SSR Profile picture
1 Jun, 25 tweets, 7 min read
வந்தார் இராஜராஜர்:- (Thread)

ஜூன் 1 வருடம் 2018.
மூன்று வருடங்களுக்கு முன்பு இதே நாள்...,

தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டது.
குஜராத் மாநிலம் கலிக்கோ அருங்காட்சியகத்திலிருந்த இராஜராஜர் மற்றும் அவரது நம்பிராட்டியார் செப்புத்திருமேனிகள் தஞ்சை பெரியகோவிலை வந்தடைந்தன.

#SSRThreads
சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செப்புத்திருமேனிகள் தாயகம் வந்தன,

என்ன நடந்தது..?

சுருக்கமாய் இச்சிலைகள் மீட்கப்பட்ட வரலாறு ஐயா மா.மாரிராஜன் பதிவிலிருந்து,

தஞ்சை பெரியகோவிலாம் இராஜராஜேஷ்வரம்'

வெகு சாமானியர் முதல் பலரும் பல நிவந்தங்களை இக்கோவிலுக்கு கொடுத்துள்ளனர்,
எண்ணிலடங்கா செப்புத்திருமேனிகளாக இறை வடிவங்களை செய்து
இக்கோவிலுக்கு சமர்ப்பித்தனர்.

இராஜராஜரின் 29ஆம் ஆட்சியாண்டு (கி.பி 1014)
தஞ்சை பெரியகோவிலின் நிர்வாக அதிகாரியான மூவேந்த வேளானுக்கு ஓர் நோக்கம் தம் அரசனுக்கும் அரசிக்கும் படிமங்கள் எடுக்க வேண்டும் என,
கல்வெட்டு இவ்வாறு ஆரம்பிக்கிறது,

ஸ்வஸ்திஸ்ரீ உடையார் ஸ்ரீராஜராஜீஸ்வரம் உடையார்க்கு ஸ்ரீகார்யம் செய்கின்ற பொய்கைநாடு கிழவன் ஆதித்யன் சூர்யனான தென்னவன் மூவேந்த
வேளான் ஸ்ரீராஜஜீஸ்வரமுடையார் கோயிலில் யாண்டு இருபத்தொண்பதாவது எழுந்தருளிவித்த செப்பு பிரதிமங்கள்.
இவ்வாறாக குறிப்பிட்டு இராஜராஜருக்கும் லோகமாதேவிக்கும் இரண்டு செப்புப் படிமங்கள் எடுக்கிறார்.

திருமேனிகளின் துல்லிய அளவு, உருவ அமைப்பு, இன்னும் பல விபரங்களை தெளிவாக கல்வெட்டில் காணமுடிகிறது.

நீண்ட காலம் இச்சிலைகள் கோவிலில் இருந்துள்ளது..
1855ல் மராட்டிய வாரிசு காமாட்சிபாய் சாகேப் இறந்தப்பிறகு மராட்டிய அரசுரிமை போட்டி சிக்கல் வழக்கு என்று கடும் குழப்பங்கள் நிறைந்த சூழல்.

இக்காலத்தில் கோவில் உடமைகள் கைமாறின இச்சமயத்தில் இவ்விரண்டு சிலைகளும் தஞ்சையைவிட்டு வெளியேறியிருக்கலாம் என்கிறார்
ஐயா குடவாயில் பாலசுப்ரமணியன்.
சோழமண்டல வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும் ஒரிஜனலைப் போன்று போலியாக ஒரு சிலை செய்து கோவிலில் சேர்த்துள்ளனர்.

1935 ஆம் ஆண்டு தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் வெளியிட்ட Great temple at Tanjore என்னும் நூலில் அந்த போலி சிலையின் சிலையின் புகைப்படம் வெளியானது.
அதன் பீடத்தில் ராஜேந்தரசோழ மகாராஜ என்று 19 ஆம் நூற்றாண்டு எழுத்துப்பொறிப்புடன் எழுத்துக்கள் உள்ளது.

ஒரிஜனல் சிலையை எடுத்துவிட்டு அதேபோன்று வடிவமுடைய போலி ஒன்றை கோவிலில் வைத்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சாராபாய் பவுண்டேசன் நடத்தும் காலிக்கோ மியூசியம் ஒன்றில்,
The royal couple என்ற தலைப்பில் இரண்டு சோழர்கால படிமங்கள் இருப்பதாக தகவல் கசிந்தது.

1963 ம் வருடம் டெல்லி நேஷனல் மியூசியத்தின் இயக்குனர் திரு. சி.சிவமூர்த்தி அவர்கள் தென்னிந்திய செப்புச்சிலைகள் குறித்த எழுதிய நூலில்
சாராபாய் மியூசியத்தில் இருப்பது
இராஜராஜன் மற்றும் லோகமாதேவி சிலைதான் எனத் தெளிவுப்படுத்தினார்.

1983 ம் வருடம் டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் The great tradition india bronze master pieces என்னும் தலைப்பில் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந்நூலில் தமிழக தொல்லியல் இயக்குனர் ஐயா. நாகசாமி அவர்கள்
கலிக்கோ மியூசியத்தில் இருப்பது இராஜராஜனும் லோகமாதேவியும்தான் என உறுதியாக குறிப்பிட்டார்

சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டு வரவேண்டும் என்னும் கோரிக்கை வலுப்பெற்றது சில வருடங்கள் கழித்து கலிக்கோ மியூசியத்திற்கு Catlog எழுதும்போது இச்சிலையை King of kings என குறிப்பிடுகிறார் ஐயா நாகசாமி
ஆகவே அருங்காட்சியகத்தில் இருப்பது இராஜராஜர் திருமேனிதான் என
வரலாற்று ஆய்வாளர்கள் கருத்திட்டனர்.

சிலையின் காலில் வீரக்கழல் உள்ளது இது அரசர்கள் அணியும் மரபு கல்வெட்டில் உள்ள அளவு மற்றும் உருவ அமைப்பு
சிலைகளுடன் ஒத்துப்போகிறது இது இராஜராஜரேதான் என்று பல ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்
2010 ம் வருடம்..

தஞ்சை பெரியகோவில் ஆயிரமாவது
ஆண்டு விழா..

தஞ்சையில் பல சிறப்புநிகழ்வுகள்
அரங்கேறின..

குஜராத்திலிருந்து இச்சிலைகளை மீட்டு
தஞ்சை கொண்டு வரவேண்டும் என்னும் கோரிக்கை வலுப்பெற்றது.

அப்போதய தமிழக முதல்வராக கலைஞர்..
முயற்சிகள் மேற்கொண்டார்.
சிலையை மீட்டு தமிழகம் கொண்டுவர முயற்சிகள் தொடங்கின.

ஆதாரத் தகவல்கள் சேகரிக்கும் பணி தொடங்கியது கல்வெட்டில் காணப்படும் அளவு மற்றும் உருவ அமைப்பு அப்படியே பொருந்துவதாக குடவாயில் பாலசுப்பிரமணியம் உட்பட
பல ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்..

இது போன்ற பல சான்றுகளை சேகரித்துக்கொண்டு,
குஜராத் புறப்பட்டது சிலை மீட்புக்குழு.

அப்போதைய கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் இறையன்பு, குடவாயில் பாலசுப்ரமணியன்,
தொல்லியல் இயக்குனர் இரா.நாகசாமி ஆகியோர் குழுவாக குஜராத் சென்று அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.
அருங்காட்சியகம் சென்று பல சான்றுகளுடன் சிலைகளின் உண்மையை நிருபித்தனர்.

ஆனால் அருங்காட்சியக நிர்வாகமோ
நாகசாமி சொன்னால் சிலைகளை தருவதாக உறுதியளித்தார்களாம்.

ஐயா நாகசாமி அவர்களோ
அது இதுவல்ல என்றார்களாம்.

இது இராஜராஜர்தான் என்று முதலில் கூறிய அவர்.
இப்போது இது இராஜராஜன் சிலை அல்ல .. சண்டிகேசுவரர் என்றாராம்.

ஒட்டுமொத்த ஆய்வாளார்களின் கருத்தும் புறக்கனிப்பட்டு ஒருவரது ஆட்சேபனை ஏற்கப்பட்டது சிலைகளை மீட்கமுடியாமல்
ஏமாற்றத்துடன் தமிழகம் திரும்பியது சிலை மீட்புக்குழு,

காரணம் கையாலாகாத அதிகாரிகளை அனுப்பியது,
எல்லாம் சரியாக நடந்தும் பயன் இல்லாமலே போனது.

கலைஞர் எடுத்த அனைத்து முயற்சிகளும் பலனற்றதாய் ஆயின எண்ணம் அப்படி,,

உண்மையான சிங்கம் என்ட்ரி:-

2018 ம் வருடம் மார்ச் மாதம் சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் ஐயா தஞ்சை வருகிறார் சிலை திருடப்பட்டதை உறுதிப்படுத்துகிறார்.
உடனே Actionனில் இறங்குகிறார்,

வழக்குப் பதிவுசெய்யப்பட்டு முழு வீச்சில் விசாரணை தொடங்கியது

சிலையை விற்றவர் யார்..?
வாங்கியது யார்.?
எப்போ குஜராத் சென்றது என அனைத்து விபரங்களையும் துல்லியமாகச் சேகரித்தார்.

பின்பு ஐயா. பொன். மாணிக்கவேல் இவ்வாறு கூறினார்.
ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளை நேரில் பார்த்தவர்கள்,வயது முதிர்ந்த நிலையில் இப்போதும் தஞ்சாவூரில் இருக்கிறார்கள்.

அந்த சிலைகள் மீட்கப்பட வேண்டும் என்ற உணர்வோடு இருக்கும் அவர்கள், கண்டிப்பாக இந்த வழக்கில் எங்களுக்கு ஒத்துழைப்பார்கள்.
வீல் சேரில் வைத்தாவது அவர்களை சாட்சி சொல்ல நீதிமன்றத்துக்கு அழைத்து வருவோம். குஜராத்தில் உள்ளவை, இராஜராஜன்தான் என்பதை தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி தான் எழுதிய புத்தகத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதுவே வலுவான ஆதாரம். சிலைகளை மீட்டு கண்டிப்பாக தஞ்சாவூர் கொண்டு வருவோம் என்றார்.
சரியாக தொண்ணூறு நாட்கள் கடந்தது..
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், குடவாயில் பாலசுப்பிரமணியன், குழுவினர் குஜராத் சென்றனர்..

இம்முறை சரியான ஆதாரங்களுடன் வலுவான காவல் துறை Teamமுடன் சென்றார் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஐயா.

சரியான சான்றுகளை குடவாயிலார் முன் வைத்தார்.
இச்சிலை உங்களுக்கு எங்கே, எப்போ, எப்படி கிடைத்தது.?

என்ற கேள்விகளை அருங்காட்சியகம் எதிர் கொண்டது வழக்கு விசாரணை என்று தொடர்ந்தால் மேலும் பல சிக்கல்களை சந்திக்க வேண்டிவரும் என்று சிலைகளை தர சம்மதித்தது.

செய்தி வந்தது சிலையை மீட்டார்களாம் தஞ்சையை நோக்கி பயணம்
தொடங்கியதாம் என்று,
மே மாதம் 30 ஆம் தேதி குஜராத்திலிருந்து நவஜீவன் எக்ஸ்பிரஸில் செனனை சென்ட்ரல் நிலையம் வந்தடைந்தது.

இராஜராஜனும் அவரது தேவியரும் தாய் மண்ணைத் தொட்டனர்.

உணர்வு பூர்வமாக வரவேற்றனர் மக்கள்.
வழக்கு சம்பிரதாயங்களை முடித்து,
2018 ஆம் வருடம்....,

ஜூன் 1 ஆம் தேதி தஞ்சை பெரியகோவிலுக்கு தம்பதியார்கள் வந்தனர்.

எப்போதும் பெருவுடையாரை நோக்கியே இருக்குமாறு இராஜராஜர் தம்பதி சகிதமாக.
நிலை கொண்டார்.

தென்னவன் மூவேந்த வேளான் மனம் குளிர்ந்திருக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏
#நோக்கம்சிவமயம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR

SSR Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

31 May
விழிப்புணர்வு திரேட் :-

#திருட்டு_திராவிட கட்சிகள், விசுவாசிகள் தயவு செய்து இந்த திரேட் படிக்க வேண்டாம், கருத்திடவும் வேண்டாம் ஏனெனில் ஆன்மீகம் சார்ந்த பதிவு இது.

திருட்டு திராவிட அரசுகள் நினைத்திருந்தால்
அறநிலையத்துறையையும் மேம்படுத்தி நிறைய மருத்துவமனைகளைக் கட்டியிருக்கலாம்.
ஆனால் தமிழின தலைவர் என சொல்லி கொண்ட கலைஞர் என்ன செய்தார் ?

அறநிலைதுறையை ஏற்படுத்தி கொள்ளைதான் அடித்தர் அந்த விஞ்சான ஊழல்வாதி,

இனி அவர்களை சொல்லி எதுவும் ஆக போவது இல்லை மக்களாகிய நாம் தான் விழிப்படைய வேண்டும்.

நடக்கும் அநியாயத்தை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அறநிலைதுறையில் கீழ் வரும் பழமை வாய்ந்த கோயிலின்
உண்டியலில் பணம் எங்கே ?

ஏன் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்கள் பல அழிந்து போகும் நிலையில் உள்ளன ?

காரணம் என்ன??

எல்லாம் கட்டுமரம் வகுத்த வழியில் ஊழல் செய்வதால்.

ஒரு கணக்கு போடுவோமா ?
Read 22 tweets
30 May
#தினம்_ஒரு_திருமந்திரம் டேக்கில் 5 நாட்களாக பரியங்க யோகம் வந்து கொண்டிருக்கிறது நண்பர்கள் விளக்கமாக கேட்டுக்கொண்டதற்காக தனி திரேட் இது.

நான் திருமந்திரத்தை நித்திக்கிற மாதிரி சில திடீர் சைவர்கள் என்னை போலி சாமியார் ரேஞ்சுக்கு சித்திரிக்க முயற்சிக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி 🙏
சங்கம் அவர்களை காலுக்கு அடியில் தூக்கி போட்டு மதித்து விட்டு திரேட்க்குள் செல்கிறது.

இனிப்பை நாக்கில் வைக்காதவன் சாதாரண துறவி,

இனிப்பை நாக்கில் வைத்தும் உமிழ்நீர் சுரக்கவிடாமல் இனிப்பு சுவையை வென்றவன் மகா துறவி ஏன நாம் புரிந்துகொள்வது தெளிவு

அதாவது திருமூலர் என்ன சொல்லுறார்னா
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

இந்த வான்வெளி பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த இறைவனுடன் சேர்ந்ததால் எல்லையற்ற இன்பம் பெர்றேன் அதை வேதமாக திருமந்திரத்தில் கூறியுள்ளேன்,
Read 30 tweets
29 May
ராமாயணத்தின் தத்துவம்:-

ராமாயணம் என்பது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த கதை மட்டுமல்ல இது ஒரு தத்துவ ஆன்மீக முக்கியத்துவத்தையும் மற்றும் அதில் ஒரு ஆழமான உண்மையையும் கொண்டுள்ளது. ராமாயணத்தை நாமே நமது சொந்த உடலில் உணரலாம்.

இது எத்தனை பெருக்கு தெரியும் ?
‘ரா’ என்றால் ஒளி என்று பொருள். ‘ம’ என்றால் எனக்குள் என் இதயத்தில் என்று பொருள்.
‘ராம’ என்றால் எனக்குள் இருக்கும் ஒளி (ஆத்மா) என்று பொருள்.

ஆத்மா - ராமர்
மனம் - சீதை
மூச்சுக் காற்று - அனுமன்
விழிப்புணர்வு - லட்சுமணன்
அகங்காரம் - ராவணன்
ராமர் தசரதருக்கும் கௌசல்யைக்கும் பிறந்தவர்.

தசரத் என்றால் 10 தேர்கள் என்று பொருள்.

பத்து தேர்கள் என்பது மனிதர்களின் செயல் உறுப்புகளாகிய

வாய் (பேசுதல்)
கைகள் (செயல்)
கால்கள் (போக்குவரவு)
எருவாய் (கழிவுகளை நீக்குதல்)
கருவாய் (இன்பமும் பிறப்பும்)
Read 7 tweets
28 May
நான் ஒரு சாப்பாட்டு பிரியர்னு இங்க நிறையபேருக்கு தெரிய வாய்ப்பில்லை அசைவம்னா விரும்பி சாப்பிடுவேன்

இப்போ 2வருடமா சாப்பிட முடியல இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள் உணவை சாப்பிட ஆசை

என்னை போல எதனை பேரு ஆசைப்படுறீங்க எந்த மாநிலத்தின் உணவுனு Quote பண்ணி சொல்லுங்க
😋😋😋😋😋😋😋😋😋 Image
😋😋😋😋😋 Image
Read 30 tweets
28 Dec 20
போன வாரம் ஆபிஸ்ல செம வேலை நேத்து நைட் அடிச்சு புடிச்சு வேலூர் வந்து சேர்ந்துட்டேன்.

ஆபிஸில் நிறைய பேர் கொத்தடிமைங்க தான்

நான் #தலைவர்_வெறியன்_SSR னு தெரியும் அதனால எவனும் நம்ம கிட்ட வச்சுக்க மாட்டானுவ ஆனா #திருட்டு_திமுக டேமேஜ் பண்ணுறது தான் என் வேலை.

#SSRThreads
அப்படி ஒரு உபி கிட்ட பேசும்போது பெரிய வாக்குவாதம் ஆயிடுச்சு அதை அப்படியே உங்ககிட்ட பகிர்கிறேன்,

உபி :- கருணாநிதி இல்லனா நான் BE படிச்சிருக்க முடியாது இப்போ IT ல வேலை செய்திருக்க முடியாது, நல்ல சம்பாதிச்சு வசதியா வாழ முடியாது இது எல்லாத்துக்கும் காரணம் தமிழின தலைவர் தான்.
நான் :- த்தா டேய் நான்கூட தான் டா BE, MBA வேற எஸ்ட்ரா படிச்சிருக்கேன்.

என் அப்பா என்ன படிக்கவச்சாரு இப்ப நான் சம்பாதிச்சு என் அப்பா அம்மாவை நல்லா பாத்துக்குறேன் இதுல 3 பொண்டாட்டி காரன் எங்கடா வந்தான் நடுவுல,

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு மாதிரி ஊழல் செஞ்சவன் டா கருணாநிதி.
Read 19 tweets
26 Dec 20
பாபா படம் எதிர்பாராத வெற்றி அடையாத போது

"ரஜினி இனி அவ்ளோ தான்"

சந்திரமுகி மூலம் செருப்படி வாங்கினானுங்க

#SuperStarRajinikanth
#SSRThreads ImageImage
உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற போது

''ரஜினி இனி அவ்ளோ தான்''

கோச்சடையான் கபாலி என செருப்படி வாங்கினானுங்க. ImageImageImageImage
காலா, கபாலி போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்ததால் ரஜினி இனி வயதான வேடத்திற்கே லாயக்கு

''ரஜினி இனி அவ்ளோ தான்''

பேட்ட என்னும் மரண மாஸ் காட்டி மரண அடி கொடுத்தார்

அதையும் வெட்கமே இல்லாம வாங்கி கட்டிகிட்டானுங்க. ImageImageImageImage
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(