கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள சிவாலயங்கள் பற்றிய பதிவு:
இழந்த செல்வத்தை மீட்டு தரும் #தென்குரங்காடுதுறை சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் ஆபத்சகாயேஸ்வரர் இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால் துரத்தப்பட்ட சுக்ரீவன் இவரை
வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து இழந்த செல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமாகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால் இத்தலம் தென்குரங்காடுதுறை என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.
செல்வம் பெற வணங்கவேண்டிய தலம்
#திருவாடுதுறை கும்பகோணம் – மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் திருவாடுதுறை. ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத்தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம்பொருளும் 1000 பொற்காசுகள்
கொண்ட பொற்கிழியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.
கடன், சங்கடங்கள் போக்கும் #திருபுவனம்சரபேஸ்வரர் தீராத கடன் தொல்லைகள் தீர, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து விடுபட, வழக்குகளில் வெற்றி பெற கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை வழித் தடத்தில் இருக்கும்
திருபுவனம் சென்று அங்கு தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபேஸ்வரரை வழிபடலாம். பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம். வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர் துயர் துடைப்பவர். சூலினி, பிரத்தியங்கரா
என இரு தேவியருடன் காட்சி தரும் சரபரை 11 விளக்கு, 11 சுற்று, 11 வாரம் என தரிசனம் செய்ய வழிபடுபவரது சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். ஞாயிற்று கிழமைகளின் ராகு கால வேளை சரபர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நேரம்.
வறுமை நீக்கும் கடன் நிவர்த்தி தலமாம் #திருச்சேறை ஒருவர் முற்
பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறை செந்நெறியப்பர்
ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள ருண விமோசன லிங்கேஸ்வரர். கும்பகோணம் – திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது தனி சிறப்பு!
பிரிந்துள்ள
தம்பதியர் ஒன்று சேர, மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத்தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள #ஸ்ரீவாஞ்சியம். காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே
திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர்
இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது.
பிதுர் தோஷம் நீக்கும் ஆவூர் பஞ்ச பைரவர்கள் கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது
#ஆவூர்பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது.(ஆ என்றால் பசு).
இத்திருத்தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள 5 பைரவ மூர்த்திகள்.
தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது. இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த பிதுர் தோஷ நிவர்த்தியாகும்.
மரண கண்டம் நீக்கும் #திருநீலக்குடி
ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள் தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக்கோயில், கும்பகோணம்-
காரைக்கால் சாலயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள, திருநீலகண்டராய் சிவ பெருமான் அருளும் திருநீலக்குடியாகும். மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும். மரண பயம் நீங்க இத்தல
இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.
மாங்கல்ய தோஷம் நீக்கும் பஞ்சமங்கள ஷேத்திரம் #திருமங்கலக்குடி
நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர். முதலாம்
குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான். இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத்தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள். மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம்
செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான். மந்திரியின் உயிரற்ற உடலை இத்தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கு இணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத்தல நாயகி. இதனால் இவள் மங்களாம்பிகை எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் பிராண வரதேஸ்வரர் எனவும் அழைக்கப்
படுகின்றனர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும். வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத்தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே இத்
தலம் பஞ்ச மங்கள ஷேத்திரம் எனப்படுகிறது.
பெண் பாவம் தீர்க்கும் #திருவிசநல்லூர்
திருவியலூர் எனப்படும் திருவிசநல்லூரில் சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார். இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப் பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும்.
பெண்களின் பாவதிற்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர். நந்தி தேவர், எமதர்மனை விரட்டி அடித்த இத்தலம் மரண பயம் நீக்கும் திருத்தலமாகும்.
திருச்சிற்றம்பலம்🙏🏾
*ரிண விமோசன லிங்கம் ருண அல்ல.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்
அசோகவனத்தில் அனுமார் சீதாப் பிராட்டியின் வேதனையைக் கண்டு, அன்னையே! கவலை படாதீர்கள், இராமன் உங்களை விரைவில் மீட்டுச் செல்வார். அப்படி இல்லை என்றால் என் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள் நான் உங்களை இராமனிடம் சேர்த்து வைக்கிறேன் என்றார். இதைக் கேட்டு சீதை சந்தோஷம்
அடைந்தாலும் அனுமாரைப் பார்த்து, நூறு யோஜனை விஸ்தீர்ணமுள்ள இந்த கடலைத் தாண்டி என்னை கிஷ்கிந்தைக்குத் தூக்கி சொல்வது என்பது விநோதமாக உள்ளது என்றார். அனுமன் உடனே தான் அளவற்ற பலமுடையவன் என்றும் பிறரால் செய்யக் முடியாத காரியங்களை செய்பவன் என்று அன்னைக்கு தெரிய நியாயமில்லை. அதனால் தான்
அஷ்டமா சித்தி பெற்றவன் என்பதை உணர்த்துதல் வேண்டும் என்று நினைத்தார். உடனே மரத்திலிருந்து குதித்து தன் உருவத்தை பெரிதாக்கி தன் விஸ்வரூபத்தை காட்டினார். மேரு பர்வதம் போல் ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டு அனுமார் அன்னை முன் நின்றார். மிகப் பெரிய உருவத்துடன் மலை போன்ற தேகத்துடன் எல்ல
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பின் குற்றச் செயல்கள் அதிக அளவில் நடந்து வருகின்றது. கடந்த 10 நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் ஒரு பெண் உட்பட 4 பேர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஸ்வேதா என்ற 19 வயது மாணவி ஒருவர் ஒரு
தலை காதல் விவகாரத்தால் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கடந்த13-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் 38 வயது சங்கரசுப்ரமணியம் என்பவரும், அடுத்த 2 நாளில் மாரியப்பன் என்கிற 32 வயது விவசாயியும், 22-ம் தேதி, திண்டுக்கல்லில் 70 வயது நிர்மலாதேவி என்ற பெண்ணும்,
மறுநாள் அதே மாவட்டத்தில் ஸ்டீபன் என்கிற 38 வயது ஜவுளி வியாபாரியும் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி, கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் தினமும் குறைந்தபட்சம் 2 படுகொலைகள் நடப்பதாகவும், அந்தக் கணக்கின்படி பார்த்தால் இதுவரை குறைந்த பட்சம் 180 முதல் 200
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#புரட்டாசிஸ்பெஷல் ஶ்ரீ அன்னமாச்சாரியார் 15ம் நூற்றாண்டில் ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாள்ளபாக்கம் எனும் கிராமத்தில் சூரி - அக்கலாம்பா தம்பதியருக்குப் பிறந்த வைணவத் தொண்டர். திருமலை திருவேங்கடமுடையான் கோயிலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர்,
திருவேங்கடவன் மீது பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்ற புகழ்பெற்றவை. சுபத்ரா கல்யாணம் என்ற நூலை இயற்றிய தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான திம்மக்கா என்பவர் அன்னமாச்சாரியாரின் மனைவியாவார். அன்னமாச்சாரியார் தென்னிந்திய இசையில் தோற்றுவித்த மரபுகள் பல, பின்வந்தோரால்
வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன. பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்றவை இவரால் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது. இவருடைய மகன் பெரிய திருமாலாச்சாரியார், பேரன் சின்னையர் ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீ வேதநாராயண கோயில் அல்லது மத்ஸ்ய நாராயணகோயில் என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் நாகலபுரம் நகரில் அமைந்துள்ளது. இங்கு மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரத்தை குறிக்கும் வகையில் மீன் உருவில் உள்ளார். இந்தப் பெருமாளை சூரியன் வழிபடுவது ஒரு
சிறப்பு. இது ஒரு வானியல் அற்புதமாகக் கருதப்படுகிறது. வருடத்தில் நின்று நாட்கள் ஒளிரும் சூரிய கதிர்கள் கர்பக்கிரகத்தில் உள்ள வேதநாராயணர் மீது நேரடியாக விழுகின்றது. காலையில் கோயில் கோபுரத்தில் தொடங்கி மாலையில் கர்பக்கிரகத்தின் மீது 360 அடி தூரம் பயணிக்கிறது. முதல் நாளில் மாலை
6 மணி முதல் 6.15 வரை கதிர்கள் பெருமாளின் பாதங்களிலும் இரண்டாவது நாள் வயிற்றுப் பகுதியிலும், மூன்றாம் நாள் அதே நேரத்தில் கிரீடத்திலும் விழுகிறது. கர்பக்கிரகத்தில் பெருமாள் பாதி மனித உருவில் இடுப்புக்குக் கீழே மீன் உருவில் தரிசனம் தருகிறார். தாயார் பெயர் வேதவல்லி தாயார். இக்கோயிலை
திருமாலின் பத்து சயன தலங்கள்: 1. ஜல சயனம்- 107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது. திருமாலின் சயனக்கோலங்களில் மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத இடம் ஜல சயனம். 2. தல சயனம்- 63 வது திவ்ய தேசமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு
திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து தரையில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார். 3. புஜங்க சயனம் (சேஷசயனம்)- முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார்.
4. உத்தியோக சயனம்- 12வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. வேறு எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். 5. வீர சயனம்- 59வது திவ்ய
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்#புரட்டாசிஸ்பெஷல் ஏழுமலை எம்பெருமானை தனியாக வழிபடுவதைவிட தாயாருடன் சேர்த்து வழிபடும் போது பெருமாளின் அனுக்கரகம் நம் மேல் அருவி போல் கொட்டுகிறது. இதை நம்மாழ்வார் 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறையும் மார்பா' என்று தாயாரை முன்னிட்டு சரணாகதி
செய்கிறார். இப்படி எம்பெருமான் மார்பிலே அமர்ந்தது தன் சுகத்திற்க்காகவா என்றால் இல்லை. நாம் சுகப்பட வேண்டும் என்பதற்காகத்தான். பொதுவாக ஆழ்வார்கள் திவ்விய தேசத்திலும் பெருமாளை சேவிக்கும் போது பக்தி மேம்பட்டு கொஞ்சி மகிழ்வார்கள். ஆனால் திருமலை வந்தால் மட்டும் கதறி அழுது சரணாகதி
செய்து விடுகின்றனர். உதாரணமாக நம்மாழ்வார் மலையப்பனிடம்,
திருவேங்கடத்தானே
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
என கதறி சரணாகதி செய்கிறார். இந்த மலையப்பனிடம் ஆழ்வார்கள் என்ன விசேஷத்தை பார்த்தார்கள்? பொதுவாக மற்ற திவ்ய தேசங்களில் பெருமாள் ஒரு சன்னதியிலும்,