நமது ஸநாதன தர்மம் அழிகிறது என்கிறோம். 1000 பேர் காரணம் என்கிறோம்... எல்லாம் சரி. ஆனால் நமது தர்மம் பற்றி, இதுவரை உண்மை தெரியாவிடினும், யாரேனும் எழுதுகையில் அதையாவது படிக்க வேண்டாமா?
உண்மையில் மன வலியோடுதான் இதனை நான் எழுதுகின்றேன்.
எனது பதிவுகளை, வெறும் லைக்கிற்காக மட்டும் போடுவதென்றால் அதற்கும் ஆயிரம் விஷயம் உள்ளது.
ஆனால், நம் தர்மம் என்னவென உண்மை உணர்த்தும் ஆய்வுகளை தேடி, படித்து, அறிவியல் ஆய்வுகள் கண்டு ஒப்புநோக்கி, உண்மை என்பதை எல்லா தரவுகளின் துணையோடும், எளிமையாகத் தருகிறேன்...
ஆனால் எத்தனை பேர் அதைப் படிக்கிறார்கள் எனவும் பார்க்கிறேன்.... மிகக் குறைவு.
மன்னிக்கவும்... ஒரு சிறு உதாரணம் - நேற்று
🔔கோயில் மணி ஓசை🔔 பற்றிய அறிவியல் தகவல்களை அளித்திருந்தேன். யாராவது, அதுபற்றி ஏதேனும் சந்தேகம் கேட்பார்களா எனப் பார்த்தேன்.... ஏமாற்றம் தான் மிஞ்சியது.😞
அதைப் படித்தவர்கள் மிகக் குறைவு. இதில் எத்தனை பேர் அதில் போட்ட YouTube வீடியோவில் உள்ள அருமையான தகவலைப் பார்த்தார்கள், அறிவியல் நிரூபனச் செய்தியின் லிங்கில் படித்தார்கள்? தெரியவில்லை...
இது குற்றம் சொல்ல அல்ல சகோதரர்களே... நாம் எங்கே தவறு செய்கிறோம் என்பதைச் சுட்டிக் காட்டுவது.
கண்டிப்பாக அதைப் படித்தவர்கள் இனி தன் வீடுகளில் காலை, மாலை மணி 🔔அடித்து ஸேவிக்க வேண்டும் என முடிவு செய்திருப்பர். கண்டிப்பாக வாரம் ஒரு முறையாவது கோயில் செல்லலாமே எனும் எண்ணம் ஏற்பட்டிருக்கும்.
நம் அறிவியலை, மேலை நாட்டினர் வந்து அறிந்து, ஆய்ந்து... இதோ கிருஸ்துவ சர்ச்களில் மணி
வந்துவிட்டது. பின்னர் ஒருவன், மணி என்பதே ஆங்கிலேயன் கண்டுபிடிப்பு என நூல் எழுதுவான். அதைப்படித்து நம் தலைமுறை அவனைக் கொண்டாடி நம்மைத் தூற்றும்....
இந்த தவறினைச் சுட்டுவதும் என் கடமையென நினைக்கிறேன். சொல்லிவிட்டேன்... இனி முடிவு உங்கள் கைகளில்...🙏
இவ்வளவு நாட்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கும், ஆலய நுழைவு பிரேவசத்திற்கும், ஈவேரா உழைத்ததாக ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த #திராவிட கூட்டத்தை தர்மஅடி அடித்திருக்கிறார் பா.ஜ.க அஸ்வத்தாமன் அவர்கள்....
#ராஜாஜி தான் சட்டம் கொண்டு வந்தாரா, உங்க ஈ.வே.ரா எதுவும் கிழிக்கலயா? என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
சீப்பு செந்தில், சுப.வீரபாண்டியன் உட்பட பலரையும் விளக்கம் (டுபாக்கூர் விளக்கம் தான்) சொல்லி அலைய விட்டுவிட்டார்.
இந்து தர்மத்திற்கு எதிராக யாரும் பேசினால் உடனடியாக புகார் அளிப்பார். இப்போது கூட, இந்து பெண்களை பற்றி இழிவாக பேசி, அந்த கருத்து இந்து தர்மத்தில் கூறப்பட்டுள்ளது என்று பொய்யுரைத்த, #திருமாவளவன் என்கிற நபர் மீது காவல்துறையில் புகார் அளித்து, FIR போடச் செய்தவர் அஸ்வத்தாமன்.
தன் வீட்டில் வேலைக்காரி கழுவிய பாத்திரங்களை மஞ்சள் தண்ணீர் தெளித்து எடுப்பதும்,
பால்காரிக்கு வைத்த சொம்பிலிருந்து, ஒரு துணியை வைத்து பாலை மட்டும் வேறு பாத்திரத்தில் மாற்றி, அந்த சொம்பை வெளியில் தனியாக வைத்திருப்பதும்,
வேலைக்காரி வீடு பெருக்கிச் சென்றதும், ஒரு முறை ஈர Mop-ல்
வீட்டைத் துடைப்பதும் கண்ணால் கண்டேன். ஏனென அவரைக் கேட்டால்,
“என்ன ஆனாலும், என்னளவுக்கு சுத்தமா இருப்பாங்களா தெரியாது. அவங்க வீட்டையே சுத்தமா வச்சிருக்க மாட்டாங்க. மாத்திக்கவும் மாட்டாங்க... எனக்கு பிடிக்காதுப்பா இப்படி இருந்தா...” என்கிறார்.