கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள வீடுகளில் பலரும் பின்பற்றி வரும் மூலிகை மருத்துவத்தில் ஆவி பிடித்தலும் ஒன்று.
ஆவி பிடிப்பதால் சுவாசப்பாதை சீராகும். மூச்சுவிட இலகுவாக இருக்கும்.
சளி அடைப்பு போகும் என்று கூறப்படுகிறது.
Continue>>>>>
ஆனால் மருத்துவர்கள் ஆவி பிடிப்பதால் எந்த பலனும் இல்லை வைரஸ் அழியாது என்று கூறுகின்றனர்.
இருப்பினும் மக்கள் தங்கள் வீடுகளில் ஆவி பிடித்து வருகின்றனர்.
ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் ஆவிப்பிடிப்பது சிறந்த மருத்துவமாக பார்க்கப்படுகிறது.
பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் வீட்டு மருத்துவத்தில் ஆவி பிடித்தல் இன்றளவும் பின்பற்றப்படுகிறது.
இந்த ஆவி பிடித்தலில் பயன்படுத்தப்படும் மூலிகையில் முதன்மையானது நொச்சி இலை.
இந்த நொச்சி இலையில் இருக்கும் அற்புதமான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை.
ஏர் பூட்டும் முதல் உழவின்போது, நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து கழுத்தில் சூடிக்கொள்வார்களாம் நம் முன்னோர்கள்.
போரின்போது எதிரியின் முற்றுகையைத் தகர்த்தெறிந்த பிறகு, வீரர்கள் சூடிக்கொண்டது நொச்சி மலரைத்தான்.
அதன் பயன்பாடு கிராமங்களைத் தாண்டி இன்னும் அதிகரிக்கவில்லை.
இதனால் சென்னையில் சில இடங்களில் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது.
நீர் நிலைகளில் காணப்படும் நீர்நொச்சி, ஐந்து இலை கொண்ட நொச்சி, கருநிற இலைகள் கொண்ட நொச்சி என மூன்று வகைகளில் காணப்படுகிறது.
இந்த நொச்சி இலையின் தாவரவையல் பெயர் Vitex negundo என்று அழைக்கப்படுகிறது.
இந்த கருநொச்சிதான் அதிக மருத்துவப் பலன் கொண்டது ஆனால் இது காட்டுப்பகுதி, மலைப்பகுதிகளில் மட்டுமே அரிதாக கிடைக்கும்.
நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச்சுவைகள் கொண்டது. வெப்பத்தன்மையானது.
நொச்சி சிறு மரமாகவோ அல்லது குறுஞ்செடியாகவோ காணப்படும்.
நொச்சி மலர்கள் கொத்தாக நுனியில் அல்லது இலைக் கோணத்தில் அமைந்தவை. கருஞ்சிவப்பு அல்லது செங்கருநீலமானவை.
இந்திர சூரியம், நித்தில், நிர்க்குண்டி, சிந்துவாரம் ஆகிய பெயர்களும் நொச்சிக்கு உண்டு.
நொச்சி இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன்கள் கொண்டவை.
இந்த நொச்சி இலைகளில் ஒவித நறுமண வாசனை இருக்கிறது.
அவைதான் சுவாசப்பாதையை சீராக்கி நன்மை அளிக்கிறது. கடுமையான நெஞ்சு சளி, இருமல் இருப்பவர்களுக்கு கொதிக்க வைத்த தண்ணீரில் நொச்சி இலை சேர்த்து ஆவி பிடிக்க சொல்கின்றனர்.
இதனுடன் கற்பூரவல்லி அல்லது துளசி சேர்த்து ஆவி பிடிக்கலாம்.
நொச்சி இலை போட்டு கொதிக்க வைத்த நீரை குளிக்க பயன்படுத்தினாலும் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.
தீராத தலைவலியால் அவதிப்படுகிறீர்கள் எனில் நொச்சியின் காய்ந்த இலைகளை முகைமூட்டி அந்த புகையை சுவாசிக்க தலைவலி தீரும்.
ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள் இதை தவிர்க்கவும்.
நொச்சி இலையைக் கசக்கி தலையில் கட்டினால் தலைப்பாரம் குறையும்.
நொச்சி இலை, உடல் அசதியைத் தணிக்கும் சிறுநீரைப் பெருக்கும் காய்ச்சலைப் போக்கும் ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும் மாதவிலக்கை தூண்டும் வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்.
ஒரு தேக்கரண்டி நொச்சி இலைச் சாற்றில் 1 கிராம் மிளகுத் தூள் சிறிதளவு நெய் சேர்த்து, காலை, மாலை வேளைகளில் சாப்பிட மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும்.
உணவுக் கட்டுப்பாடு அவசியம் மேலும் நொச்சி, உத்தாமணி இலைகளை வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றடம் கொடுக்க வேண்டும்.
கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும் மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
நொச்சி இலைகளை தலையணையாகச் செய்து உபயோகிக்க, காய்ச்சல், தலைவலி, குணமாகும்.
உடலில் ஏதேனும் கட்டி, வீக்கம் இருப்பின் நொச்சி இலைகளை வதக்கி வீக்கங்களுக்கும் கட்டிகளுக்கும் கட்ட அவை கரைந்து போகும்.
இன்றைக்கும் கிராமங்களில் இந்த வழக்கம் இருந்துதான் வருகிறது.
ஏனெனில் நொச்சி பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து வலி, வீக்கத்தை குறைக்கிறது இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
காயங்கள் இருந்தால் நொச்சி இலை சாறை எடுத்து நல்லெண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து அதை பாட்டிலில் சேமித்துக்கொண்டு தினமும் தேய்த்துவர புண் ஆறிவிடும்
பொதுவாக நொச்சி இலைச் சாற்றைக் கொண்டு புண்களை கழுவி மருந்திடலாம்.
நொச்சி இலைகளை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி அந்த நீரில் குளிக்க பிரசவித்தவர்களின் அசதி குறையும்.
நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, குப்பைமேனி, ஆடாதோடை, நாயுருவி ஆகியவற்றை வகைக்கு ஒரு பிடி எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பொறுக்கும் சூட்டில் வேது பிடிக்க வாதநோய்கள், தலைவலி போன்றவை குணமாகும். கொதித்த நீரைத் துணியில் நனைத்து ஒற்றமிடலாம்.
கொசுவை விரட்ட காய்ந்த அல்லது பச்சையாக உள்ள நொச்சி, வேப்பிலை இலைகளை தீயில் எரித்து, புகைமூட்டம் போட்டு வந்தால் கொசுக்கள் விலகும்.
படுக்கை அறையில் வெறுமனே நொச்சி இலைகளை வைத்தாலும் கொசுக்கள் நெருங்காது.
மலைச்சரிவுகளில் மண் அரிப்பைத் தடுக்க நொச்சியை நெருக்கமாக வளர்க்கலாம்.
ஆறுகள், நீரோடைகள் போன்றவற்றின் கரைகளிலும் இவற்றை நட்டு வைக்கலாம். இதனால் கரைகளுக்கு வலு சேர்க்கும்; வெள்ளம் ஏற்படும்போது கரைகள் உடையாமல் காக்கும்.
நீர்ச் செழிப்புள்ள இடங்களில் வளரக்கூடிய நொச்சி காற்றைத் தடுக்கும் தன்மை படைத்தது. வீடுகளின் முகப்பில் நடுவதால் தூசியை வடிகட்டும்.
இந்த மூலிகைச் செடியை ஆடு, மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் நெருங்காது.
நொச்சி இலையின் மணம் காரணமாகச் சில பூச்சிகள் இதனை நெருங்குவதில்லை.
ஆதலால் தானியப் பாதுகாப்பில் நொச்சி இலை பயன்படுகிறது.
உங்கள் வீட்டிலும் நொச்சி வளர்க்க நினைத்தால் ஒரு கிளையை வெட்டி வைத்தால் கூட நன்றாக வளரும்.
இதனை வீட்டில் வளர்ப்பதால் பல்வேறு சிகிச்சைகளை செய்வதற்கு உதவியாக இருக்கும். நொச்சியினை நாம் வீட்டு தோட்டங்களிலும், மாடி தோட்டங்களிலும் வளர்க்க வேண்டியது அவசியம்.
நீதிமன்றங்களில் யாரை பெயர் சொல்லி அழைக்கிறார்களோ அவர்கள்தான் உள்ளே போவார்கள் ஆனால் அன்று வாய்தாவுக்கு வந்திருந்த அனைவருமே கும்பலாக நீதிமன்றத்திற்குள் குழுமியிருந்தார்கள்
நானும் வாய்தாவுக்கு ஆஜராக போயிருந்தேன் உள்ளே கூட்டத்தோடு கூட்டமாக எட்டிப்பார்த்தேன்.
இது சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்
அதாவது மதுரையில் ஒரு பெண்ணை ஒரு இளைஞன் கேலி பண்ணுகிறான்
அந்தப் பெண்ணின் அக்காள் புருஷன் அந்தப் பையனை கண்டிக்கிறார்,
பையனின் மனசில் வன்மம் குடியேறி பழிவாங்கும் வெறியாக மாறுகிறது கண்டித்தவரின் இரண்டு வயசு பெண் குழந்தையை கடத்துகிறான்.
மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு குழந்தையுடன் வந்து ஊர் சுற்றுகிறான்.
குழந்தை அழத் தொடங்குகிறது ஒரு பெரிய யானைப் பொம்மையை வாங்கிக் கொடுக்கிறான்.
ஆனாலும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.
நகரத்தை விட்டு தனியே இருக்கும் ஒரு கோயிலுக்குப் போய் சேரும்போது சாயங்காலமாகிவிடுகிறது.
ஜூன் 1 வருடம் 2018.
மூன்று வருடங்களுக்கு முன்பு இதே நாள்...,
தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டது.
குஜராத் மாநிலம் கலிக்கோ அருங்காட்சியகத்திலிருந்த இராஜராஜர் மற்றும் அவரது நம்பிராட்டியார் செப்புத்திருமேனிகள் தஞ்சை பெரியகோவிலை வந்தடைந்தன.
சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செப்புத்திருமேனிகள் தாயகம் வந்தன,
என்ன நடந்தது..?
சுருக்கமாய் இச்சிலைகள் மீட்கப்பட்ட வரலாறு ஐயா மா.மாரிராஜன் பதிவிலிருந்து,
தஞ்சை பெரியகோவிலாம் இராஜராஜேஷ்வரம்'
வெகு சாமானியர் முதல் பலரும் பல நிவந்தங்களை இக்கோவிலுக்கு கொடுத்துள்ளனர்,
எண்ணிலடங்கா செப்புத்திருமேனிகளாக இறை வடிவங்களை செய்து
இக்கோவிலுக்கு சமர்ப்பித்தனர்.
இராஜராஜரின் 29ஆம் ஆட்சியாண்டு (கி.பி 1014)
தஞ்சை பெரியகோவிலின் நிர்வாக அதிகாரியான மூவேந்த வேளானுக்கு ஓர் நோக்கம் தம் அரசனுக்கும் அரசிக்கும் படிமங்கள் எடுக்க வேண்டும் என,
ராமாயணம் என்பது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த கதை மட்டுமல்ல இது ஒரு தத்துவ ஆன்மீக முக்கியத்துவத்தையும் மற்றும் அதில் ஒரு ஆழமான உண்மையையும் கொண்டுள்ளது. ராமாயணத்தை நாமே நமது சொந்த உடலில் உணரலாம்.
இது எத்தனை பெருக்கு தெரியும் ?
‘ரா’ என்றால் ஒளி என்று பொருள். ‘ம’ என்றால் எனக்குள் என் இதயத்தில் என்று பொருள்.
‘ராம’ என்றால் எனக்குள் இருக்கும் ஒளி (ஆத்மா) என்று பொருள்.
ஆத்மா - ராமர்
மனம் - சீதை
மூச்சுக் காற்று - அனுமன்
விழிப்புணர்வு - லட்சுமணன்
அகங்காரம் - ராவணன்
ராமர் தசரதருக்கும் கௌசல்யைக்கும் பிறந்தவர்.
தசரத் என்றால் 10 தேர்கள் என்று பொருள்.
பத்து தேர்கள் என்பது மனிதர்களின் செயல் உறுப்புகளாகிய