#goofymovies
Door Lock (2018/Korean)
IMDb Rating : 6.4/10
ஹீரோயின் யாரோ தன்னை கண்காணிக்கிறாங்கனு சந்தேகத்தில பல தடவை போலிஸ் புகார் குடுக்கிறாங்க. ஆனா எந்த ஆதாரமும் இல்லன்னு கண்டுக்காமல் விடுறாங்க. அவ இருக்கிற apartmentல அவளுக்கு தெரியாமலே ஒருத்தன் இரவுல அவ கூட தங்கி இருக்கிறான்.
இந்த கதைய எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா?. ஆமாங்க, இது Sleep Tight (2011/Spanish) படத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். 'Sleep Tight'ல கதையை perpetrator இன் கண்ணோட்டத்தில் சொல்லி இருப்பாங்க. 'Door Lock'ல Victim இன் கண்ணோட்டத்தில் சொல்லி இருக்காங்க.
IMDb Rating : 7.2/10
இருந்தாலும் 'Door Lock' படம் , 'Sleep Tight' படத்துல இருந்து கொஞ்சம் வித்தியாசமா எடுத்திருக்காங்க.
'Sleep Tight' பார்த்தவங்களுக்கு 'Door Lock'ல எல்லாத்தையும் guess பண்ணிட முடியும். அப்பிடி நீங்க ST பார்கலனா Door Lockஐ பாருங்க. அட்டகாசமான திரில்லர் திரைப்படம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன் தமிழீழத்திலும் , தமிழ்நாட்டிலும் வாழ்ந்த காலப்பகுதியில் உலகின் பொய்மைகளுக்கும், திமிர் வெறிக்கும், தமிழர் வாழ்வின் கண்ணீருக்கும் போராட்டங்களுக்கும் இடையே நெருப்பினை தழுவி அழுது துடித்து பொங்கி எழுதியவை.
ஒவ்வொரு நறுக்கும் நெருப்பு தெரிக்கிறது, முகத்தில் அறைகிறது, யோசிக்க வைக்கிறது. புத்தகத்தில் இருந்து சில நறுக்குகள், 01. மானம்
#குட்டிக்கதை
நண்பர்களிடையே கல்யாணம் பற்றிய விவாதங்கள் போய்க்கொண்டிருந்தபோது, திடீரென்று ஒருத்தன்
"பிள்ளையாரை விட முருகன் பெரிய ஆளுடா, எப்பிடி ரெண்டு பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்கார் பார்த்தியா?" என்றான்.
இவன் ஒருத்தன் நிதர்சனம் புரியாமல் பேசிட்டு இருக்கான். அடேய் பிள்ளையாருக்கு மாம்பழம் வேணும்னு, அம்மா அப்பாதான் உலகம்னு சுத்தி வந்த அம்மா அப்பா கோண்டுடா. ஆனா முருகன் உலகத்தையே சுத்தி வந்த traveller.
மாம்பழம் கிடைக்கல என்றதும் கோவிச்சுக்கிட்டு பழனில தனிக்குடித்தனம் போயிட்டார்.
பிள்ளையாரிட்ட வீடு இருக்கா?
ஆனா முருகனிட்ட "திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர்,பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை"னு ஆறுபடை வீடு இருக்கு. பிள்ளையாரிட்ட இருக்கிற வாகனம் எலிதான். ஆனா முருகனிட்ட இருக்கிறது மயில். நல்ல மயில்age(mileage) கொடுக்கும்.
இன்று பை (Pi/π) தினம். Pi ஐ கூட யாரவது தமிழ்ப்படுத்தி இருக்கக்கூடும். சிறு வயதில்
Pi(π) = 22/7 என்றும், கொஞ்சம் விளக்கமாக ஒரு வட்டத்தின் பரிதிக்கும் விட்டத்துக்கும் இடைப்படட விகிதம் என்றும் கேள்விப்பட்டிருப்போம்.
தெரிந்தோ தெரியாமலோ இந்த pi(π) நமக்கு கடைசி வரை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து இருக்கும். ஆனால் இந்த Pi(π) கணிதத்தின் ஒரு அழகான காதலி. pi(π) இன்றி அமையாது பாதிக்கணிதம்.
கி.மு. 250ல் இருந்தே இந்த விகிதம் பயன்பாட்டில் இருந்து இருக்கிறது. ஆனாலும் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் ஆக்கிமிடிஸினால் தெளிவாக வரையறுக்கப்பட்டது. இதனால் ஆக்கிமிடிஸின் மாறிலி என Piக்கு பெயர் வந்தது. ஆக்கிமிடிஸ் முதல் ஆரியப்பட்டா வரை Pi இன் பெறுமானத்தை வரையறுத்துக்கொண்டே வந்துள்ளனர்.
#குட்டிக்கதை
ஒரு தடவை காட்டுல வாக்கிங் போயிட்டு இருந்தேன். யாரோ ஒரு பொண்ணும், அவ புருசனும் காட்டுக்குள்ள இருந்தாங்க. வெள்ளை வெளேர்னு இருந்தாங்க. ஆரிய வந்தேறியாத்தான் இருக்கணும். டக்குன்னு பார்த்ததுமே புரிஞ்சிடிச்சு. என்ன கண்டதும் அந்த பொண்ணு புருசன் கிட்ட 'see மான்'னு சொல்லிச்சு.
உடனே துரத்த தொடங்கிட்டான். கையில AK 74ம் இல்லை. ஒரு பையில ஆமை கறி இருதிச்சு. முப்பாட்டன் முருகனை நினைச்சுட்டு எடுத்தேன் பாருங்க ஓட்டம். இங்கதான் நீங்க ஒன்னை புரிஞ்சுகிடனும். புறமுதுகு காட்டி ஓடினான் சீமான்னு யாரும் சொல்ல கூடாதுன்னு reverseலயே ஓடினேன்.
அந்த புருசனுக்கு பொண்டாட்டியும் யாருன்னு தம்பிங்க கிட்ட கேட்டப்போ ராமனும் சீதையும்னு சொன்னாங்க. உடனே ஸ்ரீலங்கால இருக்கிற எங்க பாட்டன் இராவணனுக்கு போனை போட்டேன். அவர் வச்சிருந்த விமானத்துல வந்தாரு. தமிழன் புத்திசாலித்தனத்தை பாருங்க.
1)அபிதாம சிந்தாமணி – சிங்காரவேலு முதலியார் 2) மகாபாரதம் – கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள் 3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு 4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் 5) கம்பராமாயணம்– மர்ரே ராஜம் பதிப்பு 6) திருக்குறள் – மூலமும் உரையும்
7) திருஅருட்பா – மூலமும் உரையும் 8) சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு 9) மணிமேகலை – மூலமும் உரையும் 10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள் 11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள் 12) தமிழக வரலாறு – தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்
1) விஷ்ணுபுரம் – ஜெயமோகன் 2) பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன். 3) புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம். 4) ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி 5) மோகமுள் – தி.ஜானகிராமன். 6) பொய்த்தேவு – க.நா.சுப்ரமணியம்.
7) ஜெ.ஜெ. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி 8) தலைமுறைகள் – நீல பத்மநாபன் 9) கிருஷ்ணப் பருந்து – ஆ.மாதவன் 10) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
சிறந்த தமிழ் நாவல்கள்
1.) பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2.) கமலாம்பாள் சரித்திரம் — ராஜம் அய்யர்.