தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்
விருப்பப் பணிகள்.
1.நகரப் பகுதிகளை வகுத்து அமைத்தல்.
2.பெண்டிர் காப்பு இல்லங்கள், அனாதை இல்லங்கள், தொழுநோயாளிகளின் இல்லங்கள், ஓய்விடங்கள், நூலகங்கள், பொது பூங்காக்கள், தோட்டங்கள் #ஒன்றியஉயிரினங்கள்
முதலானவற்றை நிறுவி பராமரித்தல்.
3.சாலையோரங்களில் மரங்களை நடுதல்.
4.நில அளவைகளை மேற்கொள்ளுதல்.
5.நலிவுற்ற பிரிவினருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல்.
6.நகராட்சிப் பணியாளரின் பொது நலத்தைப் பேணிக்காத்தல்.
7.நகராட்சிப் பகுதிக்குள் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி மக்களுக்கு
கலாச்சாரம் மற்றும்பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல். வருவாய் ஆதாரங்கள்
நகராட்சியின் முக்கிய வருவாய் ஆதரங்களாவன.
1.சொத்து வரி.
2.தொழில் வரி.
3.பொருள்கள் மீதான வரிகள் - சுங்க வரிகள்.
4.கால்நடை மற்றும் வாகன வரி.
5.கேளிக்கை வரி.
6.குடிநீர் மற்றும் விளக்கு வரி.
7.அரசாங்கம் வழங்கும் மானியங்களும் கடன்களும்.
பொது நிர்வாகம், மருத்துவம் மற்றும் பொதுச் சுகாதாராம், கல்வி, பொது மராமத்துப் பணிகள், நீர் விநியோகம், விளக்குகள் அமைத்தல் மற்றும் பிற வசதிகளை செய்து கொடுத்தல் யாவும் நகராட்சியின் செலவு இனங்கள் ஆகும். நகராட்சிகள் தமது வருவாயைச்
செலுத்தி செலவிற்கென பணத்தைப் பெற்றுக் கொள்ள நகராட்சி நிதிகளைக் கொண்டுள்ளன. நகராட்சி மன்றம்
ஒவ்வொரு நகராட்சியும் ஒரு நிர்வாக அமைப்பைப் பெற்றுள்ளது. நகராட்சி மன்றம், நகராட்சிக் குழு, நகராட்சி வாரியம் என பல்வகையாக பல்வேறு மாநிலங்களில் பெயரிடப்பட்டுள்ளது. அது நகராட்சியின் சட்ட
ஆக்கம் செய்யும் அமைப்பாகும். பல்வேறு வட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களை நகராட்சி மன்றம் கொண்டுள்ளது. ஏனைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளதைப் போல், தாழ்த்தப்பட்ட சாதியினர், பழங்குடியினர், பெண்கள் ஆகியோருக்கான இட ஒதுக்கீடுகள் உள்ளன. நகராட்சிகளின் தலைவர் பதவிகளும்
மேற்கண்டவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள், வட்டக் குழுக்களின் தலைவர்கள்
ஆகியோரும் நகராட்சி மன்றங்களில் கலந்து கொள்ள ஏற்பாடு உள்ளது. நகராட்சி நிர்வாகத்தில் அனுபவம் அல்லது சிறப்பான அறிவு கொண்ட நபர்களை நகராட்சி
நிர்வாகத்தில் மாநில அரசாங்கம் நியமனம் செய்யலாம். ஆனால், இவ்வுறுப்பினர்கள் மன்றத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கவில்லை. நகர மக்கட் தொகையின் அடிப்படையில் நகராட்சி மன்றத்தின் அளவு அமைந்துள்ளது. ஒவ்வொரு கவுன்சிலரும், நியமன உறுப்பினரும், தனது இருக்கையில் அமர்வதற்கு முன்,
இந்திய அரசியலமைப்பிற்கு நேர்மை அல்லது பற்றுடன் இருக்கவும், இந்தியாவின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்யவும், தனது கடமையை நேர்மையுடன் ஆற்றவும் ஓர் உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். நகராட்சி மன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். அது முன்கூட்டியே நீக்கப்படுமாயின் ஆறு
மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதேபோன்று, இராஜினாமா, பதவி நீக்கம் அல்லது தகுதி இழப்பு போன்ற காரணத்தால் ஒரு உறுப்பினர் இடம் காலியாயின் அது ஆறு மாதங்களுக்குள் நிரப்பப்பட வேண்டும். தனது பணிகளை மேற்கொண்டு செயலாற்றுவதில் நிலைக்குழு மற்றும் பிற குழுக்கள் நகராட்சி
மன்றத்திலும் துணை செய்கின்றன.
நகராட்சியின் தலைவர் ஒவ்வொரு நகராட்சி மன்றமும் ஒரு தலைவரையும், ஒரு துணைத்தலைவரையும் பெற்றுள்ளது. நகராட்சி மன்றத்தலைவர் மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார். துணைத்தலைவரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். நகராட்சித் தலைவரும்,
துணைத்தலைவரும் 5 ஆண்டுகளுக்கு பதவி வகிக்கின்றனர். தலைவர் அல்லது துணைத்தலைவர், மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயரைப் போன்று பதவியிலிருந்து அகற்றப்படலாம். தலைவர் நகராட்சி மன்ற கூட்டங்களைக் கூட்டுவித்து கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கின்றார். பல்வேறு நடவடிக்கைகளை
ஒழுங்கப்படுத்துகின்றார். நகராட்சியின் நிதி மற்றும் செயலாக்க நிர்வாகத்தை அவர் மேற்பார்வை செய்கின்றார். நகராட்சியின் பதிவுகள் அல்லது ஆவணங்கள் அனைத்தையும் அவர் பார்வையிடும் உரிமைகளை பெற்றுள்ளார். நகராட்சி நிர்வாகம் சம்பந்தமான எந்த தகவலையும் அவர் கோர முடியும். சுருக்கமாகக்கூறின்,
நகராட்சிச் சட்டத்தினால் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துப் பணிகளையும் அதிகாரங்களையும் அவர் செயல்படுத்த வேண்டும். தலைவர் இல்லாத நேரத்தில், துணைத்தலைவர் தலைவருக்குரிய அனைத்துப் பணிகளையும் செய்தல் வேண்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சமூக பாதுகாப்பு திட்டங்களான ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY), ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) இரண்டையும் ஓன்றிணைக்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் #ஒன்றியஉயிரினங்கள்
ஆம் ஆத்மி பீமா யோஜனா என்ற பெயரில் 2013 ஜனவரி முதல் தேதியிலிருந்து செயல்பட்டு வருகிறது.
பயன் பெறுவதற்கான தகுதிகள்
18 வயது நிரம்பியவராகவும், 59 வயதுக்கு மேற்பட்டாமலும் இருக்க வேண்டும்.
பொதுவாக, வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள அல்லது சில குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள – நிலமற்ற
குடும்பங்களின் தலைவர் அல்லது சம்பாதிக்கின்ற ஒரு நபர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
ஒப்புதல் அளிக்கும் முகமைகள்
இந்த திட்டத்தை நிர்வகிப்பதற்கென அறிவிக்கப்படும் மத்திய – மாநில – யூனியன் பிரதேச அரசுத் துறைகள் அல்லது பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் அல்லது நிறுவன பூர்வ
இதைத் தவிர்த்து, சில வித்தியாசமான அனுபவங்களை வழங்கும், இன்ஜினீயரிங் படிப்புகளை தேர்வு செய்ய தயங்குவது ஏன்?
இந்த வகையான படிப்புகள் குறித்து அதிகப்படியான மாணவர்களுக்கு தெரிவது இல்லை என்பதும் ஒரு காரணம். அந்த வகையில் இன்று மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங் பற்றி பார்க்கலாம்.
தமிழகத்தில் பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகளின் பட்டியல்: 1. அரசு பொறியியல் கல்லூரி- சேலம் கருப்பூர் 2. பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி-கோவை 3. கிண்டி பொறியியல் கல்லூரி- சென்னை 4. தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஐடி)- திருச்சிராப்பள்ளி
தமிழக மாநகராட்சிகள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப
மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள இருபத்தி ஒன்று மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். இரண்டாவது கோயம்புத்தூர் மாநகராட்சியும், மூன்றாவது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் மதுரை மாநகராட்சியும் சேலம்
மாநகராட்சியும் உள்ளது . இந்த ஐந்து மாநகராட்சிகள் மட்டுமே தமிழகத்தின் மிக முக்கியமான மாநகராட்சிகள் ஆகும். பிற மாநகராட்சிகள் , திருப்பூர்,திருநெல்வேலி உட்பட சில மாநகராட்சிகள் அதற்கு அடுத்த நிலையில் காணப்படுகிறது. இந்த மாநகராட்சிகளின் தரவரிசை என்பது மக்கள் தொகை அடிப்படையிலும்,
ஜியோ இன்பர்மேசன் படிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும். இவை சராசரி மாணவர்களுக்கு ஏற்ற டிப்ளமோ படிப்புகளாகும். பட்டப்படிப்பாக படிக்கும் வாய்ப்பும் உள்ளது.10-ம் வகுப்பு , 12-ம் வகுப்பு படித்து முடித்ததும் சராசரி மாணவர்கள் குறுகிய காலத்தில் படித்து
நல்ல வேலைக்குச் செல்ல விரும்புபவார்கள். அவர்களின் சிந்தனையில் முதலில் தோன்றுவது ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளாகும். பாலிடெக்னிக் முடித்ததும் பணியில் இருந்துகொண்டு பி.இ. என்ஜினீயரிங் படிப்பை பகுதி நேரமாக படித்து பணியில் இருக்கும் துறையில் பதவி உயர்வு பெறுபவர்கள் ஏராளம்.
ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒரு நிர்வாக அலுவலர் உள்ளார். அவர் ஆணையர் என்று அழைக்கப்படுகின்றார். அவர் மாநிலப் பணித்துறையைச் சேர்ந்தவர். அவர் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றார்.
ஆணையர் எத்தருணத்திலும் இடப்பெயர்வு செய்யப்படலாம். பல்வேறு நகராட்சிகளிலும் பெருமளவிற்கு ஆணையர்களின் அதிகாரங்களும் பணிகளும் ஒத்திருப்பவையாக உள்ளன. சுருக்கமாகக் கூறின் மன்றத்தின் தீர்மானங்களையும் முடிவுகளையும் நகராட்சி ஆணையர் செயலாக்கம் செய்கின்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
தீர்மானங்களின் நகல்களை அவர் அனுப்பி வைக்கின்றார். அவர் ஒப்பந்தங்களைச் செய்கின்றார். சில அறிவிக்கைகள், உரிமங்கள், அனுமதிகள் போன்றவற்றைப் பிறப்பித்து நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பில் தலைவருக்கு துணைபுரிகிறார். அவர் நகராட்சியின் நிலை அறிக்கையை தயார்செய்து செயலாக்கம் செய்கிறார்.