#தொல்லியல் ஆர்வலர்களுக்கு வணக்கம்!

தமிழ்நாட்டில் இருக்கும் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டக் காலத்தைச் சேர்ந்த மக்களால் குகையின் சுவற்றில் வரையப்பட்ட ஓவியங்கள், செதுக்கு ஓவியங்கள் மற்றும் பாறைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் பற்றிய தனித்துவமான தகவல்கள் ஒரு நீள் பதிவாக #உங்களுக்காக!
1) பாறை ஓவியம் இருவகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது

கற்கருவிகளால் பாறையின் மேல் செதுக்குவது "கற்பாறைச் செதுக்கு ஓவியம்"

குச்சியினால் மஞ்சட்காவி மண் கலந்து சிவப்பு/வெள்ளை வண்ணங்களால் பாறைகளில் வரைவது "கற்பாறை வரைவோவியம்"

சிவப்பு நிறம், வெள்ளை நிறத்தைவிட பண்டைக்காலத்தைச் சேர்ந்தது! Image
2) இந்தியாவிலுள்ள மூன்று கற்பாறைச் செதுக்கு ஓவிய இடங்களுள் தமிழ்நாட்டில் ஒன்றான #விழுப்புரம் மாவட்ட #பெருமுக்கல் ஓவியம் இது!

இச்செதுக்குச் சிற்பங்கள் பல்வேறு மக்களால் பல்வேறு வகையில் விளக்கப்பட்டுள்ளன!

இந்த உருவங்களை, இராமாயணத்துடன் சிலர் ஒப்பு நோக்கிக் கூறியுள்ளனர்! Image
3) #நீலகிரி மாவட்ட #இடுஹட்டி பாறை ஓவியத்தில் வரையப்பட்டுள்ள #சூரியன் #நட்சத்திரம் #நிலா நமது மூதாதையர் வானுலக வழிபாட்டினை கற்றாய்ந்து வழிபட்டுள்ளதைக் காட்டுகிறது!

வரலாற்றுக் காலத்திற்கு முந்தையக் காலத்திலேயே சோதிடர், வானியல் நிபுணர், மதகுரு இருந்திருக்கக்கூடும் என காட்டுகிறது! Image
4) #நீலகிரி மாவட்டம் #கோத்தகிரி கீழே #வெள்ளெரிக்கொம்பை என்னுமிடத்தில் மலைகளுக்குள்ளே அமைந்துள்ள பாறை முகப்பில் உள்ளது #எழுத்துப்பாறை!

வழிபாட்டின்போது செய்யப்படும் யாகம் அல்லது, வேள்வியினைக் காட்டும் சமய ஓவியமாக இக்காட்சி அங்கே சித்தரிக்கப்பட்டுள்ளது! Image
5) #விழுப்புரம் மாவட்ட #கீழ்வாலை பாறை ஓவியம்! இதில் #இடுகுறிகள் காணப்படுகின்றன.

வரலாற்று ஆய்வு வல்லுநர்கள் சிலர் இக்குறியீடுகளை சிந்துசமவெளி எழுத்துக்கள் (ம) குறியீடுகளின் முன்னோடியெனவும், இக்குறியீடுகளிலிருந்தே "பிராமி கைப்படியெழுத்து" பின்னர் வளர்ச்சியடைந்தது என கூறுகின்றனர்! Image
6) வெண்மை நிற பாறை ஓவியங்கள்!

இவை நாம் முன்னால் பார்த்த #நீலகிரி மாவட்ட #வெள்ளெரிக்கொம்பை விட சற்றே பிற்காலத்தைச் சார்ந்ததாகும்!

இதில் செம்மறியாடு (ம) மனித உருவம் தடியுடன் காணப்படுகின்றன.

இம்மனித உருவம் ஆடுகளை மேய்க்கும் ஆட்டிடையன் உருவமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது! Image
7) #விழுப்புரம் மாவட்டம் #ஆலம்பாடி பகுதியில் காணப்படும் #ஊடுகதிர்
X-RAY ஓவியங்கள்!

விலங்குகளின் உட்புற உறுப்பு தெரியும் வண்ணம் அமைந்துள்ள பாறை ஓவியங்கள்

வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய தமிழர்கள் #உடற்கூற்றமைப்பு #Anatomical குறித்து அறிந்திருந்தனர் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர் Image
8) வரிவடிவ அமைப்புகளைக் காட்டும் இப்பாறை ஓவியம் இருப்பது #வேலூர் மாவட்டம் #சென்ராயன்பள்ளி

ஓவியம் வெள்ளை வண்ணதில் தீட்டப்பட்டுள்ளதால் பிற்காலத்தைச் சார்ந்தவை!

இதிலுள்ள கூட்டல் குறி வளமையின் சின்னமாக #வெள்ளெரிக்கொம்பை #நீலகிரி மற்றும் #ஹரப்பா நாகரீக கால இடங்களில் காணப்படுகின்றது! Image
ஓவியத்தின் அடியில் இரு பறவைகளும், மையத்தில் ஒரு மனித உருவமும் உள்ளது!

இந்த் வரைவுகளை பிற்காலத்தில் வேதகாலத்து வடிவியல் சக்ர வடிவங்களின் அமைப்புக்கு முன்னோடியாக இருக்கலாம்!

#சென்ராயன்பள்ளி
9) செந்நிறமி ஓவிய வரைவு!

இது பறக்கும் பறவையின் உருவினை உயிரோட்டமாகக் காட்டுகிறது!

வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய #தமிழர்கள் கண்ணால் காணும் காட்சிகளைப் பதிவு செய்யும் ஓர் முயற்சியாக அமைந்துள்ளது!

#விழுப்புரம் மாவட்டம் #ஆலம்பாடி! Image
10) #விழுப்புரம் மாவட்டம் #ஆலம்பாடி பாறை ஓவியம்!

ஒரு பறவையின் உள்ளுறுப்புத் தோற்றமாக இருக்கக்கூடும்!

பறவையின் உள்ளுறுப்பு அமைப்புத் தோற்றத்தின் #ஊடுகதிர் ஒவியம் X-ray இங்கு வரையப்பட்டுள்ளது! Image
11) இங்கு நாம் காணும் செந்நிறமி வண்ண பாறை ஓவியமும் #விழுப்புரம் மாவட்டம் ஆலம்பாடியைச் சார்ந்ததாகும்!

வரையப்பட்ட பறவைகள், விலங்குகளின் தொடர்ச்சியினையே இது குறிக்கின்றது!

மையத்தில் பறக்கும் பறவையின் உருவம் பெரிதாக தோற்றமளிக்கிறது! Image
12) #விழுப்புரம் மாவட்டம் #கீழ்வாலை செந்நிறமி வண்ண மூன்று ஓவிய உருவங்கள்!

மதகுருவால் அழைத்துச் செல்லப்படும் ஒரு ஆண், பெண் உருவங்கள்! நடுவில் உள்ள மத சமய குருவின் தலையில் இரு சிறகுகள்!

அவர் தன் கையால் ஒரு நபரை அழைத்துச் செல்ல, மற்றொருவர் அதனைக் கவனித்துக் கொண்டிருக்கின்றார்! Image
இக்காட்சி மனிதன் அல்லது விலங்கின் உயிர்ப்பலி அல்லது வழிபாட்டு சடங்காகவோ இருக்கக்கூடும்!
13) #விழுப்புரம் மாவட்டம் #கீழ்வாலை செந்நிறமி வண்ண பாறை ஓவியம்!

ஏதோ ஒன்றின் மேல் ஒரு ஆணும், பெண்ணும் அமர்ந்துள்ளனர்!

அது விலங்காகவோ அல்லது கல்மேடையாகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. Image
14) #விழுப்புரம் மாவட்டம் #கீழ்வாலை செந்நிறமி வண்ண பாறை ஓவியம்!

வலதுபுறமுள்ள இரு வடிவியல் அமைப்புகள், இரு கூட்டல்குறிகள் எங்ஙனம் இணைந்து வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மங்கலக் குறி (சுவஸ்திகை), அல்லது வளமைச் சின்னத்தை உருவாக்கின என்பதைக் காட்டுகிறது! Image
15) #விழுப்புரம் மாவட்டம் #கீழ்வாலை செந்நிறமி வண்ண பாறை ஓவியம்!

இக்காட்சி அலகுபோன்ற மூக்கமைப்புடன் கூடிய முகத் தோற்றமுடைய நான்கு உருவங்கள் கைக்கோர்த்து நடனமாடும் காட்சியினைக் காட்டுகிறது! Image
16) #நீலகிரி மாவட்ட #இடுஹட்டி ஓவியத்தில் சூரியகாந்தி போன்றதொரு பூ உள்ளது! இதனை தென்னிந்தியாவில் பொதுவாகக் காணப்படும் கோலம் வடிவியல் அமைப்பு எனக் கூறலாம்.

நீலகிரியில் சூரியகாந்திப் பூ வளர்வது இல்லை. ஆதலால், இது சமவெளியிலிருந்து மக்கள் நீலகிரி மலைக்கு இடம்பெயர்ந்ததை குறிக்கின்றது Image
17) இந்த #நீலகிரி மாவட்ட #இடுஹட்டி பாறை ஓவியம் #சிந்துசமவெளி கைப்படியெழுத்தின் முன்னோடியாக வல்லுநர்கள் கூறுகின்றனர்!

இடதுபக்க ஓரத்தின் மேல்புறத்தில் பழமையான திரிசூல வடிவ உருவமும், கீழ்ப்புற வலதுகை மூலையில் சைவச் சின்னமான மூன்று பட்டை விபூதியினைக் காணலாம்! Image
18) #நீலகிரி மாவட்ட #வெள்ளெரிக்கொம்பை ஓவியத்தின் காட்சி!

மேல்புற வலது கை மூலையில் சமயகுரு பலிபீடத்திற்குச் செல்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது!

இதன்மேல் "வளமைச் சின்னமாக" ஓர் கூட்டல் குறி காணப்படுகிறது!

வளமை பெற யாகத்தில் ஒர் மனிதனை பலிகொடுக்க அழைத்துச் செல்வதாக கூறப்படுகிறது! Image
19) #வெள்ளெரிக்கொம்பை
வெண்நிறமி ஓவியம்! இதிலிருக்கும் ஓர் உருவத்தை 6வது படத்துடன் ஆடு, செம்மறியாட்டுடன் தொடர்புபடுத்திக் காண வேண்டும்

இரு உருவங்களை ஆண் பெண் என சிலர் வலியுறுத்துகின்றனர். இவற்றை இரு நட்சத்திரங்களை கொண்ட #அருந்ததி என அழைக்கப்படும் #விண்மீன்குழு எனவும் விளக்கலாம் Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

17 Nov
சோழர் காலத்தில் பொய்க்கணக்கு எழுதியதற்காக அளிக்கப்பட்ட தண்டனை பற்றிய கல்வெட்டுச் செய்தி!

3-ம் இராசராசசோழனின் 19-ம் ஆட்சியாண்டில் (பொ.பி 1235) பொறிக்கப்பெற்ற #தஞ்சாவூர் மாவட்ட கள்ளப்பெரம்பலூரில் உள்ள கல்வெட்டுச் செய்தியில் ஒருவன் வேலை நீக்கம் செய்யப் பெற்றதைக் குறிப்பிடுகின்றது.
பொய்க் கணக்கை எழுதும் முறை புதியதன்று. அம்முறை தொடர்ந்து நடைமுறையில் இருந்துள்ளது.

பாண்டியகுலாசனி வளநாட்டில் தஞ்சாவூர் கூற்றத்தில் இராசசுந்தரி சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் அப்பணி நீக்க முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி அவ்வூர் நில உரிமையாளராயிருந்த "சேஞலூருடையான் மதளை உத்தமபிரியன்" என்பவன் பொய்க் கணக்கை எழுதி வந்தான்.

அவன் அனைவருக்கும் பகைவனாக இருந்து தவறான முறையில் கணக்கெழுதி வந்தான்.
Read 4 tweets
17 Nov
கல்வெட்டுகள் கூறும் நீர்பாயும் உரிமை, நீர்பாயும் நேரம் பற்றிய தகவல்கள்!

நன்செய் நிலங்களில் பயிர் செய்தபோது ஊரிலிருந்த குளம், ஏரி ஆகியவற்றை ஊர்ப் பொதுமையாக்கி இன்னின்ன நிலங்களுக்கு இன்னின்ன நேரம் இன்னின்ன மடை வழியாக நீரைப் பாய்ச்சிக் கொள்ளலாம் எனப் பிரிக்கப் பெற்று இருந்தன. Image
அதன்படியே நீரைப் பாய்ச்சி வேளாண்மையும் செய்து வந்தனர்.

தற்பொழுது வருவாய்த் துறையினரால் நிலத்திற்குப் பாயும் நீருக்கு வரி விதிக்கும்போது, ஒரு பாசத்தின்கீழ்உள்ள நிலத்திற்குப் பிறிதொரு பாசனத்திலிருந்து நீரைப்பாய்ச்சி வேளாண்மை செய்தால்,
அதை முறையற்ற பாசனம் எனக் கருதித் தண்டத்தீர்வை விதிக்கப் பெறுகிறது. எனவே, ஒவ்வொரு பாசனத்திலிருந்தும் இன்னின்ன நிலங்களுக்கு மட்டுமே நீர் பாயவேண்டுமென வரன்முறைப் படுத்தப் பெற்றுள்ளது.

சிலநேரங்களில் ஒரு பாசனத்தின் உரிமையுள்ள நிலத்திற்குப் பிறிதொரு பாசனத்தினின்றும் நீரைப்பாய்ச்சி..
Read 9 tweets
16 May
கல்வெட்டுகளில் முதியோர் பாதுகாப்பு!

முதியோர் பாதுகாப்பு என்ற பெயரில் அரசாங்கங்கள் இன்று பல்வேறு திட்டங்களை, அறிவிப்பதைக் காண்கிறோம். அவர்களுக்கான உதவிகளைப் பணமாகப் பெறவும், மருத்துவ சலுகைகள், பயணக் கட்டணத்தில் சலுகை, ஆலயத்தினுள் நடக்க முடியாதவர்களுக்கு மோட்டார் வாகனங்கள் என 1/n Image
இப்படி பல அம்சங்கள் நடைபெறுகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த விஷயம் பழங்காலத்தில் இருந்தே ஓர் அறமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வயதில் முதியவர்களாக இருப்பவர்களால் வெகு தொலைவு நடக்க இயலாது. அவர்களுக்கு திருக்கோயில்கள் உதவி செய்திருக்கின்றன. 2/n
இவர்களுக்கு உதவி செய்வதற்காகவே பண்டை நாளில் திருக்கோயில்களில் அறச்சாலைகள், மடங்கள், சத்திரங்கள் போன்றவை இருந்தன.

#கும்பகோணம் நாகேசுவர சுவாமி கோயிலில் #அறச்சாலை இருந்ததாக சோழர் காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது... 3/n Image
Read 15 tweets
1 Jul 20
#Select_Inscriptions:-2

The third regnal year (1055 CE) of #RajendraChola-II inscription in #Jambai Village in #Villuppuram district records the gift of 32 Kasu in memory of a lady by name Sendan Umaiyal (சேந்தன் உமையாள்) for burning a perpetual Nanda Lamp in the temple of 1/n Image
Thanthontri-Mahadevar at #Valaiyur alias Rajendra-puram by one "Palanguran Kunran" (பழங்கூரன் குன்றன்) the Tax Collector of #Kugurppadi the hamlet of Narippalli-nadu.

The gift is said to be in response to a demand made by the community "Nangudisai Padinenbhumi Nanadesi" 2/n
நான்குதிசை பதினெண்பூமி நானாதேசிகள் (வெளிநாடுகளில் சென்று வாணிபத்தில் ஈடுபடுபவர்கள் - வணிகப் பெருங்குழுக்கள்) who held him responsible for the suicide of that lady by poison because of some threat held out by him with regard to a tax due! 3/n
Read 5 tweets
28 Apr 20
"முத்து வணிகர்கள்..."

சங்க காலத்திற்கு முன்பிருந்தே மன்னார் வளைகுடாவில் எடுக்கப் பெற்ற முத்துக்கள் கிரேக்க, ரோமானிய நாடுகளில் மிகவும் புகழ்பெற்று விளங்கின.

இதற்கு மெகஸ்தனிஸ் முதலான வெளிநாட்டவர் குறிப்புகள், சங்க இலக்கியங்கள், பாளி மொழி நூலான மகாவம்சம் போன்றவை சான்று தருகின்றன
சங்க இலக்கியங்கள் பாண்டிய நாட்டை ஒட்டிய கடல் பகுதியில் #முத்துக்குளித்தல் பற்றியும், இத்தொழில் புரிந்த #பரதவர்கள் பற்றியும் மிகுந்து குறிக்கின்றன.

அறுபதுகள் (1960-69) வரை மன்னார் வளைகுடாவில் #முத்துக்குளித்தல் தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது!
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி செயற்கையாக முத்துச்சிப்பி வளர்க்கும் தொழில்நுட்பம் இந்தியாவிலும், பிறநாடுகளிலும் சிறப்பாக ஐப்பானிலும் வளர்ந்த காரணத்தினால் மரபுவழி #முத்துக்குளித்தல் தற்போது நடைபெறுவதில்லை.
Read 30 tweets
1 Apr 20
"சட்டிச்சோறு..."

கல்வெட்டுக்களில் #சட்டிச்சோறு #எச்சோறு #புள்ளிச்சோறு #திங்கட்சோறு #வரிச்சோறு #வெட்டிச்சோறு என்று பல சொற்றொடர்கள் வருகின்றன. இதில் #எச்சோறு என்பது ஒரு வகை வரியாகும்.

#சட்டிச்சோறு எவ்வாறு கொடுக்கப்பட்டது என்பதை பின்வரும் கல்வெட்டுகள் விரிவாக எடுத்துரைக்கின்றது!
#சட்டிச்சோறு என்பதற்கு கோயில் வேலைக்காரர்களுக்கு கொடுக்கப்படும் "உரிமை பிரசாதம்"என திரு T. N சுப்ரமணியம் அவர்கள், "தென்னிந்திய கோயிற் சாசனங்கள்" நூலில் விளக்கம் கூறுகிறார்.

இது திருவிழாவிற்கு வரும் அடியார்களுக்கு, யாத்திரிகர்களுக்கு அளிக்கப்பட்டதாக பல கல்வெட்டுக்கள் கூறுகின்றன!
க) திருவண்ணாமலைக் கல்வெட்டு:

முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் திருவண்ணாமலைக் கோயிலில் பல பணிகள் நடைபெற்றிருக்கின்றன.

இவனுடைய பணி மகன் ஒருவன் “பாண்டிய உதய திவாகரன்” என்பவன் சோழமண்டலத்து அருமொழித்தேவ வளநாட்டு ஓர்வலக் கூற்றத்து ராஜராஜ நல்லூரைச் சேர்ந்தவன்.
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(