கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை!
அதற்குக் கீழடியில் முழுமையான அகழாய்வு செய்யப்பட வேண்டும். #கீழடி இன்னும் பல பொக்கிசங்களை கொண்டுள்ளது!
இதுபோன்று தமிழ்நாட்டில் இன்னும் பல இடங்கள் உள்ளன..
#அரிக்கமேடு, #காவிரிபூம்பட்டினம், #ஆதிச்சநல்லூர் போன்ற மூன்று இடங்களில் தான் ஓரளவுக்குப் பெரிய அளவில் அகழாய்வுகள் செய்யப்பட்டன. #மதுரை ஒரு பழமையான நகரம்!
அந்த 100 இடங்களில் ஒரு இடம்தான் #கீழடி. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தென்னை மரங்கள்தான் கீழடி மேட்டுப் பகுதியைக் காப்பாற்றியுள்ளன
இன்னும் ஆழமாக ஆய்வு செய்தால்தான் முழுமையான வரலாறு தெரியவரும். போதிய கால அவகாசத்தை எடுத்துக்கொண்டு செய்யவேண்டும்!
#ஹரப்பா, #மொகஞ்சதாரோ பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அங்கெல்லாம் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் அகழாய்வு நடைபெற்றன. அதுபோல் கீழடியிலும் ஆய்வுசெய்யவேண்டும்!
மேலும் 1,800 தொல்பொருள்கள் கிடைத்தன. ஆனால், அங்கு பொருள்கள் உற்பத்தி செய்யப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வருகிறது!
யானை தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, தாயக்கட்டை, அணிகலன்கள் போன்றவையும் கிடைத்தன!
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் அகழாய்வில்தான் பானை ஓடுகளில் கிறுக்கல்கள் காணப்படுகின்றன!
இந்தியாவில் இதுபோல வேறு எங்கும் இல்லை!
ஆனால், தமிழ்நாட்டில் பானை ஓடுகளில் காணப்படும் கிறுக்கல்கள் #தமிழி எழுத்து என்பதை அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்!
பானையில் எழுதும் பழக்கம் சாமானிய மக்களிடம்தான் இருந்திருக்கிறது. அவர்கள்தான் எழுதியுள்ளனர். பானையில் அரசன் எழுத வாய்ப்பில்லை.
இப்போதும் கூட எவர்சில்வர் பாத்திரத்தில் பெயர் எழுதும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. இந்தப் பழக்கம் இந்தியாவில் வேறும் எங்கும் கிடையாது!
இன்னும் அங்கு நிறைய பொக்கிசங்கள் புதைந்து கிடக்கின்றன. வெறும் 3 அல்லது 4 மாதங்களுக்கு மட்டும் செய்யப்படும் அகழாய்வு மூலம் முழுமையான தகவல்கள் கிடைக்காது. பத்து வருடங்களாவது அகழாய்வு செய்ய வேண்டும்!
மேலும் #காவிரி, #தாமிரபரணி போன்ற நதிகளின் ஓரங்களிலும் #அகழாய்வு செய்யப்பட வேண்டும்” என்றார்...!