முன்னொரு காலத்துல பாம்பெயிங்கிற(Pompeii) நகரம் இருந்ததாகவும் அது வெசுவியஸ் அப்படிங்கிற எரிமலை வெடிப்புல அழிஞ்சதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க.அதைப்பற்றி தான் இந்த த்ரெட் ல தெரிஞ்சிக்க போறோம்..
வரலாறு பாடப் புத்தகத்தில் நாம் மொகஞ்சதாரோ அல்லது சிந்து சமவெளி நாகரிகம் பற்றி படித்திருப்போம். இந்நகரம் மண்ணில் புதையுண்டு அழிந்து போன ஒரு நகர நாகரிகம் என்பது நாம் அறிந்ததே.... ஏறத்தாழ இதேபோன்றுதான் பாம்பெயி நகரமும் வரலாற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்துபோய் அழிந்துபோனது..
அப்பொழுதைய ரோம் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட நகரம் தான் பொம்பெயி... தற்போதைய இத்தாலி நாட்டின் கட்டுப்பாட்டில் காட்சி தளமாக உள்ளது பாம்பெயி.......
இத்தாலியில் உள்ள நேப்பிள்ஸ் வளைகுடா கடற்கரையின் அருகில் ஒரு மிகப்பெரிய மலை உள்ளது.....அது ஒரு சாதாரண மலை அல்ல பல ஆபத்துக்களை நிகழ்த்திய எரிமலை.....அந்த எரிமலையின் பெயர் வெசுவியஸ் மலை(Mount Vesuvius)...
2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வெசுவியஸ் எரிமலையை ஒட்டி பல நகரங்கள் இருந்துள்ளது....அதில் குறிப்பிடத்தக்க பெருநகரங்களாக பாம்பொயி (Pompeii) நகரமும், ஹெர்குலேனியம்(Herculaneum) நகரமும் ஆகும்....இங்கே பல நகரங்கள் உருவானதற்கு முக்கிய காரணம் நேப்பிள்ஸ் (Naples) கடற்கரையே....
ஆதலால் இக்கடற்கரையை ஒட்டி அப்போதைய கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கையை பற்றி சரியாக தெரியவில்லை.. இருப்பினும் பாம்பெயி நகரில் மட்டும் ஏறத்தாழ 25000 பேர் வாழ்ந்திருப்பார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்....இந்த நேப்பிள்ஸ் கடற்கரையை ஒட்டி
நகரத்தார்கள் உணவகம், கலைநிகழ்ச்சி கூடம்,துறைமுகம், விளையாட்டு அரங்கம், பொதுக்கழிப்பிடம் என்று கட்டட அமைப்பிலும், நாகரிக வளர்ச்சியிலும் செல்வ செழிப்பாக புகழ்பெற்றிருந்தார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தங்களது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறாக எப்பவும் பரப்பரப்பாக இருந்து கொண்டிருந்த நேப்பிள்ஸ் கடற்கரையை ஒட்டி வாழ்ந்த நகர வாசிகள்...
"ஹான் நாங்க பாக்காத புகையா" என்று
அந்த கடற்கரையை ஒட்டியுள்ள வெசுவியஸ் எரிமலையால் ஏற்படும் ஆபத்தை உணரவில்லை.....
..ஏனெனில் வெசுவியஸ் எரிமலை அப்பொழுதைய காலகட்டத்தில் அதாவது கி.மு 79 க்கு முன்பு 40க்கும் மேற்பட்ட முறை அவ்வப்போது புகையை கக்கிய வண்ணம் இருந்தது..... இந்த எரிமலையை ஒட்டி வசிக்கின்ற மக்கள் இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாததற்கு முக்கிய காரணம்....அறிவியல் வளராத காலகட்டம்
என்பதால் அந்த எரிமலையை கடவுளுக்கு நிகராக அம்மக்கள் நினைத்தனர்..
கடைசியில் தான் தெரிந்தது அந்த எரிமலை கடவுள் அல்ல தங்களின் உயிரை பறிக்க வந்த எமன் என்று.......
கி.மு 79 ஆம் ஆண்டு ஒரு நாள் வழக்கம் போல் பொம்பெயி மக்களுக்கு அன்றைய விடியல் விடிந்தது....., ஆனால் அந்த விடியல் தான் இவர்களுக்கு கடைசி விடியலும் கூட காலை 8 மணி இருக்கும் பெரும் சப்தத்துடன் வெசுவியஸ் எரிமலை புகையை கக்கியது...
அந்த எரிமலையை ஒட்டி உள்ள மக்களின் அலட்சியப்போக்கால் இது "ஏதோ கடவுளின் திருவிளையாடல்" என்று நினைத்து கொண்டு தங்களது பணிகளை வழக்கம் போல் தொடர்ந்த வண்ணம் இருந்தனர். பறவைகள் அனைத்தும் வானில் வட்டமிட்டு எச்சரிக்கை விடுகின்றது....
நண்பகல் 1 மணி இருக்கும்...கொஞ்சமாக வந்த புகை பெரும் சப்தத்துடன் கரும் புகையாக மாறி அதிக அளவில் வெளியேறுகிறது..... தற்போது மக்களுக்கு பயம் ஏற்பட்டு பரப்பரப்புடன் தப்பிக்க முற்படுகின்றனர்....கொஞ்சம் கொஞ்சமாக புகை ஏரிமலையை ஒட்டியுள்ள பாம்பெயி
போன்ற நகரங்களுக்கு பரவவும் செய்தது.... எரிமலை வெடித்து நெருப்பு பிழம்புடன், எரி கற்களையும் மழையாக வாரி இறைக்கின்றது..... தப்பிக்க நினைத்த மக்கள் எரிமலையில் இருந்து வெளியிடப்பட்ட CO2 கலந்த புகையால் ஆங்காங்கே முடங்குகின்றனர்.
நண்பகல் 3 மணி இருக்கும்... தற்போது அந்த நகரம் முழுவதும்
அழுகுரலும், கூச்சலுமாக இருக்கிறது....
எல்லா இடமும் எரிகற்கலும், புகையும், சாம்பலுமாய் காட்சி அளிக்கிறது. CO2 வாயுவால் மக்கள் சுவாசிக்கவே சிரமப்படுகின்றனர்.... எரிமலை சீற்றம் அதிகரித்து அங்குள்ள மக்கள் ஒவ்வொருவராக இறக்கவும் செய்கின்றனர். எரிகற்கலால் அங்குள்ள மாடமாளிகைகள்
அனைத்தும் தரைமட்டமாகிறது....
மாலை 5 மணி இருக்கும்....ஒட்டு மொத்த பொம்பெயி நகரமும், எரிமலை சீற்றத்தால் நரகமாக காட்சியளிக்கிறது....நகரவாசிகள் அனைவரும் இறக்கின்றனர்....அந்த இரவு விடிவதற்குள் ஒட்டுமொத்த பாெம்பெயி நகரமும் எரிமலை சாம்பலால் மூடப்படுகிறது...
இந்த எரிமலை சீற்றத்தால் பொம்பெயி நகரத்துடன், ஹெர்குலேனியம், ஒப்லொன்டிஸ் போன்ற நகரங்களும் எரிமலை சாம்பலால் மூழ்கடிக்கப்பட்டது.. இம்மக்கள் கப்பல் மூலம் தப்பிக்க வழி இருந்தும் தப்பிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் பலத்த காற்றின் காரணமாக CO2 கலந்த எரிமலை புகை விரைவில் அங்கு பரவி
இவர்களை நகர முடியாமல் செய்துவிட்டது........
சில நூறு ஆண்டுகள் ஓடியது....எரிமலை சாம்பலினால் எரிமலையை ஒட்டியுள்ள நிலப்பரப்பு வளமிக்க மண்ணாக மாறி செடி, கொடி, மரங்கள் வளர்ந்து "பச்சைப்பசெல்" என்று காட்சியளித்ததால் வெசுவியஸ் எரிமலை ஏற்படுத்திய அழிவை காலப்போக்கில் மக்களும் மறந்தனர்...
அது மட்டும் இல்லாமல் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டும் அங்கு மக்கள் இன்னமும் பெரும் அளவில் வாழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றனர்.
இவ்வாறாக மண்ணுக்குள் உறங்கி கொண்டிருந்த பொம்பெயி நகரமானது கி.பி 1748 இல் புதைப்பொருட்கள் தோண்டும் குழுவால் புதையலுக்காக பாம்பெயி அமைந்த பகுதியில்
தோண்டுகின்றனர்....ஆனால் புதையலுக்கு பதிலாக சாம்பலால் மூடப்பட்ட எலும்பு கூடுகள்தான் கிடைக்கிறது.....இதனால் அந்நாட்டு அரசானது தொல்லியல் ஆய்வுக்கு அந்த இடத்தை உட்படுத்துகின்றனர்.
பல தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர். முதலில் கட்டடங்களும், பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது...
, பல ஆண்டுக்கு பின்புதான் இந்த மனித எலும்பு கூடுகள் பலவற்றை கண்டுபிடித்தனர்..இந்த எரிமலை விபத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் 20000த்திற்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்..ஆனால் இதுவரை 1500க்கும் அதிகமான எலும்பு கூடுகள் மட்டும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
1800 ஆண்டுகள் ஆகியும் இந்த எலும்புக் கூடுகள் எரிமலை சாம்பலினால் போர்த்தப்பட்டு பாதுகாப்பாக இருந்துள்ளதுதான் ஆச்சரியம்...அந்த சாம்பலின் வெப்பத்தாலும், சாம்பலில் உள்ள உப்புக்களாலும் இவை மம்மிக்கள் போன்று பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது..... இருப்பினும்
பல மனித எலும்பு கூடுகள் சிதைவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
இன்னொரு தகவல் பாம்பெயி மக்கள் கல்லாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்...அது எப்படி கல்லாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்கிறீர்களா.....
வரலாற்று ஆய்வாளர்கள் எரிமலை சாம்பலில் புதையுண்ட பாம்பெயி நகரை
அகழ்வாராய்ச்சி செய்த போது..., எரிமலை சாம்பலினால் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்ட மம்மிக்கள் போன்ற மனித எலும்பு கூடுகளை கையாளும் போது சேதம் ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு பாரிஸ் சாந்துவை(plaster of paris) கரைத்து அந்த மனித எலும்புக் கூடுகள் மீது பூசி மாேல்டிங் செய்து விட்டனர்......
மேலும் இது பாம்பெயி நகர மக்கள் தங்களது கடைசிநேர உயிர் போராட்டத்தை விளக்கவும் வழிவகுக்கும். ஆதலால் தொல்லியல் ஆய்வாளர்கள் பாரிஸ் சாந்துவை தங்களது ஆய்வுக்கு ஒரு காரணியாக பயன்படுத்தியுள்ளனர்.
பொம்பெயி மக்கள் இறக்கும் போது அடைந்த வலியையும், வேதனையையும் பாரிஸ் சாந்து சேர்மத்தை
பயன்படுத்தி மோல்டிங் செய்து ஆய்வாளர்களால் காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது கல் நெஞ்சத்தையும் உருக வைத்துவிடும்.
270 ஆண்டுகளாக இத்தாலியில் தொடரும் இந்த தொல்லியல் ஆய்வானது இன்றும் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் கூட பாம்பெயி நகரில் துரித உணவகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
இன்று வரையில் கலை அரங்கம், விளையாட்டு கூடம், உணவு விடுதி, நூலகம், கோவில்கள், டைல்ஸ் பதிக்கப்பட்ட மாட மாளிகைகள், கண்கவர் ஓவியங்கள், சிற்பங்கள், பாண்டங்கள் என ஆய்வாளர்கள் பாம்பெயி நகரில் புதைபொருட்களை கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர்.... ரோம பேரரசு செல்வ செழிப்பாக வாழ்ந்தனர்
என்பதற்கு இவை எல்லாம் அடையாளங்களாக காட்சியும் படுத்தியுள்ளது இத்தாலிய அரசு.
உலக நாடுகள் பல இந்த ஆய்விற்காக ஆதரவு கரம் நீட்டியுள்ளது. UNESCO-வும் இந்த பாம்பெயி நகரை உலக பாரம்பரிய களமாக அறிவித்து பெருமை சேர்த்துள்ளது......
நம்மால் அங்கே போய் பாக்க முடியவில்லை என்றாலும் கூட...
அண்ணன் @MaheshwaraJothi அவர் அந்த பாம்பெயி நகரத்தின் மீதியை பதிவு செய்து உன்குழாயில் பதிவெற்றி உள்ளார்...
பாருங்கள்
இதே காலகட்டத்தில் நடப்பது போல ஒரு படமும் வெளியானது...
இதனை பார்த்தாலும் பாம்பெயின் கடைசி நாள் எப்படி இருந்திருக்கும் என ஓரளவு அறிந்து கொள்ளலாம்
19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் டார்வின் என்ற இயற்கையியல் அறிஞர் குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானான் என்ற சித்தாந்தத்தை வெளியிட்டார். சிலவகை குரங்குகள் படிப்படியாக பரிணாமவளர்ச்சி அடைந்து மனித உருவை எட்டின என்றும்
அப்படித் தோன்றிய முதல் மனிதன் ஆப்பிரிக்காவில்தான் உருவானான் என்ற கருத்தை வெளியிட்டார்.( எல்லா குரங்குகளும் ஏன் மனிதர்களாக மாறவில்லை என்றெல்லாம் கேட்காதீர்கள். Theory of Natural Selection என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. அதன்படி சிலவகை குரங்குகளே காலப்போக்கில் பல தலைமுறைகளுக்குப்
பிறகு மனிதர்களாயின.)
மனித இனத்திற்கு Homo Sapiens என்று கார்ல் லின்னியஸ் (Carl Linnoes) என்ற ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஏற்கனவே பெயரிட்டிருந்தார். தாவர, விலங்கின, மனித இனத்தை வகைப்படுத்த அவர் பல பெயர்களைப் பயன்படுத்தினார். மனிதன் என்ற இனத்திற்கு ( Species ) அவர் Homo Sapien என்று
ஒரு இடத்தில் நிகழும் சிறிய நிகழ்வு, உலகில் வேறு இடத்தில் நிகழக்கூடிய நிகழ்வுகளை மாற்றக் கூடியது. இதை விளக்கும் theory தான் பட்டாம்பூச்சி விளைவு (Butterfly Effect).
Butterfly Effect: "வண்ணாத்துப்பூச்சி சிறகடிக்கும் போது வரும் காற்று உலகின் வேறு பகுதியில் பேரலை உருவாக்கும்."
எடுத்துக்காட்டாக சின்ராசு life அ பாப்போம்
சிறுவயதில் இருந்தே தந்தையின் தவறான புரிதலாலும் ,கோவத்தாலும் குடும்பத்தில் இருந்து தனிமை படுத்தப்பட்ட சின்ராசு,
விதியின் விளையாட்டால்,பெற்றோர்களை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொள்கிறான்.
இதனால் மேலும் கோவம் அடைந்த சின்ராசுவின் தந்தை ,
"பெத்தவங்க பேச்ச கேக்காத இவன் ஒரு உதவாக்கரை,அவனை நம்பி வந்த அவ ஒரு உதவாக்கரை,ரெண்டு உதவாக்கரையும் சேர்ந்து உருப்படாம தான் போக போகுது "
ஜப்பான் நாட்டை சேர்ந்த pseudo scientist மாசறு எமோட்டோ(Masaru Emoto) என்பவர் ,நம் எண்ணங்களுக்கு அதிக சக்தி இருக்குறது என்றும் ,நம் எண்ணங்களின் மூலமா நமக்கு ஏற்படும் உணர்வு மற்றும் நாம் பேசும் வார்த்தைகள் தான் நம் வாழ்வை
வடிவமைக்கிறது என உறுதியாக இருந்தார். இதை நிரூபிக்க அவர் எடுத்துக்கொண்ட கருவி
"நீர் "
நீர் இன்றி அமையாது உலகு ,நம் பூமி 70 சதவிகிதம் தண்ணீரால் சூழப்பட்டது .
நீர் இன்றி அமையாது உடல்,நம் உடலும் 60 சதவிகிதம் தண்ணீரால் உண்டானதே .
நீருக்கு நாம் நினைப்பதை விட சக்தி அதிகம் .
சரி ,கமிங் பேக் டு டாபிக், எமோட்டோ தண்ணீரை அடிப்படையாய் வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டார்.
இரண்டு கண்ணாடி நீர் குடுவையில் அன்பு(Love) ,நன்றி(Thank you) போன்ற நேர்மறை வார்த்தைககளை குடுவையின் உட்புறத்தில் ஒட்டி ,
மத நம்பிக்கையால் வரலாற்றில் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட இம்மூன்று அறிவியலாளர்களுக்கும் இழைக்கப்பட்ட துரோகங்கள் அன்றைய காலகட்ட மக்கள் செய்த மிகப்பெரிய வரலாற்று பிழை என்றே சொல்லலாம்.
இவர்களின் மூவரின் அறிவியல் கருத்தையும் அன்றய மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் பல நூற்றாண்டுகள் கழித்தே ஏற்றுக்காெண்டனர். மேலும் இம்மூவரையும் தவறாக புரிந்து கொண்டு அவர்களை சித்திரவதையும் செய்தனர்.
சுமார் கி.பி 1500, 1600 காலகட்டங்களில் ஐரோப்பிய கண்டம் முழுவதும் கிறிஸ்துவ கதாேலிக திருச்சபையின் ஆதிக்கத்தின் பிடியில் பல நூற்றாண்டுகளாய் இருந்தது.
மனித குலத்திற்கு பகுத்தறிவு அளித்து அறிவு புரட்சி செய்த பல மகத்தான விஞ்ஞானிகள் ஒடுக்கப்பட்ட காலம் அது.