👇👇
இலங்கை தமிழர்களின் நில/இன விடுதலைக்கு போராடிய பிராபாகரன், அந்த மக்களுக்கு தலைவர். அவ்வளவுதான்.
அவருக்கும் தமிழகத்தின் திராவிட அரசியலுக்கும் தொடர்பில்லை.
அதுபோல தமிழ்நாட்டு திராவிட அரசியல் ஈழவர்களுக்கு தொடர்பற்றது.
1/
சீமான் போன்ற மங்குனிகள் வயிறு வளர்க்க பேசுவதால், ஈழ அரசியலும் திராவிட அரசியலும் ஒன்றல்ல.
2/
அல்லது, திராவிட சித்தாந்தப்படி தான் வாழ்வதாக சொல்லியதும் இல்லை.
அப்படியிருக்க, ஏன் திமுக என்ற அரசியல் கட்சி குரல் கொடுக்க வேண்டும்?
3/
தேர்தல் கூட்டணி என்பது சித்தாந்த கூட்டணியா என்ன?
அண்ணாவை அவமதித்தால் திமுக போராடுவது என்பது அந்தக் கட்சியின் அரசியல் சித்தாந்தத்தை அதன் தலைவரை அவமதிப்பதால்.
4/
அவருக்கு கொடுக்கப்பட்ட தமிழக பெரும்பான்மை மக்களின் ஆதரவு என்பது அவர் ஈழமக்களின் போரில் முன்னின்ற போராளி என்பதால் மட்டுமே. அவரின் சித்தாந்தங்களுக்காக அல்ல.
5/
ஒரு போர்க்கால தலைமையிடம் அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. யாசர் அராபத் போல பிராபாகரன். ஆனால்,என் மொழி பேசுபவர். என் மக்களின் பண்பாட்டு வரலாற்று தொடர்புடைய மண் என்பதால் யாசர்அராபத்தைவிட அதிக கவனம். அவ்வளவே.
6/
👇👇👇
இணையதளத்தை control செய்ய வேண்டும் என்பது என்ன மாதிரியான கேள்வி?
மனுசுயபுத்திரன் கட்சியில் பொறுப்பில் இருக்கிறார். அவரை கட்சி கண்டிக்கவேண்டும் என்பது சரியான எதிர்பார்ப்பே.
7/
மனுசுயபுத்திரன் செய்தது தவறு என்றால்,அந்த மொக்கை கவிதை தொழிலாளியை விமர்சிக்கலாம். இதற்கும் மனுசுய ஆட்டை திமுக கம்பத்தில் கட்டித்தான் கேள்வி கேட்கவேண்டுமா?
8/
இருவரும் குற்றவாளிகள்.வேறு வேறு காரணங்களுக்காக.
ஆனால் சட்டசபை & தனியார் இடம்
இரண்டையும் ஒரே தராசில் வைத்து கேள்வி கேட்பது சரியா?
10/
👇👇
வீரப்பன் என்ற குற்றவாளியின் குடும்பத்தின் பிரச்சனையோ , காடுவெட்டி குருவின் பிரச்சனையோ தமிழக மக்களின் அனைவருக்குமான பிரச்சனை கிடையாது.
இவர்கள் சாதி அல்ல கட்சி சார்ந்தவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கலாம்.
மற்றவர்களுக்கு அப்படி அல்ல.
11/
அதுபோலவே கா.வெ.குரு வை மாவீரன் என்று எழுதுவது சொல்வது.
12/
ஓட்டரசியலில், கசாப்புக்கடைக்காரனை நோக்கி நடக்கும் ஆட்டைக்காக்க, அந்த ஆட்டோடு பழகி அதன் மொழி பேசுவது சரியே.Intent முக்கியமானது.
13/
I try to see the intent.
14/
👇👇
நாடகக்காதல் என்றால் என்ன எழவு??
உண்மையானபொய் அல்லது பொய்யான உண்மை...இப்படி ஏதாவது இருக்க முடியுமா?
கள்ளக்காதல், நாடகக்காதல் என்பவை பொருளற்ற சொற்கள். ஏதோ சில கூமுட்டைகள் சொல்கிறார்கள் என்பதற்காக அதற்கான பொருள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டியது இல்லை.
15/
Q1://ஹிந்தியாவுக்கும் நீங்க சொல்லும் திராவிட நாட்டுக்கும் என்ன தொடர்பு அண்ணே?//
A1 : #திராவிடம் என்பதை நாடு என்று எங்காவது சொல்லியுள்ளேனா? அதை சித்தாந்தம் என்றே சொல்கிறேன். அது இன அடையாளமாக, சமத்துவ அரசியல் அடையாளமாக பல பொருளில் வரும்.
A2: தனிநாடாகப் போகாமல் ஏன் தமிழ்நாடு இருக்கிறது என்ற intent உங்கள் கேள்வியில் உள்ளது. அதைத்தான் கேட்கிறீர்களா? Please clarify.
A3: மொழித்தொடர்பு சிங்கப்பூருக்கும் உள்ளது ,ஈழத்திற்கும் உள்ளது ,மொரீசியசுக்கும் உள்ளது. ஈழம் அதில் ஒன்று அவ்வளவே.
இந்தியாவில் வடக்கு மாநிலங்களுடன் ஒன்றிய அரசியல் தொடர்பு.
A4:அவர்கள் ஏன் ஏற்கவேண்டும்?
ஈழத்தவர்களளோ அமெரிக்காவோ ஏற்பது இல்லை. அதனால் என்ன?
எனக்கான தேவை உள்ளது. நமக்கான தேவை உள்ளது.
A5:உண்மை.அதே நேரத்தில் தமிழகத்தில் தலைகீழாக நடக்கிறது.நாம் இதற்காக போராடவேண்டும்.அதுவே முதன்மையானது.ஒன்றிய அரசியலில் நிறைய உள்ளது பேச
சென்னை மாகாணமாக இருந்து சென்னை தலைமையிடமாக இருந்த பல மொழி பேசியவர்கள் இருந்த மாநிலம்.
மொழிவாரி பிரிப்புக்குப்பின் தங்கிவிட்டவர்களை இப்படிச் சொல்வதற்கும் , பாகிச்தானுக்கு போ என்று இசுலாமியரைச் சொல்வதற்கும் என்ன வேறுபாடு உள்ளது தோழர்?