‘தற்காட்சி’ தருணமன்றோ
எம் தமிழர் தலைமைகளே..!
அரசியல் என் அறுதி அடைக்கலமா..?
ஐயகோ..!
உண்மையில் இதைவிட்டால் நான்
நிலை நிற்க வேறு திறமை உண்டோ.?
விஞ்ஞானிகளும் விரும்பி வரும் இடம்
கேம்பிரிட்ஜ் அனல் அறை. விவாதம் பல நடக்கும்.
நேற்று நான் கேட்டது..!
ஒவ்வொரு உயிரணுவும் சுயநலமி தான்
ஆனால் தான் தனியல்ல
ஓர் அமைப்பின் (System) அங்கம் என்ற
அறிவு, ‘சமூக கடமையை’ தருகிறது
பிற உயிரணுக்களுக்காகவும் உழைக்கிறது
தனித்திறமையே இந்த புரிதலின் புள்ளி
நியூரான் நெப்ரான் துடிப்பு இதயம் என
ஒவ்வொரு cell க்கும் தனித்திறமை
அப்புரிதல் இருந்தால்..!
‘தொடுத்து’ பார்ப்போம்
வந்தால் ‘மாலை’
போனால் ‘மலர்’
இருக்கவே இருக்கிறது என்னிடம்
வேறு Skills உழைத்துப் பிழைக்க..!
என்ற தமிழ் திமிர் வந்தால்..!
பொறுக்காத
பொறுப்பான
அரசியல் வெளிப்படுமன்றோ
ஊழலை ஓரக்கண்ணாலும்
காதலுறா நெறிவருமன்றோ .?
எந்த அறிவுள்ள தமிழ் தலைவனால்
தாண்டி போக முடியும் ?
வரும் தேர்தலில் மக்கள்
முகம் நோக்கும் போது
கேட்காமல் இருக்க
தமிழர்கள் தத்திகளா..?
இப்போதே நீங்கள் எதிர்கொள்ளலாமே!
உங்கள் திறமை எதுவாகினும், படிப்போ, பொழுது போக்காய் வந்ததோ:
விவசாயம்
மருத்துவம்
சட்டம்
நடிப்பு..
அடிமனத்தை அரித்துக்
கொண்டிருக்கும் கேள்வியாகலாம்..!
இன்று இந்நிமிடம்
நான் அரசியல் துறவு பூண்டு
கொண்டது அனைத்தும்
தொண்டனும் விட்டகன்றால்
வேறு தொழிலை பூஜ்ஜியத்திலிருந்து
பூஜை போட்டு பொலிவுற முடியுமா..?
இல்லை நான் அரசியலில் இருப்பது எளிதாய் கிடைப்பதை
ஏப்பமிடவா
கட்டாயமில்லை
ஆனால் ஒவ்வொரு தமிழ்
மனதிலும் தலைமைக்கான
இக்கேள்வி
கருவண்டின்
தொடர் ரீங்காரமாய்
தொந்தரவு செய்யாதோ..?
இருப்போரும் வருவோரும்
@CMOTamilNadu ji @mkstalin ji
@draramadoss ji @SeemanOfficial ji
@thirumaofficial ji @ikamalhaasan ji
@rajinikanth ji @DrKrishnasamy ji