிரவில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் இந்த திடீர் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் 256 அரிவாள், கத்தி, 3 துப்பாக்கிகள், கஞ்சா உள்ளிட்ட ஏராளமான போதைப் பொருட்களும் பிடிபட்டன. கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சிக்கிய 560 ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர். 900க்கும் மேற்பட்ட ரவுடிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த வேட்டையின்போது போலீசார் ரெய்டுக்கு வருவதை முன்
கூட்டியே தெரிந்துகொண்ட 300 ரவுடிகள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவர்களையும் கண்டிப்பாக பிடித்தே ஆகவேண்டும் என்கிற உத்தரவு உள்ளூர் போலீசாருக்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஆளுநர் ரவி எதற்காக தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை வரவழைத்துப் பேசினார் என்பதற்கான காரணத்தை இதன் மூலம்
அறிந்துகொள்ள முடிகிறது. இதுதொடர்பாக தமிழக காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஆளுநர் ரவி போராளி குழுக்கள் நிறைந்த நாகாலாந்தில் ஆளுநராக பணியாற்றியவர் என்பது தெரிந்த விஷயம். மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சரியாக இருக்கவேண்டும் என்று கறார்
காட்டுபவர். அதேபோல் போதைப் பொருட்கள் நடமாட்டம், பயங்கரவாதிகள் ஊடுருவல், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பிரிவினை வாதத்தை தூண்டுவது போன்றவை இருக்கக்கூடாது என்பதிலும் மிகவும் கண்டிப்பானவர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்து இருப்பதை பதவியேற்ற சில
நாட்களிலேயே அவர் தெரிந்து கொண்டார். அதனால்தான் மாநில டிஜிபியை வரவழைத்து பேசவும் செய்தார். அவர் காட்டிய அதிரடி காரணமாகத்தான் தற்போது ரவுடிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். தனது வரம்புக்கு உட்பட்டு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அவற்றையெல்லாம் அவர் எடுப்பார். சர்வதேச அளவில்
போதைப்பொருள் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருவதாகவும் ஆளுநர் ரவிக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்திருக்கிறது. ஆளுநர் பதிவி எதற்கு?இந்த ஆளுநரை மாற்று என்று கோஷம் போட்ட தமிழக கட்சி தலைவர்கள் எல்லாம் ஏன் அப்படி கோஷம் போட்டார்கள் என்பது இப்பொழுது புரிகிறது அல்லவா! அரசியல்வாதிகளே
ரௌடிகளின் தலைவர்கள். பதவி ஏற்ற 4 மாதங்களில் செய்யாததை எப்படி ஒரே நாளில் இத்தனை ரொளடிகளை கைது செய்யமுடிந்தது இந்த அரசால்? இதை இந்த அரசு முன்பே செய்திருந்தால் எத்தனையோ உயிரை காப்பாற்றி இருக்கலாமே! இப்பொழுது புரிகிறதா ஆளுநர் பதவி எதற்கு, அதுவும் அரசியல்வாதி அல்லாத ஐபிஎஸ் அதிகாரி
தமிகத்திற்கு ஆளுநராக போட்டது எதற்கு என்று. தொடரட்டும் இந்த நல்லாரம்பம்.
ஆளுநர் அவர்களுக்கு நன்றி..!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்
அசோகவனத்தில் அனுமார் சீதாப் பிராட்டியின் வேதனையைக் கண்டு, அன்னையே! கவலை படாதீர்கள், இராமன் உங்களை விரைவில் மீட்டுச் செல்வார். அப்படி இல்லை என்றால் என் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள் நான் உங்களை இராமனிடம் சேர்த்து வைக்கிறேன் என்றார். இதைக் கேட்டு சீதை சந்தோஷம்
அடைந்தாலும் அனுமாரைப் பார்த்து, நூறு யோஜனை விஸ்தீர்ணமுள்ள இந்த கடலைத் தாண்டி என்னை கிஷ்கிந்தைக்குத் தூக்கி சொல்வது என்பது விநோதமாக உள்ளது என்றார். அனுமன் உடனே தான் அளவற்ற பலமுடையவன் என்றும் பிறரால் செய்யக் முடியாத காரியங்களை செய்பவன் என்று அன்னைக்கு தெரிய நியாயமில்லை. அதனால் தான்
அஷ்டமா சித்தி பெற்றவன் என்பதை உணர்த்துதல் வேண்டும் என்று நினைத்தார். உடனே மரத்திலிருந்து குதித்து தன் உருவத்தை பெரிதாக்கி தன் விஸ்வரூபத்தை காட்டினார். மேரு பர்வதம் போல் ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டு அனுமார் அன்னை முன் நின்றார். மிகப் பெரிய உருவத்துடன் மலை போன்ற தேகத்துடன் எல்ல
கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள சிவாலயங்கள் பற்றிய பதிவு:
இழந்த செல்வத்தை மீட்டு தரும் #தென்குரங்காடுதுறை சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் ஆபத்சகாயேஸ்வரர் இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால் துரத்தப்பட்ட சுக்ரீவன் இவரை
வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து இழந்த செல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமாகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால் இத்தலம் தென்குரங்காடுதுறை என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.
செல்வம் பெற வணங்கவேண்டிய தலம்
#திருவாடுதுறை கும்பகோணம் – மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் திருவாடுதுறை. ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத்தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம்பொருளும் 1000 பொற்காசுகள்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#புரட்டாசிஸ்பெஷல் ஶ்ரீ அன்னமாச்சாரியார் 15ம் நூற்றாண்டில் ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாள்ளபாக்கம் எனும் கிராமத்தில் சூரி - அக்கலாம்பா தம்பதியருக்குப் பிறந்த வைணவத் தொண்டர். திருமலை திருவேங்கடமுடையான் கோயிலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர்,
திருவேங்கடவன் மீது பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்ற புகழ்பெற்றவை. சுபத்ரா கல்யாணம் என்ற நூலை இயற்றிய தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான திம்மக்கா என்பவர் அன்னமாச்சாரியாரின் மனைவியாவார். அன்னமாச்சாரியார் தென்னிந்திய இசையில் தோற்றுவித்த மரபுகள் பல, பின்வந்தோரால்
வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன. பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்றவை இவரால் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது. இவருடைய மகன் பெரிய திருமாலாச்சாரியார், பேரன் சின்னையர் ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீ வேதநாராயண கோயில் அல்லது மத்ஸ்ய நாராயணகோயில் என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் நாகலபுரம் நகரில் அமைந்துள்ளது. இங்கு மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரத்தை குறிக்கும் வகையில் மீன் உருவில் உள்ளார். இந்தப் பெருமாளை சூரியன் வழிபடுவது ஒரு
சிறப்பு. இது ஒரு வானியல் அற்புதமாகக் கருதப்படுகிறது. வருடத்தில் நின்று நாட்கள் ஒளிரும் சூரிய கதிர்கள் கர்பக்கிரகத்தில் உள்ள வேதநாராயணர் மீது நேரடியாக விழுகின்றது. காலையில் கோயில் கோபுரத்தில் தொடங்கி மாலையில் கர்பக்கிரகத்தின் மீது 360 அடி தூரம் பயணிக்கிறது. முதல் நாளில் மாலை
6 மணி முதல் 6.15 வரை கதிர்கள் பெருமாளின் பாதங்களிலும் இரண்டாவது நாள் வயிற்றுப் பகுதியிலும், மூன்றாம் நாள் அதே நேரத்தில் கிரீடத்திலும் விழுகிறது. கர்பக்கிரகத்தில் பெருமாள் பாதி மனித உருவில் இடுப்புக்குக் கீழே மீன் உருவில் தரிசனம் தருகிறார். தாயார் பெயர் வேதவல்லி தாயார். இக்கோயிலை
திருமாலின் பத்து சயன தலங்கள்: 1. ஜல சயனம்- 107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது. திருமாலின் சயனக்கோலங்களில் மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத இடம் ஜல சயனம். 2. தல சயனம்- 63 வது திவ்ய தேசமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு
திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து தரையில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார். 3. புஜங்க சயனம் (சேஷசயனம்)- முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார்.
4. உத்தியோக சயனம்- 12வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. வேறு எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். 5. வீர சயனம்- 59வது திவ்ய
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்#புரட்டாசிஸ்பெஷல் ஏழுமலை எம்பெருமானை தனியாக வழிபடுவதைவிட தாயாருடன் சேர்த்து வழிபடும் போது பெருமாளின் அனுக்கரகம் நம் மேல் அருவி போல் கொட்டுகிறது. இதை நம்மாழ்வார் 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறையும் மார்பா' என்று தாயாரை முன்னிட்டு சரணாகதி
செய்கிறார். இப்படி எம்பெருமான் மார்பிலே அமர்ந்தது தன் சுகத்திற்க்காகவா என்றால் இல்லை. நாம் சுகப்பட வேண்டும் என்பதற்காகத்தான். பொதுவாக ஆழ்வார்கள் திவ்விய தேசத்திலும் பெருமாளை சேவிக்கும் போது பக்தி மேம்பட்டு கொஞ்சி மகிழ்வார்கள். ஆனால் திருமலை வந்தால் மட்டும் கதறி அழுது சரணாகதி
செய்து விடுகின்றனர். உதாரணமாக நம்மாழ்வார் மலையப்பனிடம்,
திருவேங்கடத்தானே
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
என கதறி சரணாகதி செய்கிறார். இந்த மலையப்பனிடம் ஆழ்வார்கள் என்ன விசேஷத்தை பார்த்தார்கள்? பொதுவாக மற்ற திவ்ய தேசங்களில் பெருமாள் ஒரு சன்னதியிலும்,