#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்
அசோகவனத்தில் அனுமார் சீதாப் பிராட்டியின் வேதனையைக் கண்டு, அன்னையே! கவலை படாதீர்கள், இராமன் உங்களை விரைவில் மீட்டுச் செல்வார். அப்படி இல்லை என்றால் என் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள் நான் உங்களை இராமனிடம் சேர்த்து வைக்கிறேன் என்றார். இதைக் கேட்டு சீதை சந்தோஷம்
அடைந்தாலும் அனுமாரைப் பார்த்து, நூறு யோஜனை விஸ்தீர்ணமுள்ள இந்த கடலைத் தாண்டி என்னை கிஷ்கிந்தைக்குத் தூக்கி சொல்வது என்பது விநோதமாக உள்ளது என்றார். அனுமன் உடனே தான் அளவற்ற பலமுடையவன் என்றும் பிறரால் செய்யக் முடியாத காரியங்களை செய்பவன் என்று அன்னைக்கு தெரிய நியாயமில்லை. அதனால் தான்
அஷ்டமா சித்தி பெற்றவன் என்பதை உணர்த்துதல் வேண்டும் என்று நினைத்தார். உடனே மரத்திலிருந்து குதித்து தன் உருவத்தை பெரிதாக்கி தன் விஸ்வரூபத்தை காட்டினார். மேரு பர்வதம் போல் ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டு அனுமார் அன்னை முன் நின்றார். மிகப் பெரிய உருவத்துடன் மலை போன்ற தேகத்துடன் எல்ல
அற்ற பலத்தையும் வஜ்ராயுதம் போல் பற்களையும் நகங்கள் உடையவராய் அன்னையைக் பார்த்து, தாயே இந்த லங்கையையும், அதிலுள்ள கட்டிடங்கள் பிராணிகள் அவைகளுக்கு அதிபதியான இராவணன் இவையாவற்றையும் துரும்பு போல தூக்கி எடுத்து செல்ல சக்தி உண்டு. இலங்கை இறங்கிய போது பெரிய உருவத்துடன் இறங்கினேன்! பின்
அரக்கர்கள் அரக்கிகள் காவல் கொண்ட நகரத்தில் உங்களை தேடுவதற்காக என் வடிவை சுருக்கிக் கொண்டேன். எவரும் என்னைப் பார்க்காமலிருக்கவும் உங்களிடம் சம்பாஷனை செய்ய என் உருவினை சிறியதாக்கி கொண்டேன். என் பெரிய உருவத்தைப் பாருங்கள் என்று தனது விஸ்வரூபத்தைக் காட்டினார்.
வானர சிரேஷ்டரே! உன்
பலத்தையும் பராக்கிரமத்தையும் நான் அறிவேன். உன்னைத் தவிர வேறு சாமான்ய புருஷன் தனியாக இந்த பெருங்கடலைக் தாண்டி, கோர அரக்கர்கள் நிறைந்த இந்த இலங்கையில் பயமில்லாமல் பிரவேசித்து சாமர்த்தியமாய் என்னைக் காண முடியுமா? என்னை முதுகில் தூக்கி செல்ல உனக்கு சக்தியுள்ளது என்பதை நான் அறிவேன்
என்றாள் சீதை. ஆனால் உன்னோடு வருவது உத்தமுமில்லை. என்னை என் கணவர் தான் அதாவது அண்ணல் இராமன் தான் அழைத்து செல்ல வேண்டும். நீ அழைத்து சென்றால் அவர் கீர்த்திக்கு குறைவில்லையா என்றாள். அவர் நாமம் தவிர எனக்கு வேறு ஸ்மரணமில்லை. இப்படி செய்து இராமனின் பெருமை நன்கு பரவிட வேண்டும். அதனால்
தான் இங்கே சிறையில் இருக்கிறேன். இல்லாவிடில் என் சொல்லாலேயே மூன்று உலகங்களையும் சுட்டு எரித்து சாம்பலாக்கி விடுவேன். இன்னும் ஒரு மாதம் மட்டும் உயிரோடு இருப்பேன் அதற்குள் வரவில்லையெனில் நான் உயிர் மாய்த்து கொள்வேன் என்றாள்.
ஜயஜய ராமா ஸீதா ராமா
ஜயஜய ராமா ஸீதா ராமா
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள சிவாலயங்கள் பற்றிய பதிவு:
இழந்த செல்வத்தை மீட்டு தரும் #தென்குரங்காடுதுறை சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் ஆபத்சகாயேஸ்வரர் இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால் துரத்தப்பட்ட சுக்ரீவன் இவரை
வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து இழந்த செல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமாகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால் இத்தலம் தென்குரங்காடுதுறை என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.
செல்வம் பெற வணங்கவேண்டிய தலம்
#திருவாடுதுறை கும்பகோணம் – மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் திருவாடுதுறை. ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத்தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம்பொருளும் 1000 பொற்காசுகள்
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பின் குற்றச் செயல்கள் அதிக அளவில் நடந்து வருகின்றது. கடந்த 10 நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் ஒரு பெண் உட்பட 4 பேர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஸ்வேதா என்ற 19 வயது மாணவி ஒருவர் ஒரு
தலை காதல் விவகாரத்தால் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கடந்த13-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் 38 வயது சங்கரசுப்ரமணியம் என்பவரும், அடுத்த 2 நாளில் மாரியப்பன் என்கிற 32 வயது விவசாயியும், 22-ம் தேதி, திண்டுக்கல்லில் 70 வயது நிர்மலாதேவி என்ற பெண்ணும்,
மறுநாள் அதே மாவட்டத்தில் ஸ்டீபன் என்கிற 38 வயது ஜவுளி வியாபாரியும் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி, கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் தினமும் குறைந்தபட்சம் 2 படுகொலைகள் நடப்பதாகவும், அந்தக் கணக்கின்படி பார்த்தால் இதுவரை குறைந்த பட்சம் 180 முதல் 200
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#புரட்டாசிஸ்பெஷல் ஶ்ரீ அன்னமாச்சாரியார் 15ம் நூற்றாண்டில் ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாள்ளபாக்கம் எனும் கிராமத்தில் சூரி - அக்கலாம்பா தம்பதியருக்குப் பிறந்த வைணவத் தொண்டர். திருமலை திருவேங்கடமுடையான் கோயிலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர்,
திருவேங்கடவன் மீது பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்ற புகழ்பெற்றவை. சுபத்ரா கல்யாணம் என்ற நூலை இயற்றிய தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான திம்மக்கா என்பவர் அன்னமாச்சாரியாரின் மனைவியாவார். அன்னமாச்சாரியார் தென்னிந்திய இசையில் தோற்றுவித்த மரபுகள் பல, பின்வந்தோரால்
வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன. பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்றவை இவரால் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது. இவருடைய மகன் பெரிய திருமாலாச்சாரியார், பேரன் சின்னையர் ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீ வேதநாராயண கோயில் அல்லது மத்ஸ்ய நாராயணகோயில் என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் நாகலபுரம் நகரில் அமைந்துள்ளது. இங்கு மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரத்தை குறிக்கும் வகையில் மீன் உருவில் உள்ளார். இந்தப் பெருமாளை சூரியன் வழிபடுவது ஒரு
சிறப்பு. இது ஒரு வானியல் அற்புதமாகக் கருதப்படுகிறது. வருடத்தில் நின்று நாட்கள் ஒளிரும் சூரிய கதிர்கள் கர்பக்கிரகத்தில் உள்ள வேதநாராயணர் மீது நேரடியாக விழுகின்றது. காலையில் கோயில் கோபுரத்தில் தொடங்கி மாலையில் கர்பக்கிரகத்தின் மீது 360 அடி தூரம் பயணிக்கிறது. முதல் நாளில் மாலை
6 மணி முதல் 6.15 வரை கதிர்கள் பெருமாளின் பாதங்களிலும் இரண்டாவது நாள் வயிற்றுப் பகுதியிலும், மூன்றாம் நாள் அதே நேரத்தில் கிரீடத்திலும் விழுகிறது. கர்பக்கிரகத்தில் பெருமாள் பாதி மனித உருவில் இடுப்புக்குக் கீழே மீன் உருவில் தரிசனம் தருகிறார். தாயார் பெயர் வேதவல்லி தாயார். இக்கோயிலை
திருமாலின் பத்து சயன தலங்கள்: 1. ஜல சயனம்- 107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது. திருமாலின் சயனக்கோலங்களில் மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத இடம் ஜல சயனம். 2. தல சயனம்- 63 வது திவ்ய தேசமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு
திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து தரையில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார். 3. புஜங்க சயனம் (சேஷசயனம்)- முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார்.
4. உத்தியோக சயனம்- 12வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. வேறு எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். 5. வீர சயனம்- 59வது திவ்ய
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்#புரட்டாசிஸ்பெஷல் ஏழுமலை எம்பெருமானை தனியாக வழிபடுவதைவிட தாயாருடன் சேர்த்து வழிபடும் போது பெருமாளின் அனுக்கரகம் நம் மேல் அருவி போல் கொட்டுகிறது. இதை நம்மாழ்வார் 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறையும் மார்பா' என்று தாயாரை முன்னிட்டு சரணாகதி
செய்கிறார். இப்படி எம்பெருமான் மார்பிலே அமர்ந்தது தன் சுகத்திற்க்காகவா என்றால் இல்லை. நாம் சுகப்பட வேண்டும் என்பதற்காகத்தான். பொதுவாக ஆழ்வார்கள் திவ்விய தேசத்திலும் பெருமாளை சேவிக்கும் போது பக்தி மேம்பட்டு கொஞ்சி மகிழ்வார்கள். ஆனால் திருமலை வந்தால் மட்டும் கதறி அழுது சரணாகதி
செய்து விடுகின்றனர். உதாரணமாக நம்மாழ்வார் மலையப்பனிடம்,
திருவேங்கடத்தானே
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
என கதறி சரணாகதி செய்கிறார். இந்த மலையப்பனிடம் ஆழ்வார்கள் என்ன விசேஷத்தை பார்த்தார்கள்? பொதுவாக மற்ற திவ்ய தேசங்களில் பெருமாள் ஒரு சன்னதியிலும்,