இப்படித் தடை வாங்குமளவுக்கு நமது கோயில் மணி ஓசைகளில் என்ன கொடுமையைக் கண்டுவிட்டார்கள் இவர்கள்?
கொடுமை இல்லை…. தாழ்வு மனப்பான்மை….
தங்களிடம் இவை போன்று இல்லையே எனும் எண்ணம் தந்த வயிற்றெரிச்சல்… அதனால் நம் மேல் துவேஷம்… அதன் ஒரு வடிவமே இந்த எதிர்ப்பு.
🔔கோயில்....🔔
”மணி ஓசையில் என்ன இருந்து கிழித்துவிடப் போகிறது? இந்த ஹிந்துக்களுக்கு வேறு வேலை இல்லை…” என முனகுபவரும் இதைப் படிக்கலாம்.
நமது பாரத தேசத்தின் பண்டைய காலங்களில் முன்பெல்லாம் ஊர் முழுதும் கோயில்கள் இருந்தன.
முக்கியமாக ஊரின் உயர்ந்த இடங்களிலும் , ஆற்றங்கரை ஒட்டிய பகுதிகளிலுமே பெருவாரியான நமது கோயில்கள் கட்டப்பட்டன. இதற்கும் சில முக்கியக் காரணங்கள் உண்டு.
நில மட்டத்திலிருந்து உயர உயரச் செல்லச் செல்ல, நாம் ஆழ்ந்த மூச்செடுத்து, நல்ல காற்றை ஸ்வாஸிக்க முடியும். இது நம் நுரையீரலை விரிவடையச் செய்யும். இதனால் மூச்சிரைப்பு (Asthma) வராது.
ஊரினுள் இருக்கும் மனித வாழ்க்கையின் செயல்பாட்டுக்கான பல்வகைப்பட்ட சப்தங்கள் இல்லாமலிருப்பதால்,
மனம் தானாக ஒருமுகப்படுவதற்கு தயாராகும்.
இதனால் நாம் செய்யும் த்யானம் விரைவில் மனவொருமைப்பாட்டினைக் கொடுத்து, மேலும் அதை நீண்ட நேரம் தக்க வைக்கும்.
கீழிருந்து வணங்குவோர், மேல் நோக்கிப் பார்த்து இறைவனை வணங்குவதன் மூலம், அவர்களது கண்களில் சூரிய வெளிச்சம் லேசாகப் படும்.
இது நமது கண்களுக்கு மிகவும் நல்லது. ஸூர்ய நமஸ்காரம் என்பதை இதனால் தான் கொண்டு வந்தனர்.
உயரே செல்கையில், நமக்கு ப்ரபஞ்ஜ அலைகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பு சற்று எளிமையாக இருக்கும்.
மேலும் அங்கே ஒலிக்கும் கோயிலின் மணி, நமக்கு நேரம் உணர்த்துவதோடு,
நமக்குள் பல அதிசய மாற்றங்களையும் ஏற்படுத்தும்.
இதே போல ஆற்றங்கரை ஒட்டி, பெரும்பாலும் வனப்பகுதிகள் இருந்தன.
அங்கே வந்தும், உடலினை சுத்தம் செய்ய தலை முழுகி, மன அழுக்கையும் சேர்த்து துடைத்து கோயிலுக்குள் செல்ல முடியும்.
அங்கிருக்கும் கோயில்களிலும் இதே போல ஆற்றின் குளுமை நல்ல மன அமைதியைத் தரும்.
நேர்மறை சிந்தனையை அதிகமாக்க இந்த இயற்கை சூழல் நன்கு உதவும்.
இங்கும் நீர்நிலைகள் அருகிலிருப்பதாலும், சுற்றிலும் மரங்கள் இருப்பதாலும், இந்த கோயில் மணி ஓசை நெடுநேரம் நீடித்து இருக்கும்.
இத்தனை நண்மைகளும் இருக்கும் நமது ஹிந்துக் கோயிலில் உள்ள 🔔கோயில் மணி🔔 யில் என்ன அத்தனை விசேஷம்?
🔔கோயில் மணி….🔔
நமது ஸநாதன தர்மத்தின் வழிவந்த கோயில்களில் நாம் வைக்கும் இந்த மணிகளுக்குள்ளும் ஒரு மறைமுக அர்த்தம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
”இந்த மணியின் வடிவம் *அனந்தம்* என்பதைக் குறிக்கும். அதாவது, இப்ரபஞ்சம், முதலில்லாதது, முடிவில்லாதது, அளவில்லாதது என்று பொருள்… *அநாதி*.
இந்த மணியிலுள்ள நாவானது, புத்திக்கும் ஞானத்துக்கும் தேவியாகிய *ஸரஸ்வதி தேவி*யைக் குறிக்கும்.
இதனைக் கட்டித் தொங்கவிடும் பாகத்திலுள்ள, கையால் பிடிக்கும் இடம், நம் உடலில் உள்ள *ப்ராண சக்தி*யைக் குறிக்கும்.
இது மறைமுகமாக, *ஹனுமன், கருடன், நந்தி, அல்லது ஸுதர்ஸன சக்கரம்* போன்ற சக்திகளைச் சொல்வது.
கோயில் மணி என்பது ஏதோ ஒரு உலோகத்தை எடுத்தோம், செய்தோம் என்று செய்யப்படுவதல்ல.
*சிற்ப ஸாஸ்த்ரம்* கூறுவது போல, இது *பஞ்சலோகம் / பஞ்சதாது* எனப்படும்,
தாமிரம் - Copper
வெள்ளி - Silver
தங்கம் - Gold
வெண்கலம் - Bronze
இரும்பு - Iron
எனும் ஐந்து உலோகங்களை, *ஆகமவிதிகள்* சொல்லும் சதவிகிதத்தில் கலந்து உருவாக்கப்படுகிறது.
அதுவும், இந்த உலோகங்களை உருக்கி, அதனை 1000 டிகிரி செண்டிக்ரேடில் சுடவைத்து, அந்த சூட்டோடு, அதை மிகப்பெரிய சுத்தியல் கொண்டு, தொடர்ந்து… சூடு ஆறுவதற்குள் அடித்து, மெல்லியதாக ஆக்கி அதனை நன்கு ஆற வைப்பார்கள்…
பின்னர் மீண்டும் அதனை உடைத்து, இதே போல உருக்குவார்கள்…
உலோகத்தை உருக்குவதற்கு **க்ரூஸ்** எனும் கலவையாலான ஒரு பாத்திரம் செய்யப்படுகின்றது. அதனை கடற்கரை மணலிலிருந்து சலித்து எடுப்பார்கள்.
அது கருப்பாக உலோகத்துகள் போல இருக்கும். தங்கம் உருக்குவதற்கும் இதையே பயண்படுத்துகின்றனர்.
இரண்டாவது முறை உருக்கப்பட்ட உலோகத்தை, களிமண்ணால் செய்த அச்சில் இட்டு வார்த்து, பின் அது ஆற ஆரம்பித்ததும் எடுத்தால், அதில் மென்மைத்தன்மை சற்று எஞ்சியிருகும்.
பின்னர் அதில் வரைய வேண்டிய வடிவங்கள் இருந்தால், மெல்லிய கத்தி போன்ற ஒன்றால் கீறி வரைந்து, ஓரங்களை இழைத்து,
மணியை முழுதும் தீட்டி பளபளப்பேற்றி, பின்னர் மீண்டும் முழுதாக வெயிலில் காய வைக்கிறார்கள்.
பின்னர் இதே போல தயாரிக்கப்பட்ட ’நா’வை, அதில் கணமான வெண்கல கம்பி கொண்டு, சரியான உயரத்தில் தொங்கும்படி பிணைத்தடித்து, பின்னர் முழுமையான மணி ஆக்குகிறார்கள்.
பஞ்சலோகத்தால் உருவாகும் இந்த வெண்கல மணிகள் பஞ்ச பூதங்களை குறிப்பிடுகிறவை ஆகும்..
இத்தகைய விதத்தில்தான் இந்த மணி தயாரிக்கப்படுகிறது என்பது முதலில் பெரும் ஆச்சர்யம் !
🔔கோயில் மணி ஓசை…..🔔
நமது மனம், ப்ரபஞ்ஜ சக்தி (Cosmic Energy) இரண்டையும் ஒன்றாக இணைக்கும் தன்மை,
கோயில் மணியில் இருந்து எழும் ஒலிகளுக்குத்தான் இருக்கிறது.
நாம் கோயில் மணியை அடித்தவுடன், அதிலிருந்து ஒரு பலத்த அதிர்வலையுடன் கூடிய ஒலி எழுவதை நம்மால் உணர முடியும்.
இந்த மணியின் ஓசை எதிரொலியுடன் கூடி, காற்றில் அதிர்வலையாகப் பரவி, இடைவிடாது ஒலிக்கும்.
முதலில் ஒரு கணத்த ஒலியில் அதிர்வலையுடன் ஓசை ஆரம்பித்து, பின்னர் சிறிது சிறிதாக மெல்லியதாக ஒலிக்கும்.
இந்த ஒலியை நாம் நன்கு கவனித்தால், இது மனதுக்கு ஒரு மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய, பிற எண்ணங்களிலிருந்து மனதை விடுவித்து, ஒருமுகப் படுத்தக்கூடிய ஒரு ஒலி என்பதை உணர முடியும்.
இந்த ஒலியானது தற்போதைய இயந்திரத்தில் பண்ணப்படும் மணிகளிலிருந்து வருகையில் 3-4 விநாடிகளே நீடிக்கின்றன. இதிலேயே 7 விநாடிகள் நீடிப்பதுதான் நல்ல மணி என்கின்றனர்…
ஆனால், கையால் பண்ணப்படும் வெண்கல மணிகளிலிருந்து வரும் ஓசை, குறைந்தது 30 – 35 விநாடிகள் நீடிக்கும்…
அதைக் கண்மூடி, கூர்ந்து உணர்ந்தால், *ஓம்* என்னும் ஒலி வருவதை கவனிக்க முடியும்.
(நாம் நமது முன்னோர்கள் பேசுகையில், ”வெண்கலக் கடைக்குள் யானை புகுந்தது போல…” எனும் பழமொழி சொல்லக் கேள்விப் பட்டிருப்போம். எதனால் அவர்கள் வெண்கலத்தைக் குறிப்பிட்டார்கள் என இப்போது தெரிகிறதா?
தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கின்றனர் என்பது பொருள்)
சரி… இதனால் என்ன பயன்?
*குண்டலினி யோக* தத்துவத்தின்படி, இந்த வெண்கல மணியின் ஒலியானது, நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் எனப்படும் சக்தி மையங்களைச் சென்றடைந்து,
ஆகிய ஏழு சக்தி மையங்களையும் தூண்டிவிடுகின்றது. அந்த சக்கரங்கள் தூண்டப்படுகையில், நம் உடலுக்குள் ப்ரபஞ்ஜ சக்தியை உள்வாங்கும் சக்தி பெருகுகிறது.
இது நமது உடலின் பல ப்ரச்சனைகளைச் சரிசெய்ய நம் உடலைத் தயார் செய்கின்றது.
இந்த ஒலியானது, ப்ரபஞ்ஜ ஆற்றலிலிருந்து நேர்மறை சக்தியை க்ரஹித்துத் தந்து, நம் மனதில் இருக்கும் எதிர்மறை சக்தியை விரட்டுகின்றது.
தொடர்ந்து த்யானப் பயிற்சி செய்வோர், கோயில் மண்டபத்தில் கண்மூடி அமர்கையில், இந்த வெண்கல மணியிலிருந்து வரும் *ஓம்* எனும் ஒலியை உணர முடியும்.
மேலும், அது வெறும் ஒலியாக இல்லாமல், அதிர்வு அலைகளால் உண்டாகும் ஒலியாக நம் உடலில் படர்வதை உணர முடியும். இது நம் உடலில் உள்ள நீர் சக்தியில் அதிர்வை ஏற்படுத்தும்.
அது ஏழு சக்கரங்கள் தூண்டுதலோடு சேர்ந்து, ரத்த ஓட்டத்தை அதிகமாக்கி, உடலின் மூளை முதல் கால் வரை அதைக் கொண்டு செல்லும்.
🔔ஓம் எனும் மந்திரம்…🔔
கோயில் மணியை எப்போதெல்லாம் அடிப்பார்கள்?
காலை 5:00 மணிக்கு மேல், காலை பூஜை முடிந்து, ஆரத்தி ஆரம்பிக்கப் போகின்றது என்கையில் தொடர்ந்து அடிப்பார்கள்.
அதே போல, அபிஷேகம் நடக்கும்போதும், நைவேத்தியம் படைக்கும் போதும் மணியை அடிப்பதுண்டு.
இதைக் கேட்டதும், அனைவரும் வந்து தீபாராதனையை ஸேவித்துச் செல்வார்கள். இதே போல் பகல் பூஜை, மாலை பூஜை, இரவு மூடும் முன் செய்யும் பூஜை போன்ற நேரங்களிலும் தொடர்ந்து ஒலி எழுப்பப்படும்.
மேலும், இது என்ன மணி ஆகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ளவும் ஏதுவாக இருந்தது.
அத்தோடு இல்லாமல், வெறுமனே இந்த கர்பக்ருஹ மணியை அடிக்க மாட்டார்கள். அதற்கான ஸ்லோகமான
மேலும் சொல்லும் மந்திரத்திற்கும் கால நேரத்திற்கும் ஏற்ப, மணியை 8, 16, 32, 64 போன்ற எண்ணிக்கைகளில் அடிப்பார்கள்.
🔔கோயில் வாசலில் உள்ள மணி…🔔
பொதுவாக பழைய கோயில்களுக்குச் சென்றவர்களுக்கு ஒரு அநுபவம் இருக்கும். கோயிலின் வெளியில் உள்ள குளத்திலோ, அல்லது சிறு கிணற்றிலோ நீரெடுத்து
கால் அலம்பி, சிறிது நீரை உள்ளங்கையில் எடுத்து, உச்சந்தலையில் வைத்துக் கொள்வோம். இது நமது காலில் உள்ள அழுக்கை நீக்கி, உடல் சூடு தனிய தலையில் நீர் வைத்துக் கொள்வது…
பின் வாசலில் வலது கால் வைத்து நுழையும் போது, அங்கே வலப்புறம் மணி கட்டியிருக்கும்.
அதை, ஒருமுறை இழுத்து அடித்துவிட்டுச் செல்வோம். இதை,
”பகவான் உறக்கத்தில் இருப்பார். அவரைக் காண நாம் வந்திருப்பதைச் சொல்வதற்கே மணி அடிக்கிறோம்…”
என்று பாட்டி, தாத்தாக்கள் கூறியிருப்பார்கள். அது குழந்தைப் பருவம் என்பதால்… ஆனால், வெளியிலிருந்து வரும்போது நம் மனதில்
ஆயிரமாயிரம் எண்ணங்கள் இருக்கும். அவற்றை ஒழித்து, மனதை ஒருமுகப்படுத்துவதற்கே இதனை நாம் வாயிலில் அடிக்கிறோம்.
கோயிலினுள் சென்று பகவானை வணங்கி முடித்து, ப்ரகாரத்தை 3, 7, 9, 12 போன்ற எண்ணிக்கையில் சுற்றி வந்து, பின்னர் அங்கிருக்கும் மண்டபத்தில் பத்து நிமிஷம் அமரச் சொல்வார்கள்….
அதன் காரணம், சுற்றி வந்ததும் மனம் சிறிது ஓய்ந்திருக்கும், அப்போது அங்கே வருவோர் எழுப்புகின்ற இந்த மணியின் ஒலியானது, நம்மை மீண்டும் உற்சாகமாக்கி வேலைகளைத் தொடர வைக்கும் என்பதே.
இது தவிர, நம் அகங்களிலும், தினமும் காலை, மாலை விளக்கேற்றி ஸேவிக்கும் பொழுது,
ஆரத்தி எடுக்கையில் மணி அடிப்போம். இது கையில் பிடித்துக் கொள்ளும் அளவிலும், ஓசையானது நம் க்ருஹம் மற்றும் சுற்றிய சமீப பகுதி வரை கேட்கும் விதத்திலும் அமையப் பெற்றிருக்கும்.
அகத்தினுள் மணி ஓசை எழுப்புவதும் இதே எதிர்மறை விலக்கும் தாத்பர்யம் தான்.
இயந்திரத்தில் இல்லாமல், கையால் பண்ணப்படும் வெண்கல மணியின் ஓசை, வளி மண்டலத்திலுள்ள தீய சக்திகளையும், நேர்மறை சக்திகளை ப்ரபஞ்ச ஆற்றலிலிருந்து இழுப்பது மூலம் அழிக்க வைக்கும்.
இவை வெற்றுக் கதைகள் என நினைப்பவர்களுக்காக, இதோ கீழே அறிவியல் ஆய்வின் லிங்க் தரப் பட்டுள்ளது.
நமது ஸநாதன தர்மம் அழிகிறது என்கிறோம். 1000 பேர் காரணம் என்கிறோம்... எல்லாம் சரி. ஆனால் நமது தர்மம் பற்றி, இதுவரை உண்மை தெரியாவிடினும், யாரேனும் எழுதுகையில் அதையாவது படிக்க வேண்டாமா?
உண்மையில் மன வலியோடுதான் இதனை நான் எழுதுகின்றேன்.
எனது பதிவுகளை, வெறும் லைக்கிற்காக மட்டும் போடுவதென்றால் அதற்கும் ஆயிரம் விஷயம் உள்ளது.
ஆனால், நம் தர்மம் என்னவென உண்மை உணர்த்தும் ஆய்வுகளை தேடி, படித்து, அறிவியல் ஆய்வுகள் கண்டு ஒப்புநோக்கி, உண்மை என்பதை எல்லா தரவுகளின் துணையோடும், எளிமையாகத் தருகிறேன்...
ஆனால் எத்தனை பேர் அதைப் படிக்கிறார்கள் எனவும் பார்க்கிறேன்.... மிகக் குறைவு.
மன்னிக்கவும்... ஒரு சிறு உதாரணம் - நேற்று
🔔கோயில் மணி ஓசை🔔 பற்றிய அறிவியல் தகவல்களை அளித்திருந்தேன். யாராவது, அதுபற்றி ஏதேனும் சந்தேகம் கேட்பார்களா எனப் பார்த்தேன்.... ஏமாற்றம் தான் மிஞ்சியது.😞
இவ்வளவு நாட்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கும், ஆலய நுழைவு பிரேவசத்திற்கும், ஈவேரா உழைத்ததாக ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த #திராவிட கூட்டத்தை தர்மஅடி அடித்திருக்கிறார் பா.ஜ.க அஸ்வத்தாமன் அவர்கள்....
#ராஜாஜி தான் சட்டம் கொண்டு வந்தாரா, உங்க ஈ.வே.ரா எதுவும் கிழிக்கலயா? என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
சீப்பு செந்தில், சுப.வீரபாண்டியன் உட்பட பலரையும் விளக்கம் (டுபாக்கூர் விளக்கம் தான்) சொல்லி அலைய விட்டுவிட்டார்.
இந்து தர்மத்திற்கு எதிராக யாரும் பேசினால் உடனடியாக புகார் அளிப்பார். இப்போது கூட, இந்து பெண்களை பற்றி இழிவாக பேசி, அந்த கருத்து இந்து தர்மத்தில் கூறப்பட்டுள்ளது என்று பொய்யுரைத்த, #திருமாவளவன் என்கிற நபர் மீது காவல்துறையில் புகார் அளித்து, FIR போடச் செய்தவர் அஸ்வத்தாமன்.
தன் வீட்டில் வேலைக்காரி கழுவிய பாத்திரங்களை மஞ்சள் தண்ணீர் தெளித்து எடுப்பதும்,
பால்காரிக்கு வைத்த சொம்பிலிருந்து, ஒரு துணியை வைத்து பாலை மட்டும் வேறு பாத்திரத்தில் மாற்றி, அந்த சொம்பை வெளியில் தனியாக வைத்திருப்பதும்,
வேலைக்காரி வீடு பெருக்கிச் சென்றதும், ஒரு முறை ஈர Mop-ல்
வீட்டைத் துடைப்பதும் கண்ணால் கண்டேன். ஏனென அவரைக் கேட்டால்,
“என்ன ஆனாலும், என்னளவுக்கு சுத்தமா இருப்பாங்களா தெரியாது. அவங்க வீட்டையே சுத்தமா வச்சிருக்க மாட்டாங்க. மாத்திக்கவும் மாட்டாங்க... எனக்கு பிடிக்காதுப்பா இப்படி இருந்தா...” என்கிறார்.