இந்தியாவில் ஆயுள் தண்டனை என்பது கண்டிப்பா 14 ஆண்டுகள். அதன் பிறகு விடுக்கலாம். அல்லது செய்யாமல் இருக்கலாம்.
மொத்தமாக 31 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். இதில் 24 ஆண்டுகள் தனிமைச் சிறை. 2/n
2014
போதுமான ஆண்டுகள் சிறையில் இருந்ததால் தமிழ்நாடு அரசு தன்னிச்சையான முடிவு எடுக்கலாம் என்றது நீம. ஜெ அரசு உடனே விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதை வைத்துக்கொண்டு, ஏன் விடுதலை செய்ய கூடாது என்று வாதிட ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு 3/n
2016
இறுதியாக நீதிமன்றம் மத்திய அரசின் வாதங்களை நிராகரித்து மாநில அரசின் முடிவில் விட்டு விட்டது. ஆனா இப்போ முடிவை ஆளுநரிடம் கொடுத்து விட்டது.
அதில் இருந்து ஆளுநர்(கள்) இந்த முடிவை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்கள். 4/n
ஜனவரி 2021
#பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையில் ஆளுநர் முடிவு எடுக்காததால் அதிருப்தி அடைந்த நீதிமன்றம், நாங்களே நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என்றது.
பிப்ரவரி 2021
உடனே ஆளுநர் தன்னிடம் இருந்த கோப்புக்களை சனாதிபதிக்கு அனுப்பி பொறுப்பை மாற்றினார். 5/n
ஆளுநர் தன்னோட பொறுப்பை ஏன் தட்டிக்கழிக்கிறார்? தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானத்தோடு ஒத்துப்போவதில் ஆளுனருக்கு என்ன பிரச்சினை. 20 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் எல்லாம் விடுக்கப்படுகிறார்கள். #பேரறிவாளன் 31 ஆண்டுகள் இருந்துவிட்டார் என்று கேள்விகள் எழுப்பிட்டது நீதிமன்றம். 6/n
நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், காவ்வி இருவரும் மத்திய அரசை நோக்கியும் கேள்விகள் எழுப்பினார்கள்.
ஆளுனருக்கு அதிகாரம் இல்லை அவர் முடிவு எடுக்க முடியாது என்பது இந்திய நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எதிரானது. மாநில அரசின் முடிவின் படி ஆளுநர் செயல் பட வேண்டும் என்றார்கள்.
கரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி பற்றி சில சந்தேகங்களும் பதில்களும்.
1) கரோனா வைரஸ் எதனால் ஆபத்தான வைரஸ்?
கரோனா வைரஸ் ஒரு வைரஸ். வைரசுக்கு பொதுவா மருந்து கிடையாது. பேக்டீரியாவுக்கு உண்டு. வைரஸை அழிக்க நம் உடம்பு தயாராக வேண்டும். சண்டை போட வேண்டும். #COVID19#Covishield#Covaxin 1/n
குளிர் காலத்தில் வரும் சளி, காய்ச்சல் வைரஸ்களால் வரலாம். ஆனா அவை பெரும்பாலும் ஆபத்தானவை அல்ல. பெரிய பாதிப்பு வரும் முன்பு நம் உடம்பு சண்டையிட்டு அழித்து விடும். ஆனா கரோனா வைரஸ் மிக வேகமாக நம் உடம்புக்குள் பரவுவதோடு, நம் நுரையீரலை பாதிக்கும். #COVID19#Covishield#Covaxin 2/n
உடம்புக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. மூளை முதல் உள்ளங்கால் வரை உறுப்புகள் பாதிக்கப்படலாம். அதனால்தான் கரோனாவில் இருந்து மீண்டு வர அதிக காலம் ஆகும். ஆனா அதிர்ஷ்டவசமாக பலருக்கு நம் உடம்பு நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்து காப்பாற்றி விடும். #COVID19#Covishield#Covaxin 3/n
உடம்புக்குள் மருந்துகள் செலுத்தப்படும்போது அதில் முக்கியமானது அந்த மருந்து தண்ணீரில் கரைய வேண்டும். ஆனால் தண்ணீரில் கரைந்தால் அது எங்கே போக வேண்டுமோ அங்கே போய் சேராது. அதோடு நம் உடம்பு அதை உடனே வெளியேற்றி விடும். அதனால் vesicles எனப்படும் particles உள்ளே அனுப்பப்படும்.
இந்த vesicles இரண்டு பகுதிகள் கொண்டது. வெளிப்புறம். பெரும்பாலும் lipids போன்ற அமைப்பில் இருக்கும். Cancer மருந்துகள் பெரும்பாலும் தண்ணீரில் குறையாது. உதாரணம் paclitaxel. இது இந்த முறையில் உள்ளே அனுப்பப்படும். #cancer
இப்போ இந்த vesicles க்கு இரண்டு வேலைகள். மருந்தை நீண்ட நேரம் உடம்பில் (சிறுநீர், கழிவு) வழியா வெளியே தள்ளாமல் வைத்திருக்க வேண்டும். அதற்கு அந்த carrier எந்த பொருளால் கட்டமைக்க பட்டிருக்கிறது என்பது முக்கியம்.
எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்த முதல்வர் கலைஞர். எமர்ஜென்சியின் எந்த பிரச்சினையும் தமிழ்நாட்டில் நடக்காமல் பார்த்துக்கொண்டார். மற்ற மாநிலங்களில் இருந்து எமர்ஜென்சியால் பாதிக்கப்பட்ட தலைவர்கள் தமிழ்நாட்டில் அடைக்கலம் அடைந்தார்கள். அதே நேரம் #MGR எமர்ஜென்சியை ஆதரித்தார். #ADMK#DMK
எமர்ஜன்ஸியை கொண்டுவந்த இந்திராவையும், எமர்ஜன்ஸியையும் ஆதரித்தவர் எம்ஜிஆர். எமர்ஜன்சி காலத்தில் எம்ஜிஆர் கலைஞரை எதிர்த்து இயங்க ஆதரவு அளித்தவர் இந்திரா. இந்திரா ஆதரவுடன் எம்ஜிஆர் அளித்த புகாரில் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது ஜனவரி 1976.
இப்படி தமிழ்நாட்டில் எமர்ஜென்சி எதிர்ப்பில் கலைஞர் உறுதியாக இருந்ததால் தமிழ்நாட்டில் அடைக்கலம் அடைந்த தலைவர்களில் சிலர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சுப்பிரமணியன் சாமி.
பாம்பு கடியால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 50,000 பேர் இறக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 52,000 பேர். அதாவது ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒருவர்.
எதனால் இது சரிசெய்யப்படாமல் இருக்கிறது? ஏனெனில் இதில் பெரும்பாலோனோர் ஏழைகள், விவசாயிகள்.
#SnakeBite#India#Science#Snake 2/n
உலகம் முழுதும் ஆண்டுக்கு தோராயமாக 1 லட்சம் பேர் இறக்கிறார்கள். அதில் பாதி இந்தியாவில். 50,000 பேர். ஆண்டுக்கு.
அதோடு இதில் இருந்து பிழைப்பவர்களுக்கு உறுப்பு இழப்பு, கிட்னி பாதிப்பு, கோரமான வடுக்கள், உளவியல் பாதிப்பு எல்லாமே.
#SnakeBite#India#Science#Snake 3/n
இந்தியாவில் கிட்டத்தட்ட 300 பாம்பு வகைகள் இருக்கின்றன. அவற்றில் கிட்டத்தட்ட 60 விஷத்தன்மை உடையது. கிராமங்களில் அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் விஷமுறிவு மருந்துகள் இருப்பதில்லை.
Priyanka Kadam, Snakebite Healing and Education Society
நேர்முக தேர்வு பற்றியும், அதன் முறைகேடுகள் பற்றியும் ட்வீட் கண்ணில் பட்டது.
என்னோட கதை வேற. ஆனா வேலை கிடைக்கல என்னும் முடிவு ஒன்றேதான்.
PhD, Postdoc எல்லாம் முடித்தும் இந்தியாவில் கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைப்பது குதிரை கொம்பு. 1/n
இந்திய அரசு ஏதோ பெரிய மனசு மனசு பண்ணி கொஞ்சம் fellowships (Ramanujam, Ramalingaswami) என்று வைத்திருக்கிறது. இதெல்லாம் project எழுதி "நேர்முக தேர்வு" மூலம் செலக்ட் ஆகனும். 2/n
அதற்கடுத்து CSIR-JRF என்று ஒன்று கடந்த சில வருடங்களாக இருந்தது. ஆனா இப்போ இல்ல.
வெளிநாடுகளில் postdoc ஆக இருப்போருக்கு மட்டும் நடத்தும் சேலெக்ஷன் இது.
இதோட நேர்முக தேர்வு நடந்து ஒவ்வொரு பாட பிரிவிலும் 10 பேர் என்ற அளவில் தேர்வு செய்வார்கள். 3/n
#Universe 1/n #Aliens இருக்கிறார்களா?
வானத்தை பார்த்துக்கொண்டே ஒரு அடி தூரத்தில் நம்ம கட்டை விரலை வைத்து அந்த இடத்தில் மட்டும் கண் பார்வையை தடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த கட்டைவிரல் அளவுள்ள வானத்தில் அருகிலும், தூரத்திலுமாக ஆயிரக்கணக்கான கேலக்சிகள் உள்ளன.
#Universe#Aliens 1/n
நாம் இருப்பது Milky Way என்னும் கேலக்சி. மொத்தம் நமது டெலஸ்கோப்புகள் பார்வையிட முடிந்த பிரபஞ்சத்தில் (Observable universe) கிட்டத்தட்ட 200 பில்லியன் (200,000,000,000 - இரண்டு லட்சம் கோடிகள்) கேலக்சிகள் இருக்கலாம் என்பது அனுமானம்.
#Universe#Aliens 3/n
நாம் இருக்கும் Milky Way அப்படி ஒரு கேலக்சி. சூரியன் அதில் ஒரு நட்சத்திரம். இந்த Milky Way இல் மட்டும் சூரியனை போல 100 முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கலாம். அதில் சூரியனை போல எல்லாவற்றுக்கும் கோள்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.