அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்

துர்வாச முனிவரால் கிருதயுகத்தில் இரண்டாயிரம் சுலோகங்களாலும், பரசுராமரால் திரேதாயுகத்தில் ஆயிரத்து ஐநூறு சுலோகங்களாலும், தவுமியாசார்யாரால் துவாபரயுகத்தில் ஆயிரம் சுலோகங்களாலும், 🙏🇮🇳1
ஆதிசங்கரரால் கலியுகத்தில் ஐநூறு சுலோகங்களாலும் பாடப்பட்ட பெருமை காமாட்சிக்கு உண்டு. இங்கே அம்பிகைக்கு மூன்று வடிவங்கள் உள்ளன. அவற்றை ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்று கூறுவார்கள். 🙏🇮🇳2
பார்த்தவுடனேயே சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால் காமகோடி காமாட்சி என அழைக்கப்படுகிறாள். காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து கோயில்களும் காமாட்சி கோயிலை நோக்கியே அமைந்திருக்கிறது.

 🙏🇮🇳3
இவ்வூரில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள் கோயிலை சுற்றுவதை தவிர்த்து, காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. 🙏🇮🇳4
காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழுகிறாள்.

 🙏🇮🇳5
மகாவிஷ்ணுவின் 108 திருப்பதிகளில் ஒன்றான கள்வர் பெருமாள் சன்னதி காமாட்சி அம்மன் மூலஸ்தானத்தின் அருகிலேயே இருப்பது சிறப்பான அம்சமாகும். இந்த கோயிலின் விசேஷ அம்சம் துண்டீர மகாராஜா சன்னதி ஆகும். 🙏🇮🇳6
இங்கு ஆட்சி செய்த ஆகாசபூபதி என்ற அரசனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவன் காமாட்சியை நாள்தோறும் மனமுருகி வழிபட்டு வந்தான். இவனது பக்திக்கு மகிழ்ந்த அம்மன் தனது மகன் கணபதியையே மன்னனுக்கு மகனாக கொடுத்தாள்.

🙏🇮🇳7
கணபதியும் மன்னரின் குடும்பத்தில் துண்டீரர் என்ற பெயருடன் அவதரித்தார். ஆகாசராஜனுக்கு பிறகு துண்டீரரே ஆட்சியும் செய்தார்.

துண்டீரர் ஆட்சி செய்த காரணத்தினால் தான் இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. 🙏🇮🇳8
துண்டீர மகாராஜா அம்மனை வணங்கிய நிலையில், காமாட்சி சன்னதிக்கு எதிரே உள்ளார். இவரை வணங்க செல்லும் போது மவுனமாக செல்ல வேண்டும். பேசிக்கொண்டு சென்றால் அம்மனை தரிசித்த பலனை இழப்பதுடன் துண்டீர மகாராஜாவின் சாபத்திற்கும் ஆளாக நேரிடும்.

 🙏🇮🇳9
சக்தி பீடத்தில் மிக முக்கியமான தலம். அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களை தனக்கு ஆசனமாக கொண்டும், நான்கு கைகளுடனும் காட்சிதருகிறாள். 🙏🇮🇳10
கைகளில் பாசம், அங்குசம், புஷ்ப வானம், கரும்புவில் ஏந்தியிருக்கிறாள். காமாட்சிக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி, திரிபுரை, சக்கரநாயகி ஆகிய பெயர்களும் உண்டு.

கருவறைக்குள்ளேயே மூல விக்ரகத்துக்கு அருகில் ஒற்றைக்காலில் தவம் செய்த நிலையில் காமாட்சி உள்ளது பலர் பார்த்திராத ஒன்று.

 🙏🇮🇳11
காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும் காமாட்சி கோயிலை தவிர அங்கெல்லாம் வேறு அம்பாள் சன்னதி கிடையாது.

கிருதயுகத்தில் 2000 சுலோகங்களால் துர்வாசராலும், திரேதாயுகத்தில் 1500 சுலோகங்களால் பரசுராமராலும், துவாபர யுகத்தில் 1000 சுலோகங்களால் தௌம்யா சார்யாரும், 🙏🇮🇳12
கலியுகத்தில் 500 சுலோகங்களால் மூகசங்கரரும் பாடிய பெருமை காமாட்சிக்கு உண்டு. இந்த ஆலயத்தில் ஞான சரஸ்வதி ,லட்சுமி, அரூப லட்சுமி, சியாமளா, வாராஹி, அன்னபூரணி, அர்த்தநாரீ ஸ்வரர், தர்மசாஸ்தா, துர்வாச முனிவர், ஆதிசங்கரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது.

 🙏🇮🇳13
இங்குள்ள பெருமாள் கள்வன் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலுக்குள் உள்ள இவரது சன்னதி 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிற சிறப்பு பெற்றது.

இவ்வாலயத்தினுள் முதல் பிரகாரத்தின் மத்தியில் உள்ள காயத்ரி மண்டபத்தின் மத்தியில்தான் காமாட்சி அம்மன் வீற்றிருக்கிறாள்.

🙏🇮🇳14
இம்மண்டபத்தினுள் 24 ஸ்தம்பங்கள் (தூண்கள்) உள்ளன.24 அட்சரங்கள் 24 தூண்களாக காட்சியளிப்பது இங்கு சிறப்பு.இதேநிலையில் இதே போல் மண்டபத்தின் கீழே இருப்பதாவும் ஐதீகம். அதனால் தான் விவரம் அறிந்தவர்களாக இருப்பின் காயத்ரி மண்டபத்திற்குள் சென்று நின்று வணங்கமாட்டார்கள். 🙏🇮🇳15
காரணம் அம்பாள் மீதே நிற்ககூடாது என்ற அச்சம் தான் என்றும் கூறுகின்றனர்.

துர்வாசர் இவர் சிறந்த தேவி பக்தர். லலிதாஸ்தவரத்னம் என்ற நூலை இயற்றியவர். இவரே இப்போதுள்ள அம்மனின்மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தவர். அம்மன் முதன்முதலில் காட்சி தந்ததும் இவருக்கே.

 🙏🇮🇳16
இது அம்மனின் எதிரில் உள்ள ஸ்ரீசக்கரம் ஆதிசங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சியில் ஒரு காலத்தில் அம்மன் மிக உக்கிரமாக விளங்கினாளாம். ஆகையால் இந்த ஸ்ரீ சக்கிரத்தை பிரதிஷ்டை செய்து அம்மனின் உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினாராம். 🙏🇮🇳17
இவருக்கு இக்கோயிலில் தனி சன்னதி உண்டு. இங்கு காமகோடி காமாட்சி, தபஸ் காமாட்சி, பங்காரு காமாட்சி, அஞ்சன காமாட்சி, உற்சவர் காமாட்சி ஆகிய ஐந்து காமாட்சிகள் உள்ளனர்.

🙏🇮🇳18
காமாஷி தத்துவம் :
 
காம என்னும் 51 அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை காமாஷி. கா என்றால் ஒன்று. ம என்றால் ஐந்து. ஷி என்றால் ஆறு. அதாவது ஐந்து திருநாமங்களையும் சக்தி பேதம் மூன்று. சிவபேதம் இரண்டு, விஷ்ணு பேதம் ஒன்று என்னும் ஆறு வகை பேதங்களைக் கொண்டவள். 🙏🇮🇳19
மற்றும் கா என்றால் சரஸ்வதி. மா என்றால் மகேஸ்வரி. ஷி என்றால் லட்சுமி. இம்மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்தவள்.

🙏🇮🇳20
காமக் கடவுளாகிய மன்மதனிடம் தான் கரும்பும் புஷ்ப பாணமும் இருக்கும்.இவை இரண்டையும் காமாட்சி வைத்திருப்பதன் காரணம் மன்மதன் ஜீவன்களிடையே இந்த வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு அடங்காத காம விகாரத்தை உண்டாக்கி வரும்படி அவனுக்கு அச்சக்தியை அளித்திருக்கிறாள்.

🙏🇮🇳21
பக்தர்களிடமும் ஞானிகளிடமும் உன் கை வரிசையை காட்டதே என்று மன்மதனிடம் கூறி அவனிடமிருந்து கரும்பையும் புஷ்ப பாணங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு விட்டாள் தேவி என்றும் காஞ்சி பெரியவர் கூறுகிறார்.

🙏🇮🇳22
சிறப்பம்சங்கள் :

அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகோடி பீடமாகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். 🙏🇮🇳23
அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.

#வாழ்க_பாரதம் 🙏🇮🇳
#வளர்க_பாரதம் 🙏🇮🇳🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

2 Oct
#108_திவ்ய_தேசங்கள்*

ஒரு முறை பிரம்மா வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளிடம், ""வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்?'' என்று கேட்க, ""ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச'' என்று வேதவாக்கியத்தின் மூலம் உணர்த்தினார். 🙏🇮🇳1 Image
ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. ஆக பெருமாள் இருக்கும் இடங்கள் 107. பெருமாள் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்தை சேர்த்தால் 108. இந்த திவ்யதேசங்களை எல்லாம்ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். 

🙏🇮🇳2
நாலு வரிகளில் 108 திவ்யதேசங்கள் : --
ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திவ்யதேசக் கணக்கை நான்கு வரிகளில் கீழ்காணும் பாடல் மூலம் தருகிறார்;

🙏🇮🇳3
Read 48 tweets
1 Oct
மகா பெரியவா ஆந்திரா பக்கம் பாதயாத்திரை செய்து கொண்டிருந்த சமயம் அது அப்போது ஒருநாள் பௌர்ணமி வந்தது.

சன்யாச தர்மப்படி பௌர்ணமி நாளில் வபனம் (க்ஷவரம் செய்து முடிகளை அகற்றுவது) செய்து கொள்ள வேண்டும்.
ஆசார்யா யாத்திரை செய்து கொண்டிருந்ததால், தெலுங்கரான நாவிதர் ஒருவரை அதற்காக அழைத்துக் கொண்டு வந்தார்கள்..

ஆந்திராவில் சுற்றுவட்டாரத்திலேயே மகாபெரியவா,மேலும் சில மாதங்கள் யாத்திரை செய்ததால், அடுத்தடுத்த பௌர்ணமி நாட்களிலும் அதே நாவிதர் வந்து வபனம் செய்தார்.
பிறகு ஒரு கட்டத்தில் அந்த நாவிதர் காஞ்சி மடத்திற்கு அழைத்து வரப்பட்டு,பெரியவா சேவைக்கு அமர்த்தப்பட்டார். ஆரம்பத்தில் மகா
பெரியவாளின் மகத்துவம் எதுவும் அவருக்குத் தெரியாது. யாரோ ஒரு சன்யாசிக்குத்தான் வபனம் செய்கிறோம் என்பதுபோல்தான் அவர் இருந்தார்
Read 17 tweets
1 Oct
இங்கிலாந்து, ஐரோப்பா, சீனாவிலே எரிபொருள் பற்றாக்குறை - மின்சாரம் இல்லை

ஒருவேளை நமது பாரதத்திலே பெட்ரோல் பங்க் களுக்கு பெட்ரோல் கொண்டு வர லாரி ஓட்ட ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தால்
ஒருவேளை நமது நகரங்களிலே மின்சாரம் இல்லாமல் எல்லோரும் டார்ச் லைட் பயன்படுத்தி நடந்து போனால்

ஒருவேளை நமது நகரங்களிலே மின்சாரம் இல்லாமல் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தால்

ஒருவேளை நமது கடைகளிலே பொருட்கள் இல்லாமல் வெறுமனே காலியாக இருந்திருந்தால்
ஒருவேளை நமது வீடுகளுக்கு ஒரு துளி தண்ணீர் கூட குடிக்க இல்லாமல் இருந்திருந்தால்

இதெல்லாம் ஐரோப்பாவிலும் சீனாவிலும் இங்கிலாந்திலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் நடக்கிறது.

ஐரோப்பாவிலே மின்சாரம், இயற்கை எரிவாயு விலைகள் உச்சத்தை தொடுகின்றன.
Read 17 tweets
1 Oct
டில்லி நகரின் கழுத்தை நெரித்துவிட்டீர்கள்; விவசாயிகள் அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி: ஒட்டுமொத்த டில்லி நகரின் கழுத்தை நெரித்துவிட்டு, தற்போது நகருக்குள் வந்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறீர்கள் என விவசாய சங்கங்களிடம் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்லியின் புறநகர் பகுதியில் நடக்கும் போராட்டம் ஓராண்டை நிறைவு செய்தது. இதனையடுத்து கடந்த மாதம் விவசாயிகள் பாரத் பந்த் நடத்தினர்.
மனு

இந்நிலையில் விவசாயிகள் மற்றும் கிசான் மகா பஞ்சாயத்து சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
Read 11 tweets
1 Oct
அகத்திய முனி பல்லாயிரம் வருடம் முன்பே கண்டுபிடித்த "மின்சாரம்".

#வாழ்க_பாரதம்
#வளர்க_பாணதத்தின்_சாதனைகள்

நாம் இன்று பயன்படுத்தும் மின்சாரத்தை வெள்ளைக்காரன் தான் முதலில் கண்டுபிடித்தான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் அது உண்மை அல்ல.
நமது சித்தர் பெருமக்கள் பலர் அந்தக்காலத்திலேயே அறிவியல் துறையில் பல சாதனைகள் புரிந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே. இரும்பை தங்கமாக்குவது, கிரகங்கள் மொத்தம் 9 என அறிந்தது இப்படி பல சான்றுகளை இதற்க்கு கூறலாம்.
அந்த வகையில் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்னரே மின்சாரத்தை கண்டறிந்தார் அகத்தியர் சித்தர். அதற்கான ஆதாரத்தை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
Read 14 tweets
1 Oct
சிம்லாவில் சிக்கிய ஆப்கன் புள்ளி: ஹெராயின் கடத்தலில் திருப்பம்

குஜராத் முந்த்ரா துறைமுகத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ ஹெராயின் போதை பொருளை, வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், 'ஐ.இ.கோட்' எனப்படும் இறக்குமதி,- ஏற்றுமதி லைசென்ஸ் பெற்ற, சென்னையைச் சேர்ந்த ஏஜென்ட் மச்சாவரம் சுதாகர், அவரது மனைவி துர்கா பூரண வைஷாலி சிக்கினர். இந்த போதை பொருள், டில்லியில் இருக்கும் அமித் என்பவருக்கு செல்ல வேண்டியது என தெரிய வந்தது.
இந்த கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் குறித்தும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் டில்லி, நொய்டா உள்ளிட்ட பல இடங்களிலும் சோதனை நடத்தினர். இறுதியில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(