#ராம_ராஜ்ஜியம் மக்கள் எல்லோரும் ராமன் பொற்கால ஆட்சியில் பேரானந்தமாக வாழ்ந்தனர். அந்த நேரம் பார்த்து சோதனையாக துர்வாச மாமுனிவர் தன் சீடர்களுடன் ராமனை காண அயோத்தி வந்தார். அயோத்தி மக்கள் மற்றும் அரசவையில் உள்ளோர் யாவரும் கொஞ்சம் பயத்தோடு அவருக்கு வணக்கம் கூறி வரவேற்றனர் காரணம்
துர்வாசர் கோபப்பட்டு சபிப்பதில் வல்லவர். மற்ற முனிவர்கள் எல்லாம் கோபப்பட்டு சபித்தால் தங்கள் தவ சக்தியில் ஒரு பகுதியை இழந்து விடுவர். பின் மீண்டும் அந்த இழந்த சக்தியை பெற பலவருடங்கள் தவம் மேற்கொள்ளவேண்டும். ஆனால் துர்வாச முனிவரோ கோபப்பட்டு சபித்தால் அவர் தவ-சக்தி பலம் பெருகும்.
அதனால் அவர் வெகு எளிதில் கோபப்பட்டு சபித்து விடுவார். சீடர்களுடன் தன் அவைக்கு வந்த துர்வாசமுனிவரை வரவேற்ற ராமன் அவர் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்து ஒரு ஆசனத்தில் அமரவைத்து பாத பூஜை செய்து, மகரிஷியே தாங்கள் வேண்டுவது யாதாகினும் கூறுக அடியேன் செய்ய காத்திருக்கிறேன் என்றான்.
ராமரை ஆசிர்வதித்த துர்வாசர், ராமா என் சிவபூஜைக்கு இந்த உலகில் உள்ளோர் எவருமே இதுவரை அர்ச்சிக்காத பூ ஒன்றை நீ எனக்கு ஏற்பாடு செய்து தரவேண்டும். அடுத்து பூஜை முடிந்த கையோடு எனக்கும் என்னோடு வந்துள்ள சீடர்கள் யாவருக்கும் அறுசுவை உணவு ஏற்பாடு செய்து தரவேண்டும். ஆனால் அந்த உணவானது
நீர் மற்றும் நெருப்பு இல்லாமல் சமைத்த உணவாக இருக்க வேண்டும். இவை இரண்டையும் ஏற்பாடு செய்க நாங்கள் யாவரும் நீராடி விட்டு வருகிறோம் என்று கூறி கிளம்பிவிட்டார் துர்வாசர். துர்வாசர் கூறியதை கேட்ட மக்களும் அவையினரும் அதிர்ச்சியாகி விட்டனர். ராமர் எந்த வித சலனமும் இல்லாமல் புன்னகையோடு
அயோத்தி நதிக்கரையோரம் வந்து தன் வில்லை எடுத்து நாண் ஏற்றி இரண்டு ஓலைகள் அஸ்திரத்தில் கட்டி விண்ணை நோக்கி செலுத்தினார். விண்ணோக்கி சென்ற அவர் எய்த அஸ்திரம் நேராக இந்திரலோகம் சென்று இந்திரன் முன் நின்றது. அஸ்திரத்தை கையிலெடுத்த இந்திரன் அதில் உள்ள இரண்டு ஓலைகள் எடுத்து முதல் ஓலையை
படிக்கலானான். அதில் தேவேந்திரா நான் அயோத்தி மக்களின் அன்பை பெற்ற ராமன் துர்வாச மகரிஷி கூறிய இரண்டு வித வேண்டுதலுக்கு செவி சாய்த்து உன்னிடம் இரண்டு உதவிகள் பெற என் அஸ்திரத்தை ஏவியுள்ளேன். முதல் உதவி தேவலோகத்தில் மட்டுமே உள்ள பாரிஜாத மலர்கள் சிலவற்றை அஸ்திரத்தோடு இணைத்து அனுப்பவும்
அடுத்து, எதை கேட்டாலும் கொடுத்தருளும் கற்பக விருட்ச மரத்தையும் என் அஸ்திரத்தோடு சேர்த்து அனுப்புவாயாக என்று பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றிருந்தது. அந்த ஓலையில் எழுதியிருந்த வாசகத்தை தன் அவையோரிடம் காட்டிய இந்திரன், தேவர்களே ஒரு போதும் தேவலோகத்துக்கு கிடைத்த பொக்கிஷங்கள்
பூலோகத்துக்கு எடுத்து செல்ல அனுமதியளிக்க கூடாது என்று கூற அவையோரும் அதை ஆமோதித்தனர். அப்போது அங்கே அந்த அவையில் அமர்ந்திருந்த #நாரதமஹரிஷி தேவேந்திரா அஸ்திரத்தில் உள்ள இரண்டாவது ஓலையில் என்ன எழுதியுருக்கிறது என்று படித்துவிட்டு பின் ஒரு முடிவுக்கு வா என்று யோசனை கூற, இந்திரன்
இரண்டாவது ஓலையை பிரித்து படித்தான். அதில் தேவேந்திரா என் அன்பிற்கு இணங்கி நீ என் அஸ்திரத்தோடு பாரிஜாத மலர்களையும் கற்பக விருட்ச மரத்தையும் அனுப்பவில்லை என்றால் நான் அனுப்பியிருக்கும் என் அஸ்திரம் உன்னை வென்ற ராவணனை வதம் செய்த அஸ்திரமானதால் மேற்சொன்ன இரண்டையும் நீ அஸ்திரத்தோடு
இணைத்து அனுப்பவில்லை என்றால் இந்திரலோகத்தில் உள்ள நீ முதற்கொண்டு யாவரையும் வதம் செய்து பின் நான் கேட்ட இரண்டையும் கொண்டு வரும் வல்லமை அதற்கு உண்டு. இரண்டில் எது சிறந்தது என்று யோசித்து செயல்படு என்று எழுதியிருந்தது. நாரதர், தேவேந்திர ராமனின் பெருமையே ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்.
அதனால் ராமருக்கு அவர் கேட்ட இரண்டு பொக்கிஷத்தையும் அவர் கேட்டவண்ணமே அஸ்திரத்தோடு அனுப்பிவிடு என்று கூற தேவேந்திரனும் அவ்வாறே செய்தான். நீராடிவிட்டு வந்த துர்வாச முனிவர் சிவபூஜைக்கு மலர் கேட்க பாரிஜாத மலர் கொடுக்கப் பட்டது. அடுத்து நீர் நெருப்பு இல்லாமல் உணவு தயாரா என்று கேட்க
கற்பகவிருட்ச மரம் கொண்டு வரப்பட்டு துர்வாசர் உணவாக கேட்டதெல்லாம் பரிமாற பட்டது. ராமனின் விருந்தோம்பலில் வயிறார உணவருந்திய துர்வாசர் ராமனை தனி ஒரு அறைக்கு அழைத்து சென்று ராமரை வணங்கி பரந்தாமா என்னை மன்னித்துவிடு. தெய்வங்கள் மனிதர்களை சோதிக்கலாம் ஆனால் மனிதர்கள் தெய்வத்தை சோதிக்க
தகுதியுண்டோ என்று கண்கலங்க அதற்கு ராமர், மகரிஷி பூலோகம் என்று வந்துவிட்டாலே சோதனை என்று வந்துவிடும் யாவருக்கும் அதில் மனிதன் தெய்வம் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. சோதனையை கண்டு துவளாமல் மனிதன் சோதனையை சாதனையாக்கி வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும். என் அயோத்தி மக்கள் யாவரும்
உங்கள் சாபத்துக்கு பயந்து அஞ்சினர். ஆனால் உங்களால் பாரிஜாத மலர்கள் இந்த அயோத்திக்கு வரவழைக்க பட்டன இதனால் அயோத்தி முழுவதும் சுபிட்சம் ஏற்பட்டுவிட்டது மகரிஷி என்னை ஆசீர்வதியுங்கள் என்று ராமர் அவர் பாதம் பணிய துர்வாசர் ராமரை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டார்.
ஒருமுறை பிரம்மலோகத்தில், நாரதர் உரையாடிக் கொண்டிருந்த போது, ஒரு கேள்வி எழுந்தது. மூவுலகிலும் நைஷ்டிக பிரம்மசாரி யார் என்பதே அந்தக் கேள்வி! சந்தேகமென்ன, நீதான் நாரதா என்று பிரம்மா சொல்வார் என நாரதர் நினைத்தார். ஆனால், பிரம்மாவின் பதில் நாரதருக்கு அதிர்ச்சியைத் தந்தது. பூவுலகில்
மானிடனாக அவதரித்து, லீலைகள் பல புரிந்து கொண்டிருக்கும் ஸ்ரீகிருஷ்ணன் தான் நைஷ்டிக பிரம்மசாரி என்றார் ஸ்ரீபிரம்மா. சதா சர்வ காலமும் கோபியருடன் ஆடிப்பாடி ராசலீலைகள் புரியும் ஸ்ரீகிருஷ்ணனா நைஷ்டிக பிரம்மசாரி என்று நினைத்தபடி உரக்கச் சிரித்தார் நாரதர்.
சந்தேகம் எனில் தினமும் உணவேதும்
அருந்தாமல், நித்திய உபாசனை புரியும் தபஸ்வி துர்வாசரைக் கேட்டுப் பார், காரணங்கள் தெரியும் என்றார் பிரம்மா. நாரதருக்கு மேலும் சிரிப்பு வந்தது. பசியே பொறுக்க முடியாதவர் துர்வாசர். ஒரு நாளைக்கு பல வேளை சாப்பிட்டு அளவுக்கு மீறிய போஜனத்தால், கோபம் உண்டாகி சாபமிடுபவர். அவரைப் போய்த்
One day #MahaPeriyava described #MandukyaUpanishad the one among the 108 Upanishads. The root of Mandukya is sometimes considered as Manduka in Sanskrit meaning frog. The version of many pundits is that since this Upanishad does not directly tell the meaning and it jumps here and
there and tells the meaning it is called as Manduga Upanishad but Mahaperiyava has a different view. The frog is in the habit of jumping from the first step to the fourth step. Having this in mind Sri Maha periyava says that the word Om is divided into four parts. Three parts are
in the form of sounds and one is without sound. The parts of sounds are A karam, Oo karam, M karam so A, Oo and M are together Om. The fourth position is ‘Thuriyam’. Atma is Brahma and is divided into four parts. When Atma is attached to physical body it is called as Vishvan. It
This verse occurs in #BhojaChampu and describes vividly the picture of Sriman Narayana as He appeared to
the Devas. This verse forms part of the Ramayana story composed by King Bhoja and Poet Kalidasa, at a time when King Bhoja was made aware of the fact that he had only ninety more minutes life in this world. This is a beautiful verse and contains rich ideas. The milky white ocean
and the white Adisesha bed provide the necessary relief or background to the scintillating dark-blue body of Narayana. The very fact of His slumber is described as active vigil in the protection of all the worlds and their contents. It is this apparently dormant energy which
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#மீராபாய் (1498 – 1547) வட இந்திய வைணவ பக்தி உலகில் மறக்கமுடியாத கிருஷ்ண பக்தை மீரா பாய். 1300 பாடல்களுக்கு மேல் பாடிய மீரா ராஜபுத்திர இளவரசியாக தற்போதைய ராஜஸ்தானில் பிறந்தவர். பக்தி நெறியில் தீவிர பற்று கொண்ட இவர் , கிருஷ்ணரின் மீது இயற்றிய பக்திப் பாடல்கள்.
மிகவும் புகழ்பெற்றவை. இவர் செளகரி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் ஜோத்பூரை ஆண்ட ரத்தன் சிங்கின் மகள் என்ற பெருமை பெற்றவர். வசதிகளுடன் பிறந்த மீரா பாய்க்கு நடனம், பாட்டு என்றால் உயிர். ஆனால் ராஜவம்சம் என்பதால் மற்றவர்கள் முன்னிலையில் பாட்டு பாடுவது தடுக்கப்பட்டது. அவர் தன்னுடைய
சிறுவயதிலேயே கிருஷ்ணனின் மீது தீராத காதல் கொண்டு இருந்தார். அவரை நோக்கி இசைப்பதும் பாட்டு பாடுவதையுமே தன்னுடைய வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார். கிருஷ்ணனை நோக்கி தெய்வீக பாடல் பாடி தன் மனதை அதில் ஈடுபடுத்தினார். ஒரு நாள் ஒரு துறவி மீரா பாயின் தந்தையை காண அவர் வீட்டிற்கு வந்தார்.
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் திரிகாலத்தையும் உணரும் சக்தி கொண்ட தூய்மையான மனம் உடைய காருண்ய சீலர் ஸ்ரீ ஹரி நாம அனந்த வைஷ்ணவர். இவர் எப்பொழுதும் ஹரிநாம சிந்தனையில் வாழ்ந்து வந்தார். இவர் வேம்புரி எனும் கிராமத்தில் தன் சீடர்களுக்கு தாம் கற்ற கல்வியைச் சொல்லிக் கொடுத்து வந்தார். இவரிடம்
எண்ணற்ற சீடர்கள் வித்தைப் பயில வந்தனர். அதில் சத்யசீலன் எனும் சீடன் ஆச்சாரியனிடத்தில் மிகுந்த மரியாதையும் பக்தியும் வைத்து பணிவிடையும் செய்து வந்தான். குருவே தெய்வமெனக் கருதினான். குருவுக்கு அந்த சீடன் மேல் அளவு கடந்த அன்பும் பாசமும் இருந்தது. ஒருநாள் அந்த கிராமத்திற்கு மகான்
கபீர்தாஸரின் குருதேவரான ஸ்ரீ ராமானந்தர் வருகை தந்தார். கோவில் மடத்தில் அவரின் சீடர்களுடன் தங்கியிருந்தார். தினம் காலை உஞ்சவருத்தி எடுத்துக் வந்த ஹரி நாம அனந்தரின் சீடன் மடத்தில் தங்கியிருந்து ராமானந்தரின் பாதங்களில் விழுந்து வணங்கினான். பாதம் பணிந்தவனைப் பார்த்து ராமானந்தர்
#சுசீந்திரம்#தாணுமாலய_சுவாமி
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் (தாணு= சிவன், மால்= திருமால், அயன்= பிரம்மா) மும்மூர்த்திகளும் இணைந்து ஒரே வடிவமாக தத்தாதிரேயராக கொன்றை மரத்தடியில் அருள்பாலிக்கின்றனர். அத்திரி மகரிஷியின் மனைவி அனசூயயை சோதிக்க வந்த
அவர்களை தன் கற்பின் திறத்தால் குழந்தைகளாக்கி, கொன்றை மரத்தில் தொட்டில் கட்டி ஆட்டினாளாம் அனசூயை. (அத்தரி மகரிஷி, அனுசுயா ஆகியோர் வாழ்ந்த இடம் இதையடுத்து உள்ளது. இவ்வூர் இன்றும் #ஆசிரமம் என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது.) இதனால் தத்தாத்ரேயர் அத்திரி மகரிஷி அனுசுயாவின் புதல்வனாகக்
கருதப்படுகிறார். தத்தாத்ரேயரை வணங்கி அனைத்து நலன்களையும் பெறுவோம். #தத்தாத்ரேயர்#ஸ்லோகம்.
மாலகமண்டலு தர கரபத்மயுக்மே
மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம்!
அத்யஸ்த ஊர்த்வ கரயோ: சுப சங்கசக்ரே
வந்தே தமத்ரிவரதம் புஜ ஷட்க யுக்தம் ||
மாலையையும், கமண்டலத்தையும் இரு கைகளிலும், உடுக்கை