#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மணிகண்டன் அரச சபைக்கு வேலை கேட்டு வந்தான். அவனுடைய திறமையைப் பற்றி கேட்டபோது, அவன், என்னால் ஒரு மனிதனை அல்லது ஒரு மிருகத்தைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவர்களின் குணாதிசயத்தை தெரிவித்திட முடியும் என்றான். இதைக் கேட்ட அரசர் சண்முக பாண்டியன்
அவனை வேலைக்கு அமர்த்தினார். அவரது விஷேசமான குதிரைகள் இருக்கும் தொழுவத்தை பாதுகாக்கும் பொறுப்பை அவன் மீது ஏற்பட்ட நம்பிக்கையால் வழங்கினார். சில நாட்களுக்குப் பிறகு, மன்னர் சண்முக பாண்டியன், தன்னிடம் இருக்கின்ற விலைமதிப்புமிக்க குதிரையைப் பற்றிக் கேட்டார். மணிகண்டன், இது நல்ல
இனத்தைச் சேர்ந்தது இல்லை என்று கூறினான். அரசர் சண்முக பாண்டியன் திகைத்தார். அந்த குதிரையை விற்றவனை அழைத்து வரச் செய்து அவனிடம் இதைப் பற்றிக் கேட்டார். அவன், இந்த குதிரை நல்ல இனத்துக்குச் சொந்தமானதுதான். ஆனால் இந்த குதிரை பிறந்தவுடனேயே, இதனுடைய தாய் இறந்து போய் விட்டது. ஆகவே இந்த
குதிரைக்கு ஒரு பசுவின் பால் ஊட்டப்பட்டு வளர்ந்தது என்று கூறினான். அரசர் சண்முக பாண்டியன் மணிகண்டனை அழைத்து அவனிடம், இந்த குதிரை நல்ல இனத்தைச் சேர்ந்தது இல்லை என்பதை எப்படி நீ தெரிந்து கொண்டாய் என்று கேட்டார்.
மணிகண்டன், இது புல்லை சாப்பிடும் போது, ஒரு பசு மாதிரி தன் தலையை கீழே
தொங்க வைத்து அசை போட்டது. ஒரு நல்ல இனத்தைச் சேர்ந்த குதிரை வாய்க்குக் கொண்டு சென்ற பிறகு தன் தலையை உயர்த்திக் கொள்ளும் என்றான். அவன் திறமையைக் கண்டு மன்னர் மிகவும் திருப்தி அடைந்தார். அவனுக்குப் பரிசாக, நிறைய தானியங்கள், நெய், கோழிக் குஞ்சுகள், ஆடுகள் இவற்றை அனுப்பினார்.
ராணியின் அரண்மனையில் அவனை பாதுகாவலாளராக நியமித்தார். சிறிது நாட்களுக்குப் பிறகு, அந்த மன்னர் ராணியைப் பற்றி அவனிடம் கேட்டார். மணிகண்டன், பழக்க வழக்கங்களைப் பார்க்கும் போது ராணி மாதிரியாகத் தெரிகிறது. ஆனால், பிறப்பால் இவர் ஒரு ராணியாகத் தோன்றவில்லை என்றான். மன்னர் அதிர்ச்சி
அடைந்தார். அவர் தனது மாமியாரை அழைத்து உண்மையை சொல்லும்படி கேட்டார். அதற்கு மன்னனின் மாமியார், உங்கள் தந்தை என் கணவரிடம், என் மகள் பிறந்தபோதே அவளை என் மகனுக்குத்தான் மணம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
ஆனால், எங்கள் மகளோ ஆறு மாதங்களுக்குள் இறந்து விட்டாள். ஆகவே நாங்கள் ஒரு பெண்
குழந்தையைத் தத்து எடுத்து அவளை உங்கள் ராஜ குடும்பத்துக்கு ஏற்றவள் போல வளர்த்தோம். இவள் எங்களுடைய தத்து மகள் தான் என்றார். மன்னர், இதை எவ்வாறு நீ அறிந்து கொண்டாய் என்று மணிகண்டனிடம் கேட்டார். அதற்கு அவன், ராணி பணியாட்களை நடத்தும் முறை மிகவும் மோசமாக இருக்கிறது. அரச பரம்பரையைச்
சேர்ந்த ஒருவர் பணியாட்களிடம் பழகும் முறை வித்தியாசமாக இருக்கும். இது ராணியின் நடத்தையில் தெரியவில்லை என்று கூறினான். மன்னர் திரும்பவும் இவனுடைய சரியான முடிவால் திருப்தி அடைந்தார். அவனுக்கு வெகுமதியாக நிறைய தானியங்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள் கொடுத்தார். இதனுடன் கூட, தன்
அரச சபையில் இவனுக்குப் பதவியும் கொடுத்தார். சில நாட்களுக்குப் பிறகு, மணிகண்டனை அழைத்தார். அவனிடம் அவரைப் பற்றி கூறுமாறு கேட்டார். அதற்கு அவன், என்னுடைய உயிருக்கு உத்தரவாதம் உண்டு என்றால் மட்டுமே என்னால் சொல்ல முடியும் என்றான். மன்னர் உறுதி மொழி கொடுத்த பிறகு அவன் அவரிடம்,
மன்னருடைய பழக்க வழக்கங்களும் உங்களிடம் இருக்கவில்லை என்றான். மன்னன் மிகவும் கோபம் அடைந்தார். ஆனால் ஏற்கனவே அவன் உயிருக்கு உத்தரவாதம் கொடுத்திருந்ததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. மன்னர் இதனைத் தெளிவு படுத்துவதற்காக தன் அம்மாவின் அரண்மனைக்கு வேகமாகச் சென்றார். அவர் அம்மா,
இது உண்மை. நீ ஒரு ஆடு மேய்ப்பவரின் மகன். எங்களுக்குக் குழந்தைகள் கிடையாது. உன்னை தத்து எடுத்து எங்கள் சொந்தக் குழந்தை போலவே வளர்த்தோம் என்றாள். மன்னன் மணிகண்டனிடம் என்னைப் பற்றி எப்படி நீ அறிந்து கொண்டாய் என்று கேட்டான். அதற்கு அவன் அரசர்கள் எதற்காவது வெகுமதி கொடுத்தால், அவர்கள்
வைரம், முத்துக்கள், ஆபரணங்கள் மாதிரியாக கொடுப்பார்கள். ஆனால், நீங்களோ செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் உணவு வகைகளாகக் கொடுத்தீர்கள். இந்த மனப்பான்மை ஒரு மன்னருடையது அல்ல. இது ஓர் ஆடு மேய்ப்பவரின் மகனின் நடத்தை என்றான்.
செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு, தகுதி, அறிவு, மனிதனின் உடல்வலு
இவையெல்லாம் வெளிப்புற பாவனைகள் தான். ஒரு மனிதனின் உண்மைத் தன்மை அவனுடைய நடத்தைகள் மற்றும் அவனுடைய நடத்தையில் பிரதிபலித்து நமது விதியை உருவாக்குகிறது. ஆகவே நம் நடத்தை ஸ்ரீ கிருஷ்ணனை நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே நம் அன்பையும் செயல்பாடுகளையும்,
இரக்க உணர்வுகளையும் நம்மை சுற்றி இருப்பவர்கள் நன்றாக உணர்ந்திட வேண்டும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா பந்தநல்லூர் ஸ்ரீ பந்தாடு நாயகி சமேத பசுபதிநாதர் கோவிலில் உள்ள துர்க்கையின் கண்களில் இருந்து கண்ணீர் ஓரமாக கசிந்து கொண்டே இருந்தது. பக்தர்களும் இதை கவனிக்கத் தொடங்கினர். அம்பாளுக்கு அபிஷேக, அலங்காரங்கள் செய்யும் ஶிவஸ்ரீ ஜகதீஶ ஶிவாச்சார்ய குருக்கள் அவளுடைய கண்களை பதமாக
துடைத்து விட்டாலும் அது நின்றபாடில்லை! கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிவு தெரிந்தது. அவர் மனசும் மிகவும் வேதனைப் பட்டது. அம்மா! உனக்கே ஏன் இந்த வேதனை என்று வருந்தினார். ஒரு கன்னியாப் பெண்ணை துர்க்கையாக பாவித்து, ஆராதனை செய்து, அவளுக்கு சௌபாக்ய திரவ்யங்களை சமர்ப்பித்தார். பிறகு
நவாக்ஷரி மந்த்ர ஜபம் செய்தார். பிறகு துர்க்கையாக ஆராதனை செய்யப்பட்ட பெண்ணின் முன்னால் அமர்ந்து கொண்டு, "அம்மா! என்ன குறை? ஏன் இந்தக் கண்ணீர்?" தாயிடம் கெஞ்சிக் கேட்டார். அந்தப் பெண்ணும் ஏதோ ஒருவித 'trance'ல் இருந்தாள். இவர் இப்படிக் கேட்டதும், அந்தப் பெண் "பச்சை நிறத்தில் பாவாடை
சாபங்கள் மொத்தம் 13 வகையானவை. 1) பெண் சாபம்
பெண்களை ஏமாற்றுவதாலும் சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
2) பிரேத சாபம்
இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும்,
பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
3) பிரம்ம சாபம்
நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக்
கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
4) சர்ப்ப சாபம்
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும்.
இதனால் கால-
15/3/2022 பங்குனி செவ்வாய்.
பிலவ வருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாதம் தொடக்கம் செவ்வாய்க் கிழமையில் அமைந்திருக்கிறது. இந்நாள் குறிப்பாக முருகனை வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் அளிக்கும் நாளாக அமைகிறது. பங்குனி செவ்வாயில் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருபவர்களுக்கு
நீண்ட நாள் வேண்டுதல் கூட விரைவாக நிறைவேறி விடும் என்பது நம்பிக்கை. பல வருடங்களாக குழந்தை பேறுக்காக வேண்டி காத்திருப்பவர்கள், எப்படியாவது சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்று தவம் இருப்பவர்கள், விரும்பிய வேலை கிடைக்க, விரும்பிய தொழிலை செய்ய இப்படி நீங்கள் நீண்ட நாட்களாக
நினைக்கும் விஷயங்கள் கூட இந்நாளில் பிணை செய்தால் நிறைவேறும். அதிகாலையில் எழுந்து நீராடி விபூதி பூசிக் கொண்டு, பூஜை அறையை சுத்தம் செய்து மாக்கோலம் இடுவது போன்ற அலங்காரங்களை செய்து முடித்த பின் முருகன் படம் மற்றும் முருகனுடைய வேல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். முருகனுடைய விக்ரஹம்
#TheKashmirFiles#காஷ்மீரர்ஃபைல்ஸ் இந்தியாவின் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. உண்மை சரித்திரம் அறியாத பலர் இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு இப்படியெல்லாம் கூட கொலைபாதகம் செய்வார்களா என கேட்கையில் அவர்களின் அறியாமை புலப்படுகிறது, வேதனையளிக்கிறது.
#மெக்காலே மாற்றிய சரித்திரத்திற்கு காரணம் உள்ளது. நம் தேசம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்த பிறகும் நம் அரசாங்கங்கள் சரித்திரத்தை, உண்மையை குழி தோண்டி புதைத்துள்ளதை எப்படி மன்னிப்பது? உண்மை சரித்திரத்தை மீட்டெடுத்து அதை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டியது மிக அவசியம்
தமிழகத்தை பொறுத்தவரை 13ம் நூற்றாண்டில் #மதுரைமீனாட்சி கோவிலில் நடந்த அராஜக தாக்குதல்கள், கொலை பாதகங்கள், 12,000 வைணவர்கள் முஸ்லீம் படைகளுக்கு எதிராக ஸ்ரீரங்கத்தில் வெறும் கைகளோடு போராடி செய்த உயிர் தியாகங்களை படம் எடுக்கலாம். #மருது_சகோதரர்கள் ஆங்கிலேய மற்றும் முகம்மது அலிகான்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
தாய், தந்தை, மகள் மூவருமே ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பக்தர்கள். குருவை வணங்குவதில் பணக்காரராக இருந்தாலும் வறுமையில் வாழ்ந்து வந்தனர். பெண் நல்ல அழகானவள் மட்டுமல்ல நல்ல குணமும் கொண்டவள். நன்றாக அவள் படித்தாலும் மேற்கொண்டு அவள் தந்தையால் படிக்க வைக்க முடியவில்லை.
பெண் பருவ வயது வந்ததும் தீவிரமாய் வரன் பார்க்க தொடங்கினர். நல்ல வரன் குருவின் அருளால் இனிதாய் அமைந்தது. பிள்ளை வீட்டாரும் வரதட்சினை எதுவும் வேண்டாம் என்றும் உங்களுக்கு எங்கு விருப்பமோ அங்கு திருமணத்தை நடத்துங்கள் என கூறி விட்டனர்.
எல்லாம் குருராயர் அருள்தான் என நினைத்திருந்த
சமயத்தில் அவர்களின் அடுத்த வார்த்தை பெரிய பாறையையே தலையில் தூக்கி வைத்ததை போல உணர்ந்தனர். திருமணத்திற்கு வருபவர்களை நன்றாக உபசரிக்க வேண்டும். அவர்கள் வயிராற உணவு அருந்த வேண்டும் என தெரிவித்தனர். இவர்களும் சரி என்ற உடன் தேதி குறிக்கப் பட்டது. தந்தைக்கோ தன்னுடைய வறுமையிலும் பெண்ணை
#மகாபெரியவா
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுதவர்-கோதண்டராம சர்மா
சாத்தனூர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்பவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாகப் பெரியவா தரிசனத்துக்கு வந்தார். என்ன தோன்றிற்றோ அவருக்கு, பெரியவாளிடம் ஒரு விசித்தரமான வேண்டுகோளை விண்ணப்பித்துக் கொண்டார்.
"நான் கடைசி மூச்சு விட்டதும், பெரியவாள் 'கங்கா ஜலமும், துளசிதளமும்' பிரசாதமாக கொடுத்தனுப்பி அந்தச் சரீரத்தையும் ஆத்மாவையும் சுத்தப்படுத்தி, நல்ல கதி கிடைக்க அனுக்ரஹம் செய்யணும்”
இந்தப் பிரார்த்தனையைப் பெரியவாளைத் தவிர வேறு யாரும் கேட்கவில்லை. சாத்தனூர் அய்யரும் மற்றவர்களிடம்
சொன்னதில்லை. மஹாராஷ்டிர மாநிலம் சதாராவில் ஸ்ரீ மடம் முகாம் செய்திருந்தபோது, தொலை பேசியில் செய்தி வந்தது. சாத்தனூர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் சற்றுமுன் சிவலோகப் பிராப்தி அடைந்தார். உரிய சந்தர்ப்பத்தில் பெரியவாளிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. பெரியவா ஒரு நிமிஷம் மௌனமாக