#அஷ்டலக்ஷ்மிகோவில்
தென்னிந்தியாவில், தமிழக கடற்கரையில் குடிகொண்டுள்ள ஒரே மஹாலக்ஷ்மி ஆலயம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலக்ஷ்மி ஆலயம். இந்த அபூர்வ ஆலயம் நமக்கு கிடைக்க முக்கிய காரணம் #மஹாபெரியவா. இந்தக் கோவிலுக்கு ஓங்கார க்ஷேத்ரம் என்று பெயர். இது போல் அஷ்டாங்க விமான கோவில்
திருக்கோஷ்டியூரில் உள்ளது. மற்ற இடங்கள், மதுரை கூடலழகர் கோவில், காஞ்சியில் திருத்தாங்கல் வைகுண்டநாதர் ஆலயம், உத்திரமேரூர் நின்றான், இருந்தான் கிடந்தான் ஆலயம் ஆகியவை. அஷ்டலக்ஷ்மி ஆலயம் மூன்றடுக்கு மாடி. இங்கும் மஹா விஷ்ணு நின்றான், இருந்தான் கிடந்தானாக அருள் பாலிக்கிறார். மூலவர்
சந்நிதியில் மஹாவிஷ்ணு, மஹா லக்ஷ்மி இருவரும் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்கள். ஆலயம் 65 அடி நீளம், 45 அடி அகலம் . உத்திரமேரூர் சுந்தரராஜ பெருமாள் ஆலய அமைப்பு. மூன்று அடுக்குகளில் விஜயலக்ஷ்மி, வித்யாலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, தனலக்ஷ்மி, ஆதிலக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, தைர்ய லக்ஷ்மி
மற்றும் விஷ்ணுவின் தசாவதாரம், குருவாயூரப்பன், விநாயகர், தன்வந்தரி, ஆஞ்சநேயர் ஆகியோரை தரிசிக்கலாம்.
பெசன்ட் நகர் கடற்கரையில் மீனவர்கள் சூழ மஹா லக்ஷ்மியின் மற்ற ஏழு லக்ஷ்மிகள் மந்திரிகளாக உடனிருக்க அரசாட்சி செய்கிறாள். #முக்கூர் ஸ்ரீனிவாச வரதாச்சார்யார் என்கிற பெயர் ஆஸ்திக உலகில்
பிரபலமானது. அற்புதமான உபன்யாசகர். மணிக்கணக்காக பக்தர்களை அவரது பிரசங்கம் ஒரே இடத்தில் அசையாமல் கட்டிப்போடும் சக்தி கொண்டது. மஹா பெரியவர் மேல் மிகுந்த பக்தி அவருக்கு. அடிக்கடி காஞ்சிபுரத்தில் மடத்துக்குச் சென்று அவரை தரிசிப்பார். முக்கூரைப் பார்த்துவிட்டால் மகா பெரியவா முகத்தில்
ஒரு தனி பிரசன்னம் ஒளிவிடும். ஸ்ரீ வைஷ்ணவர் சைவர் என்கிற பேதம் இருவருக்குமே கிடையாது. அவருக்கு பம்பாய் மஹா லக்ஷ்மி கோவிலை தரிசித்தத்திலிருந்து சின்னதாக நமது ஊரிலும் ஒரு மஹாலக்ஷ்மி ஆலயம் வேண்டும். இருந்தால் சுபிக்ஷம் தாண்டவமாடும் என்று தோன்றியது. அவர் மஹா பெரியவரிடம் பேச்சு நடுவில்
ஒருநாள் தனது மனதில் இருந்த விருப்பத்தை தெரிவித்தார். 'அப்போ நீயே கட்டிடலாமே அதை' என்றார் பெரியவர். அதற்கு அவர், 'நானா? என் சக்திக்கு என் குடும்பத்துக்கு ஒரு வீடு கட்டவே வழியில்லை, நான் எப்படி கோவில் கட்டமுடியும்' என்றார். 'அதெல்லாம் இல்லே, நீ தான் கட்டப்போறே, உன்னாலே முடியும்.
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலை கட்டியதும் ஒரு ஏழை பிராமணன் தான். எல்லா ஏற்பாடும் நீ தான் பண்ணப்போறே. மேற்கொண்டு பண்ணவேண்டியதை உடனே ஏற்பாடு பண்ணு போ.' என்றார் பெரியவா. அவர் சொல்லிவிட்டால் அது தெய்வத்தின் குரலல்லவா? பாற்கடலில் உதித்தவள், சமுத்திர ராஜ தனயே என்பதால் முக்கூர் மஹாலக்ஷ்மி
ஆலயம் சமுத்திர கரையில் இருக்கவேண்டும் என்று நினைத்தார். ஆல்இந்தியா ரேடியோ அருகே இடம் தேடினார். கிடைக்கவில்லை. அப்போ திமுக ஆட்சி அரசிடம் இருந்து நிலம் வாங்க முயன்றும் அதுவும் நடக்கவில்லை. அப்பொழுது நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஒருவர் பெசன்ட் நகர் கடற்கரை அருகே எட்டு கிரவுண்ட்
நிலம் உள்ளது, தருகிறேன் என்றார். கோவில் கட்ட என்பதால் ஒரு ஏக்கர் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் என்றனர் விற்பவர்கள். மொத்தம் நாற்பதாயிரம் தேவை. எங்கே போவது. பெரியவாளிடம் சொன்னார். ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் மானேஜர் ஒருவர் நான் பணம் ஏற்பாடு பண்ணுகிறேன் கொஞ்சம் கொஞ்சமாக
கொடுத்து விடுங்கள் என்றார். எந்த கண்டிஷனும் இல்லாமல் சுலபமாக நிலம் கிடைத்து விட்டது. கோவில் எப்படி இருக்கவேண்டும் என்று பெரியவாளிடம் அறிவுரை கேட்டார். முதலில் மும்பையில் இருக்கும் மகாலட்சுமி கோவிலைப் போல கட்டுவதாக தான் எண்ணம் இருந்தது. பின்பு மகா பெரியவா மஹாலக்ஷ்மியை சுற்றி
அஷ்டலக்ஷ்மிகளும் மேலே சுற்றிலும் இருக்கும்படியாக, தரிசனம் பண்ணும்போது மஹாலக்ஷ்மி மேல் கால் படாமல் இருக்கும்படியாக ஸ்தபதியிடம் சொல்லி விக்ரகங்களும் மகாபலிபுரத்தில் தயாராகின. ஒவ்வொரு லக்ஷ்மியும் எப்படி இருக்கவேண்டும், மஹாலக்ஷ்மி உருவம் எல்லாம் பெரியவா பார்த்து அப்ரூவ் பண்ணினார்.
ஸ்தபதியிடம் சொல்லி ஒரு மஹாலக்ஷ்மி படம் வரைய சொல்லி அதை பெரியவா கல்கி நிறுவனம் முதலாளி சதாசிவத்திடம் கொடுத்தார். 'இந்த படத்தை கல்கிலே போடுங்கோ. படம் நிறைய பிரிண்ட் பண்ணுங்கோ.' என்றார். லக்ஷ்மி படத்தின் கீழே ''வீட்டுக்கு அஷ்டலக்ஷ்மி மெட்ராசுக்கு மஹாலக்ஷ்மி காஞ்சி மஹா பெரியவா
அனுகிரஹத்துடன்' என்று கீழே ஒரு வாசகத்தை சதாசிவம் சேர்த்து விட்டார். படம் ஒன்று பதினோரு ரூபாய்க்கு விற்பனை ஆகியது. கோயம்பத்தூர் லக்ஷ்மி மில் சொந்தக்காரர் ஸ்ரீ G K தேவராஜுலு நாயுடுவின் நண்பர் ஒருவர் முக்கூர் ஸ்ரீநிவாஸாச்சாரியாரிடம் பத்து லக்ஷ்மி படம் கேட்டார். நான் இந்த படத்தை
கேட்டது எதற்காக தெரியுமா என்றார் அவர்.
தெரியாதே சொல்லுங்கோ என்றார் முக்கூர். காஞ்சி பெரியவா அனுகிரகத்துடன் என்கிற வார்த்தைக்காக என்றார். அவர் மூலம் இவ்விஷயம் லக்ஷ்மி மில் ஓனருக்குத் தெரிய வந்து கோவில் கட்டும் முதல் கட்ட செலவனைத்தையும் G K தேவராஜுலு நாயுடு ஏற்றுக்கொண்டார்.
அடுத்து பலரும் பணம் கொடுத்தார்கள். கோவில் கிடுகிடுவென்று கிளம்பி தயாராகிவிட்டது. கோவில் கட்டி முடித்து ஸம்ப்ரோக்ஷணத்துக்கு முக்கூர் ஸ்ரீனிவாச வரதாச்சாரியார் பெரியவாளையே அழைத்தார். பெரியவா ஒப்புக் கொள்ளவில்லை. நீ தான் கட்டினாய் கோயிலை, வைஷ்ணவ ஆச்சார்யர் ஒருவரே ஸம்ப்ரோக்ஷணம் செய்வத
தான் முறை. அஹோபிலம் ஜீயரையே அழைக்கலாம் என்று யோசனை கூறினார் மகா பெரியவா. அஹோபிலம் ஜீயர் அழைப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால் மஹாலக்ஷ்மி ஆலயத்தில் மஹா விஷ்ணு இல்லாமல் தனியாக மஹாலக்ஷ்மி ஸ்தாபனம் செய்வது ஏற்புடையதல்ல என்று சொல்லிவிட்டார். சம்ரோக்ஷணம் ஏற்பாடுகள் செயதாகி விட்டது. ஒரே ஒரு
வார காலம் தான் இருக்கிறது. எங்கே போவது மகாவிஷ்ணுவுக்கு? முக்கூர் மஹா பெரியவாளிடம் ஓடி நிலைமையை சொன்னார். பெரியவா மஹாபலிபுர ஸ்தபதி ஒருவரிடம் சொல்லி ஒருவாரத்தில் மஹா விஷ்ணு வந்து சேர்ந்துவிட்டார். அவரையும் மஹாலக்ஷ்மி சந்நிதியில் ஸ்தாபித்தாகி விட்டது. 1976ம் வருஷம் ஏப்ரல் 5 அன்று
கும்பாபிஷேகம் ஆனது. அஷ்டாங்க விமானம் கொண்ட இந்த கோவில் உருவாக பெரிதும் காரணமான மஹா பெரியவா உருவப்படம், கோவிலில் வைக்கப்பட்டது. அனுஷம் பூஜைகள் நடக்கும். பிரசாதம் ராத்திரி கோவில் மூடிவிட்டு எடுத்துக்கொண்டு காஞ்சிபுரத்துக்கு சென்று இரவு 11.30 மணிக்கு மஹா பெரியவாளுக்கு தரும் வழக்கம்.
அவர் காத்திருப்பார். மார்கழி மாதத்தில் ஆண்டாள் திருப்பாவை சொல்வதோடு மணிவாசகர் திருவெம்பாவையும் சொல்ல வேண்டும் என்று மஹா பெரியவா யோசனை சொன்னார். முக்கூர் ஸ்ரீனிவாச வரதாச்சாரியார் நானே சொல்கிறேன் என்று சொல்ல ஆரம்பித்தார். இதை எதிர்த்து சிலர் அவர் மீது கல் வீசினார்கள். அடிபட்டுக்
கொண்டு பெரியவாளிடம் வந்து விஷயம் சொன்னார் முக்கூர்.மேற்கொண்டு திருவெம்பாவை பிரசங்கம் செய்யப் போவதில்லை என்றார் . 'இதற்கெல்லாம் நீ கவலைப்படவேண்டாம். நீ சிறந்த பக்தன் ஸ்தானத்துக்கு உயர்ந்து விட்டாய். சிறந்த பக்தர்கள் லிஸ்ட்லே சேர்ந்துட்டே. பக்தன் என்றால் அடிபட்டு தானே ஆகணும்' என்று
அவரை சமாதானப்படுத்தி உற்சாகமூட்டினார். அப்பர், மாணிக்க வாசகர் போன்ற சில பக்தர்கள் அனுபவித்த துன்பங்களை, கஷ்டங்களை எடுத்து சொன்னார். முக்கூர் தொடர்ந்து திருவெம்பாவை உபன்யாசம் செயது நிறைவு செய்தார். அஷ்ட லக்ஷ்மி கோவில் இன்று நமக்கு கிடைத்தது முக்கூர் ஸ்ரீனிவாச வராதாச்சாரி சுவாமிகளை
முடுக்கி விட்டு மஹா பெரியவா திட்டமிட்டதால் . கையில் காலணா இல்லாமல் ஆரம்பித்த ஆலய திட்டம். மஹா பெரியவா அனுகிரஹத்தால், முக்கூர் ஸ்வாமிகள் முயற்சியில் இன்று நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதுவரை சென்றுதரிசித்ததில்லை என்றல் கண்டிப்பாக சென்று வாருங்கள். நம் கோவில்களை சானாதன தர்மத்தை
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சிவாவும் செல்வாவும் நெருங்கிய நண்பர்கள். செல்வா நாத்திகன், வாய் ஜால திறமையுடைவன். சிவா தீவிர கிருஷ்ண பக்தன். செல்வாவுக்கு மேடையில் கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை என்று பிரசங்கம் செய்வதே வேலை. எல்லா மதத் தலைவர்களும் தங்கள் வயிற்றுப்
பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள் என்று வாய் ஜால திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருப்பான். செல்வாவுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடுவார்கள். கடைசியில் கடவுளுமில்லை கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம் என முடித்து யாராவது கேள்வி
கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம் என்று அழைப்பான். அப்போது ஒரு முறை நண்பன் சிவா மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான். நண்பா என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே எனக் கோபம் கொண்டான் செல்வா.
#NEET#நீட் இதற்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு ஏன்?
உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு: 3 சுற்று கலந்தாய்வுக்கு பிறகும் இந்தியாவில் டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களில் இன்னும் 5,200 மாணவர் இருக்கைகள் நிரப்ப படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 947 இருக்கைகள்
நிரப்ப படவில்லை.
பாலாஜி மருத்துவக்கல்லூரி - 206 காலி. (திமுக முன்னாள் அமைச்சர் ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது)
ACS மருத்துவ கல்லூரி - 146 காலி
(முன்னாள் அதிமுக அமைச்சர் AC சண்முகத்திற்கு சொந்தமானது)
மீனாக்ஷி மருத்துவ கல்லூரி - 130.
( கம்பெனி முதலாளி தெரியவில்லை தெரிந்தவர் கூறலாம்)
செட்டிநாடு மருத்துவ கல்லூரி - 127
( செட்டிநாடு சிமெண்ட் கம்பெனி )
SRM மருத்துவ கல்லூரி - 98
(உத்தமர் பச்சைமுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி )
ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி - 76. (எம்ஜிஆர் ஆசிபெற்ற சாராய வியாபாரி உடையார் குடும்பம் )
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#ராதாஷ்டமி
ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியன்று மதிய வேளையில் ராதா பிறந்தாள். அதாவது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களுக்கு நடுவில் வரும் வளர்பிறை எட்டாம் நாள் பிறந்தாள். கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமியில் இருந்து பதினான்காம் நாள் ராதா பிறந்த ராதாஷ்டமி வருகிறது. இந்நாளை ராதா
பிறந்த ஊரான பர்சானா என்ற இடத்திலும் ப்ரஜ் பூமியின் எல்லா பகுதியிலும் சிறப்பாக மக்கள் கொண்டாடுகிறார்கள். எல்லாம் கோபிகைகளுடன் கிருஷ்ணர் விளையாடினாலும் ராதா அவருக்கு மிகவும் பிரியமானவள் ராதைக்கு சகலமும் கிருஷ்ணன்தான். ராதா என்பதன் பொருள்: ரா என்றால் தருவது, ஒப்புக்கொள்வது. தா
என்றால் விடை பெறுதல், பிடிப்பை தளர்த்துதல். தருவதற்கும், பெறுவதற்கும் விரும்புதல், மனதை ஒருமுகப்படுத்துதல், அதற்காக பாடுபடுதல் என்பதே இவ்விரு எழுத்துக்களும் கூடினால் மிகச்சுவையான விளக்கங்கள் கூறலாம். எப்போது நாம், நான் என்ற பிடிப்பை தளர்த்தி, சத்தியத்தின் மேல் நம் மனதை
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் மன்னன் வீரவர்ம ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன. அதில் ஒரு யானை மணிகண்டன் மிகவும் பலம் வாய்ந்தது. கீழ்படிந்து நடக்கும் குணமும் விவேகமும் கொண்டது. போர்க்களத்தில் வீரவர்ம ராஜாவுக்கு எப்பொழுதும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து திரும்பி வரும். எனவே ராஜாவின் மிகவும்
பிரியமான யானையானது மணிகண்டன். யானைக்கு வயதாகியது. முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை. எனவே மன்னர் வீரவர்மன் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை. ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை மணிகண்டன் இருந்தது. ஒரு நாள் யானை மணிகண்டன் தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றபோது
சேற்றில் சிக்கி மூழ்கத் தொடங்கியது. பல முறை முயன்றும் சேற்றில் இருந்து காலை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அதன் அலறல் சத்தத்திலிருந்து யானை சிக்கலில் இருப்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.
மணிகண்டன் சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவை சென்றடைந்தது. ராஜா வீரவர்மன் உட்பட மக்கள் அனைவரும்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ரசிக முராரி என்பவர் ஒடிஸாவில் ரோகினி நகர் என்னும் ஊரில் 1590ல் பிறந்தவர். சிறு வயது முதலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் தீவிர பக்தி கொண்டிருந்த அவர் எப்போதும் கிருஷ்ணன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருப்பார். அவரது குரு சியாமானந்தர் 1608 ஆம் ஆண்டு ரசிக முராரிக்கு
கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்து மக்களை நல்வழிப்படுத்தி வரும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் அங்கேயே மடம் அமைத்துக்கொண்டு பகவத் சேவை செய்து வந்த சியாமானந்தர் 1630 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவர் சமாதி ஒடிஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. அவர் அணிந்த காலணிகளை இன்னும் அங்கு
பாதுகாத்து வருகின்றனர். சியாமானந்தரிடம் கிருஷ்ண மஹா மந்திரத்தை உபதேசம் பெற்ற ரசிக முராரி கோபிபல்லவபூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார். பானாபூரை ஆண்டு வந்த பைத்தியநாத் பஞ்ச் என்னும் ஒரு அரசனின் அரவணைப்பில் ரசிக முராரி வாழ்ந்துவந்த காலகட்டத்தில், அப்போது ஒடிஸா மாநில பொறுப்பாளராக
#மாசாணிஅம்மன் ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு.
பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் மிக பிரமாண்டமாக ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆனை மலைப்பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரைச் சந்திக்க ஒரு துறவி வந்தார். அவரை
வரவேற்று பல உபசரிப்புகள் செய்த நன்னனின் உபரசரிப்பில் மகிழ்ந்த துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்தார். ‘மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார். உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன், முக்கியமான ஒன்று இதை உண்ட பின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில்
விட்டு விடு, இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்’ என்றார். மன்னர் சரி என்று சொல்லி துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைத்தார். சுவை நன்றாக இருக்கவே அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில் ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார். மரம் பெரியதாகி பழம்