📍ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஒன்றிணைக்கவும், நாளை முதல் 3 நாட்கள் நடைபெற உள்ள G7 முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளவும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜெர்மனி செல்கிறார்.
#BREAKING | இந்தியர்கள், குறிப்பாக மாணவர்கள் தற்காலிகமாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு அறிவுறுத்தல்.
உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் இந்தியா அறிவுறுத்தல்.
📍அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, கனடா, நார்வே, எஸ்டோனியா, லிதுவேனியா, பல்கேரியா, ஸ்லோவேனியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு தங்கள் குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளன.
📍உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என மறுத்து வரும் ரஷ்யா, ஏற்கனவே 2014 இல் தான் கைப்பற்றிய உக்ரைனின் கிரிமியாவை கட்டுப்படுத்தி வருகிறது.
📍 கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கட்டுப்படுத்தி வரும் பிரிவினைவாத சக்திகளுக்கு, ரஷ்யா ஆதரவு அளித்தும் வருகிறது.
2021ஆம் ஆண்டில் 84% இந்திய குடும்பங்களின் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது.
அதேநேரத்தில் நாட்டில் உள்ள செல்வந்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில், 102லிருந்து '142' ஆக அதிகரித்துள்ளது.
- ஆக்ஸ்பாம் ஆய்வு அறிக்கை (1/7)
📍"Inequality Kills" என்ற தலைப்பில் ஆக்ஸ்பாம் தனது 2021ஆம் ஆண்டின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
📍கொரோனா காலக்கட்டத்தில் மட்டும் (மார்ச் 2020 - நவ.2021 வரை) இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 23.14 லட்சம் கோடியில் இருந்து 53.16 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. (2/7)
📍இதற்கு நேர்மாறாக, 2020ல் மட்டும் 4.6 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் தீவிர வறுமையில் வீழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
📍"ஐநா சபையின் கூற்றுப்படி, இந்த எண்ணிக்கை உலகளாவிய புதிய ஏழைகளில் கிட்டத்தட்ட பாதியளவு," என்று ஆக்ஸ்பாம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. (3/7)
உலகப் புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, இதுவரை எந்த சமூக ஊடக பக்கங்களிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் இருந்தார்.
ஐநா அகதிகள் அமைப்பின் சிறப்புத் தூதராக இருக்கும் இவர், தனது முதல் Instagram பதிவாக ஒரு #ஆப்கானிஸ்தான் பெண்ணின் கடிதத்தை பகிர்ந்துள்ளார். (2/4)
"இது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு இளம்பெண்ணிடம் இருந்து எனக்கு அனுப்பப்பட்ட கடிதம். இப்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் சமூக ஊடகங்களில் தொடர்பு கொள்ளும் திறனை இழந்துள்ளனர்.... (3/4)