நெறிமுறைகளை கடைபிடித்து பேசினால் அவரை ‘சட்டம் தெரிந்தவர்’ என்று மரியாதை செய்கிறார்கள். இதனால்தான், சட்டத்தை முறையாகப் படித்து பேசுபவர்களுக்கு இந்த சமூகம் முறையான மரியாதையை வழங்குகிறது.
‘இந்தியாவின் தந்தை’ என அழைக்கப்பட்ட மகாத்மா காந்தியடிகள் சட்டம் படித்தவர்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முறையாக சட்டக் கல்வி பயின்றவர். ‘சட்டமேதை’ என அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்வியை நன்கு கற்றுணர்ந்து சட்டம் இயற்றும் அளவுக்கு புகழ் பெற்றவர் ஆவார். முறையாக சட்டம் பயின்று அரசியலில் நுழைந்தவர்களும் பெருமை பெற்றிருக்கிறார்கள். எந்த
நாட்டில் வசித்தாலும், அந்த நாட்டின் சட்டத்தை அங்கு வாழுகின்ற மக்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவர்களது கடமை ஆகும்.
இன்று - சட்டக்கல்வி இந்தியா முழுவதும் வழங்கப்படுகிறது. சட்டக் கல்வியை முறையாகப் படித்தவர்கள் -
மிகபெரிய நிறுவனங்களில் சட்ட ஆலோசகராகவும் (Legal Advisor) பணிபுரியலாம். மேலும் உயர் பதவிகளும் சட்டம் படித்தவர்களுக்கு காத்திருக்கின்றன. நீதித்துறை, தலைமைச் செயலகம், தமிழக அரசின் முக்கிய பதவிகள், வங்கி வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர், நீதிபதி போன்ற பல்வேறு பணிவாய்ப்புகளும் சட்டம்
படித்தவர்களுக்கு காத்திருக்கிறது. சட்டம் படித்தவர்கள் தனியாகவும், வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடலாம்.
தமிழ்நாட்டிலுள்ள சட்டக் கல்வியை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை - 1. ஐந்து ஆண்டுகள் நடத்தப்படும் சட்டப் பட்டப்படிப்பு 2. மூன்று ஆண்டுகள் நடத்தப்படும் சட்டப் பட்டப்படிப்பு
3. ஐந்து ஆண்டுகள் நடத்தப்படும் பி.எல்.ஹானர்ஸ் படிப்பு
- ஆகியவை ஆகும்.
மூன்று ஆண்டுகள் நடத்தப்படும் சட்டப்படிப்பை தமிழகத்திலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளும், தனியார் சட்டக் கல்லூரிகளும் நடத்துகிறது. தமிழகத்தில் சட்ட கல்விக்கென தனியாக “தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்
பல்கலைக்கழகம்“ (Tamilnadu Dr. Ambedkar Law University) என்று ஒரு பல்கலைக்கழகம்“ செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்று, இளநிலை சட்டப்படிப்பை கீழ்க்கண்ட கல்லூரிகள் நடத்துகின்றன. அவை- 1. டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி, சென்னை
2. அரசு சட்டக் கல்லூரி, மதுரை 3. அரசு சட்டக் கல்லூரி, திருச்சி 4. அரசு சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர் 5. அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி 6. அரசு சட்டக் கல்லூரி, செங்கல்பட்டு 7. அரசு சட்டக் கல்லூரி, வேலூர்
- ஆகும்.
மேலும், சேலத்தில் மத்திய சட்டக்கல்லூரி
(Central Law College) தனியாரால் நடத்தப்படுகிறது.
பொதுவாக, பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள், சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து ஐந்து ஆண்டு சட்டப்படிப்பை பி.ஏ., பி.எல் (B.A.B.L.,) படிக்கலாம். பட்டப்படிப்பை முடித்தவர்கள் மூன்று ஆண்டு சட்டப்படிப்பில் சேர்ந்து பி.எல். (BL..)
படிப்பும் படிக்கலாம். இதுதவிர, ஐந்து ஆண்டு பி.ஏ., பி.எல்., ஹானர்ஸ் (B.A., B.L., Honors) படிப்பு சென்னையிலுள்ள “சீர்மிகு சட்டப்பள்ளி”யில் நடத்தப்படுகிறது.
ஐந்து ஆண்டு பி.ஏ.,பி.எல் (B.A., B.L.,) பட்டப்படிப்பில் சேர விரும்பும் பிளஸ் 2 முடித்தவர்கள் பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம்
45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
மூன்று ஆண்டு பி.எல். பட்டப்படிப்பில் சேர விரும்புபவர்கள் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க
வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் சட்டப்படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம்.
சீர்மிகு சட்டப்பள்ளி (School of Excellence in Law)
சீர்மிகு சட்டப்பள்ளி (School of Excellence in Law) என்னும் கல்வி நிறுவனத்தில் 5 ஆண்டு
பி.ஏ.,எல்.எல்.பி., (ஹானர்ஸ்) (B.A., LLB [Honors]), 5 ஆண்டு பி.காம்.எல்.எல்.பி., (ஹானர்ஸ்) (B.Com.,LLB [Honors]), 3 ஆண்டு எல்.எல்.பி. (ஹானர்ஸ்) (LLB [Honors]) ஆகிய பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், புதிதாக 2015-16 கல்வி ஆண்டுமுதல் 5 ஆண்டு பி.பி.ஏ.
எல்.எல்.பி., (ஹானர்ஸ்) (BBA., LLB., [Honors]), 5 ஆண்டு பி.சி.ஏ.,எல்.எல்.பி., (ஹானர்ஸ்) (BCA., LLB., [Honors]) ஆகிய பட்டப் படிப்புகளும் நடத்தப்பட உள்ளன.
தேசிய சட்டப்பள்ளி (National Law School)
உலகத்தரம் வாய்ந்த உன்னத சட்டக் கல்வியை இந்தியாவில் வழங்க பல்வேறு
தேசிய சட்டப்பள்ளிகள் (National Law School) உள்ளன. தற்போது திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், நவலூர் குட்டப்பட்டியில் தேசிய சட்டப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி முறைப்படி தொடங்கப்பட்டது.
தேசிய சட்டப்பள்ளியில் பி.ஏ., எல்.எல்.பி., (ஹானர்ஸ்) (B.A., LLB (Honors) என்னும் 5 ஆண்டு சட்டப்படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இது 5 ஆண்டுகால ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு ஆகும். மொத்தம் 100 மாணவர்கள் இந்தப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
“CLAT” (Common Law Admission Test) என்னும் நுழைவுத்தேர்வின்மூலம் தகுதியுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மொத்தமுள்ள 100 இடங்களில் 45 இடங்கள் மட்டுமே தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 45 இடங்கள் அகில இந்திய அளவில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுதவிர 10 இடங்கள்
இந்தப் படிப்பில் சேர்வதற்கு பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியமாகும்.
இந்தப்படிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு 20 ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 22 வயதுவரை இந்தப் படிப்பில் சேரலாம்.
இவைதவிர - தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர மற்றும் முழுநேர பி.எச்.டி. ஆராய்ச்சிப்
படிப்பும் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வேலை வாய்ப்புகள்
1 . வழக்கறிஞர் ஆக Practise செய்வது:
BL முடித்தவர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவானோர் தான் கோர்ட் சென்று Practise செய்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியுமா? இருப்பினும் BL முடித்து அதிக
அளவு சதவீதத்தினர் ( 40 to 50% ) வழக்கறிஞர் தொழில் செய்கிறார்கள் என்ற அளவில் இதனை முதலில் பார்ப்போம்.
பெரும்பாலும் முதலில் யாரேனும் ஒரு வழக்கறிஞரிடம் ஜூனியராக பணி புரிய வேண்டும். இது அந்தந்த ஊருக்கு ஏற்ப டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என மாறுகிறது.
டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட்டில் பெரும்பாலான ஜூனியர் வழக்கறிஞர்கள் குறைவான சம்பளமே வாங்குகின்றனர். சில ஆண்டுகள் இப்படி கஷ்ட ஜீவனம் தான். பின் தனக்குள்ள தொடர்புகளை வைத்து சுமாராக ஐந்து ஆண்டுகளில் தனியாக Practise செய்யலாம்.
2. பெரிய Law firm களில் இணைந்து பணியாற்றுவது:
இந்தியாவில் பல சிறப்பான Law firm-கள் உள்ளன. உதாரணத்துக்கு சில: AZB & Partners, Kochar & Co, Amarchand Mangal Das. சென்னையிலேயே Fox Mandal & Associates, King & Partridege போன்றவை..
இந்த Law firm-களில் ஜூனியராக அல்லது employee ஆக சேர்ந்தால் துவக்கதிலேயே ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கும். மேலும் போக போக, நாம் செய்யும் வேலைக்கு Percentage அடிப்படையில் பணம் தருகின்றனர். இதன் மூலம் சில வருடங்களிலேயே மாதம் லட்ச ருபாய் சம்பாதிக்கும் வக்கீல்கள் பலர் உள்ளனர்.
நல்ல Law firm-ல் நுழைய சரியான reference தேவை. அதாவது அங்கு உங்களை சேர்த்து விடும் விதமான நபரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!!
3. நிறுவனங்களில் வேலை :
இந்தியாவில் லட்சக்கணக்கான கம்பனிகள் உள்ளன. அவற்றில் பல ஆயிரக்கணக்கானவை பெரிய கம்பனிகள். இவற்றில் Law officer, Manager Legal,
AGM, GM என பல்வேறு பதவிகளில் BL முடித்தவர்கள் வேலை செய்கின்றனர். துவக்க சம்பளமே ஓரளவு decent ஆக இருக்கும். போக போக நிச்சயம் சம்பளம் கூடும். ரிஸ்க் இல்லாமல் குறிப்பிட்ட வருமானம் விரும்புவோர் நிறுவனங்களில் பணி செய்யலாம்.
மேலும் தற்போது Legal Process Outsourcing என்கிற தொழிலும்
அதிகரித்து வருகிறது. இது பற்றி சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள லீகல் வேலைகள் இங்கு Outsource செய்யபடுகின்றன ( IT Outsourcing போலவே). இதனாலும் BL-க்கு வேலை வாய்ப்பு அதிகமாகிறது.
இவை தவிர BL முடித்தோர் Civil services
(குறிப்பாய் IAS, IPS, etc ) என பல இடங்களில் உள்ளனர்.
ஒரு நல்ல வக்கீலுக்கு (கோர்ட்/ அலுவலக வேலை எதுவாக இருந்தாலும்) முக்கிய தேவை எழுத்தாற்றல் (Drafting skills) மற்றும் பேச்சாற்றல்.. இப்படி எழுத்து மற்றும் பேச்சில் ஈடு பாடு இருந்தால் நிச்சயம் நீங்களோ உங்களுக்கு தெரிந்தவருக்கோ
சமூக பாதுகாப்பு திட்டங்களான ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY), ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) இரண்டையும் ஓன்றிணைக்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் #ஒன்றியஉயிரினங்கள்
ஆம் ஆத்மி பீமா யோஜனா என்ற பெயரில் 2013 ஜனவரி முதல் தேதியிலிருந்து செயல்பட்டு வருகிறது.
பயன் பெறுவதற்கான தகுதிகள்
18 வயது நிரம்பியவராகவும், 59 வயதுக்கு மேற்பட்டாமலும் இருக்க வேண்டும்.
பொதுவாக, வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள அல்லது சில குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள – நிலமற்ற
குடும்பங்களின் தலைவர் அல்லது சம்பாதிக்கின்ற ஒரு நபர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
ஒப்புதல் அளிக்கும் முகமைகள்
இந்த திட்டத்தை நிர்வகிப்பதற்கென அறிவிக்கப்படும் மத்திய – மாநில – யூனியன் பிரதேச அரசுத் துறைகள் அல்லது பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் அல்லது நிறுவன பூர்வ
இதைத் தவிர்த்து, சில வித்தியாசமான அனுபவங்களை வழங்கும், இன்ஜினீயரிங் படிப்புகளை தேர்வு செய்ய தயங்குவது ஏன்?
இந்த வகையான படிப்புகள் குறித்து அதிகப்படியான மாணவர்களுக்கு தெரிவது இல்லை என்பதும் ஒரு காரணம். அந்த வகையில் இன்று மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங் பற்றி பார்க்கலாம்.
தமிழகத்தில் பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகளின் பட்டியல்: 1. அரசு பொறியியல் கல்லூரி- சேலம் கருப்பூர் 2. பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி-கோவை 3. கிண்டி பொறியியல் கல்லூரி- சென்னை 4. தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஐடி)- திருச்சிராப்பள்ளி
தமிழக மாநகராட்சிகள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப
மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள இருபத்தி ஒன்று மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். இரண்டாவது கோயம்புத்தூர் மாநகராட்சியும், மூன்றாவது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் மதுரை மாநகராட்சியும் சேலம்
மாநகராட்சியும் உள்ளது . இந்த ஐந்து மாநகராட்சிகள் மட்டுமே தமிழகத்தின் மிக முக்கியமான மாநகராட்சிகள் ஆகும். பிற மாநகராட்சிகள் , திருப்பூர்,திருநெல்வேலி உட்பட சில மாநகராட்சிகள் அதற்கு அடுத்த நிலையில் காணப்படுகிறது. இந்த மாநகராட்சிகளின் தரவரிசை என்பது மக்கள் தொகை அடிப்படையிலும்,
ஜியோ இன்பர்மேசன் படிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும். இவை சராசரி மாணவர்களுக்கு ஏற்ற டிப்ளமோ படிப்புகளாகும். பட்டப்படிப்பாக படிக்கும் வாய்ப்பும் உள்ளது.10-ம் வகுப்பு , 12-ம் வகுப்பு படித்து முடித்ததும் சராசரி மாணவர்கள் குறுகிய காலத்தில் படித்து
நல்ல வேலைக்குச் செல்ல விரும்புபவார்கள். அவர்களின் சிந்தனையில் முதலில் தோன்றுவது ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளாகும். பாலிடெக்னிக் முடித்ததும் பணியில் இருந்துகொண்டு பி.இ. என்ஜினீயரிங் படிப்பை பகுதி நேரமாக படித்து பணியில் இருக்கும் துறையில் பதவி உயர்வு பெறுபவர்கள் ஏராளம்.
ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒரு நிர்வாக அலுவலர் உள்ளார். அவர் ஆணையர் என்று அழைக்கப்படுகின்றார். அவர் மாநிலப் பணித்துறையைச் சேர்ந்தவர். அவர் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றார்.
ஆணையர் எத்தருணத்திலும் இடப்பெயர்வு செய்யப்படலாம். பல்வேறு நகராட்சிகளிலும் பெருமளவிற்கு ஆணையர்களின் அதிகாரங்களும் பணிகளும் ஒத்திருப்பவையாக உள்ளன. சுருக்கமாகக் கூறின் மன்றத்தின் தீர்மானங்களையும் முடிவுகளையும் நகராட்சி ஆணையர் செயலாக்கம் செய்கின்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
தீர்மானங்களின் நகல்களை அவர் அனுப்பி வைக்கின்றார். அவர் ஒப்பந்தங்களைச் செய்கின்றார். சில அறிவிக்கைகள், உரிமங்கள், அனுமதிகள் போன்றவற்றைப் பிறப்பித்து நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பில் தலைவருக்கு துணைபுரிகிறார். அவர் நகராட்சியின் நிலை அறிக்கையை தயார்செய்து செயலாக்கம் செய்கிறார்.