தமிழுலகின் மிகப் பிரபலமான பின்னணி இசை, மெல்லிசைப் பாடகர் திரு #டிஎம்சௌந்தரராஜன்#TMS பிறந்த நாள் மார்ச் 24 1922. இன்று அவரின் நூறாவது பிறந்த நாள். இசைத் துறையில், கோலிவுட்டில் அவரை பாராட்டும் கொண்டாட்டம் ஏதும் உள்ளதா? தமிழக அரசு இந்தத் தமிழருக்கு (பிறந்தது மதுரை, சௌராஷ்டிரர்
என்றாலும் தமிழ் அவருக்குத் தாய் மொழி போலத் தான்.) விழா எடுக்க வேண்டும். மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். இவர் கர்நாடக இசையை முறையாக பயின்றவர். கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் ராதே
என்னை விட்டுப் போகாதேடி தான் இவரின் திரையுலக முதல் பாடல். நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி கால அடையாளம். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன் இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு விட்டு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப்
வைத்துக்கொண்டார். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போது தான்!டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும் `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’ `உள்ளம் உருகுதய்யா முருகா’, `சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா’, `மண்ணானாலும் திருச்செந்தூரில்
மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்! இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினி, கமல் என்று பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான, தனித் தனி குரலில் பாடி, அந்த நடிகர்
முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே! 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய `கற்பகவல்லி நின் பொற்பதங்கள்
பிடித்தேன்' நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இப்பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெறும். அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்!
அடிமை பெண் படத்தின் போது டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். `பாடி முடித்து
தான் போக வேண்டும்’ என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார். அந்தப் பாடல் வாய்ப்பு இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்தது. அந்தப் பாடல்தான். `ஆயிரம் நிலவே வா!’
பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில்
விருப்பம் உள்ளவர். `இல்லாட்டா ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா! பாவம், டி.எம்.எஸ்ஸீக்கு என்ன கஷ்டமோன்னு உச்சுக் கொட்டுவான். அதனால் இந்த வெளிவேஷம் தேவையா இருக்கு’ என்பார்!கவிஞர் வாலியை த் திரை உலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை கடைசி வரையிலும் மறவாமல் `இப்போ நான்
சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ் போட்டது’ என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்வார் வாலி! `நீராரும் கடலுடுத்த’ என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், `ஜன கண மன’ என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன் வராத நிலையில் டி.எம்.எஸ் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்ததனர்.
கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். கண்ணதாசன் எழுதிய `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும், அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்’என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் சாகவேண்டும் என்பதை `வாடவேண்டும்’ என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்! காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த
பக்திகொண்டவர். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை `கற்பகவல்லி’ பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்! ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக உருவான செம்
மொழியான தமிழ்மொழியாம் என்ற பாடலே டி. எம். எஸ் இறுதியாக பாடிய பாடலாகும். நவரசங்களிலும் பாடியிருக்கிறார்.
மறைந்தது: மே 25, 2013
அவர் ஒரு சகாப்தம். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர். தமிழர்களாகிய நாம் பெற்ற வரம். அவரை அன்புடன் நினைவு கூர்ந்து போற்றுவோம்!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava
Namaskaram. I am Dr.Venkataraghavan, an eye surgeon. My wife, Gayathri Venkataraghavan is a musician and both of us owe everything in life to the boundless Grace of Sri Maha Periyava. I just have an experience to share with all of you. Many years back about (12 to
13), a Muslim gentleman walked into my clinic. Seeing Sri Maha Periyava’s photo, he bowed in reverence and mentioned that Sri Maha Periyava is a great sage. I was surprised and asked him how he knew about Sri Maha Periyava. The Muslim gentleman shared his experience which I
shall present in the first person account as narrated to me. “Sir, I was a linesman in electricity board about 30 years back. We in a group of 5 or 6, went to the Kanchi Matham to attend to a fault. Sri Maha Periyava who was seated there, gestured me to come and queried whether I
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இறைவனின் பாதம் ஒன்றே கதி என்று நினைத்து அவனது சரணங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இறைவன் நிச்சயம் நற்கதியைத்தான் அருள்வான் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படிப் பட்ட அந்த இறைவனின் சரணத்தைக் கெட்டியாகப் பற்ற வேண்டியது நம் கடமை. ஸ்ரீ ராமருக்கு சரணாகத
வத்ஸலன் என்ற ஒரு திருநாமம் உண்டு. ராமாயணத்தில் பால காண்டம் துவங்கி, யுத்த காண்டம் வரை இந்த சரணாகதி தத்துவத்தை மிகவும் அழகாய் பார்க்கலாம். #பாலகாண்டத்தில் தேவர்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணன் இடத்தில் சரணாகதி செய்கிறார்கள். #அயோத்யாகாண்டத்திலபரதன் சரணாகதி மற்றும் குகனோடு சக்யம்.
#ஆரண்யகாண்டத்தில் ரிஷிகள் ராமச்சந்திர மூர்த்தியிடம் சரணாகதி செய்கிறார்கள். #கிஷ்கிந்தாகாண்டத்தில் சுக்ரீவன் சரணாகதி. #யுத்தகாண்டத்தில் விபீன் சரணாகதி செய்கிறார். இதில் விபீஷண சரணாகதிக்குத்தான் தனியொரு பெருமையும், விசேஷமும் இருக்கும். சரணாகதி லட்சணம் என்பது பரிபூர்ணமாக இருந்தது
ஸ்ரீரங்கம் #நம்பெருமாள் பெயர் வர காரணம் -
வைகாசி 17, வைஷ்ணவர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு நாள். அரங்கன் 48 ஆண்டுகள் வனவாசம் சென்று திரும்பி வந்த நாள்! இஸ்லாமிய ஆட்சி இந்தியாவில் ஏற்பட்ட போது, 12 ஆம் நூற்றாண்டில் இந்துகளின் கோவில்களும் கோவில் சொத்துக்களும் அவர்களால் பெருமளவு
சூறையாடப்பட்டன. மதுரை, ஸ்ரீரங்கம் என பிரசித்தி பெற்ற பல கோவில்கள் தாக்கப்பட்டு அங்கிருந்த விக்ரகங்கள் மற்றும் பெரும் செல்வங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. 1310 ஆம் ஆண்டு படையெடுப்பின் போது, திருவரங்கத்தின் உற்சவர் அழகிய மணவாளன் கவர்ந்து செல்லப்பட்டார். உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர்
பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து டெல்லி வரை சென்று அழகிய மணவாளனை மீட்டு வந்தனர் ஆனால், 1323 ஆம் ஆண்டு இஸ்லாமிய படையெடுப்பின் போது, பிள்ளை லோகாச்சாரியார் என்கிற வைணவப் பெரியவர் மூலவர் ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் சுவர் எழுப்பி மறைத்து
ஏன் #நாலு#நான்கு என்கிற எண்ணிக்கை/சொல் விசேஷம்?
நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க.
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல.
நாலு காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல.
நாலு ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்.
அவரு நாலும் தெரிஞ்சவரு, நாலும் புரிஞ்சவரு.
நாலு வார்த்த நறுக்குன்னு
கேக்கணும்.
நாலு பேருக்கு நன்றி.
இப்படி நாலுக்கு ஏக மரியாதை! இந்த நாலு வேறு எங்கெல்லாம் வருகிறது என்று பார்ப்போம்.
சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு நாற்பது மற்றும் எட்டுத் தொகையில் நானூறு, பிரபந்தத்தில் நாலாயிரம் என 4 வரும்.
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்” ஔவையாரின் நால்வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.
நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, அக நானூறு, புற நானூறு, நாலாயிர திவ்ய பிரபந்தம்!
தவிர சொலவடை, நாலும் இரண்டும் சொல்லுக்கு
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் காஞ்சி மாவட்டத்தில் உள்ள அய்யங்கார்குளம் என்ற ஊரில் தான் இந்த அதிசய கோவிலுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு செல்லும் வழியில் காஞ்சியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இருக்கிறது கலவை கிராமம். இங்குதான் #சஞ்சீவிராயர்_ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்து
உள்ளது. முன்புறத்தில் நெடிதுயர்ந்த தூண்களுடன் காட்சி தரும் இந்தக் கோவில் உள்ளது. சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு ஆஞ்சநேயர் பறக்கும்போது மலையை ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றினாராம். அப்போது மலையிலிருந்து ஒரு சிறு பாகம் கீழே விழ, அந்த இடத்தில் சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர்
கோயில் உருவானதாக நம்பிக்கை. 1585-1614ல் விஜயநகரை ஆண்ட வேங்கடபதி என்ற மன்னனின் அமைச்சராகப் பணி புரிந்தவர் ஸ்ரீலட்சுமி குமாரதேசிகன். அவர் ஒரு முறை ஸ்தல யாத்திரை வந்தபோது இந்த இடத்தில் தங்கினார். அப்போது அவருடைய கனவில் ஆஞ்சநேயர் வந்து அருள்பாலித்தார். எனவே அவர் இக்கோயிலை கட்டினார்.
#மகாபெரியவா ஒருமுறை திருவாடனை என்னும் ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது. பெரியவா அன்று காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது, ஒரு சிறு சப்தம் கூட எழுப்பாமல், முழுமையான மௌனத்தில் இருப்பார். வருடத்தில் ஒருநாள் அவர் இப்படி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம். முப்பது
வருடங்களுக்கும் மேலாக அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது. ஒரு முறை அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் பெரியவா தம் மௌன விரதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. திருவாடனையிலிருந்து வந்திருந்த பக்தர் கூட்டத்தில் சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ்
ஆட்சியின்போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்தவர்.
மடத்துச் சிப்பந்தி வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும் பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவா மௌனமாகவே ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார். சங்கரன் முறை வந்தபோது, அவரையும்