#IramanusaNootrandhathi is a hymn of 108 sublime verses extolling the Noble qualities of head & heart of our great Acharya Sri Ramanuja.Authored by Thiruvarangathu Amudnar this prabhaNdam is celebrated as "PrappanaGayathri".
By the divine command of lord Ranganatha this .......
Prabhandam was included as an integral part of Divyaprabhandam on par with the Arulicheyals (Divine outpourings)of the blessed Azhwars. It forms the final Prabhandam in the section called "Iyarpa".
Acharya was so pleased with the prabhandam that he commanded all his disciples...
to recite the verses for their own welfare.🙏.
பூ மன்னு மாது பொருந்திய மார்பன்
புகழ்மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
பல்கலை ஓர்
தாம் அன்ன வந்த இராமாநுசன் சரணார விந்தம்
நாம் அன்னிவாழ
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே.🙏🙏
Amudanar exhorts his mind thus!O mind!Let me(us)chant/sing/praise the sacred name (divyanama)of Sri Ramanujar,who by worshipping the padhapadma of Sri NammAzhwar realised Sriman Narayana in whose bosom deserting HER normal abode namely the lotus flower resides Sri, Mahalakshmi🙏
கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்

கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரான் அடிக்கீழ்

விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்

உள்ளாது என் நெஞ்சு ஒன்றறியேன் எனக்கு உற்ற பேரியல்வே...🙏🙏🙏
Amudanar says "My mind does not think of any thing other than the Supreme(Divine)nature, quality of Sri Ramanuja who is full of devotion to the holy feet of Sri ThirumangaiAzhwar( kurayalpiran) That is indeed my greatest asset.
It has nothing to do with those who do not cherish the sacred Lotus Feet of "SriRanganatha".
பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னைப் பேய்ப் பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலத்திப் பொருவரும் சீர்
ஆரியன் செம்மை இராமானுசன் முனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னைச் சேர்த்தற்கே ....
O, Majestic Mind, I prostate before your for having severed my relationship with the evil- minded & bringing me under the care of an exalted ( Noble) being like Kuresa, for this great help be of bringing me under the protection of those ( like Kuresa) who ever remain devoted to..
the Holy Feet of Sri Ramanuja.
🙏.
என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த 
முன்னைப் பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே 
பன்னப் பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என் 
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே
Sri Ramanuja made me( a worthless person) a worthy man by shearing the accretion of bad qualities of my previous birth & through his works like Sri Bashyam, made it possible for us to appreciate the world around us, by placing his most sacred Feet on my head he blessed me & ....
after that there is nothing for me to worry about 🙏.
எனக்குற்ற செல்வம்
இராமானுசன் என்று, இசையகில்லா

மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ்,அவன் மன்னிய சீர்

தனக்குற்ற அன்பர் அவன்திரு நாமங்கள் சாற்றும் என்பா

இனக்குற்றம் காணகில்லார்,
பத்தி ஏய்ந்த இயல்வு இதென்றே.
If there are persons who do not cherish Sri Ramanuja as their greatest wealth & if some people find fault with my verses (poetry), I shall take the ridicules of such man as credit. If those who chant his name see some worth in the verses he will regard them as the real....
outcome of his devotion to Sri Ramanuja.
🙏.
இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகள் அன்பால்

மயல் கொண்டு வாழ்த்தும்
இராமானுசனை,மதியின்மையால்

பயிலும் கவிகளில் பத்தியில்லாத என் பாவி நெஞ்சால்

முயல்கின்றனன் அவன் தன் பெருங்கீர்த்தி மொழிந்திடவே....
Out of my affection (love) to Ramanuja,I am trying to compose verses despite of my inadequate knowledge of the diction.When competent persons well versed in poetic diction,render verse in praise of Sri Ramanuja his towering glory, I an unworthy attempting to potray....
his greatness, not out of devotion or regard for him will it under rate his reputation??
மொழியைக் கடக்கும் பெரும்புகழான், வஞ்ச முக்குறும்பாம்

குழியைக் கடக்கும் நம்
கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்

பழியைக் கடத்தும்
இராமானுசன் புகழ் பாடியல்லா

வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே.
🙏🙏🙏🙏
7.After surrendering at the feet of KurthAzhwar, who has transcended the ego of the three evil pits (namely learning, wealth & Noble ancestry) & whose glory is beyond all description, there is no problem in crossing the evil ways of life by chanting the glory of Sri Ramanuja..
all the time🙏.
வருத்தும் புறவிருள் மாற்ற, எம் பொய்கைப் பிரான் மறையின்

குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றைத்

திரித்து அன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ளத்தே

இருத்தும் பரமன்
இராமானுசன் எம் இறைவனே.
8.For dispelling the phenomenal darkness Sri Poigai Azhwar lighted the lamp of first Thiruvantadi,using a combination of the Vedic thruth with chaste Tamizh as it's wick.Sri Ramanuja always protected that lamp (from extinction) in his own heart. That Sri Ramanuja is our swami 🙏.
இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும் 
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து 
உறைய வைத்து ஆளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர் 
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே ...🙏🙏🙏
9.Shri Budhatazhwar lighted the lamp of wisdom to dispel the darkness of ignorance at the heart to get the vision of God ,Sri Bhudatazhwar rendered the second Thiruvantadi,Sri Ramanuja cherishes the lotus feet of Azhwar & enjoys them. Those who sing the glory of such Sri Ramanuja
do protect the Vedas( propagate the Vedas) and establish them on the Earth.
மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள்

தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன்

பொன்னடி போற்றும்
இராமானுசர்க்கு அன்பு பூண்டவர் தாள்

சென்னியிற் சூடும் திருவுடை யாரென்றும் சீரியரே.
10.After the disappearance of eternal darkness of ignorance Sri Poigai Azhwar,( the chief Leader of Tamils)who revealed the grand vision of the Goddess of Thirukoilur, Sri Lakshmi, the resident of the great lotus flower along inth Aayanar.Sri Ramanuja adores the golden feet of...
PeyAzhwar and there are those who worship with devotion and bear the golden feet of Sri Ramanuja on their heads.Those who decorate their heads with the golden feet of such great Devotees of Sri Ramanuja are indeed the greatest and the Wealthiest at all times.
🙏
சீரிய நான் மறைச் செம்பொருள் செந்தமிழால் அளித்த
பாரியிலும் புகழ்ப்
பாண் பெருமாள் சரணாம் பதுமத்
தாரியல் சென்னி இராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை என்னால் சொல்ல ஒண்ணாது இக்கடலிடத்தே ...🙏
11.Speaking about the greatness of Thiruppanazhwar, Amudanar says : "Well versed as he is, he has incoporated,in to his work " Amalanadhiprian", the essence of Vedas in contemporary Tamil verses. I can not adequately describe the dexeterity and greatness of those who worship
at the feet of Sri Ramanuja ( who bears the lotus feet of Thiruppanazhwar on his head) in this world.
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன்
இணை அடிப்போது 
அடங்கும் இதயத்து இராமாநுசன்

அம் பொன் பாதம் என்றும் 
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத் 

திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே  

🙏🙏🙏
12. Amudanar says that he would be a devotee only to such jnanis, who would not adore any one else except those who take refuge at the golden feet of Sri Ramanuja who cherishes the Lotus feet of Thirumazhsai Azhwar of world renown and has enshrined him in his heart.
🙏.
செய்யும் பசுந் துளபத் தொழில் மாலையும் செந்தமிழில் 
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத்து 
ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா 
மெய்யன் இராமாநுசன் சரணே கதி வேறு எனக்கே   🙏🙏🙏
13.Sri Ramanuja's holy feet is my sole refuge.For he looks upon Thondaradipodi azhwar,who plaits Garland of tulasi leaves & floral artistic garlands which adorn Lord Ranganatha as also his wreath of fine tamizh verses,namely Thirumaalai & Thirupalliezhuchi which reflect the vedas
Offered at the Feet of Lord Ranganatha, Sri Ramanuja, the upholder of thruth is my sole refuge.
🙏
கதிக்குப் பதறி வெங்கானமும் கல்லும்  கடலுமெல்லாம்

கொதிக்க  தவம்செய்யும் கொள்கை அற்றேன் கொல்லி காவலன் சொல்

பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே

துதிக்கும் பரமன்  இராமானுசன் என்னைச் சோர்விலனே...🙏🙏
14.Kulasekara Azhwar ,the author of "PerumalThirumozhi" who has put the essential teachings of the sastras in his Divyaprabhandam. Sri Ramanuja constantly adores all those who recite Kulashekara's verses daily as a habit has come to me voluntarily.Hence I do not have any need ...
to resort to perform severe austerities.
சோராத காதல் பெருஞ்சுழிப்பால், சொல்லை மாலை ஒன்றும்

பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் தாள்

பேராத உள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்

சாரா மனிசரைச் சேரேன் எனக்கென்ன தாழ்வினியே?
15.Periazhwar sang Pallandu out of intense love for the LORD when Lord Narayanan appeared before him with HIS consort Sri and HIS 5 weapons (disk, counch, mace , sword and bow).
The splendour of this appearnce of the Lord made Periazhwar to utter Pallandu Pallandu to protect HIM
from the evil eyes of the world. The Azhwar said "Let both of you live for many more years .May the Lakshmi Devi who resides in the right side of your chest and also the disc and counch (which dazzle and sound) live for many more years, crores and crores of years".
Sri Ramanuja constantly adores the Feet of Periazhwar. In this context Amudanar says "I never approach or be friendly with those who are not Devotees of Sri Ramanuja!
தாழ்வொன்றில் லாமறை தாழ்ந்து தலமுழுதுங் கலியே

ஆள்கின்ற நாள்வந் தளித்தவன் காண்மின் அரங்கர்மௌலி

சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால்

வாழ்கின்ற வள்ளல் இராமா னுசனென்னும் மாமுனியே.
16. When the faultless Vedas became faulted & the whole world was ruled by kali alone, there came the benevolent Muni Ramanuja, who lived by the grace of Andal, the girl poet who wore on herself a garland and offered it to the Lord of Arangam.....
who in turn found it worthy of being wrapped on his crown.
🙏
முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் 
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை கலை பரவும் 
தனி ஆனையை தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில் 
இனியானை எங்கள் இராமாநுசனை வந்து எய்தினரே.....
17. Tirumangai Azhwar, the polific & unique poet Nilan, rendered sweet Tamil songs on the lord of Kannamangai, and other temple towns. Our master Ramanuja was very fond this Azhwar.Those who seek refuge in him are neither vexed by misfortune, nor pleased by good fortune.🙏
18.
எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும்
இராமானுசன் எம் உறுதுணையே.

🙏🙏🙏
18. Madurakavi Azhwar only desired to enjoy in his heart his master Satakopan, who took birth on Earth for the sole purpose of rendering the hard-to-comprehend Vedas into a thousand sweet Tamil songs. Ramanuja showed us the way to the Azhwar's feet. He alone is our refuge🙏.
19.உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும் 
வெறி தரு பூமகள் நாதனும் மாறன் விளங்கிய சீர் 
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர் 
அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே ...🙏🙏🙏
19.The Tamil Veda, Tiruvaimozhi, sung by Maran Satagopan is the proper path to enjoy the Lord's bliss, it is the only wealth to be attained, mother, father, the high teacher,-even the lord of the Lotus lady Lakshmi himself.Ramanuja who fought this to the world is our ambrosia.🙏
20.
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே ..🙏🙏🙏
20.Nathamunigal exulted in worshipping the sweet poet Madurakavi, who knew the art of singing the Rasa-laden words of the delightful Tiruvaimozhi bequeathed by the lord of flower-groves-surrounded southern kurugur king Satakopan.
Ramanuja who filled his heart with love for Nathamunigal is our greatest wealth. 🙏
21.
நிதியைப் பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல்பற்றித்

துதி கற்று உலகில்
துவள்கின்றிலேன், இனித் தூய் நெறிசேர்

எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்

கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே.
🙏🙏🙏
21.Yamunacharya, the king among ascetics of the righteous path, became the preceptor for Ramanuja, our master. Having secured his protection, no more shall I stand and suffer at the door of meanmortals singing their praises as "O, wealth-pouring rain-cloud" !
🙏
22.
கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே...🙏
22.Subramanya, Vinayaka, Siva, Parvali, Agni and all the other gods turned their backs and fied, then hailed, "O Lord of the three worlds, O Maker!" such was the mercy that Krishna showed on Sana. Ramanuja, who worships him, is our Provident Fund.
🙏
23.
வைப்பு ஆய் வான் பொருளென்று நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமானுசனை இருநிலத்தில் ஒப்பாரில்லாத உறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் என் ஆம் இது அவன் மொய் புகழ்க்கே?
23.The godly ones always vault Ramanuja in their hearts as their precious wealth. I, this self, sinful without a peer in this whole world, with my deceitful hard heart, have dared to sing his praise.Even if I sing all morning, evening n night, will...
never exhaust his infinite virtues??
🙏🙏🙏
24.
மொய்த்த வெந்தீவினையால் பல்லுடல் தொறும் மூத்து,  அதனால்- 

எய்த்தொழிந்தேன் முனநாள்கள் எல்லாம்,
இன்று   க‌ண்டுயர்ந்தேன்- 

பொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்தவியக்

கைத்த மெய்ஞ்ஞானத்து
இராமானுசன் என்னும் கார் தன்னையே
Those were days when, by the terrible deeds of sin committed, I took countless births, aged and tired. Now I have seen Ramanuja, pleasing like the dark cloud, and am saved, for the weeds out the lowly paths of false penance..
25
காரேய் கருணை இராமானுசா இக் கடல் இடத்தில்
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை
அல்லலுக்கு நேரே உறைவிடம் நான்
வந்து நீ என்னை உற்ற பின்
உன் சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே...
O Ramanuja, Benevolent as the dark cloud! Who in this wide world can understand the nature of your grace? I was the very hotbed of sin. On your own, you came and accepted me, Today your noble qualities are sweet as ambrosia to my lowly self's soul
திக்கு உற்ற கீர்த்தி
இராமானுசனை,

என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை

மேவும்நல்லோர்
எக் குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர்

அக் குற்றம் அப்பிறப்பு

அவ் இயல்வே
நம்மை ஆட் கொள்ளுமே.🙏🙏🙏
The world renowned Ramanuja, benevolent as the rain cloud, purged me of the terrible misdeeds of my past, The godly ones who take refuge in him, -whatever be their birth or ancestry, whatever be their misdeeds, -will be our virtuous masters.
27.
கொள்ளக் குறைவு அற்று இலங்கிக் கொழுந்துவிட்டு ஓங்கிய உன்

வள்ளல் தனத்தினால்
வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்

வெள்ளைச் சுடர்விடும் உன்
பெருமேன்மைக்கு இழுக்கு இது என்று

தள்ளுற்று இரங்கும் இராமானுச! என் தனி நெஞ்சமே!
O Ramanuja! With a grace never disminishing in radiance but ever increasing in power, your dark-cloud like benevolence has entered and captivated my heart.  The silver lining on your greatness is not a blemish, yet I fear it in my heart!
28.
நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே ..🙏
Ramanuja is hard to get for the ill-minded people who do not worship the petal-soft feet of the pure lord Kirshna,-Dame Nappinai's lover n the evil-hearted Kamsa's killer.  Other than his name,my heart sings and prates of none else.O,what a blessing in my life has happened to me!
29.

கூட்டும் விதியென்று கூடுங்கொலோ,
தென் குருகைப்பிரான்

பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத்,தன் பத்தியென்னும்

வீட்டின்கண் வைத்த இராமானுசன் புகழ் மெய்யுணர்ந்தோர்

ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டின்பம் எய்திடவே?
Ramanuja firmly established the Bhakti path, in which the famed Tamil Vedas, -the sweet songs of Southern Kurugar city's king, -are the means of union with the divine.  O when will my eyes rejoice and see bands of devotees who realise the truth in this!
30.
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என்?
எண்ணிறந்த

துன்பந் தரு நிரயம் பல சூழில் என்? தொல் உலகில்

மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயன் என மொழிந்த

அன்பன் அனகன்
இராமானுசன் என்னை ஆண்டனனே.!
Ramanuja, the faultiess one, the friend, discoursed that the wonder-Lord Krishna is the Lord of all beings in the Universe.  He became my heart's master, Now, how does it matter whether I enjoy the pleasures of heaven or suffer the pains of hell?..
31.

ஆண்டுகள் நாள்
திங்களாய் நிகழ் காலமெல்லாம் மனமே!

ஈண்டு பல் யோனிகள் தோறும் உழல்வோம் இன்றோர் எண்ணின்றியே

காண்டகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழலிணைக் கீழ்ப்

பூண்ட அன்பாளன்
இராமானுசனைப் பொருந்தினமே...🙏
O Heart! For so many days, months, yeas and ages without end. we have gone through so many births in so many wombs.  Today, without a second thought, we have fallen at the feet of Ramanuja who's heart is filled with love for the benevolent-arms-Varadaraja, lord of Attigiri.
32.
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல

திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால்

வருந்திய ஞாலத்தை வண்மையினால்
வந்தெடுத்து அளித்த

அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.
By the strength of his penance, our Ramanajua lifted and protected the world from the destructive power of Kali.  For those who attain him, the radiance of knowledge, proper understanding, tolerance, ability, fame, wealth, -all these will come of their own accord.
33.

அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன் கை ஆழி என்னும்

படையொடு நாந்தகமும் படர் தண்டும்,ஒண் சார்ங்க வில்லும்

புடையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று

இடையே இராமானுச முனியாயின இந்நிலத்தே.
The Lord of lotus-dame Lakshmi wields the discus sudarsana, the dagger Nandaki, the mace kaumodaki, the bow sarnga, and the dextral conch Panchajanya.  To protect the good, they have come into this world in the form of a Muni called Ramanuja...
நிலத்தைச் செறுத்துண்ணும்  நீசக் கலியை,
நினைப்ப‌ரிய- 

ப‌லத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை,
 என் பெய்வினைதென்- 

புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கியபின்

நலத்தைப் பொறுத்தது

இராமானுசன் தன் நயப்புகழே...🙏
35.
நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப்

புயலே எனக்கவி போற்றி செய்யேன்,
பொன்னரங்கம் என்னில்

மயலே பெருகும்
இராமனுசன் மன்னு மாமலர்த்தாள்

அயரேன் அருவினை என்னை யெவ்வாறின்று அடர்ப்பதுவே?
Meaning...

I shall not offer worship to any god on Earth, I shall not praise some mortal with words like, "O Cloud!" But I shall never forget the lotus feet of Ramanuja, whose love flows like a flood on the mere mention of Tiru-Arangam. How can karma ever approach me?
36.அடல்கொண்ட 
நேமியன் ஆருயிர் நாதன்
அன்றாரணச்சொல் கடல் கொண்ட ஒண்
பொருள் கண்டளிப்பப்,
பின்னும் காசினியோர் இடரின் கண் வீழ்ந்திடத் தானும் அவ் ஒண்பொருள் கொண்டவர்பின் படரும் குணன், எம் இராமானுசன் தன் படியிதுவே. ...
🙏🙏🙏
Translation

I shall not offer worship to any god on Earth, I shall not praise some mortal with words like, "O Cloud!" But I shall never forget the lotus feet of Ramanuja, whose love flows like a flood on the mere mention of Tiru-Arangam. How can karma ever approach me?
37.
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே
Ramanuja enshrined the world-famous Bhakti-surging Ramayana in his heart, His praise worthy devotee kurattalvan and feet-worshipping heart-melting good sage Parasara Bhattar saw some sing of hope in my lowly self and took me into their service.
38.
ஆக்கி யடிமை நிலைப்பித் தனையென்னை இன்று,அவமே

போக்கிப் புறத்திட்ட தென்பொரு ளா?முன்பு புண்ணியர்தம்

வாக்கிற் பிரியா இராமானுச! நின் அருளின்வண்ணம்

நோக்கில் தெரிவிரித் தால், உரை யாயிருந்த நுண்பொருளே.
O Ramanuja, praised by blessed ones! Today you have made me your servant, such is your grace, But why did you let me go my way and waste my life all these years? Alas I cannot understand the subtie sense in this, Pray tell me.
39.பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே

மருள்கொண் டிளைக்கும் நமக்கு நெஞ்சே! மற்று ளார்த்தரமோ?

இருள்கோண்ட வெந்துயர் மாற்றித்தன் ஈறில் பெரும்புகழே

தெருளும் தெருள்தந்து இராமா னுசன் செய்யும் சேமங்களே.
Heart! You have exhausted yourself running after illusory wealth, children, property, and wife as sources real happiness.  Ramanuja changed our life of darkness and despair and gave us the mind to understand his greatness.   Is there anyone else to match his abiding grace?..
40.சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்

காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே

ஆமது காமம் அறம்பொருள் வீடுதற் கென்றுரைத்தான்

வாமனன் சீலன்,
இராமானுசன் இந்த மண்மிசையே.
Ramanuja who took a vow of confidence gave diz counsel 2 the world
The 4fold pursuits of life r principled living,acquisition of wealth,fulfilment of desire,n freedom frm rebirth
Of these,desire must b cultivated solely4 attaining Krishna,while d other 3 must subserve diz purpose
41.
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே

கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர்கள் எல்லாம்

அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே

நண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற்கு ஆயினரே.
Even when the lord Madhava himself enters into every womb, takes birth and stands before our eyes, we are unable to see him, Whereas, by the singel Avatara of Ramanuja on Earth, all beings have access to the subtle knowledge to take them to the feet of Narayana....
42.ஆயிழையார் கொங்கை தங்கும் அக் காதல் அளற்றழுந்தி

மாயும் என் ஆவியை வந்தெடுத்தான் இன்று மாமலராள்

நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும்

தூயவன் தீதில்
இராமானுசன்
தொல்லருள் சுரந்தே.
O People of world! I shall tell you a great way to get rid of the soul-devastating kali, say, "Ramanuja" Even as you do, brightness will dawn on your mind, you mouth will swell with nectar, and all the travails of birth and death will flee.
43.
சுரக்கும் திருவும் உணர்வும் சொலப் புகில் வாயமுதம் பரக்கும் :

இருவினை
பற்று அறவோடும்: படியில் உள்ளீர்

உரைக்கின்றனன் உமக்கு யான், அறம் சீறும் உறு கலியைத் துரக்கும் பெருமை ;

இராமானுசன் என்று சொல்லுமினே.
O People of world! I shall tell you a great way to get rid of the soul-devastating kali, say, "Ramanuja" Even as you do, brightness will dawn on your mind, you mouth will swell with nectar, and all the travails of birth and death will flee...
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to HH Shri Sendalankara Jeeyar
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!