#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீஜயதேவர், கி.பி. 12 ம் நூற்றாண்டில் #பூரி க்ஷேத்திரத்தின் அருகில் பில்வகாம் என்கிற ஊரில் வசித்து வந்த நாராயண சாஸ்திரியார் - கமலாம்பாள் என்கிற திவ்ய தம்பதிகளுக்கு திருக்குமாரராக அவதரித்தவர். இவர்களுக்கு நெடுநாட்களாக புத்திர பாக்யம் இல்லாமல் பூரி ஜெகந்நாதரை
இடைவிடாது வழிபட, திருமால் அருள்கூர்ந்து, வேத வியாசரின் வடிவாக ஜயதேவர் அவதரித்தார். ஜெயதேவருக்கு பத்மாவதி என்கிற பெண்ணை மணமுடித்தார்கள். அதிதிகளுக்கு தான தருமம் செய்து வந்தார். ஜயதேவர் கண்ணனின் லீலா விநோதங்களைப் பாடலாகப் பாட, அதற்கு பத்மாவதி அபிநயம் செய்து ஆடுவாள். அப்பகுதியை
ஆட்சி செய்து வந்த மன்னன் கவி பாடும் திறன் கொண்டவன். அவனும் ஜகன்னாதர் மேல் பல கவிகள் பாடி இருந்தான். ஜயதேவரின் பாடல்கள் மட்டும் வேதமாக கருதி மக்கள் பாடி வருவதைக் கண்டு வெகுண்டான். உடனே, மக்களே என் அரசாட்சியில் என் பாடல்களை மட்டுமே நீங்கள் பாட வேண்டும் என்று ஆணையிட்டான். ஆயினும்
மக்கள் ஜயதேவரின் பாடல்களைத் தவிர வேறு பாடல்கள் பாட இயலாது என சொன்னார்கள். அது கேட்டு கோபமுற்ற அரசன் மக்களையும், பண்டிதர்களையும், மிகவும் துன்புறுத்தி, கண்டிப்பாக தனது பாடல்கள் ஒலிக்க வலியுறுத்தினான். இதைக் கேட்ட பண்டிதர்கள் நீங்கள் இயற்றிய பாடல்களை பகவான் ஏற்றுக் கொண்டால்
நாங்களும் பாடுகிறோம் என்றனர். உடன் ஐயதேவரின் பாடல்களையும், அரசர் பாடிய பாடல்களையும் கருவறையில் ஜகந்நாதரின் திருவடிகளில் வைத்து இரவு கோயில் கதவை மூடினர். மறுநாள் காலை கோயில் கதவைத் திறந்தால், மன்னனின் பாடல்கள் கோயிலில் ஆங்காங்கு தாறுமாறாக வீசப்பட்டிருந்தன. ஜயதேவரின் பாடல்கள்
ஜகன்னாதரின் திருவடியில் இருந்தது. அப்பாடல்களை ஜகந்நாதர் பிரித்து படித்து, யாம் இதை ஏற்றுக் கொண்டோம். என்ற குறிப்பு திருமாலால் எழுதப்பட்டு இருந்தது. என்ன ஆச்சரியம்! இவ்வளவு அன்புக்கு ஏற்பு உடையவர் ஐயதேவரே என வாழ்த்துவது போல் பகவான் அருளினார். என்னே அவர் செய்த பாக்யம்! அதாவது
ஐயதேவர் ஆழ்ந்த பக்தியுடன் எழுதிய பாடல்களை பகவான் ஏற்றார் எனலாம். கலி காலத்தில் பக்தியுடன் நாம சங்கீர்த்தனம் ஒன்றுதான். நாம் இந்த சம்ஸார சாகரத்தில் இருந்து விடுபட முடியும். என்பதை ஜயதேவர் போன்ற மகான்கள் உணர்த்தி உள்ளார்கள். தன் பிழையை உணர்ந்த மன்னன் வருந்தி இறைவனிடம் மன்னித்து
அருள வேண்டினான். திருமாலும் அவனின் இந்த நல்ல நோக்கத்தைக் கண்டு அவன் எழுதிய பதிமூன்று பாடல்களை ஏற்றுக் கொண்டார். அதாவது மனமுருகி வேண்டினால் இறைவன் அருளுவான் என்பதாகும். ஜயதேவர் பத்மாவதி திவ்ய தம்பதிகள் இறைவனோடு ஏக காலத்தில் இரண்டறக் கலந்து விட்டனர். கணவனின் சொல் கேட்டு மனைவி
நடப்பதும், மனைவியின் சொல் கேட்டு கணவன் நடப்பதும் அவ்வாறு இந்த கலி யுகத்தில் கிடைப்பது அதிசயத்திலும் அதிசயம். இந்த பாக்யம் அடைய இந்த தம்பதிகள் போல் நாமும் வாழ்ந்து பகவானின் அருள் பெற வேண்டும். பக்தியுடன் பரந்தமானை அனுதினம் பாராயணம் செய்பவர்களும், கேட்பவர்களும், திருமாலின்
அருளைப் பெற்று ஆனந்தமாக வாழ்வோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

16 Sep
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சிவாவும் செல்வாவும் நெருங்கிய நண்பர்கள். செல்வா நாத்திகன், வாய் ஜால திறமையுடைவன். சிவா தீவிர கிருஷ்ண பக்தன். செல்வாவுக்கு மேடையில் கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை என்று பிரசங்கம் செய்வதே வேலை. எல்லா மதத் தலைவர்களும் தங்கள் வயிற்றுப் Image
பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள் என்று வாய் ஜால திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருப்பான். செல்வாவுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடுவார்கள். கடைசியில் கடவுளுமில்லை கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம் என முடித்து யாராவது கேள்வி
கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம் என்று அழைப்பான். அப்போது ஒரு முறை நண்பன் சிவா மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான். நண்பா என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே எனக் கோபம் கொண்டான் செல்வா.
Read 7 tweets
16 Sep
#NEET #நீட் இதற்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு ஏன்?
உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு: 3 சுற்று கலந்தாய்வுக்கு பிறகும் இந்தியாவில் டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களில் இன்னும் 5,200 மாணவர் இருக்கைகள் நிரப்ப படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 947 இருக்கைகள்
நிரப்ப படவில்லை.
பாலாஜி மருத்துவக்கல்லூரி - 206 காலி. (திமுக முன்னாள் அமைச்சர் ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது)

ACS மருத்துவ கல்லூரி - 146 காலி
(முன்னாள் அதிமுக அமைச்சர் AC சண்முகத்திற்கு சொந்தமானது)

மீனாக்‌ஷி மருத்துவ கல்லூரி - 130.
( கம்பெனி முதலாளி தெரியவில்லை தெரிந்தவர் கூறலாம்)
செட்டிநாடு மருத்துவ கல்லூரி - 127
( செட்டிநாடு சிமெண்ட் கம்பெனி )

SRM மருத்துவ கல்லூரி - 98
(உத்தமர் பச்சைமுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி )

ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி - 76. (எம்ஜிஆர் ஆசிபெற்ற சாராய வியாபாரி உடையார் குடும்பம் )

சவீதா பல் மமருத்துவ கல்லூரி - 77.
(எம்ஜிஆர்
Read 7 tweets
15 Sep
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #ராதாஷ்டமி
ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியன்று மதிய வேளையில் ராதா பிறந்தாள். அதாவது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களுக்கு நடுவில் வரும் வளர்பிறை எட்டாம் நாள் பிறந்தாள். கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமியில் இருந்து பதினான்காம் நாள் ராதா பிறந்த ராதாஷ்டமி வருகிறது. இந்நாளை ராதா
பிறந்த ஊரான பர்சானா என்ற இடத்திலும் ப்ரஜ் பூமியின் எல்லா பகுதியிலும் சிறப்பாக மக்கள் கொண்டாடுகிறார்கள். எல்லாம் கோபிகைகளுடன் கிருஷ்ணர் விளையாடினாலும் ராதா அவருக்கு மிகவும் பிரியமானவள் ராதைக்கு சகலமும் கிருஷ்ணன்தான். ராதா என்பதன் பொருள்: ரா என்றால் தருவது, ஒப்புக்கொள்வது. தா
என்றால் விடை பெறுதல், பிடிப்பை தளர்த்துதல். தருவதற்கும், பெறுவதற்கும் விரும்புதல், மனதை ஒருமுகப்படுத்துதல், அதற்காக பாடுபடுதல் என்பதே இவ்விரு எழுத்துக்களும் கூடினால் மிகச்சுவையான விளக்கங்கள் கூறலாம். எப்போது நாம், நான் என்ற பிடிப்பை தளர்த்தி, சத்தியத்தின் மேல் நம் மனதை
Read 7 tweets
14 Sep
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் மன்னன் வீரவர்ம ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன. அதில் ஒரு யானை மணிகண்டன் மிகவும் பலம் வாய்ந்தது. கீழ்படிந்து நடக்கும் குணமும் விவேகமும் கொண்டது. போர்க்களத்தில் வீரவர்ம ராஜாவுக்கு எப்பொழுதும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து திரும்பி வரும். எனவே ராஜாவின் மிகவும் Image
பிரியமான யானையானது மணிகண்டன். யானைக்கு வயதாகியது. முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை. எனவே மன்னர் வீரவர்மன் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை. ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை மணிகண்டன் இருந்தது. ஒரு நாள் யானை மணிகண்டன் தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றபோது
சேற்றில் சிக்கி மூழ்கத் தொடங்கியது. பல முறை முயன்றும் சேற்றில் இருந்து காலை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அதன் அலறல் சத்தத்திலிருந்து யானை சிக்கலில் இருப்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.
மணிகண்டன் சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவை சென்றடைந்தது. ராஜா வீரவர்மன் உட்பட மக்கள் அனைவரும்
Read 8 tweets
13 Sep
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ரசிக முராரி என்பவர் ஒடிஸாவில் ரோகினி நகர் என்னும் ஊரில் 1590ல் பிறந்தவர். சிறு வயது முதலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் தீவிர பக்தி கொண்டிருந்த அவர் எப்போதும் கிருஷ்ணன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருப்பார். அவரது குரு சியாமானந்தர் 1608 ஆம் ஆண்டு ரசிக முராரிக்கு Image
கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்து மக்களை நல்வழிப்படுத்தி வரும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் அங்கேயே மடம் அமைத்துக்கொண்டு பகவத் சேவை செய்து வந்த சியாமானந்தர் 1630 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவர் சமாதி ஒடிஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. அவர் அணிந்த காலணிகளை இன்னும் அங்கு
பாதுகாத்து வருகின்றனர். சியாமானந்தரிடம் கிருஷ்ண மஹா மந்திரத்தை உபதேசம் பெற்ற ரசிக முராரி கோபிபல்லவபூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார். பானாபூரை ஆண்டு வந்த பைத்தியநாத் பஞ்ச் என்னும் ஒரு அரசனின் அரவணைப்பில் ரசிக முராரி வாழ்ந்துவந்த காலகட்டத்தில், அப்போது ஒடிஸா மாநில பொறுப்பாளராக
Read 14 tweets
6 Sep
#மாசாணிஅம்மன் ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு.
பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் மிக பிரமாண்டமாக ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆனை மலைப்பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரைச் சந்திக்க ஒரு துறவி வந்தார். அவரை
வரவேற்று பல உபசரிப்புகள் செய்த நன்னனின் உபரசரிப்பில் மகிழ்ந்த துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்தார். ‘மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார். உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன், முக்கியமான ஒன்று இதை உண்ட பின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில்
விட்டு விடு, இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்’ என்றார். மன்னர் சரி என்று சொல்லி துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைத்தார். சுவை நன்றாக இருக்கவே அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில் ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார். மரம் பெரியதாகி பழம்
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(