திருவடியை சேவிப்பதின் பேரின்பத்தை வர்ணிக்கிறார்.
“ஹே கி³ரிஶ”– மலையில் வசிப்பவரே!
‘த்வாம் த்³ருʼஷ்ட்வா’ – உங்களை தரிசனம் செய்து
‘தவ ப⁴வ்ய அங்க்⁴ரியுக³ளம்’ – உங்களுடைய மங்களகரமான, சுபமான அந்த திருவடித் தாமரைகள் இரண்டையும்
‘ஹஸ்தாப்⁴யாம் க்³ருʼஹீத்வா’ – கைகளால் பற்றிக்கொண்டு
‘ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந்’ – தலையிலும், கண்களிலும், மார்பிலும் வைத்துக்கொண்டு
‘ஸமாஶ்லிஷ்ய’ – இறுகக் கட்டிக் கொண்டு,
‘ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலான் ஆக்⁴ராய’ – நல்ல மலர்ந்த தாமரைப் போன்ற அந்த பாதங்களின் நறுமணத்தை முகர்ந்து,
‘ப்³ரஹ்மாத்³யைஹி அலப்⁴யாம்’ – பிரம்மாதி தேவர்களுக்கும்
கிடைக்காததான
‘முத³ம்’ – அந்த பாதத்தை அனுபவிக்கிற மகிழ்ச்சியை
‘கதா³ வா அநுப⁴விஷ்யாமி’ – நான் எப்ப அனுபவிக்கப் போகிறேன்?” என்று கேட்கிறார்.
பாத தரிசனம், பாதத்தை கட்டிக்கொண்டு கண்ணீர் விடுவது தலையில் வைத்து கொண்டு குதூகலிப்பது - இதை எல்லா மகான்களும் பாடியிருக்கிறார்கள். #ஒளவையார்
‘சீதக் களப செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பும் பல இசைபாட’ என்று அந்த பாதத்தில் ஆரம்பித்து ‘வித்தக விநாயகா விரைகழல் சரணே’ என்று பாதத்தில் முடிக்கறார். #அருணகிரிநாதர் ‘வருத்தா மற்றொப்பிலதான மலர்த்தாள் வைத்து எத்தனை ஆள்வாய்’, ‘முருக சரவண மகளிர் அறுவர் முலைநுகரும் அறுமுககுமர சரணம்
என அருள்பாடி ஆடிமிக மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழிஅருவி முழுகுவதும் மணநாறு சீறடியே’ –என்று அந்த மலர்த்தாள் தலையில் வைத்து இந்த எத்தனை ஆளணும், காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அநுபூதியில்,
‘சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லு மதோ?
வீடும், சுரர்
மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும் கமழும் கழலே’
என்று வேதத்தில் கமழும் கழலை சூடும்படி எனக்கு கொடுத்தானே, என்னால வர்ணிக்க முடியுமா இந்த ஆனந்தத்தை என்று முடிக்கிறார்.
‘தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது’ – இது ஐயன் #திருவள்ளுவர் வாக்கு. நாம்
சந்தோஷப் படவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் செய்யும் செயல்கள் துக்கத்தில் முடிகின்றன. இதுலிருந்து எப்படி வெளியில் வருவது என்று பயந்து கொண்டு இருக்கும்போது, அந்த பயத்தைப் போக்கி அபயத்தை கொடுக்கிறது பகவானின் திருவடி. அதுனால் தான் மகான்கள், அபயம் கிடைத்து விட்டது என்றால்,
பகவானின் திருவடி கிடைத்து, அந்த அடியார் கூட்டத்தில் நாம் ச்ற்ர்ந்து விட்டோம் என்றால் அதற்குப் பிறகு பயமே இல்லை என்கிறார்கள். என்ன ஜன்மா எடுத்தாலும் ப்ராரப்த வசமா என்ன நடந்தாலும்நம்மை பாதிக்காது. பகவான் இருக்கிறார். அவர் ஆட்டி வைக்கிறார் என்று நாம் இருக்கமுடிவதால் தான் அந்த
சரணத்தை அனைவரும் பிரார்த்திக்கின்றனர். #ஆதிசங்கரர் சொல்வது போல திருவாசகத்தில் மாணிக்க வாசகரும் பலமுறை சரணத்தை போற்றுகிறார்! எடுத்த உடனே, ‘நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க’ என ஆரம்பித்து
‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகி
நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க’
‘ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி’
என்று திருவடிகளை போற்றிக் கொண்டே இருக்கிறார். #திருவெம்பாவை கடைசி பாட்டில்,
பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்
என்று அந்தப் பாதங்களைப் போற்றி போற்றி அவர் சந்தோஷப்படுகிறார். அவருக்கு குருந்த மரத்தடியில் குருவாக வந்து பரமேஸ்வரன், அந்த பாதங்களை கொடுத்ததில் இருந்து அவருக்கு உலக பந்தங்கள் எல்லாம் விட்டுப் போயின.
திருச்சிற்றம்பலம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#UkraineRussiaWar#விரிவான_பார்வை
1917வரை ரஷ்யா தனிநாடு ஆனால் உக்ரைனின் சில பகுதிகள் அவர்களிடம் இருந்தன. உக்ரைன் 1919ல் சோவியத்துடன் இணைந்தது. ரஷ்ய புரட்சிக்கான அடித்தளம் உக்ரைனில் தான் தொடங்கியது. ஹிட்லர் காலத்துக்கு முன்பே ஜார் மன்னன் அங்கு யூதர்களை நொறுக்கி கொண்டிருந்தான்.
செல்லும் இடமெல்லாம் மன்னர்களால் கொடுமைப் படுத்தப் பட்டதால் யூத இனம் அரசர்களை ஒழிக்க ஒரு சித்தாந்தம் உருவாக்கிற்று. அதுதான் கம்யூனிசம். செர்னோபில் விபத்துக்குப் பின் சோவியத் நொறுங்கி விட உக்ரைன் 1990ல் பிரிந்து தனி நாடாகியது. பல வளங்களை கொண்ட உக்ரைன் பிரிந்தவுடன் ரஷ்யா பெரும்
சிக்கலில் மாட்டியது. ஐரோப்பாவுக்கே உணவை கொடுத்த உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும், அமெரிக்கா கோதுமை அனுப்பும் அளவு பொருளாதாரம் வீழ்ந்தது. அந்த குழப்பமான காலகட்டத்தில் தான் உக்ரைனில் இருந்த சோவியத்கால தொழில்நுட்பம் பலற்றை சீனா தூக்கி சென்றது. பொதுவாக ஐரோப்பாவில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள்
#UkraineRussiaWar#Christianity இப்பொழுது மூன்று பக்கமும் ரஷ்ய படைகள் சூழ்ந்த நிலையில் மேற்கு எல்லை மட்டுமே உக்ரைனில் திறந்துள்ளது அங்கு உக்ரைன் அகதிகள் லட்சகணக்காக குவிகின்றனர். ஏற்கனவே கடும் அகதி சிக்கலில் சிக்கியுள்ள ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் அகதிகளை நோக்கி முகம் சுழிக்கின்றன.
சண்டையிடும் இரு நாடுகளும் கிருஸ்துவ நாடுகள் தான். ஒரு கிறிஸ்தவ நாடு இன்னொரு கிறிஸ்தவநாடான ரஷ்யாவினை சீண்டுகின்றது, அந்த கிறிஸ்தவ ரஷ்யா கிறிஸ்தவ உக்ரைனை நொறுக்குகின்றது. இதுதான் அன்பும் அரவணைப்பும் கொடுக்கும் கிறிஸ்தவ தேசத்தின் முகம், இப்படிபட்ட இனம் ஆண்டு தான் இந்தியாவில்
முன்னேற்றம் வந்தது, இந்தியரை முன்னேற்றவே வெள்ளையன் வந்தான் என்பதெல்லாம் எப்படியான கட்டுகதை என்பதை உணர வேண்டியவன் உணரட்டும்
இயேசுநாதர் ரத்த வெள்ளத்தில்தான் செத்தார். அதற்காக அவர் வாழ்ந்த பாலஸ்தீனம், அவரை வழிபட்ட ஐரோப்பா முதல் அவர் பெயரால் அடக்கபட் செவ்விந்தியர் இன்கா மக்கள் வரை
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பிரம்மாவுக்கு ஒரு பேரழகியைப் படைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிற்று. அதனால் தன் கற்பனை நயங்களை எல்லாம் திரட்டி ஒரு பேரழகியை உருவாக்கிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு பொறாமை கொண்ட சரஸ்வதி, தன் மகனான நாரதரை அழைத்து, “உன் தந்தை ஒரு பேரழகியை, குற்றமில்லாத பெண்ணாக
உருவாக்கப் போவதாகப் பெருமிதம் கொண்டிருக்கிறார். எப்படியாவது அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஒரு குறை ஏற்படும்படி செய்துவிடு!” என்றாள். பிரம்மா அந்தப் பெண்ணைப் படைத்து முடித்துவிட்டார். அவளுக்குப் என்ன பெயர் சூட்டலாம் என்று யோசித்தார். ஹல்யம் என்றால் குற்றம் என்று அர்த்தம். எந்தக்
குற்றமுமில்லாத பேரழகியாதலால் ‘அஹல்யா’ என்று பெயர் வைத்தார். அவளது தலையெழுத்திலும் அஹல்யா என்று எழுதினார் பிரம்மா. அந்நேரம் பார்த்து அங்கே வந்த நாரதர் பிரம்மாவிடம் பேச்சு கொடுத்து அவரது கவனத்தைத் திசை திருப்பி விட்டு, அப்பெண்ணின் தலையெழுத்தில் இருந்த ‘அ’ என்னும் எழுத்தை மட்டும்
எந்த ஒரு பிரச்சினை இருக்கும் பொழுது நம் ஜென்ம நட்சத்திரத்திற்கு உண்டான காயத்திரி மந்திரத்தை ஜபிக்க சிறிதளவு பரிகார பலனை கொடுக்கும். எந்த பிரச்சினைனையும் தீர்க்கும் நட்சத்திர காயத்ரி மந்திரம். உங்கள் ஜாதகப்படி நீங்கள் என்ன நட்சத்திரமோ அந்த நட்சத்திரத்திற்குரிய நட்சத்திர காயத்திரி
மந்திரத்தை 1 மண்டலம் (48 நாட்கள்) தினமும் அதிகாலை தொடர்ந்து சொல்லிவர கைமேல் பலன் கிடைக்கும். தினமும் குறைந்தது 9 முறையாவது நம் நட்சத்திர காயத்திரி மந்திரத்தை மனப்பாடம் செய்து சொல்வது நல்லது. இன்பங்கள் நிறைய பெற்று, வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம்.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பன்னிரு ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற ஒரே திவ்யதேசமான ஸ்ரீரங்கம் கோவில் பூலோக வைகுண்டம்! 7 உலகங்களையும் உள்ளடக்கியதாக, 7 பிரகாரங்கள் அமைந்த முழுமையான அமைப்பு கொண்டது இக்கோயில். 156 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது இக்கோயில். ஸ்ரீரங்கம் ஊரே கோயிலுக்குள்தான்
உள்ளது என்றால் அது மிகையாகாது. சப்த பிரகாரங்களில் 5 பிரகாரங்கள் கோயிலுக்குள் வந்து விடுகின்றன. 6வது பிரகாரமான உத்திரவீதியில் ஒரு பகுதியில் மட்டும் குடியிருப்புகள் உள்ளன. 7வது பிரகாரமான சித்திரை வீதியிலும், 7 பிரகாரங்களையும் உள்ளடக்கிய அடையவளைந்தான் சுற்றிலும் இருபுறமும்
குடியிருப்புகள் உள்ளன. இந்த 8 பிரகாரங்களுக்கு இடையிலும் பிரமாண்டமான மதில்சுவர்கள் உள்ளன. ஒவ்வொரு மதில் சுவரும் 12 அடி முதல் 15 அடி வரை உயரமும், 5 முதல் 10 அடி வரை அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த மதில் சுவர்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக
#ஶ்ரீஆதிசங்கரர் துதி
ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் |
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் | |
திருவள்ளூர் அருகே #திருப்பாச்சூர் என்ற இடத்திலுள்ளது அருள்மிகு #தங்காதலி_வாசீஸ்வரர் என்ற மிகப் பழமையான கோவில். இந்த கோவிலின் வரலாறு ஆச்சர்யங்கள் நிறைந்தவை. இக்கோவிலில்
ஆதிசங்கரர் கையால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோவில் அடிக்கல் நாட்டப்பட்டதாக வரலாறு. தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி, சிவபெருமானின் உத்தரவை மீறி, தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள். இதனால் அவளை, பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாக
பிறக்கும்படி செய்தார் சிவன். பூலோகத்தில் சிவபெருமானை திருமணம் முடிக்க எண்ணி, வேண்டி தவம் செய்த இடமே திருப்பாச்சூர். தன் காதலியே நான் வந்துவிட்டேன் என சிவன் கூறியதால் இக்கோவிலில் அம்மன் தங்காதலி என அழைக்கப் படுகிறார். இந்த அன்னையை வழிபடும் தம்பதியரிடையே ஒற்றுமை கூடி அன்னியோன்யம்