🦅 #கருடபுராணம்
கருட புராணம் என்பது பறவைகளின் அரசனான கருடனுக்கு ஏற்பட்ட ஐயங்களை தீர்க்க திருமால் எடுத்துரைத்த இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். மனிதர்களின் இறப்புக்குப் பின்னர் என்ன நடக்கும் என்ற கருடனின் கேள்விக்கு விஷ்ணு பகவான் சொன்ன பதில் தான் கருட புராணம். மொத்தம் பத்தொன்பது
ஆயிரம் செய்யுட்கள் கொண்ட இப்புராணம், பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த என்ற இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதில், வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவரிக்கப்படுகிறது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி
ஆகியவற்றைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது. இவ்வுலகை விட்டுச் செல்லும் ஜீவன் எமனது உலகுக்குள் நுழைவதற்கு முன்பு படும் துன்பங்களை விரிவாக எடுத்துரைக்கிறது. மரணம் ஏற்பட்ட பின், ஜீவன் யமலோகம் செல்கிறது. மனிதன் வாழும் பூமிக்கும் யமலோகத்துக்கும் உள்ள தூரம் எண்பத்தாறாயிரம் காதம
ஆகும். இங்கு யமதர்மன் இருப்பான். அவனுக்கு தூதுவர்களும் உண்டு. எமன் அஞ்சத்தக்க உருவத்தை உடையவன்.
தூதுவர்களும் அவ்வாறே இருப்பார்கள். அவர்கள் கறுப்பு நிற ஆடைகள் உடுத்தி இருப்பார்கள். முகம் கோபக்கனலை உதிர்க்கும். இந்த எமதூதர்கள் ஒருவனது ஆயுள் முடிந்தவுடன் அவனை சூட்சும உருவத்தில் எமன்
முன்பு கொண்டு வந்து நிறுத்துவார்கள்.
எமன் தனது தூதர்களிடம், இந்த ஜீவனை மீண்டும் அவன் இருந்த இடத்துக்கே கொண்டுபோய் விட்டு விட்டு வாருங்கள். இன்றிலிருந்து பன்னிரெண்டாம் நாள் முடிந்த பின்னர் மீண்டும் இங்கே கொண்டு வாருங்கள் என்று கட்டளை இடுவான். தூதர்களும் மீண்டும் ஜீவனை அவனது உடலில்
விட்டுவிட்டு வருவார்கள். இவ்வாறு ஜீவன் யமலோகம் சென்று, மீண்டும் திரும்ப வருவதால் இறந்த உடலை உடனே எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. எமதூதர்கள் ஜீவனை பாசத்தால் கட்டியிருப்பர். அதை அவிழ்த்து விட்டவுடன் சூட்சும உருவில் உள்ள அந்த உயிர், தன் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு அல்லது
சுடுகாட்டிற்குச் செல்லும். தன் உடலுக்குள் புக முனையும். புக முடியாமல் தவிக்கும். தன் உடலுக்கு உற்றார் தீ வைக்கும் போது, சிதைக்குப் பத்து முழ உயரத்தில் ஆவி வடிவில் நின்று ஓலமிட்டு அழும். அந்த ஜீவன் புண்ணிய ஆத்மாவாக இருந்தால், இந்த உடல் எரிந்து சாம்பலாதல் நல்லது என்று நினைத்து
மகிழ்ச்சி அடையும். ஒரு ஜீவனின் உடலானது தலை முதல் கால் வரை தீயில் எரிந்து சாம்பலாதல் அவசியம். உடல் எரிந்து சாம்பலானவுடன் பற்றானது நீங்கிவிடும். அப்போது இறந்தவனுக்குப் பிண்டத்தால் ஆன சரீரம் உண்டாகும். இறந்தவனுக்குப் பத்து நாட்களும் பிண்டம் போட வேண்டும். இறந்தவனுடைய மகன் பிண்டம் போட
தகுதி படைத்தவன். அந்த மகன் ஒவ்வொரு நாளும் போடும் பிண்டத்தால் ஜீவனுக்கு ஒவ்வொரு உடல் உறுப்புக்களும் வரிசையாக உண்டாகும். இவ்வாறு பிண்டத்தாலான சரீரம் உண்டானாலும் ஜீவனால் பேச முடியாது. பிண்ட உருவமான ஜீவன், வீட்டுக்கு வெளியே நின்று, வீட்டில் உள்ள தன்னைச் சேர்ந்தவர்களையும் வீட்டுக்கு
வந்து போகும் சுற்றத்தாரையும் பார்த்து ஏங்கும். பசியாலும் தாகத்தாலும் அலறிக் கொண்டு இருக்கும். வருத்தத்துடன் செய்வதறியாது திகைத்து நிற்கும்.
பத்தாம், பதினொராம் நாள் தன்னுடைய மகன் பிராண முகமாகக் கொடுக்கப்பட்டவற்றை உண்டு, பதின்மூன்றாம் நாளில் வரும் யமதூதர்களுடன் செல்லும்.
பாசத்தால் கட்டப்பெற்ற அந்த ஜீவன், யமதூதர்கள் தன்னை இழுத்துச் செல்லும் போது தனது வீட்டையும் சுற்றத்தாரையும் பார்த்துக் கொண்டே செல்லும். எமதூதர்களுடன் செல்லும் ஜீவன் பல இடையூறுகளைக் கடந்து செல்லும். இரவும் பகலும் பல இன்னல்களில் அமிழ்ந்து போகும். ஒரு நாளைக்கு இருநூற்று நாற்பத்தேழு
காத வழி நடந்து செல்ல வேண்டும். வழியில் அடர்ந்த காடுகள் காணப்படும். அந்தக் காட்டில் உள்ள இலைகள் கூர்மையாக இருக்கும். பாதைகள் கரடுமுரடாக இருக்கும். பசியாலும் தாகத்தாலும் தவிக்கும் ஜீவன் காட்டைக் கடந்து செல்லச் சிரமப்படும். இவ்வாறு பல இன்னல்களைக் கடந்து செல்லும் போது சுற்றத்தாரையும்
கடந்த காலத்தையும் எண்ணிப் பார்க்கும். இனி யாரும் தனக்கு உதவ வரமாட்டார்கள் என்பதை உணர்ந்து கொள்ளும். தன் நிலையை எண்ணி பலவாறு புலம்பும். ஜீவனை அழைத்துச் செல்லும் போது, எமகிங்கரர்கள் அவன் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டுவார்கள். மரணித்த பின் ஜீவன் பல்வேறு இடங்களைத் தான் செய்த
கர்மாக்கு ஏற்ப கடந்து செல்லும். ஜீவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தை அடைந்து அங்கிருந்து தொடர்ந்து செல்ல வேண்டும். சிறிது தூரம் காற்றின் வழியாகவும் சிறிது தூரம் புலிகள் நிறைந்த வழியிலும் யமதூதர்களுடன் சென்று ஓரிடத்தில் தங்கி இருக்க வேண்டும். இறந்தவரின் மகன் ஒவ்வொரு மாதமும் செய்யும
மாசிகம் காரணமாக ஒவ்வொரு பகுதியையும் வரிசையாக ஜீவன் கடக்க வேண்டும். பன்னிரண்டாம் மாத வருஷாப்திப் பிண்டத்தை உண்டு, ‘வைவஸ்தப் பட்டினம்’ என்ற நகரை அடையும். இதுவே யமபுரி. இது நூற்று நாற்பத்து நான்கு காத வழி அகலமுள்ளதாக இருக்கும். இங்கு கந்தர்வர்கள், அப்சரஸ்கள் இருப்பார்கள். மேலும்
பல்லாயிரக் கணக்கான பிராணிகளும் காணப்படும். ஜீவனின் பாவ புண்ணியங்களை அறிந்து எமதர்மனுக்குக் கூற பன்னிரு சிரவணர் இருப்பர். சித்திரகுப்தன் எமனிடம் ஜீவனின் விவரங்களை கூறுவான். எமன் அதைக் கேட்டு, அதற்கு ஏற்ப தமது கிங்கர்கள் மூலம் தண்டனை நிறைவேற்றுவான்.
எமபுரிக்கு வந்த ஜீவன், முன்பு
இருந்த பிண்ட சரீரம் நீங்கி, கட்டை விரல் அளவுள்ள ஒரு வடிவம் பெறும். அங்குள்ள ஒரு வன்னி மரத்தடியில் சிறிது காலம் தங்கி கர்மத்தால் ஆன சரீரம் பெறும். அந்நிலையிலே எமதூதர்கள் ஜீவனை எமபுரிக்கு அழைத்துச் செல்வார்கள். அவ்வாறு செல்லும் போது புண்ணியம் செய்த ஜீவன்களின் பார்வைக்கு யமபட்டனம்
மிகவும் அழகாகத் தெரியும். எமன் முன் சென்றதும், ஜீவன் செய்த பாவத்துக்கு ஏற்ற தண்டனை பெற வேண்டும். ஒருவன் எந்த உறுப்பால் பாவங்கள் செய்தானோ அந்த உறுப்பு மூலமாகவே அதற்கான தண்டனையை அடைய வேண்டும். உதாரணத்துக்கு நம்மை விட பெரியவர்களை இகழ்ந்து பேசினாலோ நீச மொழிகளினால் பேசினாலோ பாவம்
ஏற்படும் என்றும் அந்த பாவத்திற்கு தண்டனையாக வாயில் இருந்து புழுக்கள் உருவாகும் கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. இனிய மொழிகளை பேசினால் உடல் நலத்துடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்றும் ஆசிர்வதிக்கப் பட்டுள்ளது. பிற உயிர்களை வாட்டி வதைத்தவர்கள் துன்பப்படுவார்கள் என்றும் கொடூரமான சரீரம
கிடைக்கும் என்னும் மகாவிஷ்ணு தனது பக்தனும் பெரிய திருவடியுமான கருடனிடம் கூறியுள்ளார். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் செய்த பாவ புண்ணியங்களை எம லோகத்தில் வசிக்கும் சித்ரகுப்தன் குறித்து வைத்திருப்பார். இந்த பாவத்தின் தன்மைக்கு ஏற்ப எமதர்மன் தனது கிங்கர்களின் மூலம் தண்டனைகளை
தருவார் என்றும் 28 கொடிய நரகங்களைப் பற்றியும் அங்கு கொடுக்கப்படும் தண்டனைகளைப் பற்றியும் பட்சி ராஜனான கருடனுக்கு விளக்கமாக கூறுகிறார் மகாவிஷ்ணு. #தாமிஸிரநரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகா
பாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள். எமபுரிக்குச் செல்லும் பாதை கரடுமுரடானது. துன்பம் நிறைந்தது. அந்தப் பாதையில் செல்லும் போதுஜீவன் படும்
துன்பம் சொல்லி மாளாது. மரணத்துக்குபின் நாம் செல்லும் பாதையில் துன்பம் ஏற்படாது இருக்க தான தர்மங்களைச் செய்ய வேண்டும். கருட புராணத்தை படிப்பவர்கள் தவறு செய்ய அஞ்சும் படியாக இருக்கும். விஷ்ணு இதனை ‘எமனின் சித்திரவதைகள்’ என்பார். எல்லாப் பிறவிகளை விடவும் சிறந்தது மனிதப் பிறவியே.
வாழும் காலத்தில் அறச் செயல்களை செய்துவாழ்தல் முறையாகும். இவற்றை இறந்த பின்னர் உணர்ந்து யாதொரு பயனும் இல்லை.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
@pdfmakerapp grab this

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

16 Sep
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சிவாவும் செல்வாவும் நெருங்கிய நண்பர்கள். செல்வா நாத்திகன், வாய் ஜால திறமையுடைவன். சிவா தீவிர கிருஷ்ண பக்தன். செல்வாவுக்கு மேடையில் கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை என்று பிரசங்கம் செய்வதே வேலை. எல்லா மதத் தலைவர்களும் தங்கள் வயிற்றுப் Image
பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள் என்று வாய் ஜால திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருப்பான். செல்வாவுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடுவார்கள். கடைசியில் கடவுளுமில்லை கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம் என முடித்து யாராவது கேள்வி
கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம் என்று அழைப்பான். அப்போது ஒரு முறை நண்பன் சிவா மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான். நண்பா என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே எனக் கோபம் கொண்டான் செல்வா.
Read 7 tweets
16 Sep
#NEET #நீட் இதற்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு ஏன்?
உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு: 3 சுற்று கலந்தாய்வுக்கு பிறகும் இந்தியாவில் டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களில் இன்னும் 5,200 மாணவர் இருக்கைகள் நிரப்ப படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 947 இருக்கைகள்
நிரப்ப படவில்லை.
பாலாஜி மருத்துவக்கல்லூரி - 206 காலி. (திமுக முன்னாள் அமைச்சர் ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது)

ACS மருத்துவ கல்லூரி - 146 காலி
(முன்னாள் அதிமுக அமைச்சர் AC சண்முகத்திற்கு சொந்தமானது)

மீனாக்‌ஷி மருத்துவ கல்லூரி - 130.
( கம்பெனி முதலாளி தெரியவில்லை தெரிந்தவர் கூறலாம்)
செட்டிநாடு மருத்துவ கல்லூரி - 127
( செட்டிநாடு சிமெண்ட் கம்பெனி )

SRM மருத்துவ கல்லூரி - 98
(உத்தமர் பச்சைமுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி )

ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி - 76. (எம்ஜிஆர் ஆசிபெற்ற சாராய வியாபாரி உடையார் குடும்பம் )

சவீதா பல் மமருத்துவ கல்லூரி - 77.
(எம்ஜிஆர்
Read 7 tweets
15 Sep
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #ராதாஷ்டமி
ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியன்று மதிய வேளையில் ராதா பிறந்தாள். அதாவது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களுக்கு நடுவில் வரும் வளர்பிறை எட்டாம் நாள் பிறந்தாள். கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமியில் இருந்து பதினான்காம் நாள் ராதா பிறந்த ராதாஷ்டமி வருகிறது. இந்நாளை ராதா
பிறந்த ஊரான பர்சானா என்ற இடத்திலும் ப்ரஜ் பூமியின் எல்லா பகுதியிலும் சிறப்பாக மக்கள் கொண்டாடுகிறார்கள். எல்லாம் கோபிகைகளுடன் கிருஷ்ணர் விளையாடினாலும் ராதா அவருக்கு மிகவும் பிரியமானவள் ராதைக்கு சகலமும் கிருஷ்ணன்தான். ராதா என்பதன் பொருள்: ரா என்றால் தருவது, ஒப்புக்கொள்வது. தா
என்றால் விடை பெறுதல், பிடிப்பை தளர்த்துதல். தருவதற்கும், பெறுவதற்கும் விரும்புதல், மனதை ஒருமுகப்படுத்துதல், அதற்காக பாடுபடுதல் என்பதே இவ்விரு எழுத்துக்களும் கூடினால் மிகச்சுவையான விளக்கங்கள் கூறலாம். எப்போது நாம், நான் என்ற பிடிப்பை தளர்த்தி, சத்தியத்தின் மேல் நம் மனதை
Read 7 tweets
14 Sep
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் மன்னன் வீரவர்ம ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன. அதில் ஒரு யானை மணிகண்டன் மிகவும் பலம் வாய்ந்தது. கீழ்படிந்து நடக்கும் குணமும் விவேகமும் கொண்டது. போர்க்களத்தில் வீரவர்ம ராஜாவுக்கு எப்பொழுதும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து திரும்பி வரும். எனவே ராஜாவின் மிகவும் Image
பிரியமான யானையானது மணிகண்டன். யானைக்கு வயதாகியது. முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை. எனவே மன்னர் வீரவர்மன் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை. ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை மணிகண்டன் இருந்தது. ஒரு நாள் யானை மணிகண்டன் தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றபோது
சேற்றில் சிக்கி மூழ்கத் தொடங்கியது. பல முறை முயன்றும் சேற்றில் இருந்து காலை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அதன் அலறல் சத்தத்திலிருந்து யானை சிக்கலில் இருப்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.
மணிகண்டன் சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவை சென்றடைந்தது. ராஜா வீரவர்மன் உட்பட மக்கள் அனைவரும்
Read 8 tweets
13 Sep
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ரசிக முராரி என்பவர் ஒடிஸாவில் ரோகினி நகர் என்னும் ஊரில் 1590ல் பிறந்தவர். சிறு வயது முதலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் தீவிர பக்தி கொண்டிருந்த அவர் எப்போதும் கிருஷ்ணன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருப்பார். அவரது குரு சியாமானந்தர் 1608 ஆம் ஆண்டு ரசிக முராரிக்கு Image
கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்து மக்களை நல்வழிப்படுத்தி வரும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் அங்கேயே மடம் அமைத்துக்கொண்டு பகவத் சேவை செய்து வந்த சியாமானந்தர் 1630 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவர் சமாதி ஒடிஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. அவர் அணிந்த காலணிகளை இன்னும் அங்கு
பாதுகாத்து வருகின்றனர். சியாமானந்தரிடம் கிருஷ்ண மஹா மந்திரத்தை உபதேசம் பெற்ற ரசிக முராரி கோபிபல்லவபூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார். பானாபூரை ஆண்டு வந்த பைத்தியநாத் பஞ்ச் என்னும் ஒரு அரசனின் அரவணைப்பில் ரசிக முராரி வாழ்ந்துவந்த காலகட்டத்தில், அப்போது ஒடிஸா மாநில பொறுப்பாளராக
Read 14 tweets
6 Sep
#மாசாணிஅம்மன் ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு.
பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் மிக பிரமாண்டமாக ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆனை மலைப்பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரைச் சந்திக்க ஒரு துறவி வந்தார். அவரை
வரவேற்று பல உபசரிப்புகள் செய்த நன்னனின் உபரசரிப்பில் மகிழ்ந்த துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்தார். ‘மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார். உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன், முக்கியமான ஒன்று இதை உண்ட பின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில்
விட்டு விடு, இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்’ என்றார். மன்னர் சரி என்று சொல்லி துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைத்தார். சுவை நன்றாக இருக்கவே அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில் ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார். மரம் பெரியதாகி பழம்
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(