சமூக பாதுகாப்பு திட்டங்களான ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY), ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) இரண்டையும் ஓன்றிணைக்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் #ஒன்றியஉயிரினங்கள்
ஆம் ஆத்மி பீமா யோஜனா என்ற பெயரில் 2013 ஜனவரி முதல் தேதியிலிருந்து செயல்பட்டு வருகிறது.
பயன் பெறுவதற்கான தகுதிகள்
18 வயது நிரம்பியவராகவும், 59 வயதுக்கு மேற்பட்டாமலும் இருக்க வேண்டும்.
பொதுவாக, வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள அல்லது சில குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள – நிலமற்ற
குடும்பங்களின் தலைவர் அல்லது சம்பாதிக்கின்ற ஒரு நபர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
ஒப்புதல் அளிக்கும் முகமைகள்
இந்த திட்டத்தை நிர்வகிப்பதற்கென அறிவிக்கப்படும் மத்திய – மாநில – யூனியன் பிரதேச அரசுத் துறைகள் அல்லது பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் அல்லது நிறுவன பூர்வ
ஏற்பாடுகள் ஒப்புதல் அளிக்கும் முகமைகளாகும். கிராமப்புற நிலமற்ற ஏழைகள் என்ற விஷயத்தை பொறுத்த மட்டில் அதனை நிர்வகிப்பதற்கான அமைப்பு மாநில அரசு – யூனியன் பிரதேச அரசைக் குறிக்கும்.
வயது சான்று
கீழக்கண்டவை வயதுக்கான சான்றுகளாக ஏற்கப்படும்:
குடும்ப அட்டை
பிறப்பு பதிவேட்டு சான்று
பள்ளி சான்றிதழ்கள்
வாக்காள அடையாள அட்டை
அரசுத் துறை – அந்தஸ்தான தனியார் நிறுவனத்தின் அடையாள அட்டை
ஆதார் அட்டை
பிரிமியம்
இத்திட்டத்தில் ரூ. 30 ஆயிரம் காப்பீடு பெற, ஆண்டொன்றுக்கு ரூ. 20 பிரிமியம் செலுத்த வேண்டும். பிரிமியத்தில் பாதித் தொகை சமூக பாதுகாப்பு நிதியத்தில் இருந்து
வழங்கப்படும். கிராமப்புற நிலமற்ற ஏழைகள் எனில் எஞ்சிய பாதியை மாநில அரசு – யூனியன் பிரதேச அரசுகள் செலுத்தும் குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களைப் பொறுத்த மட்டில் எஞ்சிய பாதி பிரிமியத்தை ஓப்புதல் அளிக்கும் முகமை அல்லது மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு செலுத்திவிடும்.
இயற்கை மரணம்
ஆம் ஆத்மி யோஜனாவில் உறுப்பினராக உள்ளவருக்கு இயற்கையாக மரணம் ஏற்பட்டால் அவருடைய வாரிசுதாரருக்கு ரூ. 30000 ஆயிரம் வழங்கப்படும்.
விபத்தினால் மரணம்
விபத்தினால் மரணம் ஏற்பட்டாலும், உடல் ஊனம் ஏற்பட்டாலும் கீழ்கண்டவாறு பயன்கள் கிடைக்கும்.
விபத்தினால் மரணம் ஏற்பட்டால்
ரூ. 75000
விபத்தினால் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் (இரண்டு கைகள், அல்லது இரண்டு கால்கள் அல்லது இரண்டு கண்கள் இழந்தால்)
ரூ. 75000
விபத்தினால் ஓரளவுக்கு ஊனம் ஏற்பட்டால் (ஒரு கண் அல்லது ஒரு கை அல்லது ஒரு கால் இழந்தால்)
ரூ. 37500
உதவித் தொகையின் பயன்கள்
இதைத் தவிர, ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்ட பயனாளியின் இரண்டு குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையும் பெறலாம். ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தால் மாதம் ரூ. 100 என்று கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டு ஜீலை முதல் தேதி அன்றும்,
ஜனவரி முதல் தேதியன்றும் உதவித் தொகை வழங்கப்படும்
பலன்களை பெறும் வழிமுறை
ஆம் ஆத்மி பீமா யோஜனாவின்படி மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டவருக்கான பண பலன்கள் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் (LIC) வழங்கப்படும். அவை பயனாளி அல்லது வாரிசுதாரரின் வங்கிக் கணக்கில் நேடரியடையாக வரவு வைக்கப்படும்
மரணம் ஏற்பட்டால் கிடைக்கும் பலனைப் பெற, இறந்தவர் ஏற்கனவே நியமித்துள்ள வாரிசுதாரர் இறப்பு சான்றிதழோடு, ஒப்புதல் அளிக்கும் முகமையின் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த அலுவலர் கோரிக்கை மனுவை சரி பார்த்து இறந்தவர் வறுமை கோட்டுக்குக் கீழ் வாழ்ந்த குடும்பத் தலைவர் அல்லது
குறிப்பிட்ட தொழிலை செய்து வந்தவர் என்று சான்றளித்து சமர்ப்பிப்பார்.
ஒப்புதல் அளிக்கும் முகமைகள் விண்ணப்பத்தோடு கீழ்கண்டவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்:
முழுமையாக அனைத்து விபரங்களும் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம்.
அசல் இறப்பு சான்று மற்றும் சான்றளிக்கப்பட்ட ஒரு நகல் சான்று
ஆகியவற்றை ஒப்புதல் அளிக்கும் முகமை சமர்ப்பிக்க வேண்டும்.
விபத்தினால் மரணம் ஏற்பட்டால் இறப்பு சான்றிதழோடு சேர்த்து கீழ்கண்ட ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்:
முதல் தகவல் அறிக்கையின் நகல்
பிணக்கூறு ஆய்வறிக்கை (போஸ்மாடம் சான்று)
காவல் துறை விசாரணை அறிக்கை
காவல் துறையின் முடிவு –
இறுதி அறிக்கை
ஆகியவற்றையும் சேர்த்து அளிக்க வேண்டும்.
நிரந்தரமான முழு ஊனம் - பயன்கள்
அரசு மருத்துவர் (சிவில் சர்ஜன்) அல்லது முடநீக்கியல் மருத்துவரிடம் இருந்து, தனக்கு விபத்தால் ஏற்பட்டுள்ள உறுப்பு இழப்புகளைக் குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள முழுமையான ஊனத்தின் அளவைக் குறித்தும்
சான்றிதழ் பெற்று, விபத்து குறித்த ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆம் ஆத்மி யோஜனாவில் சேரும் ஒவ்வொருவரும், தன்னுடைய இறப்புக்கு பிறகு பண பலன்களைப் பெறுவதற்கான ஒரு வாரிசுதாரரை நியமிக்க வேண்டும். இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பித்தின் ஒரு பகுதியாகவே
வாரிசுதாரர் நியமனப் படிவமும் இருக்கும். அதனை சரியாகப் பூர்த்தி செய்து ஆரம்பத்திலேயே அளித்து விட்டால் பின்னர் பிரச்சினைகள் வராது. வாரிசு நியமனப் படிவங்கள் பஞ்சாயத்து அல்லது ஒப்புதல் அளிக்கும் முகமை அலுவலகத்தில் பராமரிக்கப்படும். திட்டத்தின் பயனாளி எவரேனும் இறந்துவிடும் பட்சத்தில்
, பலன் கோரும் விண்ணப்பத்துடன் வாரிசு நியமனப் படிவமும் சேர்த்து, ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு அனுப்பப்படும்.
கல்வி உதவித் தொகை பெறும் வழிமுறை
கல்வி உதவித் தொகை பெறத் தகுதியுள்ள மாணவரின் பெற்றோர். ஒப்புதல் அளிக்கும் முகமையிடம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க
வேண்டும். அங்கு மாணவர் குறித்த விபரங்களை சரி பார்க்கப்படும்.
சரி பார்த்த பின்னர், மாணவரின் பெயர், பள்ளியின் பெயர், படிக்கும் வகுப்பு, பயனாளியின் (பெற்றோர்) பெயர், பாலிஸி எண், உறுப்பினர் எண், பணத்தை நேரிடையாக செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை ஆயுள் காப்பீட்டுக்
கழகத்திடம் அளிக்கும்.
ஆயுள் காப்பீட்டுக் கழகம், ஜீலை முதல் தேதி மற்றும் ஜனவரி முதல் தேதி ஆகிய நாட்களில், கல்வி உதவித் தொகையை நேரடியாக சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கில் செலுத்தி விடும்.
ஆம் ஆத்மி பீமா யோஜனாவின் கீழ் பயன்பெற இனம் காணப்பட்ட வேலைகள்- தொழில்கள்
பீடித் தொழிலாளர்கள்
செங்கல் சூளை தொழிலாளர்கள்
தச்சு வேலை செய்பவர்கள்
செருப்பு – காலணி தைத்தல்
மீன் பிடித்தல்
ஹமால் (சுமை தூக்குதல்)
கைவினைக் கலைஞர்கள்
கைத்தறி நெசவாளர்கள்
கைத்தறி காகித் தொழிலாளர்கள்
பெண் தையற்காரர்கள்
தோல் மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள்
சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த அப்பளம் – வடாம் தயாரிப்பவர்கள்
சுய தொழில் புரியும் உடல் ஊனமுற்றோர்
பால் உற்பத்தியாளர்கள்
ரிக்ஷா – ஆட்டோ ஓட்டுநர்கள்
துப்பரவு தொழிலாளர்கள்
உப்பளத் தொழிலாளர்கள்
டெண்டு இலை சேகரிப்பவர்கள்
நகர்ப்புறத்து ஏழைகள் (சில பிரிவு)
காடுகளில் வேலை செய்வோர்
பட்டுப்புழு வளர்ப்போர்
கள் இறக்குபவர்கள்
விசைத்தறி தொழிலாளர்கள்
மலைப் பகுதி வாழ் பெண்கள்
வெல்லம் – கண்டசாரி தயாரிப்பவர்கள்
நெசவுத் தொழில்
மரச்சாமான் தயாரித்தல்
காகிதம் பொருள் தயாரித்தல்
தோல் பொருள் தயாரித்தல்
அச்சுத் தொழில்
ரப்பர் & நிலக்கரி பொருள்கள்
மெழுகுவர்த்தி போன்ற ரசாயனத் தயாரிப்புகள்
மண் பொம்மை மற்றும் மண்பாண்டம் போன்ற தயாரிப்புகள்
விவசாயிகள்
போக்குவரத்துத் தொழிலாளர்கள்
கிராமப்புறத்து ஏழை மக்கள்
கட்டுமானத் தொழிலாளர்கள்
பட்டாசுத் தொழிலாளர்கள்
தேங்காய் மற்றும் தென்னை நார் தொழிலாளர்கள்
அங்கன்வாடி ஆசிரியைகள்
தலையாரி (கோட்வால்)
தோட்டத் தொழிலாளர்கள்
சுய உதவிக் குழுவைச் சார்ந்த பெண்கள்
ஆடு வளர்ப்போர்
வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியத் தொழிலாளர்கள்
கிராமப்புறத்து நிலமற்ற மக்கள்
ராஷ்ட்ரீய ஸ்வாஸ்த பீமா யோஜனாவில் பயன்பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள்
இதைத் தவிர்த்து, சில வித்தியாசமான அனுபவங்களை வழங்கும், இன்ஜினீயரிங் படிப்புகளை தேர்வு செய்ய தயங்குவது ஏன்?
இந்த வகையான படிப்புகள் குறித்து அதிகப்படியான மாணவர்களுக்கு தெரிவது இல்லை என்பதும் ஒரு காரணம். அந்த வகையில் இன்று மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங் பற்றி பார்க்கலாம்.
தமிழகத்தில் பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகளின் பட்டியல்: 1. அரசு பொறியியல் கல்லூரி- சேலம் கருப்பூர் 2. பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி-கோவை 3. கிண்டி பொறியியல் கல்லூரி- சென்னை 4. தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஐடி)- திருச்சிராப்பள்ளி
தமிழக மாநகராட்சிகள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப
மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள இருபத்தி ஒன்று மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். இரண்டாவது கோயம்புத்தூர் மாநகராட்சியும், மூன்றாவது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் மதுரை மாநகராட்சியும் சேலம்
மாநகராட்சியும் உள்ளது . இந்த ஐந்து மாநகராட்சிகள் மட்டுமே தமிழகத்தின் மிக முக்கியமான மாநகராட்சிகள் ஆகும். பிற மாநகராட்சிகள் , திருப்பூர்,திருநெல்வேலி உட்பட சில மாநகராட்சிகள் அதற்கு அடுத்த நிலையில் காணப்படுகிறது. இந்த மாநகராட்சிகளின் தரவரிசை என்பது மக்கள் தொகை அடிப்படையிலும்,
ஜியோ இன்பர்மேசன் படிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும். இவை சராசரி மாணவர்களுக்கு ஏற்ற டிப்ளமோ படிப்புகளாகும். பட்டப்படிப்பாக படிக்கும் வாய்ப்பும் உள்ளது.10-ம் வகுப்பு , 12-ம் வகுப்பு படித்து முடித்ததும் சராசரி மாணவர்கள் குறுகிய காலத்தில் படித்து
நல்ல வேலைக்குச் செல்ல விரும்புபவார்கள். அவர்களின் சிந்தனையில் முதலில் தோன்றுவது ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளாகும். பாலிடெக்னிக் முடித்ததும் பணியில் இருந்துகொண்டு பி.இ. என்ஜினீயரிங் படிப்பை பகுதி நேரமாக படித்து பணியில் இருக்கும் துறையில் பதவி உயர்வு பெறுபவர்கள் ஏராளம்.
ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒரு நிர்வாக அலுவலர் உள்ளார். அவர் ஆணையர் என்று அழைக்கப்படுகின்றார். அவர் மாநிலப் பணித்துறையைச் சேர்ந்தவர். அவர் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றார்.
ஆணையர் எத்தருணத்திலும் இடப்பெயர்வு செய்யப்படலாம். பல்வேறு நகராட்சிகளிலும் பெருமளவிற்கு ஆணையர்களின் அதிகாரங்களும் பணிகளும் ஒத்திருப்பவையாக உள்ளன. சுருக்கமாகக் கூறின் மன்றத்தின் தீர்மானங்களையும் முடிவுகளையும் நகராட்சி ஆணையர் செயலாக்கம் செய்கின்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
தீர்மானங்களின் நகல்களை அவர் அனுப்பி வைக்கின்றார். அவர் ஒப்பந்தங்களைச் செய்கின்றார். சில அறிவிக்கைகள், உரிமங்கள், அனுமதிகள் போன்றவற்றைப் பிறப்பித்து நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பில் தலைவருக்கு துணைபுரிகிறார். அவர் நகராட்சியின் நிலை அறிக்கையை தயார்செய்து செயலாக்கம் செய்கிறார்.
நோக்கம்
விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் திடீரென நோயுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கால்நடையின் மதிப்பு ரூ. 20 ஆயிரத்துக்கு ஒரு வருடம் வரையிலும் காப்பீடு செய்ய தேவைப்படும் தொகை ரூ. 500 இல் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை 50 சதவீதம் வழங்குகிறது. மீதமுள்ள 50 சவீதம் பயனாளியால் வழங்கப்பட வேண்டும்.
அதற்கு மேல் மதிப்பிற்கோ அல்லது ஒரு வருடத்திற்கு கூடுதலாகவோ
பயனாளி காப்பீடு செய்ய விரும்பினால் தேவைப்படும் காப்பீட்டுத்தொகை பிரீமியம் பயனாளியால் செலுத்தப்பட வேண்டும்.
பயன்கள்
ரூ.500 காப்பீட்டுத்தொகை பிரீமியத்திற்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மானியம் கூடுதலாக ரூ.100 அரசால் வழங்கப்படும்.
ஒரு பயனாளிக்கு 5 பசுக்கள் வரை காப்பீடு