#Thread#Covid19#TrueStory நெருங்கிய நண்பரின் தந்தை கொரோனவால் இறந்துவிட்டார். ஒரு வாரமாக காய்ச்சல், சளி என்று இருந்தும் வீட்டிலேயே மருத்துவம் பார்த்துள்ளார். மூச்சு விடவே ரொம்ப சிரமம் ஆனா பின்தான் மருத்துவமனை சென்று பார்த்தார். (1/10)
வெள்ளிக்கிழமை பார்த்துவிட்டு கொரோனா பரிசோதனைக்கு கொடுத்துத்துவிட்டு திங்கள் வருமாறு கூறியுள்ளனர் (மருத்துவமனையில்). ஞாயிறு அன்றே ரொம்ப முடியாமல் போனதால் உடனே அனுமதிக்கப்பட்டார் (அரசு மருத்துவமனையில்). (2/10)
திங்கள் காலை கொரோனா தொற்று உறுதி செய்தபின் பார்த்தால் நுரையீரலில் 85% கொரோனா தொற்று பரவி விட்டதாம். காப்பாற்ற கொஞ்சம் கஷ்டம் என்று சொல்லி வெண்டிலேட்டர் மூலம் காப்பாற்ற முயலும் முன்பே வலியில் இறந்துள்ளார். (3/10)
வெண்டிலேட்டர் என்பது வாய்வழியே செயற்க்கையாக நுரைஈரல் செய்யும் வேலையான மூச்சில் இருந்து oxygen எடுத்து ரத்தத்தில் செலுத்தும் வேலை. இது முகக்கவசம் போன்றதல்ல உடலில் வயிறு வரை செல்லக்கூடிய குழாய். இது மிகவும் வலிக்கும் என்று கூறுகிறார்கள். (4/10)
கொடுமை என்னவென்றால் அவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என்று எதுவும் இல்லை மிகவும் ஆரோக்கியமான மனிதர். மருத்துவர் சொல்கிறார் இந்த வயதுக்கு 10% முதல் 20% வரை நுரைஈரலில் தொற்று இருந்தால் மட்டுமே மருத்துவர்களால் அவர்களை காப்பாற்ற முடியுமாம். (5/10)
சரி இதில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் என்ன? இதை எளிய மக்கள் நாம் எப்படி தெரிந்துகொள்ள? oximeter என்ற கருவி விறல் நுனியில் வைத்து உங்கள் உடலில் உள்ள ரத்தத்தில் oxygen எத்தனை புள்ளி உள்ளது என்று கணித்து சொல்லுமாம். நெருங்கிய நண்பர்கள் வீட்டில் இதை வைத்துள்ளனர். (6/10)
சராசரி மனிதனுக்கு 98-99 புள்ளிகள் வரை ரத்தத்தில் oxygen இருக்கணுமாம். இது அந்த அளவில் இருந்து குறைந்துகொண்டே போனால் உடனே மருத்துவ ஆலோசனை பெற்று நலம் பெறவும். எமது நண்பரின் தந்தைக்கு 35 புள்ளிகள் மட்டுமே இருந்தன. (7/10)
அப்படி இருந்தால் நுரைஈரல் கிட்டத்தட்ட செயல் இழந்துவிட்டது என்று கூறுகின்றனர். உங்களால் முடிந்தால் உங்கள் குடும்பங்களுக்கு ஒன்று வாங்கி நலம் பெற கேட்டுக்கொள்கிறேன். இதை பற்றி இப்போது தான் தெரிந்தோக்கொண்டேன். மற்றவர்களுடன் பகிரவும். நலம் பெறவும். (8/10)
கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே கவனியுங்கள் நீங்களும் என் நண்பர் போல உறவினர்களை இழந்துவிடாதீர். குறிப்பு: இந்த கொரோனாவின் தாக்கத்தை விட அது நுரைஈரல் போன்ற உடலுறுப்பில் விட்டு செல்லும் தாக்கம் சரியே செய்ய முடியாத தாக்கமாம் ஆங்கிலத்தில் irreversible Impact என்கிறார்கள். (9/10)
அதனால் தான் புகைபிடிப்பவர்களை காப்பாற்ற தொழில் நுட்பமே இன்று வரை இல்லை. நுரைஈரல் சிறிதளவு பாதித்தால் மீதி உள்ள பகுதி வைத்துத்தான் வேலை செய்யும்.புகை பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளும் irreversible தான்.அனைவருக்கும் பகிருங்கள் இந்த செய்தி பலருக்கும் தெரியவாய்ப்பில்லை. நன்றி! (10/10)
ஒரு சில ஐரோப்பா நாடுகள் போல ஸ்வீடெனிலும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதாக செய்தி. ஸ்டோக்ஹோல்ம் நகரில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகரிப்பதாகவும் வெளியில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. உஷாரு அய்யா உஷாரு! #coronavirus
கொரோனா முடிந்துவிட்டது என்று நினைக்காமல் விழித்திரு என்ற தொனியில் மருத்துவ துறை சார்ந்த வல்லுனர் கூறியுள்ளார். இந்த தொற்று முடிவடைய பல காலம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.