ஸ்ரீரங்கம் #நம்பெருமாள் பெயர் வர காரணம் -
வைகாசி 17, வைஷ்ணவர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு நாள். அரங்கன் 48 ஆண்டுகள் வனவாசம் சென்று திரும்பி வந்த நாள்! இஸ்லாமிய ஆட்சி இந்தியாவில் ஏற்பட்ட போது, 12 ஆம் நூற்றாண்டில் இந்துகளின் கோவில்களும் கோவில் சொத்துக்களும் அவர்களால் பெருமளவு
சூறையாடப்பட்டன. மதுரை, ஸ்ரீரங்கம் என பிரசித்தி பெற்ற பல கோவில்கள் தாக்கப்பட்டு அங்கிருந்த விக்ரகங்கள் மற்றும் பெரும் செல்வங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. 1310 ஆம் ஆண்டு படையெடுப்பின் போது, திருவரங்கத்தின் உற்சவர் அழகிய மணவாளன் கவர்ந்து செல்லப்பட்டார். உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர்
பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து டெல்லி வரை சென்று அழகிய மணவாளனை மீட்டு வந்தனர் ஆனால், 1323 ஆம் ஆண்டு இஸ்லாமிய படையெடுப்பின் போது, பிள்ளை லோகாச்சாரியார் என்கிற வைணவப் பெரியவர் மூலவர் ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் சுவர் எழுப்பி மறைத்து
விட்டு, உற்சவர் அழகிய மணவாளனை பாதுகாக்க வேண்டி தம்முடன் எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு திருமாலிருஞ்சோலை, கோழிக்கோடு, முந்திரி மலை பள்ளத்தாக்கு, திருக்கணாம்பி, திருநாராயணபுரம், திருமலை, செஞ்சி, அழகியமணவாளம் கிராமம் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய பிறகு
1371ஆம் ஆண்டு (பரீதாபி ஆண்டு-வைகாசி மாதம் 17ஆம்நாள்) திருவரங்கத்திற்கு 48 ஆண்டுகள் கழிந்து மீண்டும் எழுந்தருளினார். இதுவே அரங்கனின் வனவாசம் என்று வர்ணிக்கப்படுகிறது.
அழகிய மணவாளனுக்கு #நம்பெருமாள் என்று பெயர் ஏற்பட்டதன் பின்னணியில் ஒரு நெகிழ வைக்கும் வரலாறு உண்டு. பிள்ளை
லோகாச்சாரியார் அழகிய மணவாளனை எடுத்துச் சென்றபோது அவருக்கு வயது 118. ஆம்.. தள்ளாடும் தேகம். தள்ளாடாத நோக்கம். பலவித கஷ்டங்களுக்கு இடையே மதுரை அருகே உள்ள ஜோதிஷ்குடி (தற்போது கொடிக்குளம் என்று வழங்கப்படுகிறது) சென்ற பிள்ளை லோகாச்சாரியார் அங்கு எழுந்தருளியிருக்கும் வேதநாராயணரை
தஞ்சமடைந்து கோவிலுக்கு பின்புறம் இருந்த ஒரு மலைக்குகையில் பாதுகாப்பாக அரங்கனை வைத்து வழிபட்டு வந்தார். இதை ஒற்றர்கள் மூலம் அறிந்த இஸ்லாமியர் இவ்விடத்தை முற்றுகையிட, அரங்கனை மட்டும் தன்னுடன் எடுத்துக்கொண்டு எப்படியோ மலையுச்சிக்கு சென்றார் பிள்ளை லோகாச்சாரியார். படையினர் எங்கும்
தேடியும் அரங்கனின் விக்ரகத்தை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிப் போக, அவர்கள் சென்ற பின்னர், மலையிலிருந்து இலை தழை செடி கொடிகளை பிடித்து கொண்டு இறங்கினார். அப்படி இறங்கும்போது அவர் தவறி விழுந்துவிட, படையெடுப்பில் கூட தப்பிய அரங்கனின் விக்ரகத்துக்கு இந்த விபத்தில் எந்த சேதமும்
ஏற்பட்டுவிடக்கூடாது என்று பதறிய ஆச்சாரியார் கீழே அரங்கனை தனது மார்பு பகுதியில் பிடித்துக்கொண்டு, முதுகு பக்கம் கீழே படுமாறு விழுந்தார். இதனால் முதுகெலும்பில் படுகாயமுற்ற அவர், அதற்கு பிறகு சொற்ப நாட்களே உயிரோடு இருந்தார். தனது சீடர்களை அழைத்த அவர், எப்படியாவது அழகிய மணவாளனை
திருவரங்கத்தில் மீண்டும் சேர்ப்பிக்கும்படி கூறிவிட்டு, ஆனி மாதம் ஜேஷ்டசுத்த துவாதசி வளர்பிறையில் வைகுந்த பதவி அடைந்தார். அவரது சீடர்கள் அரங்கனுக்கு சாத்தப்பட்டிருந்த மாலை பரிவட்டம் முதலியவற்றை அவருக்கு சாத்தி அவரை நல்லடக்கம் செய்தனர். அந்த இடத்தில ஒரு பிருந்தாவனம் எழுப்பப்பட்டது.
அவரது சீடர்கள் மீண்டும் அரங்கனை திருவரங்கம் கொண்டுவந்தனர். 1323 ஆம் ஆண்டு சென்ற அழகிய மணவாளன், 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருவரங்கம் வந்தபோது கிட்டத்தட்ட அனைவரும் அவரை மறந்தே விட்டனர் (அதாவது வரலாறு மறந்துவிட்டது). ஏற்கனவே படையெடுப்பின் போது பலர் கொல்லப்பட்டதால், வந்தவர்
திருவரங்கத்தில் இருந்த அசல் அழகிய மணவாளன் தான என்கிற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டது. தங்கள் சந்தேகத்தை எப்படி தீர்த்துக்கொள்வது என்று வழி தெரியாது தவித்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு அழகிய மணவாளனின் வஸ்திரங்களை துவைத்த ஈரங்கொல்லி (சலவைத்
தொழிலாளி) ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் சென்றால் இதற்கு ஏதேனும் விடைக்கிடைக்கலாம் என்றும் தெரிந்தது. அவரை தேடிச் சென்றபோது அந்த சலவைத் தொழிலாளிக்கு வயது 90 என்பது மட்டுமல்ல அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வை இல்லை என்பது தெரியவந்தது. பார்வை இல்லாத நிலையில் எப்படி இவர் தான் அசல்
அரங்கன் என்று அடையாளம் கூற முடியும்? இவர்கள் வந்த நோக்கத்தை தெரிந்த கொண்ட அந்த தொழிலாளி, “கவலைப்படாதீர்கள் எனக்கு புறக்கண் தான் இல்லையே தவிர அரங்கன் தந்த அகக்கண் இன்னமும் உள்ளது” என்று கூறியவர், “அரங்கனின் மேனியில் கஸ்தூரி அதிகளவு பயன் படுத்தப்பட்டிருக்கும். அவரது ஆடையை நான்
துவைப்பதற்கு முன், அந்த ஆடையை நனைத்து அதை பிழிந்து அந்த நீரை பருகிவிட்டே தான் ஒவ்வொரு முறையும் சலவை செய்வது வழக்கம், எனவே அரங்கனுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்துவிட்டு அந்த ஈர ஆடையை என்னிடம் கொடுங்கள் போதும்!” என்றும் கூறினார். அவர்களும் அதே போன்று அரங்கனுக்கு திருமஞ்சனம்
செய்து ஈர ஆடையை தர, அதை கண்களில் ஒற்றிக்கொண்டு பிழிந்து பருகிய அந்த சலவைத் தொழிலாளி, “இவரே நம் பெருமாள்!” என்று உற்சாகத்துடன் கூக்குரலிட்டார். அன்று முதல் தான் திருவரங்கத்தில் உற்சவருக்கு ‘நம்பெருமாள்’ என்று பெயர் ஏற்பட்டது. ஒரு ஏழை சலவைத் தொழிலாளி சூட்டிய பெயரையே இன்றளவும்
வைத்துக்கொண்டு நம்பெருமாள் அருள்பாலித்து வருவதில் வியப்பேதும் இருக்க முடியாது. ஏனெனில் அவர் தான் ‘நம்’ பெருமாளாயிற்றே!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 27
#தீட்சை தீக்ஷா என்னும் சமஸ்கிருதச் சொல்லிருந்து தீட்சை என்ற தமிழ்ச்சொல் பிறந்தது. இதற்கு கொடுத்துக் குறைப்பது என்று பொருள். ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று ஆகமங்கள் சொல்கின்றன. இச் சொல்லில் தீ-கொடு, க்ஷி-அழித்தலைக் குறிக்கிறது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை Image
அழிப்பதால் இது தீக்ஷா (தீட்சை). #தீக்கை உள்ளத்து அழுக்கைத் தீயிலிட்டுக் கொளுத்துவது தீக்கை (தமிழ்ச்சொல்). மனிதப் பிறவியின் நோக்கம் இறைவனை அடைவதே. உலகியல் அறிவு எல்லாமே ஏதோ ஒரு ஆசிரியர் வழியே தான் நாம் அறிகிறோம். அப்படியிருக்க எல்லாவற்றிலும் உயர்ந்ததான ஆன்மீக அறிவு, அதில் அனுபவம்
பெற்ற ஒரு குரு வழியேதான் ஒரு சாதகனுக்கு வந்து சேரும். அப்படிப்பட்ட குருவிடம் பூரண சரணாகதி செய்வதன் மூலமே ஒரு ஆன்மீக சாதகன் தன் அகங்காரத்தைத் துறந்து அறிய வேண்டியதை அறிய முடியும். அதற்கு, குருவருளின் ஒரு அங்கமாக, வழிகோலும் ஒரு அடிப்படைச் சாதனமாக குரு தருவதுதான் தீட்சை எனலாம்.
Read 14 tweets
Mar 27
#MahaPeriyava
Sri Maha Periyava was camping at Kalavai. One morning an advocate from Thanjavur came for darshan by car. There was a lot of fanfare. His wife wore the saree in the traditional manner, the sons dhoti and upper cloth, the gentleman himself a dhoti in a traditional Image
manner, upper cloth and a gem studded gold chain around his neck. He held a large plate on which were fruits, flowers, sugar candy, grapes, cashew nuts, honey and with all these, money, packed inside a cover. They placed the plate in front of Sri Maha Periyava and prostrated to
Him. Periyava gently probed the plate with His eyes.
“What cover is that?”
“Just a little money”
“By little do you mean ten or fifteen rupees?”
The lawyer’s ego was probably hurt. He was known to be the best criminal lawyer in his district. Why did Periyava estimate of him so
Read 10 tweets
Mar 27
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் கோவிந்தசாமி என்பவர் திருப்பதியில் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பெரிய மன்னராகி ராஜ போகங்களை அனுபவிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஒருமுறை கிருஷ்ண லீலை உபன்யாசத்திற்கு அவர் சென்றிருந்தார். அங்கே உபன்யாசகர் ஐந்து லட்சம் கோபிகைகளோடு கண்ணன் நடனமாடிய ராச லீலையைப் Image
பற்றி விவரித்தார். அதை மேலோட்டமாகக் கேட்ட கோவிந்தசாமி, அது ஏதோ காமக் கேளிக்கை எனக் கருதினார். இயல்பாகவே உலகியல் இன்பங்களை நோக்கிச் செல்லக் கூடியதான அவரது மனம், அந்த ராச லீலையென்னும் கேளிக்கையைக் காண வேண்டுமென ஏங்கியது. அந்த ஏக்கம் தவிப்பாக மாறியது. அவ்வூரில் இருந்த ஒரு ஞானியைச்
சந்தித்துத் தன் ஏக்கத்தைப் பற்றித் தெரிவித்தார் கோவிந்தசாமி. அதற்கு அந்த ஞானி, ராசலீலை என்பது நீ நினைப்பது போல உடல் ரீதியிலான காமம் அல்ல. வைகுண்டத்தை அடைந்த ஜீவாத்மாக்கள், அங்கே பரமாத்மாவோடு உறவாடுவதைத் தான் இந்த ராச லீலை மூலமாகக் கண்ணபிரான் உருவகப்படுத்தி நமக்குக் காட்டியுள்ளான்
Read 12 tweets
Mar 26
வீட்டில் பழுதடைந்த, உடைந்து போன அல்லது தேய்ந்து போன விக்ரகங்கள், படங்களை என்ன செய்வது?
இந்த பிரச்சினை/கேள்வி எல்லோருக்கும் இருப்பதே. பல பேர் தங்கள் வீட்டில் பின்னமான விக்ரகங்கள், படங்களை ஏதோ ஒரு கோவிலிலோ அல்லது சாலையோரத்திலோ, மரத்தின அடியிலோ போட்டுவிட்டு போய்விடுகிறார்கள். ஆனால் ImageImageImage
தெரிந்தோ, தெரியாமலோ அப்படி செய்வது மஹா பாவம். மன்னிக்கமுடியாத குற்றம்.
வீட்டில் இருந்தவரை பூஜைகள் செய்து, பிறகு அவசியம் இல்லாத போது, பாழடைந்தவற்றை உதாசீனப் படுத்தக்கூடாது. அப்படி சாலையோரத்தில் உள்ள நமது ஹிந்து தெய்வங்களின் படங்களை பார்த்து இதர மதத்தவர்கள் நம் மதத்தை குறித்து
கிண்டலும், கேலியும் செய்கிறார்கள். மற்ற மதத்தவரின் தெய்வ படங்களை அது போல் எங்காவது கண்டதுண்டா என்பதை யோசித்து பாருங்கள். தயவு செய்து நமக்கு அவசியம் இல்லாத படங்களை, விக்ரங்களை அக்னி பகவானுக்கு ஆஹுதி கொடுப்பது (சமர்பிப்பது) நல்லது. அதெப்படி ஸ்வாமி படங்களை அக்னியில் போடுவது சரிதானா Image
Read 5 tweets
Mar 26
#MahaPeriyava
Namaskaram. I am Dr.Venkataraghavan, an eye surgeon. My wife, Gayathri Venkataraghavan is a musician and both of us owe everything in life to the boundless Grace of Sri Maha Periyava. I just have an experience to share with all of you. Many years back about (12 to Image
13), a Muslim gentleman walked into my clinic. Seeing Sri Maha Periyava’s photo, he bowed in reverence and mentioned that Sri Maha Periyava is a great sage. I was surprised and asked him how he knew about Sri Maha Periyava. The Muslim gentleman shared his experience which I
shall present in the first person account as narrated to me. “Sir, I was a linesman in electricity board about 30 years back. We in a group of 5 or 6, went to the Kanchi Matham to attend to a fault. Sri Maha Periyava who was seated there, gestured me to come and queried whether I
Read 10 tweets
Mar 26
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இறைவனின் பாதம் ஒன்றே கதி என்று நினைத்து அவனது சரணங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இறைவன் நிச்சயம் நற்கதியைத்தான் அருள்வான் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படிப் பட்ட அந்த இறைவனின் சரணத்தைக் கெட்டியாகப் பற்ற வேண்டியது நம் கடமை. ஸ்ரீ ராமருக்கு சரணாகத Image
வத்ஸலன் என்ற ஒரு திருநாமம் உண்டு. ராமாயணத்தில் பால காண்டம் துவங்கி, யுத்த காண்டம் வரை இந்த சரணாகதி தத்துவத்தை மிகவும் அழகாய் பார்க்கலாம். #பாலகாண்டத்தில் தேவர்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணன் இடத்தில் சரணாகதி செய்கிறார்கள்.
#அயோத்யாகாண்டத்திலபரதன் சரணாகதி மற்றும் குகனோடு சக்யம்.
#ஆரண்யகாண்டத்தில் ரிஷிகள் ராமச்சந்திர மூர்த்தியிடம் சரணாகதி செய்கிறார்கள்.
#கிஷ்கிந்தாகாண்டத்தில் சுக்ரீவன் சரணாகதி.
#யுத்தகாண்டத்தில் விபீன் சரணாகதி செய்கிறார். இதில் விபீஷண சரணாகதிக்குத்தான் தனியொரு பெருமையும், விசேஷமும் இருக்கும். சரணாகதி லட்சணம் என்பது பரிபூர்ணமாக இருந்தது
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(