#மக்கள்நீதிமய்யம்
மகத்தான சாதனை. @ikamalhaasan அரசியலுக்கு வருவார் என்று யாரும் எதிர்பாராத வேளையில் அரசியலில் அதிரடியாக வந்தார். கட்சியை ஆரம்பித்தார். மக்களை சந்தித்தார். பொதுகூட்டங்கள் நடத்தினார். கிராமசபை, மகளிர்தினம், மய்யம் விசில், ஸ்டெர்லைட் போராட்டம், நீட் எதிர்ப்பு (தொடர்)
காவிரி நீர், கிராமங்கள் தத்தெடுப்பு, விவசாயிகள் போராட்டம் ஆதரவு, விவசாயிகளுக்காக அனைத்துகட்சி கூட்டம், மாணவிக்கு கல்வி உதவி, கஜா புயல் நிவாரணம், கட்சி தேர்தல் ஆனையத்தில் பதிவு என்று பல்வேறு வகைகளில் கட்சியை மக்களிடத்தில் விரைவாக கொண்டு சேர்த்துள்ளார். (தொடர்)
இவைகளுக்கிடையில் தேசிய ஊடகங்களில் தமிழக பிரச்சனைகளை கொண்டு சென்று, அதை இந்தியா முழுதும் கொண்டு சேர்த்தது, அமிதாப், அமீர்கான் ஆகியோரிடம் கஜா புயல் நிவாரணம் உதவி கேட்டது, மூன்றாம்அணியை உருவாக்க தலைவர்களை சந்தித்தது, இந்தியன்படம் என 15மாதங்களில் மக்களோடு தொடர்பில் இருந்தார். (தொடர்)
இந்த நிலையில் தான் பாராளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிறது. சாதரனமாக, புதிய கட்சி தேர்தலில் நிற்க தயங்குவார்கள் அல்லது கூட்டணி வைத்து சில இடங்களில் மட்டும் போட்டியிட பார்ப்பார்கள். ஆனால், #கமல்ஹாசன் அதிலும் ஒரு படி மேலே போய், இரண்டு தேர்தலிலும் நிற்பேன் என்றார். (தொடர்)
கூட்டணி இல்லாமல் களம் காண்பேன்; #திமுக#அதிமுக வுடன் கூட்டணி கிடையாது; #ஊழல்பொதி யை சுமந்து கைகளை கலங்கபடுத்திக் கொள்ளமாட்டேன் என நெஞ்சை நிமிர்ந்து முழக்கமிட்டார்.தேர்தல்ஆனையத்திடமிருந்து #டார்ச்லைட் என்ற அருமையானசின்னத்தையும் பெற்றார்.ஊழல்இருளை நீக்க உதவும் கருவிஎன்றார். (தொடர்)
உடனடியாக அனைத்து தொகுதிகளுக்கும் விருப்ப வேட்புமனு பெற்றார். மனுக்கள் குவிந்தது. தேர்தலில் நிற்பதற்கு ஆட்கள் உண்டா என கேலி பேசியவர்களின் வாயை அடைத்து, 1137 விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. அதை முறையாக ஆய்வு செய்ய தேர்வு கமிட்டியை ஏற்படுத்தினார். (தொடர்)
வேட்பு மனுவில் சாதி மதம் கேட்காமல் தனது உண்மையான மதசார்பின்மையை காட்டினார். பெயருக்கு தேர்வை நடத்தாமல், உண்மையாக நேர்காணல் நடத்தினார். எவ்வளவு செலவு செய்வீர்கள், கட்சிக்கு என்ன கொடுப்பீர்கள் என கேள்விகள் கேட்கபடவில்லை. மாறாக, சமூக நலனில் அக்கறை கொண்டவரா, (தொடர்)
தொகுதியின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவரா, சேவை செய்வதற்கு உகந்தவரா, அடிப்படை கல்வி தகுதி உடையவரா என பல வழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஒத்த கருத்துடைய இந்திய குடியுரிமை கட்சி ஐயா #செகுதமிழரசன் அவர்களும் இனைந்தார். (தொடர்)
தேர்தல் வாக்குறுதி பிரகடனத்தையும் கொடுத்தார். மற்ற கட்சிகள் வழக்கமாக கூறுவதை கூறாமல், வேட்பாளர் திரும்ப பெறுதல், பெண்கள் சம சம்பளம், இட ஒதுக்கீடு, ரேசன் பொருட்கள் வீடு தேடி வருதல், சிறுபான்மை நலன் என எதை செய்ய முடியுமோ அதை அறிவித்தார். (தொடர்)
வேட்பாளர்கள் செய்த வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடைசி நேர தேர்தல் ஆனையத்தின் கெடுபிடியால் 2இடம் கட்சிக்கும், 1இடம் கூட்டணியும் போட்டியிட முடியாமல் போனது. ஆனால், 40ல் 37 இடங்கள் போட்டி உறுதியானது. இதோ, இன்று முதல் பிரசாரமும் செய்ய உள்ளார் #மக்கள்நாயகன் (தொடர்)
இவ்வளவு பெரிய சாதனையை செய்த எங்கள் @ikamalhaasan க்கா அரசியல் தெரியாது என்கிறீர்கள்? அவர் செய்யும் பரப்புரையில் காண்பீர்கள் அவரின் புதிய அவதாரத்தை. இந்த 15 மாதத்தில் இந்த மகத்தான சாதனையை #கமல்ஹாசன் அவர்களைத் தவிர வேறு எந்த கொம்பனாலும் நினைத்துப் பார்க்க கூட முடியாது. (தொடர்)
@Nakkalites விமர்சனத்தை எப்போதுமே வரவேற்பவர் #கமல்ஹாசன் & #மக்கள்நீதிமய்யம் கட்சியினர். ஆனால், அந்த விமர்சனம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் எத்தனை பொய் அவதூறு காணொளிகள் போடுவதற்கு நீங்கள் சொல்லும் பதில் சொல்கிறது, நீங்கள் யார் என்று! 1/
சிங்காரவேலன், சகலகலாவல்லவன் படத்தை பார்த்த நீங்கள், அதே கால கட்டத்தில் வந்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தை பார்க்க தவறியதேன்! அதற்கு முன்பும் சரி பின்பும் சரி பல அரசியல் கருத்துக்களை தனது படங்கள் மூலமாக கொடுத்ததை பார்க்க தவறியதேன்! சத்யா வில் இறைஞர்களை எப்படி அரசியல் கட்சிகள் 2/
விலைக்கு வாங்குகின்றன என்பது. இந்தியனில் லஞ்சத்தின் கொடுமைகள் (ஜென்டில்மேன் & ஐயா படங்களை சாதி காரணமாக நடிக்க மறுத்தவர்), தேவர் மகனில் ஒரே சாதிக்குள் நடக்கும் வன்மத்தால் மக்கள் படும் அவதி, குருதிப்புனல் படத்தில் நக்சலைட் உருவாகும் விதம், அன்பே சிவம் படத்தில் கார்பரேட் 3/
மயத்தின் கல்வி கொள்கைகள். தேர்தல் வாக்குறுதிகள். 9 பக்கம் கல்விக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 1. கல்விக்காக ஒட்டு மொத்த ஜிடிபியுல் 6% ஒதுக்கீட 2. கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வருவோம். 3. தரமான இலவச கல்வி அளிக்கப்படும் 4. தமிர் கலாசரம், தமிழர்பண்பாடு, தமிழுக்காக 1/
உழைத்தவர்கள் வரலாறு பாடத்திட்டமாக கொண்டுவரப்படும் 5. மனப்பாட கல்வி முறை மாற்றப்படும் 6. மாணவர்களின் புத்தகசுமை குறைக்கப்படும் 7. சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் 8. ஆசிரியர்களுக்கு பன்னாட்டு கல்வி நிலையங்களிலில் இருந்து பயிற்சி அளிக்கப்படும்
2/
9. ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படும் 10. மருத்துவர் & வழக்கறிஞர்களுக்கு சீரூடை போல் மரியாதையான சீருடை வழங்கப்படும் 11. ஆசிரியர்களுக்கு அவர்கள் பணி மட்டுமே கொடுக்கப்படும், சம்மந்தமேயில்லாத பணி கிடையாது 12. 9-12 மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்
3/
@maiamofficial
தலைவர் @ikamalhaasan
அவர்களின் உணர்ச்சி மிக்க ஆவேச உரை. 1. கட்சியின்பொருளாளர் தவறுசெய்தார் என நிருபிக்கப்பட்டால், கட்சியிலிருந்துநீக்கும் துணிவு&நேர்மைஎனக்குஉண்டு. துரைமுருகன்வீட்டில் எடுக்கப்பட்டபணத்திற்காக காங்கிரஸ்கட்சிவெளியே 1/
வந்துவிட்டதா? எனது கட்சியில் ஊழல் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும் ,உங்களால் அது முடியுமா? 2. அம்மா இருந்த போது பேசினாரா என கேட்கிறார்கள். அவங்க இருந்த போது, அவங்களை அதாவது அரசை எதிர்த்து வழக்கு போட்டு வெற்றிபெற்றவன். 3. சமூக நீதி பற்றி பேசுவாரா? என்கிறார்கள். எனது குரல் 2/
ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. எப்படி தலித்தாக பிறந்தது எப்படி உங்க குற்றமில்லையோ, அது போல் நான் பார்ப்பனராக பிறந்தது என் குற்றமில்லை. நான் சாதி பார்ப்பது இல்லை. இட ஒதுக்கீடு தொடர்ந்து இருக்கும். அதற்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன். 4. நிர்பயா நிதியை ஒழுங்காக இந்த 3/
இன்று நடந்த #மக்கள்நீதிமய்யம் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவில் நடந்தவைகளை #திமுக#அதிமுக ஆதரவு ஊடகங்கள் தெரிவித்த தவறான தகவல்கள்: 1. கூட்டம் இல்லை. 2. கமல்ஹாசன் ரஜினிகாந்த் க்கு அழைப்பு 3. கமல்ஹாசன் சீமான்&சரத்குமார் க்கு அழைப்பு
கூட்டத்தில் நடந்த உண்மையை மறைத்தவைகள்: 1/5
1. பொறுப்பில் உள்ளவர்களை மட்டுமே கட்சி அழைத்த செய்தி 2. 3000 பேர் வந்ததை மறைத்தது 3. கட்சி முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமானது. இனி காகிதம் கட்சியில் கிடையாது 4. பொன்ராஜ் பேசியதையும், அவர் ஆட்சிக்கு எதிராக பேசியதையும் மறைத்தது 5. பொன்ராஜ் தான் சீமான்&சரத்குமார் ஐ அழைத்தார்
2/5
#கமல்ஹாசன் அவர்கள் பேசியதை முற்றிலும் மறைத்து விட்டார்கள். 1. பெட்ரோல் விலை உயர்விற்கு கண்டனம் 2. மோடி அவர்களை சந்திப்பதற்கு அனுமதி தராதது 3. ஆட்சியில் இருந்த போதே சிறைக்கு சென்ற முதல்வரின் கட்சி #அதிமுக 4. ஸ்டாலினை எதிர்த்து பேசியது 5. எடப்பாடியை எதிர்த்து பேசியது
3/5
#மக்கள்நீதிமய்யம் 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு அடியெடுத்து வைக்கின்றது. 2018 முதல்-மார்ச் 2019 நிகழ்வுகள் கீழேஉள்ளது.இனிஅதற்கு பிறகானநிகழ்வுகளை பார்ப்போம்.
2018பாராளுமன்ற தேர்தலுக்கு 20நாட்களே இருந்த சூழலில் பரப்புரை செய்ய புறப்பட்டார் #கமல்ஹாசன் . சென்ற இடமெல்லாம்சிறப்பான 1/17
வரவேற்பு. பரப்புரையில் மாநில மத்திய அரசுகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டினார். #பாஜக வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து பரப்புரையாற்றினார். பாஜக வின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாநில அரசின் டாஸ்மாக் கடுமையாக எதிர்த்தார். நடைபெற்ற தேர்தலில் 15லட்சத்திற்கும் அதிகமான 2/17
வாக்குகளை பெற்றார். ஒரு இடத்திலும் வெல்லவில்லையென்றாலும், மக்கள் மனதில் இடம் பிடித்தார். மக்கள் ஆதரவிற்கு நன்றி கோரினார். #பாஜக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே காஷ்மீர் மாநிலத்திற்கான ஆர்டிக்கிள்.370 பிரிவை நீக்கியது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.அமித்ஷா இந்தியைதிணிக்க 3/17
@maiamofficial நம்மவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். எந்த செய்தியையும் தலைப்பையும் & படத்தையும் வைத்து, அது நமது கட்சிக்கு ஆதரவு என நினைத்து பதிவிட்டு பரப்ப வேண்டாம். அதிலும் தினமலர் பரப்பும் பொய் செய்திகளை உண்மை கலந்து கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம், இதில் சபரீசன் 1/6
ரகசிய சந்திப்பு நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். காலையிலிருந்து இந்த தினமலர் செய்தி அனைவராலும் பரப்ப படுகிறது. சபரீசன் சந்தித்தது உண்மை என மய்யம் நண்பர்கள் நம்புகிறர்களா? இதை மாநில அளவில் பொறுப்புள்ளவர்கள் விளக்க வேண்டும். #திமுக வுடன் கூட்டணியில்லை எனும் போது எப்படி ரகசிய 2/6
சந்திப்பு, அதுவும் 2 முறை நடக்கும்?
அது என்ன ரஜினிகாந்த் என்றால் பரவாயில்லை என்ற ஒரு வாக்கியம். அரசியலுக்கு வரவே பயந்து தொடை நடுங்கி அரசியலே வேண்டாம் என்று சன்யாசம் வாங்கியவருக்கு மக்கள் ஆதரவு உண்டு என பிதற்றி உள்ளது தினமலர். மக்கள் ஆதரவை எப்படி கண்டுபிடித்தது? 3/6