பல்வேறு வாழ்க்கை தத்துவங்களை, தலைவன் #வைகை_புயல் #வடிவேலு #vadivelu ரொம்ப எளிமையாக, அசால்ட்டா சொல்லிட்டு போயிருப்பாரு.!

அவற்றில் சில #தத்துவங்கள் மற்றும் அதன் #De_Codings.!

with @sArAvAnA_15

#தத்துவம்-1
ஒன்றை ஏற்கும் முன், அது உதவியா அல்லது சதியா என ஆராய்தல் நலம்.!
#விளக்கம்: தன் பசிக்கு தான் உணவு கொடுக்கிறான், என நம்பி, வேடன் வலையில் விழும் புறாக்கள், பின் அந்த வேடன் பசிக்கு உணவாக மாறுவது வேதனை.!

#தலைவன்_Version
"கோழி வளர்க்கறது கொஞ்சுறதுக்கில்ல,
ஆடு வளர்க்கறது அழகு பாக்குறதுக்கில்ல..!"
#தத்துவம்-2
பிறர் மனம் புண் பட நடவாதே..!

#விளக்கம்:
ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது, நாம் அவருக்கு ஆறுதல் சொல்லாவிட்டாலும், அவர் மனம் மேலும் துன்பம் படும்படியான வார்த்தைகளை சொல்லாமல் இருப்பது நல்லது.!

#தலைவன்_Version
"பேசாம போறியா, இல்ல வாயில கத்திய விட்டு சுத்தவா..!"
#தத்துவம்-3
வலியினால் வரும் வேதனை, எல்லோருக்கும் பொதுவானது.!

#விளக்கம்:
வலி என்பது வர்க்க பேதம் இல்லாமல் அனைவருக்கும் வருவது.அதன் வேதனைகள் கடினமானது. எனவே பிறர் வேதனைகளை நாம் பரிகாசம் செய்யக்கூடாது.!

#தலைவன்_Version
"உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா"
#தத்துவம்-4
முகஸ்துதி செய்பவர்களிடம் விழிப்புடன் இரு.!

#விளக்கம் :அலுவலங்களில் சில நேரம் 'உன்னை விட்டால் வேறு யாரும் இல்லை, உன்னால் தான் இதை செய்யமுடியும்' என சொல்லியே அதிகவேலை வாங்கி விடுவார்கள்.!

#தலைவன்_Version
"இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டாங்களேடா"
#தத்துவம்-5
கூடா நட்பு, கேடாய் முடியும்.!

#விளக்கம்:
நண்பர்களின் செயல்கள் மூலம் அவர்களை பற்றி அறிய வேண்டும். தீய நண்பர்கள் நம்மை, துயரமான நிலைக்கு இட்டுச் சென்று, பின்பு நம்மை நிர்க்கதியாக விட்டு, விலகி சென்று விடுவார்கள்..!

#தலைவன்_Version
"மாப்பு, வச்சுட்டான்யா ஆப்பு.!"
#தத்துவம்-6
குறை குடம் கூத்தாடும்..!

#விளக்கம்:
எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக கற்காமல், அரைகுறையாக கற்றவர்கள்,
ஊர் மக்கள் முன் எல்லாம் தெரிந்தவர்கள் போல் பிதற்றிக் கொண்டிருப்பார்கள்..!

#தலைவன்_Version
"ஏய்.! நல்லா பாத்துக்கோங்க, நான் ஜெயிலுக்கு போறேன், நானும் ரவுடி தான்..!"
#தத்துவம்-7
புகழ்ச்சிக்கு மயங்காமல், கவனமாக இரு..!

#விளக்கம்:
ஒருவர் நம்மை தேவையில்லாமல் புகழும் போது, அவரிடம் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிடில், பிறகு நாம் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

#தலைவன்_Version
"இவன் ரொம்ப... நல்லவன்னு... சொல்லிட்டான் மா..!"
#தத்துவம்-8
சிவனே என்று இரு.! (செவனேன்னிரு)

#விளக்கம்:
சிலர் உதவுகிறேன் பேர்வழி என, தேவையில்லாதவற்றை செய்து நம் வேலைகளை அதிகரித்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் உதவி செய்கிறேன் என வந்தால் அவர்களின் உதவிகளை மறுத்து விடுவது நல்லது.!

#தலைவன்_Version
"ஆணியே.. புடுங்க வேண்டாம்..!"
#தத்துவம்-9
இளம் கன்று பயம் அறியாது.!

#விளக்கம்
இளமைப் பருவத்தில் பிள்ளைகள் போதுமான அச்ச உணர்வு மற்றும் விழிப்புணர்வு இல்லாமல் செய்யும் செயல்களால் ஆபத்து அல்லது தீங்கு நேரிடலாம்.பெரியவர்கள் அவர்களுக்கு அதை எடுத்துக் கூறி புரியவைக்க வேண்டும்.!

#தலைவன்_Version
"இது வாலிப வயது..!"
#தத்துவம்-10
பதறாத காரியம் சிதறாது..!

#விளக்கம் :
எந்த செயலை செய்யும் முன்பும், பதற்றம் அடையாமல், நன்கு திட்டமிட்டு அந்த செயலை செய்ய தொடங்க வேண்டும் அவ்வாறு செய்தால் அந்தக் காரியம் எளிதில் வெற்றி பெறும்.

#தலைவன்_Version
"எந்த ஒரு விஷயம் பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும் O_K_..!"
#தத்துவம்-11
அதீத ஆர்வத்தில் அறிவிலித்தனமாய் பேசாதே.!

#விளக்கம்:
சிலர் தாம் அறிவார்ந்து பேசுகிறோம் என நினைத்து, அதிகப்பிரசங்கித்தனமாய் எதையாவது உளறி வைப்பார். அதனால் மக்களுக்கு எந்த வித பயனும் இராது.!

#தலைவன்_Version
"மூக்கு பொடப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க தோணும்..!"
#தத்துவம்-12
பயனற்ற செயல்களை செய்யாதே.!

#விளக்கம்:
சிலர் யாருக்கும் எந்தவித நன்மையும் இல்லாத செயல்களை தான் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்.அதை நிறுத்தவும் மாட்டார்கள். அதை கண்டுகொள்ளாமல் விடுவதுதான் ஒரே வழி.!

#தலைவன்_Version
"நீ புடுங்குறது எல்லாம், தேவையில்லாத ஆணி தான்.!"

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with நிவா 🦋

நிவா 🦋 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @theroyalindian

11 Sep
#CreditCards 😊
#கடன்_அட்டை
(EMI -3)

#இழை #Thread

கடன் அட்டை எப்படி வேலை செய்கிறது.!🤔
அதை புரிந்து கொள்ள முதலில் இந்த,

🔥Credit Limit
🔥Billing Cycle
🔥Monthly Statement
🔥Payment Dues ( Actual & Min)
🔥Grace Period
🔥Late Payment Charges

இது பற்றி தெரிந்திருக்க
வேண்டும்🧞
Credit Card வாங்க நமக்கு இருக்கும் ஆர்வத்தில் சிறிதளவாவது இதையெல்லாம் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வதில் இருந்தால் கடன் அட்டை வாங்கிய பின் வரும் 85 சதவீத சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து விடலாம்..! 😊
🔥Credit Limit
இதுதான் கடன் அட்டையின் அடிப்படையான விஷயம்.
உங்களின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் வங்கி தரவுகளை பொறுத்து உங்களுக்கு எவ்வளவு கடன் வழங்கலாம் என கடன் அட்டையை வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம் முடிவு செய்து ஒரு தொகையை நிர்ணயம் செய்து இருப்பார்கள்.இதுதான் Credit Limit.
Read 28 tweets
10 Sep
#CreditCards 😊
#கடன்_அட்டை
(EMI -2)

#இழை #Thread

முந்தைய பதிவில் சில அடிப்படைகளை பார்த்தோம்..!😊
(படிக்காதவர்களுக்கு Link கீழே.!)
சரி வாங்க, "யாரெல்லாம் கடன் அட்டையை தவிர்ப்பது நலம்" - என இந்த பதிவில் அலசுவோம்..!🧞

#EMI #Loan #Finance #Banking

முன்னாடி கேபிள் டிவில எல்லாம் ஒரு சில படங்கள் போடுறதுக்கு முன்னாடி..
"வயதானவர்கள்,
இதயம் பலவீனமானவர்கள், குழந்தைகள்,
கர்ப்பிணி பெண்கள்
இத்திரைப்படத்தை பார்ப்பதை தவிர்க்கவும்"
ன்னு Slide போடுவாங்க..!
(இதன் நோக்கம் படம் பார்க்க கூடாது என்பது அல்ல, Risk எடுக்காதீர்கள் என்பதே )😊
அது போல, கடன் அட்டையை வாங்க யார் யார் எல்லாம் Risk எடுக்க வேண்டாம் அல்லது தவிர்க்கலாம், அப்படின்னு ஒரு Slide போடலாம்.
(இதுக்குன்னு வரையறை எல்லாம் கிடையாது, எல்லாம் ஒரு புரிதலுக்காகவே😊)

🔥#அந்தஸ்தின்_அடையாளமா🤔
"என்னோட பெருளாதார சூழ்நிலை (Financial Situation)நல்லாதான் இருக்கு,
Read 32 tweets
7 Sep
#CreditCards 😊
#கடன்_அட்டை
(EMI -1)

#இழை #Thread

இதை ஒரே பதிவாக பதிவிட்டால் Detailing இருக்காது. அதனால இத ஒரு மூணு EMI ல கட்டி முடிக்க பார்ப்போம்.😂
(அதாங்க மூணு பாகங்களாக)😂
சரி வாங்க,
Credit Card வாங்கலாமா இல்ல வேணாமான்னு முடிவு பண்ணலாம்..!🧞

#EMI #Loan #Finance #Banking
Credit Card (CC) வாங்குறதுக்கு முன்னாடி நமக்கு அடிப்படை விஷயங்களான

🔥கடன் ( Loan)
🔥வட்டி (Intrest)
🔥வட்டி விகிதம் (Intrest Rate)
🔥திரும்ப செலுத்தும் காலம்
(Pay back period)
🔥 Penalty (அபராதம்)

இது பற்றி நமக்கு ஓரளவுக்காவது தெரிந்து இருக்க வேண்டும்.
இதெல்லாம் ஏற்கனவே நமக்கு தெரிஞ்ச விஷயம் தானேன்னு நினைப்போம்..!
"அப்புறம் ஏன் நிறைய பேர் கிரெடிட் கார்டு வாங்கி அவஸ்தைப்பட்டேன், அத தூக்கி போட்ட ன்னு சொல்றாங்க..!" ன்னு யோசிச்சிருக்கீங்களா..!
ஏன்னா இதையெல்லாம் நம்முடைய பொருளாதார சூழ்நிலையோடு பொருத்திப் பார்க்கத் தவறுகின்றோம்..!😊
Read 31 tweets
3 Sep
#Online_Transactions 😊
#இணையதள_பரிவர்த்தனைகள்

நாம் நம் மொபைல் மூலமாக பண பரிவர்த்தனைகள் நிகழ்த்தும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை பற்றிய #இழை #Thread 😊

#Banking #MobileBanking #Safe_Transaction

வாங்க பாதுகாப்பான பரிவர்த்தனைகளை தொடருவோம்..!🧞
நமது Online Transactionsகளை

🔥Personal Fund Transfer
(குடும்பத்துக்கு , நண்பர்களுக்கு பணம் அனுப்புவது, வாடகை அனுப்புவது.. etc)

🔥Bill Payments
(Credit card Bill, EB bill...etc)

🔥Ticket Bookings
(Train, Bus, Movies..etc)

🔥Recharges
(Mobile, DTH..etc)

என வகைப்படுத்தலாம்..😊
இது ஒரு புரிதலுக்காக மட்டுமே..!
இணையதள வங்கி பரிமாற்றங்களின் மூலம் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகளும் மோசடிகளும் நடைபெறுகிறது.

அவற்றிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் ஆன்லைன் மூலமாக வங்கி பரிவர்த்தனைகள் செய்யும் போது சில பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிப்பது நலம்..!
Read 30 tweets
1 Sep
#வாட்சாப்_நீதி_கதைகள் 😊

#அடேய்_லகுட_பாண்டிகளா 🤦
மகுட நாட்டு அரசன் மயூரன் வருத்தத்தில் இருந்தான். தன்னுடைய சந்தேகப் புத்தியால் தான் இவ்வாறு நடந்து விட்டது என பெரும் கவலையுற்றான். அவையில் எல்லோர் முன்னிலையிலும் தலைமை அமைச்சரைப் பற்றி தவறாக பேசியதால் தலைமை அமைச்சர் சாம்பு
கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார்.
இத்தனை ஆண்டு காலம் நல்ல விசுவாசமாக இருந்த திறமையான அமைச்சர்.‌
🔥அரசு நிர்வாகம்,
🔥நிதி,
🔥நீதி
என அனைத்தையுமே அவரே இத்தனையாண்டு காலம் கவனித்து வந்தார். அவர் சென்று விட்டதால் அரசவையில் தினசரி அலுவல்களே நடைபெற திணறியது.!
நிலைமையை சமாளிக்கும் பொருட்டு அரசன், மக்கள் நலப் பணிகளை திறம்பட நிர்வகிக்க பதிதாக மூன்று படித்த இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அமைச்சர்களாக நியமித்து, அவர்களுக்கு சற்று அதிகமாகவே அதிகாரங்களையும் கொடுத்தான்..! ஒவ்வொரு அமைச்சருக்கும் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.
Read 26 tweets
31 Aug
#வாட்சாப்_நீதி_கதைகள் 😊

#அறப்பணி 🙋
ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். நரைத்த தலை, சிறிது தளர்ந்த தேகம் கொண்ட அந்த ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை...🤔
எனவே, நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார்.
இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார்.
இளைஞர்,"மிக்க நலம் ஐயா, நான் ஆசிரியராக உள்ளேன் "என்றார்.
மேலும் அந்த இளைஞர் " நான் உங்களால் தான் தூண்டப்பட்டு, உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியராக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் பணியாகிய ஆசிரியர் பணியில் உள்ளேன் " என்றார்.
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!