CSE - COMPREHENSIVE SEXUALITY EDUCATION
ரொம்பவே முக்கியமா ரொம்ப நாள் பேசனும்னு வைச்சுருந்த ஒரு விஷயம். 1994 வளர் இளம்பருவத்தினரின் தேவை என்ன அப்படிங்குறத கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் தான் பாலியல் கல்வி. இப்ப வரை இது ஏன் தேவை னு சரியா புரியாதவங்கதான் பலர்.
பாலியல் கல்வி குறித்த பர்ஸ்ட் மித் இது பாலுணர்வை தூண்டும். அட பிக்காலிப்பயலுவலா இதன் முக்கிய நோக்கமே பாலுணர்வை நெறிப்படுத்துவது மட்டும்தான்.
மித்2: நம் கலாச்சாரத்துக்கும் பன்பாட்டிற்கும் எதிரானது. ரியாலிட்டி:விழுமியங்களை கற்பித்து உணர்வுகளை வலுப்படுத்தும்.
மித்3: உடலுறவு செய்வது
குறித்து கற்பிக்கப்படும்.
ரியாலிட்டி: provides age and developmental appropriate
information and skills to help young people delay
sexual initiation and to protect themselves when
they do become sexually active
இப்படி நிறைய தவறான மித்களை உடைக்கனும் முதல்ல
அப்பறம் இந்த பாலியல் கல்வியை செக்ஸூடன் தொடர்புபடுத்துவதை நிறுத்தி ஆண் பெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அதன் காரணங்கள் விளைவுகள் (changes,reasons, impacts) இதை தான் முதலில் தெளிவுபடுத்தும். தொடக்கப்பள்ளியில் தங்களின் உடல் குறித்த அறிமுகம் மாணவர்களுக்கு தரப்பட வேண்டும்.
இந்த good/bad touch இதன் நீட்சிதான். ஏன் சில பாகங்களை மறைத்து வைக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும். அடுத்து உயர்நிலையில் உடலில் ஏற்படும் மாற்றங்களை படிப்படியாக விளக்க வேண்டும். ஊர்ல ஏன்டா பரு வந்துதுனு கேட்டா பத்துக்கு எட்டு பேர் எதிர்பாலினம் சைட்
அடிக்குறதால வருதுனு சொல்லுவாங்க ஆனா அது ஹார்மோன் மாற்றங்கள்னு சொல்லி புரிய வைக்கனும். இந்த எட்டாக் கிளாஸ் முடியபோறப்பதான் அவர்களின் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். அந்த நேரத்துல அவர்களின் உடலில் அதிகமாக வியர்வை பெருகும், உடலின் ப்ரைவேட் பார்ட் களில் ரோமங்களின்
வளர்ச்சி தொடங்கும். ஆண்பிள்ளை குரல் உடையும், பெண் பிளளைகளின் உடலில் திடீர் மாறுதல் தோன்றும் உதாரணமாக மார்பகங்களின் வளர்ச்சி, பருவமடைதல் இதெல்லாம் நடக்கும். இதெல்லாம் தெளிவான காரணங்களோடு விளக்க வேண்டும். அப்பறம் இந்த நேரம் மாணவிகளுக்கு அவர்களின் மாதவிடாய் குறித்த புரிதலை
ஏற்படுத்த வேண்டும். அந்த நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார விஷயங்களை கற்பிக்க வேண்டும். பசங்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேற்றம் முதலில் தொடங்கலாம். இந்த நேரத்தில் சரியா வழிகாட்டப்படாத மாணவனுக்கு கிடைக்கும் முதல் தகவல் ஒரு துளி விந்து எட்டு சொட்டு இரத்தம், ஆம்பளையே
இல்லை அது இதுனு ஏதாவது ஒரு சித்த வைத்தியர் டிவில மிரட்ட ஆரம்பிச்சு அவனை குற்ற உணர்வுக்குள் தள்ளிடுவார்.இது குறித்து கற்பிக்க வேண்டிய முழு பொறுப்பையும் ஆசிரியர்களுக்கு உண்டு. அப்பறம் இந்த பாலுறுப்புகள் எப்படி இயங்குதுனும் அவர்களுக்கு சொல்லி தரனும். மேல்நிலை வகுப்புகளுக்கு
வரும் நேரத்தில் அவர்களுக்கு பால்வினை நோய்கள் பற்றியும், நோய்த்தடுப்பு முறைகள் பற்றியும் தெளிவாக கற்பிக்க வேண்டும். குறிப்பாக கருத்தடை சாதனம் என்பது கருவுறுதல் தடுக்க இல்லை அது ஒரு பாதுகாப்பு வழிமுறைனு புரிய வைக்க வேண்டும். காண்டம் பற்றியும் காப்பர் டி பற்றியும்
காண்ட்ரா செப்டிவ் பில்ஸ் பற்றியும் சொல்லித்தரனும். இத்தோடு முடிஞ்சுதா இல்லை இல்லவே இல்லை. எதிர்பாலின புரிதலை மேம்படுத்த வேண்டும். பாலியல் கல்வியின் மிக முக்கிய நோக்கம் பால் சார்ந்த பிரிவினை எந்த வகையிலும் பார்க்கக்கூடாது என்பதாகும். எனவே sexual descrimination தவறு
என்பதை தெளிவாக புரிய வைப்பதுடன், sexual violence எந்த அளவு தவறு என்பதை புரிய வைக்கவேண்டும். பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் மாணவர்கள் உடனடியாக தானே தவறு செய்ததாக ஏற்படும் குற்றவுணர்வில் இருந்து அவர்களை மீட்டு அவர்களை வெளிப்படையாக பேச அறிவுறுத்த வேண்டும்
பாலியல் சீண்டல்கள் எந்த இடத்திலும் அனுமதிக்கப்படாத ஒன்று என்ற எண்ணங்களை தொடர்ந்து அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அதன்பிறகு பாலியல் குற்றங்களுக்கு தரப்படும் தண்டனைகள் பற்றி அனைத்து மாணவர்களுக்கும் விளக்க கையேடை வழங்கி அந்த சட்டங்கள் குறித்த புரிதலை உருவாக்க வேண்டும்.
பள்ளிகளில் மனநல ஆலோசகர் ஒருவரை நியமிப்பதன் அவசியத்தையும் அவரின் பணி குறித்தும் பிள்ளைகளிடம் கூறி ஏதேனும் உளவியல் சிக்கல் வரும்போது அவரை அனுகவேண்டிய அவசியத்தையும் கற்பிக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு விஷயம்தான் COMPREHENSIVE SEXUALITY EDUCATION(CSE)
ஆனால் இதையெல்லாம் விடுத்து சில மதவாத சக்திகளின் தவறான புரிதல் காரணமாக இந்தியாவில் இதனை இன்னும் பரவலாக நம்மால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. மிகச் சுருக்கமாக இது நடைமுறைபடுத்தப்படுமாயின்
1. பிள்ளைகளுக்கு அவர்களின் உடல்குறித்த புரிதல் ஏற்படும்
2. பாலியல் சீண்டல்களுக்கு எதிராக
தங்களின் குரலை பதிவு செய்ய முடியும்.
3. பாலியல் வன்முறை குறையும்.
4. பாலியல் நோய்கள் பற்றிய அறிவு வளரும்.
5. முறைப்படுத்தப்பட்ட கருத்தடை சாதனம் குறித்த புரிதல் ஏற்படும்.
6. பாலியல் வேறுபாட்டால் நடைபெறும் அடக்குமுறை முடிவுக்கு வரும்.
7. சக தோழர் தோழிகளை சமமாக நடத்துவார்கள்
8. வெளிப்படையாகவே பாலியல் சீண்டல்களுக்கு எதிரான குரல்களை எழுப்புவார்கள்.
இவ்வளவு விஷயங்களையும் செய்யாமல் பிள்ளைகள் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொள்வதையோ அல்லது அதீத மன அழுத்தத்திற்கு ஆளவதையோ நம்மால் தடுக்க இயலாது.
#sexeducation
#ViolenceAgainstWomen
இது பாலியல் கல்வி குறித்த முதல் பகுதி மட்டுமே. இது குறித்த கட்டுரைகளை ஒரு பகுதியில் நிறைவு செய்ய இயலாது. எனவே அடுத்தடுத்த பகுதிகளாக தொடர்ந்து எழுதுவோம். தொடர்ந்து பேசுவோம். மாற்றுக்கருத்துக்களை கண்டிப்பாக முன்வைக்கவும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பொண்டாட்டி கொடுமை

பொண்டாட்டி கொடுமை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @bharath_kiddo

20 Nov
Latent heat எனும் பதம் வெப்ப இயக்கவியலில் படித்திருக்க வாய்ப்பு உண்டு. கொதிக்கும் நீரை விட நீராவி அதிக காமத்தை ஏற்படுத்தும் என்று. அப்படித்தான் இது போன்ற பதிவுகளும். இவர்கள் தொடர்ந்து செய்துவரும் ஒரு செயல் அப்யூசர் அனைவரும் திமுக வினர் என்பது போன்ற ஒரு மாய பிம்பத்தை
இணையதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருவது. ஆனால் நிஜத்தில் நடப்பது நமக்கே தெரியும். பாஜக,நாதக கட்சியினர் செய்யும் அப்யூஸ்களை பற்றி பெரிதும் வாயே திறக்காமல் திமுக அபிமானி (கட்சி உறுப்பினர்கள் கூட இல்லை) என்ற பிரச்சாரத்தை தொடர்ந்து செய்துவருகிறார்கள். இவர்கள் இயக்கத்தில்
இருப்பவர்களை எதிர்த்து கேட்டால் அவர்களின் தொழில் , குடும்பம் என மூன்றாம் தர மனிதர்களை போல பேசி அவர்களின் நிலைமாற செய்து சோமி யில் இருந்து வெளியேற்றுவது. அதையும் மீறி இவர்களை எக்ஸ்போஸ் செய்தால் போலீஸ் கேஸ் என்று மிரட்டுவது. இது மட்டுமே அவர்களின் ப்ளான் அஜென்டா.
Read 6 tweets
13 Nov
மறுபடியும் ஒரு பாலியல் குற்றச்சாட்டு. மறுபடியும் ஒரு போராட்டம் இப்படியே பேசிப்பேசி தீர்வை எட்டுவதில் தோற்றுப்போகிறோம். முதலில் நுனிப்புல் மேயாமல் பிரச்சினையின் ஆணி வேர் வரை கண்டறிவோம். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இன்று பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்
என குறுக்கப்படுகிறது. இது தவிர மிக முக்கியமான ஒரு விஷயத்தை எல்லோரும் பேச மறக்கிறோம். இங்க தவறு யாருடையது என்பதை ஆராயாமல் நம்பிக்கை எனும் மொத்த பிணைப்பை உடைத்தே விட்டோம். இது 1980 அல்ல 2021. இந்த நேரத்தில் மறுபடியும் அந்த குழந்தை வீட்டில் சொல்லியிருக்க வேண்டும் என்ற
வாதத்தை முன் வைக்காமல் அந்த நம்பிக்கையை தர மறுத்த சக மனிதர்களை பற்றி பேசுவோம். தொடர் புகார்கள் வரும் பட்சத்தில் அந்த ஆசிரியர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் எந்த பள்ளியும் அதனை முன்னெடுப்பதில்லை காரணம் அவர்களின் brand value.இந்த brand value
Read 14 tweets
23 Oct
குருதிப்புனல் படம் வந்து 26 வருஷம் ஆகுது நிறைய விஷயங்களை இந்த படத்துல பார்த்திருப்போம் அதுல முக்கியமான ஒரு விஷயம் அர்ஜூன் பேசுற கம்யூனிகேஷன் சிஸ்டம். கூடவே சுபலேகா சுதாகர் கமல் வீட்டுக்கு வந்து கொலை பன்ன நாசர் பீப் சவுண்டு மட்டும் தருவோம் அதுதான்சிக்னல்னு சொல்லுவார். இந்த விஷயம்
இன்னிக்கு நடந்த @SpacesScience ல பேசுனவிஷயம் பற்றிய இழை. @Eswarphysics சார் சொன்னார் அந்த விஷயம் ஹாம் ரேடியோ.ஹாம் ரேடியோ என்பது டூ வே ஒலிபரப்பு. அதாவது நாம பேசி முடித்த பிறகு அடுத்த முனையில் இருப்பவர் பேசனும். அதை அந்த அலைவரிசையில் இருக்கும் அனைவரும் கேட்க முடியும். மொபைல் போல
அல்லாமல் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே ஒலிபரப்ப முடியும். அதனால் ஒலிபரப்புபவரும், அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அனைவரும் ஸ்டேஷன்னுதான் சொல்லுவாங்க. எல்லாருக்கும் ஒரு ஸ்டேஷன் கோட்(code)தருவாங்க.அதுவைச்சு எல்லாரும் தொடர்புகொள்ள முடியும். அப்படியே அர்ஜூன் பேசுற சீன் எடுத்துக்கோங்க
Read 14 tweets
21 Sep
நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை பற்றி விரிவாக குறிப்பிட வேண்டிய நேரம் இது. சோ ஜூஸ் ட்வீட் போடுறவங்க சனி ஞாயிறா பாத்து போடுங்க. அதை விட முக்கியமாக பேச வேண்டிய அறிக்கை இது. முடிஞ்சா இதையும் அதே டேக்ல ஓட்டுங்க.நல்லது மக்களுக்கு சேர்ந்தா சரி அம்புட்டு தான்
பொத்தாம் பொதுவா அறிக்கை நீட் தேர்வை இரத்து செய்ய சொல்கிறது என்பதை மட்டும் வெளியே சொல்லாமல் அதன் பாதகங்களாக குறிப்பிடப்பட்ட விஷயங்களையும் இங்கு தெரிவிக்க வேண்டும்.இந்த குழுவின் முக்கிய பணியாக கூறப்பட்டவை
1. சமூக பொருளாதார, கூட்டாட்சி தத்துவம் இவற்றில் ஏற்பட்ட பாதிப்புகள்
2.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் , கிராமப்புற மாணவர்கள் இவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்
3.அந்த பாதிப்புகளை தீர்ப்பதற்காக செயல்படுத்த வேண்டிய நடை முறைகள்.
4.நீட் தேர்வு சமத்துவமான முறையில் நடை பெறுகிறதா?
5. நீட் பயிற்சி மையங்கள் அவற்றின்
Read 24 tweets
8 Sep
க‌ட‌வுள் தானியேலுக்கு அந்த‌க் க‌ன‌வின் விள‌க்க‌த்தைக் காட்சி ஒன்றில் வெளிப்ப‌டுத்தினார்.

தானியேல் ம‌ன்ன‌ரிட‌ம் சென்றார்.

“ம‌ன்ன‌ரே உங்க‌ள் க‌ன‌வின் விள‌க்க‌த்தை நான் சொல்ல‌ வ‌ந்திருக்கிறேன்”

“நீ பொய் சொல்ல‌வில்லை என்ப‌தை எப்ப‌டி ந‌ம்புவ‌து ?”

“நீங்க‌ள் க‌ண்ட‌ க‌ன‌வையும் நானே
சொல்கிறேன். அப்போது நீங்க‌ள் ந‌ம்புவீர்க‌ள்”

ம‌ன்ன‌ன் ஒத்துக் கொண்டார்.

“ம‌ன்ன‌ரே. நீங்க‌ள் க‌ண்ட‌ க‌ன‌வு ஒரு மிக‌ப்பெரிய‌ சிலை. பொன், வெள்ளி, வெண்க‌ல‌ம், இரும்பு, ம‌ற்றும் ஒரு ப‌குதி ம‌ண்ணினால் ஆன‌ சிலை அது. அதை ஒரு பெரிய‌ க‌ல் மோதி தூள் தூளாக்கி விட்ட‌து.
மோதிய‌ க‌ல்லோ வ‌ள‌ர்ந்து உல‌கை நிறைத்த‌து.” இது தானே க‌ன‌வு ? தானியேல் கேட்க‌, ம‌ன்ன‌ன் பிர‌மித்துப் போய் த‌லைய‌சைத்தான்.

தானியேல் அத‌ன் விள‌க்க‌த்தைச் சொன்னார். அது அந்த‌ நாட்டின் நிக‌ழ‌ இருக்கின்ற‌ ஆட்சிக‌ளையும், அத‌ன் மாற்ற‌ங்க‌ளையும், எதிர்கால‌த்தையும் குறித்து பேசினார்து.
Read 4 tweets
8 Sep
உலகத்துல ஒன்லி 20% பெண்கள் மட்டும்தான் அவங்களுக்கு சரியான,கம்பர்டபிலான ப்ராவை தேர்வு செய்கிறார்களாம்.இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னன்னா ஸ்போர்ட்ஸ் ப்ரா பிகினர்ஸ் இல்லை டீனேஜ் புள்ளைங்களுக்குனு அவங்களே ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க. அவங்கள சொல்லியும் தப்பில்லை அப்படி ட்யூன்
பன்னிட்டாங்க அவங்களை. ஆனா போர்ட்ஸ் மவுத் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான ப்ரா அல்லது ஸ்போர்ட்ஸ் ப்ரா தேர்வினால் மார்பக திசுக்களில் ஏற்படும் பாதிப்பினை விளக்கியுள்ளனர். நீங்க வாங்குற ஸ்போர்ட்ஸ் ப்ரா மூனு வகையா பிரிக்கப்படுது.
1.low impact bra
2. Medium impact bra
3. High impact bra
இதுல low impact bra நடை பயிற்சி, யோகா இல்லைனா strenth training இதுக்கு பயன்படுத்தலாம். ஆனா நம்ம பய புள்ளைங்க க்ராஸ் ஸ்ட்ராப் லோ இம்பாக்ட் ப்ராவை தான் ஜிம்முக்கு வாங்குவாங்க. அப்பறம் மீடியம் impact bra நடனம், சைக்கிளிங் இதுக்கு லாம் பயன்படுத்தலாம். ஆனா நடனத்துக்கு எதுக்கு sports
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(