மருத்துவம், பொறியியல் எனக் குறிப்பிட்ட சில படிப்புகளையே நம் மாணவர்கள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வளமான வாழ்வையும் நல்ல வேலைவாய்ப்பையும் அளிக்கும் எவ்வளவோ #ஒன்றியஉயிரினங்கள்
படிப்புகள் படிக்க ஆளில்லாமல் காத்திருக்கின்றன. அந்த வரிசையில் மிக முக்கியமானவை குற்றவியல் (Criminology) மற்றும் தடயவியல் (Forensic Science) பட்டப்படிப்புகள்.
‘‘கிரிமினாலஜி என்பது சமுதாயத்தில் நடக்கும் குற்றங்கள், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வது, அது பற்றிய
சமூக நிலைப்பாடு, தவறு செய்பவர்களை சீர்திருத்துவது போன்ற விஷயங்களை போதிக்கும் பாடப்பிரிவு’’ என்கிறார் முன்னாள் காவல்துறை இயக்குனரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவருமான ஆர். நட்ராஜ்.
‘‘கிரிமினாலஜி படிக்கும் பட்டதாரிகள் தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள்,
சி.பி.ஐ., சி.ஐ.டி., மத்திய - மாநில காவல் அமைப்புகள், ரயில்வே பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் சேர்ந்து பணியாற்றலாம். மேலும் இதில் சரித்திரம், சமூகவியல், உளவியல் பாடங்களை உள்ளடக்கிய சிலபஸ் இருப்பதால்,
சிவில் சர்வீஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுதவும் மிகவும் உபயோகமாக இருக்கும்’’ என்கிற நட்ராஜ், தடயவியல் படிப்பும் இதற்கு சமமாக முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்.
‘‘இன்றைய காலகட்டத்துக்கு மிக அவசியமான பாடப்பிரிவு தடயவியல். குற்றம் நடக்கும் இடத்தில் கிடைக்கும் பொருட்கள்,
கைரேகைகள், சிறு சிறு தடயங்களை சேகரித்து... அதன்மூலம் குற்ற சம்பவத்தின் முடிச்சுகளை அவிழ்ப்பதில் தடயவியலின் பங்கு மகத்தானது. பேரிடர் மேலாண்மையில்கூட தடயவியல் இன்றியமையாததாக ஆகிவிட்டது. இந்திய அளவில் தடயவியல் படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால்,
இந்தப் பட்டம் முடிப்பவர்களின் தேவை ராணுவம், புலனாய்வுத் துறைகளில் அதிகம்.
தமிழக அளவில் மாவட்டம்தோறும் ஃபாரன்ஸிக் லேபரட்டரிகள் உள்ளன. அவை எட்டு ஸோன்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தடயவியல் படிப்பின் மூலம் இங்கெல்லாம் நல்ல பணி வாய்ப்புகள் உண்டு. பிரைவேட் டிடெக்டிவ்
ஏஜென்ஸிகளில் சேர்ந்து பணிபுரியவும் தடயவியல் உபயோகமாக இருக்கும்’’ என்கிறார் நட்ராஜ்
‘‘கிரிமினாலஜி பட்டப்படிப்பு சமூகத்தை மாற்றுவதற்கான பாடத்திட்டங்களை உள்ளடக்கியது. மற்ற பட்டப்படிப்புகளுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இன்று, புதுப்புது விதமான
நவீன குற்றங்களின் எண்ணிக்கை பெருகிவருவதால், வரும் காலங்களில் கிரிமினாலஜி மற்றும் தடயவியல் படிப்புகளுக்கான மதிப்பும் தேவையும் கூடும் வாய்ப்பு உள்ளது’’ என்கிறார் அமெரிக்கன் கல்லூரியின் பேராசிரியரும் தேசிய அளவிலான குற்றவியல் கழகத்தின் செயற்குழு உறுப்பினருமான சி.முத்துராஜா.
‘‘இந்தியாவில் பெருகிவரும் பன்னாட்டு நிறுவனங்கள் சைபர் க்ரைம் போன்ற தொழில்நுட்ப ரீதியிலான குற்றங்களில் இருந்து தங்கள் நிறுவனங்களைப் பாதுகாக்க நினைக்கின்றன. இதனாலும் கிரிமினாலஜி பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் கிரிமினாலஜி படிக்க மிகச் சிறந்த இடம்
என்றால், சென்னைப் பல்கலைக்கழகம், லக்னோ பல்கலைக்கழகம், மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ் போன்றவற்றைக் குறிப்பிடலாம். கிரிமினாலஜி படிக்க, ஒரு செமஸ்டருக்கு சுமார் 5,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரைதான் செலவு ஆகும்
‘‘கிரிமினாலஜி மற்றும் தடயவியல் படிப்பு முடிப்பவர்களுக்கு உடல் தகுதியும் இருந்து விட்டால் ராணுவம், சிறப்பு காவல்படை, புலனாய்வுத் துறை, ஊழல் தடுப்புப் பிரிவு போன்றவற்றில் சேர்ந்து பணியாற்றவும் உயர் பதவிகளை வகிக்கவும் வாய்ப்புகள் அதிகம். எங்கள் கல்லூரியைப் பொறுத்தவரை உயரம், எடை,
மார்பளவு என்ற உடல் தகுதிகளோடு தான் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்’’ என்கிறார், சென்னை அகர்சன் கல்லூரியின் உதவி பேராசிரியர் ஜெ.சசிகுமார்.‘பெண்களும் இந்தப் பாடப்பிரிவை எடுத்து படிக்கிறார்கள். எங்கள் கல்லூரி யில் இருந்து இதுவரை இரண்டு பேட்ச் பெண்கள் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.
படிப்பு முடித்து ஒரு கிரிமினாலஜிஸ்ட் ஆன பிறகு, ஒரு குற்றத்தின் பின்னணி காரணங்களை ஆராய்வதோடு புலனாய்வு, தண்டனை, மறுவாழ்வு மற்றும் சீர்திருத்தம் போன்ற பலவிதமான நிலைகளிலும் பணியாற்ற முடியும். பி.ஏ., எம்.ஏ. படிப்பதைவிட பி.எஸ்சி., எம்.எஸ்சி படிக்கும்போது பாடத்துடன் கூடிய
பயிற்சிகளும் அளிக்கப்படும். அதனால் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும். பி.எஸ்சி தடயவியல் எடுத்துப் படிக்க வேண்டுமானால், பிளஸ் 2வில் அறிவியல் பாடம் எடுத்துப் படித்திருக்க வேண்டும். குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்’’ என்கிறார் அவர்.
‘மருத்துவத் துறையிலும் தடயவியலுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டில் தடய அறிவியல் பாடம் உண்டு. முதுகலை மருத்துவப் படிப்பாகவும் எம்.டி தடய அறிவியல் பிரிவை எடுத்துப் படிக்கலாம். இதை முடிப்பவர்களே பிரேத பரிசோதனை செய்யத் தகுதியுடையவர்கள்.
மேலும் கொலை, தற்கொலை போன்ற சம்பவங்களின் பின்னணியாக உள்ள ஐ.பி.சி. 302, 320 போன்ற சட்டப்பிரிவுகளையும் தெரிந்துகொள்ள முடியும்’’ என்கிறார் மருத்துவர் ஹரிசங்கர்.
மொத்தத்தில், ‘என் வழி தனி வழி’ என ஆர்வத்தோடு துணிந்து வரும் மாணவர்களுக்காகக் காத்திருக்கின்றன
குற்றவியல் மற்றும் தடயவியல் படிப்புகள்!
குற்றவியல் மற்றும் தடயவியல் படிக்க
தமிழக கல்வி நிறுவனங்கள்:
சென்னைப் பல்கலைக்கழகத்தில் M.A.Criminology and Criminal Justice மற்றும் MSc., Cyber Forensics and Information
Security முதுகலைப் பட்டப் படிப்புகள் உள்ளன. மேலும்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் M.A. Criminology Police Science முதுகலைப் பட்டப்படிப்பு உள்ளது. மேலும் விபரங்களுக்கு, msuniv.ac.in
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி திட்டத்தில் ஓராண்டு முதுகலைப் பட்டப்படிப்பு (PGDCPA) வழங்கப் படுகிறது. மேலும் விபரங்களுக்கு, mkudde.org தொலைபேசி: 0452-2458471
மாதவரத்தில் உள்ள ஜே.எச்.ஏ.அகர்சன் கல்லூரியில் ரெகுலரில் இளங்கலைப்
பட்டப்படிப்பு (B.A.Police Administration) வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, agarsencollege.com
இந்திய அளவிலான பிற பல்கலைக் கழகங்கள்:
டெல்லியில் உள்ள குற்றவியல் மற்றும் தடயவியல் துறை நிறுவனத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ளதைப் போன்றே எம்.ஏ மற்றும்
எம்.எஸ்சி முதுகலைப் பட்டப்படிப்புகள் உள்ளன. மேலும் விபரங்களுக்கு, nicfs.nic.in
உத்தரப்பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் ( MSc., Forensic Science and Criminology) பட்டப்படிப்பு மற்றும் ஓராண்டு முதுகலைப்
(Post Graduate Diploma in Forensic Science) பட்டயப்படிப்பும் உள்ளன. மேலும் விபரங்களுக்கு, bujhansi.org ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில், முதுகலைப் பட்டப்படிப்பு (MSc., Forensic Science) உள்ளது . மேலும் விபரங்களுக்கு, osmania.ac.in
குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு (MSc., Forensic Science) உள்ளது. மேலும் விபரங்களுக்கு, gujaratuniversity.org.in
படிப்பை முடித்து விட்டு அடுத்ததாக என்ன படிக்கலாம் என்று காத்துகொண்டிருக்கும் இளைஞர்கள் “ஹேக்கிங்” படிப்பை தேர்வு செய்யலாம். இது உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும்
என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல், ஆன்லைன் வங்கி, போன்றவற்றிற்கு முக்கியமான ஒன்று பாஸ்வோர்ட். இன்று உலகளவில் பாஸ்வேர்ட் ஹேக்கிங் என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது பெருகி வரும் சைபர்
குற்றங்களை தடுப்பதற்கு வல்லுனர்கள் குறைவாக தான் உள்ளனர்.சைபர் குற்றங்களை தடுக்கும் வல்லுனர்களை உருவாக்கும் படிப்பு தான் இன்டெர்நெட் செக்யூரிட்டி என்று அறியப்படும் ‘எத்திக்கல் ஹேக்கிங்’. இளைஞர்கள் மத்தியில் எத்திக்கல் ஹேக்கிங் தொடர்பான படிப்புகளுக்கு தொடர்ந்து ஆர்வம் அதிகரித்து
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (Local government bodies in Tamil Nadu) என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப்
பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும். இந்திய அரசியலைப்புச் சட்டம் பகுதி IV ல் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதிகாரங்கள் பொறுப்புகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் 1994 இயற்றப்பட்டு, 1994 ஏப்ரல் 22ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதன்படி கிராம ஊராட்சி,
ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு கொண்ட பஞ்சாயத்து ராஜ் என்ற ஊராட்சி முறை அறிமுகமானது. இடஒதுக்கீடு மற்றும் பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு என அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள், நகர்புற உள்ளாட்சிகள் என்றும்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு `அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்' தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிகிச்சை
மருத்துவமனையில் கடந்த ஜூன் 8-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது.
உடல் பரிசோதனைத் திட்டம்
மிகக் குறைந்த கட்டணத்தில் "அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்" முன்னோடித் திட்டமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் மகளிருக்கென
சிறப்புப் பரிசோதனைகள் செய்யப்படும்.
பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தைக் கண்டறிய முழு உடல் பரிசோதனையை மேற்கொள்கின்றனர். இதற்கு தனியார் மருத்துவமனைகள் ரூ. 12000 வரை கட்டணம் வசூலிக்கின்றன. அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதால்,
தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கின்றன. இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன.
தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக,
அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நகர்மன்றத் தலைவர் மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவர்
சமூக பாதுகாப்பு திட்டங்களான ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY), ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) இரண்டையும் ஓன்றிணைக்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் #ஒன்றியஉயிரினங்கள்
ஆம் ஆத்மி பீமா யோஜனா என்ற பெயரில் 2013 ஜனவரி முதல் தேதியிலிருந்து செயல்பட்டு வருகிறது.
பயன் பெறுவதற்கான தகுதிகள்
18 வயது நிரம்பியவராகவும், 59 வயதுக்கு மேற்பட்டாமலும் இருக்க வேண்டும்.
பொதுவாக, வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள அல்லது சில குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள – நிலமற்ற
குடும்பங்களின் தலைவர் அல்லது சம்பாதிக்கின்ற ஒரு நபர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
ஒப்புதல் அளிக்கும் முகமைகள்
இந்த திட்டத்தை நிர்வகிப்பதற்கென அறிவிக்கப்படும் மத்திய – மாநில – யூனியன் பிரதேச அரசுத் துறைகள் அல்லது பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் அல்லது நிறுவன பூர்வ
இதைத் தவிர்த்து, சில வித்தியாசமான அனுபவங்களை வழங்கும், இன்ஜினீயரிங் படிப்புகளை தேர்வு செய்ய தயங்குவது ஏன்?
இந்த வகையான படிப்புகள் குறித்து அதிகப்படியான மாணவர்களுக்கு தெரிவது இல்லை என்பதும் ஒரு காரணம். அந்த வகையில் இன்று மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங் பற்றி பார்க்கலாம்.
தமிழகத்தில் பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகளின் பட்டியல்: 1. அரசு பொறியியல் கல்லூரி- சேலம் கருப்பூர் 2. பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி-கோவை 3. கிண்டி பொறியியல் கல்லூரி- சென்னை 4. தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஐடி)- திருச்சிராப்பள்ளி