#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#மீராபாய் (1498 – 1547) வட இந்திய வைணவ பக்தி உலகில் மறக்கமுடியாத கிருஷ்ண பக்தை மீரா பாய். 1300 பாடல்களுக்கு மேல் பாடிய மீரா ராஜபுத்திர இளவரசியாக தற்போதைய ராஜஸ்தானில் பிறந்தவர். பக்தி நெறியில் தீவிர பற்று கொண்ட இவர் , கிருஷ்ணரின் மீது இயற்றிய பக்திப் பாடல்கள்.
மிகவும் புகழ்பெற்றவை. இவர் செளகரி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் ஜோத்பூரை ஆண்ட ரத்தன் சிங்கின் மகள் என்ற பெருமை பெற்றவர். வசதிகளுடன் பிறந்த மீரா பாய்க்கு நடனம், பாட்டு என்றால் உயிர். ஆனால் ராஜவம்சம் என்பதால் மற்றவர்கள் முன்னிலையில் பாட்டு பாடுவது தடுக்கப்பட்டது. அவர் தன்னுடைய
சிறுவயதிலேயே கிருஷ்ணனின் மீது தீராத காதல் கொண்டு இருந்தார். அவரை நோக்கி இசைப்பதும் பாட்டு பாடுவதையுமே தன்னுடைய வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார். கிருஷ்ணனை நோக்கி தெய்வீக பாடல் பாடி தன் மனதை அதில் ஈடுபடுத்தினார். ஒரு நாள் ஒரு துறவி மீரா பாயின் தந்தையை காண அவர் வீட்டிற்கு வந்தார்.
அந்த துறவி மீரா பாய்க்காக ஒரு கிருஷ்ணர் சிலையை பரிசாக கொடுத்து சென்றார். அவரது தந்தை அதை மீராவிடம் கொடுத்த போது அவர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். தன் கிருஷ்ணன் தன்னை காண வந்ததாக நினைத்து சந்தோஷம் அடைந்தார். இந்த நிகழ்வும் மீராவின் மனதில் கிருஷ்ணர் இடம் பெற காரணமாக அமைந்தது.
அவரது தந்தையும் தாயும் சேர்ந்து மீரா பாய்க்கு திருமணம் முடிக்க திட்டமிட்டனர். அப்பொழுது என்னுடைய கணவர் யார் என்று கேட்டதற்கு உன் கிருஷ்ணர் தான் உன் கணவன் என்றதும் அவர் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். கிருஷ்ணனையே தன்னுடைய மணவாளனாக ஆக்கிக் கொண்டார். ஆனால் குடும்பத்தின்
வற்புறுத்தலின் பேரில் 1516-ல் பதினெட்டு வயதில் சுய விருப்பமின்றி போஜராஜன் எனும் சித்தோர்கர் இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்.
திருமணத்துக்கு பிறகு அவளது வசதி வாய்ப்புகள், செல்வ செழிப்பு, சமூக நிலை எல்லாம் உயர்ந்தும் மீராவிற்கு எதுவும் பெரியதாக தெரியவில்லை. அவருக்கு
திருமணம் ஆனாலும் மாலையில் கிருஷ்ணனை வழிபடுவதும், அவரை நோக்கி மனதார பாடுவது மட்டுமே தன் உலகமாக கொண்டு இருந்தாள். ஆனால் அவர் இப்படி உலகமே மறந்து இருப்பது அவருடைய கணவருக்கும், அத்தைக்கும் பிடிக்கவில்லை. தங்களுடைய குடும்ப தெய்வமான துர்கா தேவியை வழிபடாமல் இருப்பது அவரது மாமியாருக்கு
மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. ஆனால் அவள் அதை மறுத்து விட்டாள். தன்னை முழுமையாக கிருஷ்ணனுக்கு அர்ப்பணித்து விட்டதாக அவள் கூறிவிட்டாள். மீராவின் பக்திமயமான காதல் கிருஷ்ணனை நோக்கி அதிகரிக்க அதிகரிக்க அதை அவரது மாமியரால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. அவள் கிருஷ்ணன் மீது வைத்திருந்த
காதலை யாராலும் அசைக்க முடியவில்லை. இதனால் மீரா பாயை கொல்லுவதற்கு அவர் மாமியார் திட்டம் தீட்டீனார். பல முறை கொலை முயற்சிகள் செய்யப்பட்டன. கிருஷ்ணனுக்கு படைத்த நெய்வேத்யத்தில் நஞ்சு, மீராவின் படுக்கையில் இரும்பு முட்கள் என்று எத்தனை எத்தனையோ முயற்சிகள். ஆனால் எல்லாம் பகவான்
கிருஷ்ணனின் அருளால் மறைந்தது. ஒவ்வொரு முறையும் மீராவை காப்பாற்றி விட்டார் கிருஷ்ணர். ஒரு நாள் அவரது மாமியார் நஞ்சு கலந்த தண்ணீரை புனித நீர் என்று கூறி குடிக்க சொன்னார். ஆனால் அவள் இதயமெங்கும் நிரம்பி இருக்கும் கிருஷ்ணன் அவள் உயிரை விட வில்லை. என்ன ஆச்சரியம் நஞ்சை நீக்கி அவளை
காப்பாற்றி விட்டார். மீரா பாய் தன் இறுதிக் காலத்தில் குஜராத்தின் துவாரகைக்கு வந்தடைந்தார். அங்கு கோயில்கொண்ட துவாரகதீசன் முன்பு பாடிக் கொண்டே அனைவரும் கண்ணெதிரிலேயே இறைவனோடு கலந்து மாயமானார். அவருடைய அன்பு, காதல், பக்தி எல்லாம் ஸ்ரீ கிருஷ்ணனுக்கே என்று வாழ்ந்து வந்தார். அப்படியே
இறுதி நாளில் இரண்டறக் கலக்கவும் செய்து விட்டார்.
மீரா பாய் போல பக்தி செய்ய முயற்சி செய்வோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருமுறை பிரம்மலோகத்தில், நாரதர் உரையாடிக் கொண்டிருந்த போது, ஒரு கேள்வி எழுந்தது. மூவுலகிலும் நைஷ்டிக பிரம்மசாரி யார் என்பதே அந்தக் கேள்வி! சந்தேகமென்ன, நீதான் நாரதா என்று பிரம்மா சொல்வார் என நாரதர் நினைத்தார். ஆனால், பிரம்மாவின் பதில் நாரதருக்கு அதிர்ச்சியைத் தந்தது. பூவுலகில்
மானிடனாக அவதரித்து, லீலைகள் பல புரிந்து கொண்டிருக்கும் ஸ்ரீகிருஷ்ணன் தான் நைஷ்டிக பிரம்மசாரி என்றார் ஸ்ரீபிரம்மா. சதா சர்வ காலமும் கோபியருடன் ஆடிப்பாடி ராசலீலைகள் புரியும் ஸ்ரீகிருஷ்ணனா நைஷ்டிக பிரம்மசாரி என்று நினைத்தபடி உரக்கச் சிரித்தார் நாரதர்.
சந்தேகம் எனில் தினமும் உணவேதும்
அருந்தாமல், நித்திய உபாசனை புரியும் தபஸ்வி துர்வாசரைக் கேட்டுப் பார், காரணங்கள் தெரியும் என்றார் பிரம்மா. நாரதருக்கு மேலும் சிரிப்பு வந்தது. பசியே பொறுக்க முடியாதவர் துர்வாசர். ஒரு நாளைக்கு பல வேளை சாப்பிட்டு அளவுக்கு மீறிய போஜனத்தால், கோபம் உண்டாகி சாபமிடுபவர். அவரைப் போய்த்
One day #MahaPeriyava described #MandukyaUpanishad the one among the 108 Upanishads. The root of Mandukya is sometimes considered as Manduka in Sanskrit meaning frog. The version of many pundits is that since this Upanishad does not directly tell the meaning and it jumps here and
there and tells the meaning it is called as Manduga Upanishad but Mahaperiyava has a different view. The frog is in the habit of jumping from the first step to the fourth step. Having this in mind Sri Maha periyava says that the word Om is divided into four parts. Three parts are
in the form of sounds and one is without sound. The parts of sounds are A karam, Oo karam, M karam so A, Oo and M are together Om. The fourth position is ‘Thuriyam’. Atma is Brahma and is divided into four parts. When Atma is attached to physical body it is called as Vishvan. It
#ராம_ராஜ்ஜியம் மக்கள் எல்லோரும் ராமன் பொற்கால ஆட்சியில் பேரானந்தமாக வாழ்ந்தனர். அந்த நேரம் பார்த்து சோதனையாக துர்வாச மாமுனிவர் தன் சீடர்களுடன் ராமனை காண அயோத்தி வந்தார். அயோத்தி மக்கள் மற்றும் அரசவையில் உள்ளோர் யாவரும் கொஞ்சம் பயத்தோடு அவருக்கு வணக்கம் கூறி வரவேற்றனர் காரணம்
துர்வாசர் கோபப்பட்டு சபிப்பதில் வல்லவர். மற்ற முனிவர்கள் எல்லாம் கோபப்பட்டு சபித்தால் தங்கள் தவ சக்தியில் ஒரு பகுதியை இழந்து விடுவர். பின் மீண்டும் அந்த இழந்த சக்தியை பெற பலவருடங்கள் தவம் மேற்கொள்ளவேண்டும். ஆனால் துர்வாச முனிவரோ கோபப்பட்டு சபித்தால் அவர் தவ-சக்தி பலம் பெருகும்.
அதனால் அவர் வெகு எளிதில் கோபப்பட்டு சபித்து விடுவார். சீடர்களுடன் தன் அவைக்கு வந்த துர்வாசமுனிவரை வரவேற்ற ராமன் அவர் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்து ஒரு ஆசனத்தில் அமரவைத்து பாத பூஜை செய்து, மகரிஷியே தாங்கள் வேண்டுவது யாதாகினும் கூறுக அடியேன் செய்ய காத்திருக்கிறேன் என்றான்.
This verse occurs in #BhojaChampu and describes vividly the picture of Sriman Narayana as He appeared to
the Devas. This verse forms part of the Ramayana story composed by King Bhoja and Poet Kalidasa, at a time when King Bhoja was made aware of the fact that he had only ninety more minutes life in this world. This is a beautiful verse and contains rich ideas. The milky white ocean
and the white Adisesha bed provide the necessary relief or background to the scintillating dark-blue body of Narayana. The very fact of His slumber is described as active vigil in the protection of all the worlds and their contents. It is this apparently dormant energy which
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் திரிகாலத்தையும் உணரும் சக்தி கொண்ட தூய்மையான மனம் உடைய காருண்ய சீலர் ஸ்ரீ ஹரி நாம அனந்த வைஷ்ணவர். இவர் எப்பொழுதும் ஹரிநாம சிந்தனையில் வாழ்ந்து வந்தார். இவர் வேம்புரி எனும் கிராமத்தில் தன் சீடர்களுக்கு தாம் கற்ற கல்வியைச் சொல்லிக் கொடுத்து வந்தார். இவரிடம்
எண்ணற்ற சீடர்கள் வித்தைப் பயில வந்தனர். அதில் சத்யசீலன் எனும் சீடன் ஆச்சாரியனிடத்தில் மிகுந்த மரியாதையும் பக்தியும் வைத்து பணிவிடையும் செய்து வந்தான். குருவே தெய்வமெனக் கருதினான். குருவுக்கு அந்த சீடன் மேல் அளவு கடந்த அன்பும் பாசமும் இருந்தது. ஒருநாள் அந்த கிராமத்திற்கு மகான்
கபீர்தாஸரின் குருதேவரான ஸ்ரீ ராமானந்தர் வருகை தந்தார். கோவில் மடத்தில் அவரின் சீடர்களுடன் தங்கியிருந்தார். தினம் காலை உஞ்சவருத்தி எடுத்துக் வந்த ஹரி நாம அனந்தரின் சீடன் மடத்தில் தங்கியிருந்து ராமானந்தரின் பாதங்களில் விழுந்து வணங்கினான். பாதம் பணிந்தவனைப் பார்த்து ராமானந்தர்
#சுசீந்திரம்#தாணுமாலய_சுவாமி
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் (தாணு= சிவன், மால்= திருமால், அயன்= பிரம்மா) மும்மூர்த்திகளும் இணைந்து ஒரே வடிவமாக தத்தாதிரேயராக கொன்றை மரத்தடியில் அருள்பாலிக்கின்றனர். அத்திரி மகரிஷியின் மனைவி அனசூயயை சோதிக்க வந்த
அவர்களை தன் கற்பின் திறத்தால் குழந்தைகளாக்கி, கொன்றை மரத்தில் தொட்டில் கட்டி ஆட்டினாளாம் அனசூயை. (அத்தரி மகரிஷி, அனுசுயா ஆகியோர் வாழ்ந்த இடம் இதையடுத்து உள்ளது. இவ்வூர் இன்றும் #ஆசிரமம் என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது.) இதனால் தத்தாத்ரேயர் அத்திரி மகரிஷி அனுசுயாவின் புதல்வனாகக்
கருதப்படுகிறார். தத்தாத்ரேயரை வணங்கி அனைத்து நலன்களையும் பெறுவோம். #தத்தாத்ரேயர்#ஸ்லோகம்.
மாலகமண்டலு தர கரபத்மயுக்மே
மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம்!
அத்யஸ்த ஊர்த்வ கரயோ: சுப சங்கசக்ரே
வந்தே தமத்ரிவரதம் புஜ ஷட்க யுக்தம் ||
மாலையையும், கமண்டலத்தையும் இரு கைகளிலும், உடுக்கை