@Nakkalites விமர்சனத்தை எப்போதுமே வரவேற்பவர் #கமல்ஹாசன் & #மக்கள்நீதிமய்யம் கட்சியினர். ஆனால், அந்த விமர்சனம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் எத்தனை பொய் அவதூறு காணொளிகள் போடுவதற்கு நீங்கள் சொல்லும் பதில் சொல்கிறது, நீங்கள் யார் என்று! 1/
சிங்காரவேலன், சகலகலாவல்லவன் படத்தை பார்த்த நீங்கள், அதே கால கட்டத்தில் வந்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தை பார்க்க தவறியதேன்! அதற்கு முன்பும் சரி பின்பும் சரி பல அரசியல் கருத்துக்களை தனது படங்கள் மூலமாக கொடுத்ததை பார்க்க தவறியதேன்! சத்யா வில் இறைஞர்களை எப்படி அரசியல் கட்சிகள் 2/
விலைக்கு வாங்குகின்றன என்பது. இந்தியனில் லஞ்சத்தின் கொடுமைகள் (ஜென்டில்மேன் & ஐயா படங்களை சாதி காரணமாக நடிக்க மறுத்தவர்), தேவர் மகனில் ஒரே சாதிக்குள் நடக்கும் வன்மத்தால் மக்கள் படும் அவதி, குருதிப்புனல் படத்தில் நக்சலைட் உருவாகும் விதம், அன்பே சிவம் படத்தில் கார்பரேட் 3/
அட்டுழியம், ஹேராம் படத்தில் மதகலவரம், விஸ்வரூபம் & உன்னைப் போல் ஒருவன் படங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதி என அனைத்தையும் மறந்து, சிங்காரவேலனை தூக்கிக் கொண்டு அலையும் உங்கள் வன்மம் புரியாமல் இல்லை. ஆறு சீட்டிற்கு கட்சியை அடமானம் வைக்காமல் மானத்தோடு வாழ 4/
#கமல்ஹாசன் அழைத்தது தவறா? 2016 தேர்தலில் திமுக வை ஊழல் கட்சி எனவும். சமூகதீதியை பாதாளகுழியில் தள்ளியது #திமுக தான் என விமர்சித்ததையும், மசூதியை இடித்தவர்களுடன் கூட்டணி வைத்து, சாகும் வரை மந்திரியாக கூட்டணியில் இருந்து இறந்த மாறன், நீதிபதி பதவிகள் நாங்கள் போட்ட பிச்சை என சொன்ன 5
ஆர்எஸ்பாரதி, என சொன்ன #திமுக வோடு மானமில்லாமல் கூட்டணி வைத்த திருமா, அது தவறு என அழைத்த கமல்ஹாசன் தவறானவரா? நீட் க்கு ஆதரவாக வாதாடிய நளினி சிதம்பரம் யார்? அவர் யாருடைய மணைவி? இதையும் கேளுங்களேன். தனது மகளுக்க்கு சாதி கிடையாது என சான்றிதழில் நீக்கியதும், வேட்பு மனு படிவத்தில் 6/
கேட்காமல் இருந்த #கமல்ஹாசன் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவரா? கேரளாவில் சாதி வேண்டாம் என கூறுபவர்களுக்கு தனி சலுகைகளே உண்டு என்பது தெரியாதா? இதே திருமா, இங்கே தமிழகத்தில் ஒரு பெண் சாதி எனும் பெயரால் இட ஒதுக்கீனு வேண்டாம் எனக் கூறி, அனைத்து சான்றிதழிலும் சாதி நீக்கியதற்கு 7/
பாராட்டினாரே! அது சரியா! தெருக்களில் சாதி பெயர்கள் நீக்கப்பட்டது. அதனால் ஒழிந்துவிட்டதா! இது ஒரு வழி முறை. அதைச் சொல்வதனால் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர் என்கிற பிம்பத்தை #கமல்ஹாசன் க்காக கட்டமைக்கும் உங்கள் வன்மம் புரிகிறது. அதற்காகத்தான் #பாஜக வின் பீ டிம் என்கிற கொச்சையான 8/
வாதத்தை முன் வைக்கிறீர்கள். சிறுபான்மையினருக்கும் மக்களுக்கும் தெரியும் யார் #பாஜக வின் பீ டிம் என்று. NIA சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து, முத்தலாக் சட்டத்திற்கு வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்த #திமுக யாருடைய அணி? #CAA விற்காக வழக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த
9/
@ikamalhaasan யாருடைய அணி என்பது மக்களுக்குத் தெரியும். @Nakkalites நீங்கள் யாருடைய அணி என்பதும், யாரின் முகமாக செயல்படுகிறீர்கள் என்பதை தெரியபடுத்தியமதற்கு நன்றி. உண்மையை வரவேற்போம். பொய்யான அவதூளுகளுக்கு பதிலடி கொடுப்போம்.
உண்மை நேர்மை என்றும் தோற்காது. #மய்யம் வெல்லும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மயத்தின் கல்வி கொள்கைகள். தேர்தல் வாக்குறுதிகள். 9 பக்கம் கல்விக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 1. கல்விக்காக ஒட்டு மொத்த ஜிடிபியுல் 6% ஒதுக்கீட 2. கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வருவோம். 3. தரமான இலவச கல்வி அளிக்கப்படும் 4. தமிர் கலாசரம், தமிழர்பண்பாடு, தமிழுக்காக 1/
உழைத்தவர்கள் வரலாறு பாடத்திட்டமாக கொண்டுவரப்படும் 5. மனப்பாட கல்வி முறை மாற்றப்படும் 6. மாணவர்களின் புத்தகசுமை குறைக்கப்படும் 7. சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் 8. ஆசிரியர்களுக்கு பன்னாட்டு கல்வி நிலையங்களிலில் இருந்து பயிற்சி அளிக்கப்படும்
2/
9. ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படும் 10. மருத்துவர் & வழக்கறிஞர்களுக்கு சீரூடை போல் மரியாதையான சீருடை வழங்கப்படும் 11. ஆசிரியர்களுக்கு அவர்கள் பணி மட்டுமே கொடுக்கப்படும், சம்மந்தமேயில்லாத பணி கிடையாது 12. 9-12 மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்
3/
@maiamofficial
தலைவர் @ikamalhaasan
அவர்களின் உணர்ச்சி மிக்க ஆவேச உரை. 1. கட்சியின்பொருளாளர் தவறுசெய்தார் என நிருபிக்கப்பட்டால், கட்சியிலிருந்துநீக்கும் துணிவு&நேர்மைஎனக்குஉண்டு. துரைமுருகன்வீட்டில் எடுக்கப்பட்டபணத்திற்காக காங்கிரஸ்கட்சிவெளியே 1/
வந்துவிட்டதா? எனது கட்சியில் ஊழல் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும் ,உங்களால் அது முடியுமா? 2. அம்மா இருந்த போது பேசினாரா என கேட்கிறார்கள். அவங்க இருந்த போது, அவங்களை அதாவது அரசை எதிர்த்து வழக்கு போட்டு வெற்றிபெற்றவன். 3. சமூக நீதி பற்றி பேசுவாரா? என்கிறார்கள். எனது குரல் 2/
ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. எப்படி தலித்தாக பிறந்தது எப்படி உங்க குற்றமில்லையோ, அது போல் நான் பார்ப்பனராக பிறந்தது என் குற்றமில்லை. நான் சாதி பார்ப்பது இல்லை. இட ஒதுக்கீடு தொடர்ந்து இருக்கும். அதற்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன். 4. நிர்பயா நிதியை ஒழுங்காக இந்த 3/
இன்று நடந்த #மக்கள்நீதிமய்யம் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவில் நடந்தவைகளை #திமுக#அதிமுக ஆதரவு ஊடகங்கள் தெரிவித்த தவறான தகவல்கள்: 1. கூட்டம் இல்லை. 2. கமல்ஹாசன் ரஜினிகாந்த் க்கு அழைப்பு 3. கமல்ஹாசன் சீமான்&சரத்குமார் க்கு அழைப்பு
கூட்டத்தில் நடந்த உண்மையை மறைத்தவைகள்: 1/5
1. பொறுப்பில் உள்ளவர்களை மட்டுமே கட்சி அழைத்த செய்தி 2. 3000 பேர் வந்ததை மறைத்தது 3. கட்சி முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமானது. இனி காகிதம் கட்சியில் கிடையாது 4. பொன்ராஜ் பேசியதையும், அவர் ஆட்சிக்கு எதிராக பேசியதையும் மறைத்தது 5. பொன்ராஜ் தான் சீமான்&சரத்குமார் ஐ அழைத்தார்
2/5
#கமல்ஹாசன் அவர்கள் பேசியதை முற்றிலும் மறைத்து விட்டார்கள். 1. பெட்ரோல் விலை உயர்விற்கு கண்டனம் 2. மோடி அவர்களை சந்திப்பதற்கு அனுமதி தராதது 3. ஆட்சியில் இருந்த போதே சிறைக்கு சென்ற முதல்வரின் கட்சி #அதிமுக 4. ஸ்டாலினை எதிர்த்து பேசியது 5. எடப்பாடியை எதிர்த்து பேசியது
3/5
#மக்கள்நீதிமய்யம் 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு அடியெடுத்து வைக்கின்றது. 2018 முதல்-மார்ச் 2019 நிகழ்வுகள் கீழேஉள்ளது.இனிஅதற்கு பிறகானநிகழ்வுகளை பார்ப்போம்.
2018பாராளுமன்ற தேர்தலுக்கு 20நாட்களே இருந்த சூழலில் பரப்புரை செய்ய புறப்பட்டார் #கமல்ஹாசன் . சென்ற இடமெல்லாம்சிறப்பான 1/17
வரவேற்பு. பரப்புரையில் மாநில மத்திய அரசுகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டினார். #பாஜக வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து பரப்புரையாற்றினார். பாஜக வின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாநில அரசின் டாஸ்மாக் கடுமையாக எதிர்த்தார். நடைபெற்ற தேர்தலில் 15லட்சத்திற்கும் அதிகமான 2/17
வாக்குகளை பெற்றார். ஒரு இடத்திலும் வெல்லவில்லையென்றாலும், மக்கள் மனதில் இடம் பிடித்தார். மக்கள் ஆதரவிற்கு நன்றி கோரினார். #பாஜக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே காஷ்மீர் மாநிலத்திற்கான ஆர்டிக்கிள்.370 பிரிவை நீக்கியது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.அமித்ஷா இந்தியைதிணிக்க 3/17
@maiamofficial நம்மவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். எந்த செய்தியையும் தலைப்பையும் & படத்தையும் வைத்து, அது நமது கட்சிக்கு ஆதரவு என நினைத்து பதிவிட்டு பரப்ப வேண்டாம். அதிலும் தினமலர் பரப்பும் பொய் செய்திகளை உண்மை கலந்து கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம், இதில் சபரீசன் 1/6
ரகசிய சந்திப்பு நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். காலையிலிருந்து இந்த தினமலர் செய்தி அனைவராலும் பரப்ப படுகிறது. சபரீசன் சந்தித்தது உண்மை என மய்யம் நண்பர்கள் நம்புகிறர்களா? இதை மாநில அளவில் பொறுப்புள்ளவர்கள் விளக்க வேண்டும். #திமுக வுடன் கூட்டணியில்லை எனும் போது எப்படி ரகசிய 2/6
சந்திப்பு, அதுவும் 2 முறை நடக்கும்?
அது என்ன ரஜினிகாந்த் என்றால் பரவாயில்லை என்ற ஒரு வாக்கியம். அரசியலுக்கு வரவே பயந்து தொடை நடுங்கி அரசியலே வேண்டாம் என்று சன்யாசம் வாங்கியவருக்கு மக்கள் ஆதரவு உண்டு என பிதற்றி உள்ளது தினமலர். மக்கள் ஆதரவை எப்படி கண்டுபிடித்தது? 3/6
ஒரு ஐபிஎஸ் அதிகாரி தேசிய கட்சியில் இணைந்த போது அவருக்கு கொடுத்த வெளிச்சமும், செய்திகளும் ஊடகங்களும் நடுநிலையாளர்கள் என சொல்ஙிக் கொள்பவர்களும், ஊழலை எதிர்த்து அதுவும் 2500 கோடி பாரத் நெட் டென்டரில் முறைகேடு நடக்கிறது என சுட்டிக்காட்டிய ஐஏஎஸ் அதிகாரி தனது பதவியை துறந்து 1/5
#மக்கள்நீதிமய்யம் கட்சியில் #நம்மவர் முன்னிலையில் இணைந்த @SanthoshBabuIAS அவர்கள் பற்றி பெரிதாக கண்டு கொள்ளாதது ஏன்? ஒரு ஐஏஎஸ் அதிகாரி நேர்மையாக தனது கடமையை செய்ததற்கு இது தான் பரிசா? அல்லது அவர் @ikamalhaasan@maiamofficial கட்சியில் இணைந்ததனால் அதை வெளிபடுத்த தயக்கமா? 2/5
நல்லதை, நேர்மையானதை மக்களுக்கு தெரிவிக்காமல் இருக்கும் இவர்கள் எப்படி நடுநிலையாளர்கள் என ஒப்புக் கொள்ள முடியும்? இதுவே ஐஏஎஸ் அவர்கள் #திபுக#அதிமுக வில் இணைந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார்களா? @ikamalhaasan@maiamofficial கட்சி நாளுக்கு நாள் மக்களிடம் செல்வாக்கு 3/5