#Thread #TNBudget #Polytechnic #Education #Tamilnadu
அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்ற #TNBudget ன் கல்வித்தொகை உதவித்திட்டம் பல
மாணவிகளுக்கு அவர்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொடுக்கும். அது அவர்களின் உயரத்தை அடைய ஓரளவுக்கு உதவும் என நம்புகிறேன். இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. நேற்று காலை டிவி செய்திகளில், சில மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு சரியான வருமானம் இல்லை எனவும்,
இந்த ஊக்கத் தொகை அவர்களுக்கு மிகவும் பயன்படும் என்று பேசினர். மாணவர்கள், மாணவிகள் கல்லூரி பட்டப்படிப்புகளை படிக்க நான் எப்போதும் ஊக்குவிப்பேன். ஆனால், பட்டப்படிப்பு நேரடியாக சேர இயலாதவர்கள், அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக விரைவாக வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள், அல்லது டிப்ளமோ
படித்து டிகிரி படிக்கும் எண்ணம் உள்ளவர்கள் பாலிடெக்னிக் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். தவிர, டிப்ளமோ தகுதி மட்டும் போதும் என்ற அளவிற்க்கு பல வேலை வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில், ஏராளமான பாலிடெக்னிக்குகள் உள்ளன, மேலும் சில கல்வியின் தரத்திற்காகவும், விரைவான வேலை வாய்ப்புகளுக்கான
வளாக நேர்காணலுக்காகவும் (Campus Interview) பிரபலமாக உள்ளன. DOTE இணையதளத்தில், தன்னாட்சியுடன் (Autonomous) கூடிய பாலிடெக்னிக்குகள் பட்டியல் உள்ளது. பொதுவாக, பாலிடெக்னிக் சேர்க்கைக்கான தகுதி: 10வது தேர்ச்சி அல்லது +2 (நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு).
tndte.gov.in/site/autonomou…
இந்த DOTE இணையதளத்தில், நடப்பில் உள்ள பட்டயப் படிப்புகள் / பாடப்பிரிவுகள் பற்றிய விவரங்கள் உள்ளது.

tndte.gov.in/site/existing-…

இந்த DOTE இணையதளத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக்குகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

tndte.gov.in/site/governmen…
சென்னையில் உள்ள ஒரு அரசு பாலிடெக்னிக் வளாகம் மற்றும் ஒரு தனியார் பாலிடெக்னிக் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் வளாகம் பல ஆண்டுகளாக (in Decades) மாணவர்களுக்கான தளமாக இயங்கி வருகின்றன. தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக்குகள் பட்டியல் 👇
சர்தார் படேல் சாலையில் இருந்து ராஜீவ் காந்தி ஐடி எக்ஸ்பிரஸ்வேக்கு செல்லும் சாலையில் வலதுபுறத்தில் Central Polytechnic (CPT) அமைந்துள்ளது.
CPT - பல்வேறு பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளை வழங்கும் பாலிடெக்னிக் ஆகும். பாலிடெக்னிக்கில் ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு தொழில்நுட்ப
படிப்புகள் உள்ளன. பாடப்பிரிவுகளின் பட்டியல், சேர்க்கை விவரங்கள் மற்றும் இணையப்பக்க முகவரி கீழே உள்ளது. அவர்களின் வலைப்பக்கத்தில் தகவல்கள் புதுப்பித்த வண்ணம் உள்ளது.

cptchennai.ac.in
Chemical, Leather, Printing Institutes மற்றும் தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக் ஆகியவற்றுக்கான இணையதளங்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இந்தப் படிப்புகளைப் பற்றிய விவரங்களைக் கொண்ட பிற வலைப்பக்கங்களை நான் குறிப்பிட்டுள்ளேன்.
CPT ஐக் கடந்ததும், Chemical, Leather, Printing, Textile Institutes மற்றும் தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து அங்கு அமைந்துள்ளன. தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக் தவிர்த்து இங்கு உள்ள அனைத்து பாலிடெக்னிக்குகளிலும் மாணவிகளுக்கான சேர்க்கை பதிவு உள்ளது.
Institute of Chemical Technologyயில் தான் நான் என்னுடைய டிப்ளமோ படிப்பை முடித்தேன். என் வாழ்க்கையின் முதற்படி அங்கேதான் தொடங்கியது. 90களில், இரண்டு Chemical Technology பாலிடெக்னிக்குகள் மட்டுமே இருந்தன. ஒன்று தரமணியிலும், இரண்டாவது ஈரோட்டிலும். எனவே, Chemical Technology அந்த
காலகட்டத்தில் மிகவும் பிரபலமானது. ICT இணையப்பக்கம் ictchennai.in ஆனால் அது இப்போது செயல்படவில்லை. டிப்ளமோ முடித்தவுடன் கேம்பஸ் இன்டர்வியூ மற்றும் வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு இன்றும் உள்ளன என்று முன்னாள் மாணவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டேன்.
கெமிக்கல் டெக்னாலஜி பற்றி தெரிந்து கொள்ள இந்த இணையப் பக்கத்தில் தகவல்கள் உள்ளன.

collegedunia.com/college/61345-…
Leather Technology பாடப்பிரிவு பற்றிய விவரங்கள் கீழே உள்ள இணைப்பில் உள்ளது.

collegesignal.com/college/instit…

Textile Technology பாடப்பிரிவு பற்றிய விவரங்கள் கீழே உள்ள இணையதளத்தில் உள்ளது (பக்கம் இயங்குகிறது). தேவையான தகவல்களும் உள்ளது.
textileinstitute.in/home.html

textileinstitute.in/ad.html
Printing Technology பாடப்பிரிவு பற்றிய விவரங்கள் கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

collegedunia.com/college/61325-…
தமிழ்நாட்டில் மாணவிகளுக்கான குறிப்பிட்ட சில பாலிடெக்னிக்குகள் உள்ளன, தரமணியில் தர்மாம்பாள் மகளிர் பாலிடெக்னிக் (Autonomous status) உள்ளது. இங்கு கற்று தரப்படும் பொறியியல் பாடப் பிரிவுகள் கீழே உள்ளது.

collegesintamilnadu.com/Polytechnic/Dr…
CPT, Textile Technology தவிர, தரமணியில் உள்ள மற்ற பாலிடெக்னிக்குகள் அவற்றின் இணையதளம் இப்போது செயல்படவில்லை. இணையதளத்தில் புதுப்பித்த தகவல்களை வைத்திருப்பது நல்லது, இது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அரசுக் கல்லூரிகளுக்குக் காட்டப்படுவது போல்
இணையதள முகவரியையும் DOTE இணையப் பக்கத்தில் காட்டலாம். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்
திரு. பொன்முடி அவர்கள் இந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து, புதிய மாணவர்களின் நலனுக்காகவும், புதிய மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கவும், இந்த பாலிடெக்னிக்குகளை
(Facilities & Infrastructure) மேலும் எப்படி மேம்படுத்துவது என்று அரசு கல்வித்துறை அதிகாரிகள் மூலம் பார்வை இட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
சென்னையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆவடியில் உள்ள முருகப்பா சிறந்து விளங்குகிறது. முருகப்பா பாலிடெக்னிக்கில் ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு தொழில்நுட்ப படிப்புகள் உள்ளன. பாடப்பிரிவுகளின் பட்டியல் மற்றும் இணையப் பக்க முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்களது இணையப் பக்கத்தில் அனைத்து தகவல்களும் தெளிவாகவும் வேலை வாய்ப்பு பற்றிய கம்பெனிகள் விவரங்கள் உள்ளன.

murugappapoly.ac.in
டிப்ளமோ பாதைக்கு செல்லும் மாணவர், மாணவிகளுக்கு, ஒரு வேண்டுகோள்: நீங்கள் டிப்ளமோ முடித்த பிறகு, உடனடியாக அல்லது சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பட்டப்படிப்பை (டிகிரி) படிக்க முயலுங்கள். இது உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.
கடைசியாக ஒன்று சொல்ல வேண்டும்; நீங்கள் சுயதொழில் செய்தாலும் அல்லது வேலைக்குச் சென்றாலும் கல்வியே வாழ்க்கையின் அடிப்படை. இந்த உதவித் தொகை திட்டத்தை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறி வர வாழ்த்துக்கள்.
இந்தத் தகவல்கள் அனைத்தையும் தயாரித்து தொகுத்து எழுதி முடிக்க பல மணிநேரம் ஆனது.
தமிழக மாணவர், மாணவிகள் நலனுக்காக இது அதிகபட்ச மக்களை சென்றடையும் என்று நம்புகிறேன். எனக்கு தெரிந்த கல்வித்துறையில் / வேலை வாய்ப்பு பற்றி குறிப்பிடும் சம்பந்தபட்டவர்களை இங்கே tag செய்கிறேன். இதை படிப்பவர்கள் மற்றவர்களுக்கு உபயோகப்படும் என்று நினைத்தால் share பண்ணுங்க.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ஶ்ரீதர்

ஶ்ரீதர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SriManSG

Feb 21
A must read thread about Bruce Lee to know his history, growth, his famous movies, his death conspiracy. I also felt many times he should have lived long & the tragedy was his son also died at young age. I was also thinking about the relation to family curse as written by Chocks.
His movies, action sequences came to popular in a short time and he disappeared even before he reached his peak. I have also read and watched many of his death conspiracy videos. The inspiring video of Bruce Lee playing with his nunchucks with a tennis player was not real.
This is written in this link with the famous video which went viral.
butterflyonline.com/no-the-bruce-l….
Read 5 tweets
Feb 21
#MotherLanguage Day
#TamilLanguage in Singapore
சிங்கையில் தமிழ்மொழி!

சிங்கப்பூரில் தமிழ் ஒரு தேசிய மொழி
சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வ மொழியாக, சிங்கப்பூரில் கிடைக்கும் எல்லா சுவரொட்டிகளிலும் தமிழைக் காணலாம்.
பஸ் அல்லது ரயிலில் செல்லும்போது கூட தமிழில் அறிவிப்புகளை கேட்கலாம்.
தமிழ் மொழி சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் முக்கியமாக இந்திய சிங்கப்பூரர்களுக்காக வழங்கப்படும் மொழியாகும். சிங்கப்பூரின் கல்வி முறையில் தாய்மொழி கட்டாயப் பாடமாக இருப்பதால், தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய சிங்கப்பூரர்கள் தொடக்கப்பள்ளி முதல் தமிழ் கற்க வேண்டும்.
இங்கு வசிக்கும் இந்தியத் தமிழர்களும் தமிழ் மொழியை பாடமாக எடுத்து படிக்கின்றனர்.

இந்த இணையதளத்தில் வாழும் மொழி வாழும் மரபு என்ற தலைப்பில் சில மொழி விளக்கங்கள் உள்ளது – Part 1

languagecouncils.sg/tamil/en/-/med…
Read 8 tweets
Feb 20
#Thread #PleaseRead A job experience from a #SecurityGuard work!
இந்தப் பதிவைப் பார்த்ததும் சிலர், அவருடைய பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம், பிறந்தநாள் செய்தியை கேக்கில் எழுதியிருக்கலாம் என்று எழுதியிருந்தார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களில் உள்ள செக்யூரிட்டிகள் நிறுவனத்தின்
நுழைவாயிலில் உள்ள ஒரு சிறிய அறையில் அமர்ந்திருக்கலாம். ஆனால் சிறிய/நடுத்தர நிறுவனங்களில், பாதுகாப்பு ஊழியர்கள் நுழைவு வாசலில் நின்று அல்லது உட்கார்ந்து, ஊழியர்களுக்கு கதவைத் திறந்து காலை வணக்கம் சொல்ல வேண்டி இருக்கும்.
ஒரு ஃப்ளாஷ்பேக்: பல வருடங்களுக்கு முன்பு ஒரு செமஸ்டர் விடுமுறையில், நான் Dyanora சர்வீஸ் சென்டர் அடையாரில் 1.5 மாதங்கள் செக்யூரிட்டியாகப் பணிபுரிந்தேன். கீழே Woodlands ஹோட்டல் இருக்கும். ஒரு மாதம், நான் பஸ் பாஸைப் பயன்படுத்தினேன், மீதி 15 நாள் என் அப்பா பாஸை நீட்டிக்க முடியாது
Read 11 tweets
Feb 19
#Kadhalan #ARR #Shankar #Prabudeva #SPB
காதலனுக்கு முன், ARR 12 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரோஜா, ஜென்டில்மேன், திருடா திருடா டூயட் என ஹிட்களை கொடுத்து மக்களிடையே அவர் பிரபலமடைந்து வந்தார். கல்லூரி செல்லும் மாணவர்கள், டீன் ஏஜ் பசங்க கிட்ட காதலன் பாடல்கள் அதிக வரவேற்பை
பெற்றது. அந்தப் படத்தில் பிரபுதேவாவும் நக்மாவும் புதியவர்கள். தெரிந்த முகங்கள் குஞ்சுமோகன், ஷங்கர், ARR மட்டும். அதனால் பார்வையாளர்களை கவரும் வகையில் புதிய உத்திகளை (Grand visuals, Computer graphics) அப்போது அறிமுகப்படுத்தினர். கண்ணாடியினால் செய்யப்பட்ட பேருந்து, கிராபிக்ஸில்
அசத்திய பிரபலமான முக்காப்லா பாடல். SPB பிரபுதேவா கலந்து கட்டிய காதலிக்கும் பெண்ணின் கைகள், உன்னிகிருஷ்ணன் அறிமுக பாடலான என்னவளே என மாறுபட்ட டியூன்களாக அமைந்தது. பேட்ட ராப் மெட்ராஸ் வார்த்தைகளைக் கொண்டு ஷங்கரால் எழுதப்பட்டது. பெரும்பாலான பாடல்களை வைரமுத்து எழுதி இருந்தார்.
Read 8 tweets
Oct 3, 2021
#Thread
#Engineering Opportunities in #OilandGas Sector – Part 2
#CivilEngineering
Civil பட்டப்படிப்பு முடித்த நிலையில் இருப்பவர்களுக்கும் முடித்து சில ஆண்டுகள் வேலையில் இருப்பவர்களுக்கும், இந்த Oil & Gas துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகள், நீங்கள் கற்று கொள்ள வேண்டிய (1/18)
விஷயங்களைப்பற்றி இன்று எழுதுகிறேன்.
Building Strong, Basement weak அப்படின்னு வடிவேலு சொல்வது போல் இல்லாமல் இரண்டும் வலுவாக இருக்க வடிவமைப்பதே Civil & Structural Engineeringன் சிறப்பம்சம்.
சில terms ஆங்கிலத்தில் மட்டுமே சொல்ல முடியும் என்பதால் ஆங்கிலத்தில் எழுதுகிறேன். (2/18)
While you study Civil Engg, please study modules such as 1) Industrial Structure 2) Powerplant Structure 3) Offshore Structures which will boost knowledge in Engg & design. Those who did Diploma, it is recommended to do a degree for more job opportunities & career growth. (3/18)
Read 21 tweets
Sep 14, 2021
#Thread
#Engineering Opportunities in #OilandGas Sector
#MechanicalEngineering
பட்டப்படிப்பு முடித்த நிலையில் இருப்பவர்களுக்கும் முடித்து சில ஆண்டுகள் வேலையில் இருப்பவர்களுக்கும், இந்த Oil & Gas துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகள், நீங்கள் கற்று கொள்ள வேண்டிய விஷயங்களை (1/n)
எழுதலாம் என்று தோன்றியது. சில terms ஆங்கிலத்தில் மட்டுமே சொல்ல முடியும் என்பதால் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.
So lets start.
While you study Mech Engg, please check and take if there is any special modules as Pressure vessels, Heat Exchangers, Pumps, Compressors, Gas Turbines (2/n)
If you have done Mech Engg degree, you may do Masters in you have interest in fields like Offshore Technology, Engineering Design, Energy Engineering, Industrial Engineering. Masters will enhance your technical capability & will have better chance among others. (3/n)
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(