என்னை நானே கேட்டு கேள்வியும், அதற்கான பதில்களும்.

ஒண்ணுமே இல்ல, நாளைக்கே #சீமான் போய் ஒரு பெரிய கட்சிக் கூட கூட்டணி வெச்சிக்கிட்டு, இருக்கற வாக்கு சதவிகிதத்தக் காமிச்சி ஒரு 10-20 கோடி வாங்கிட்டு, ஒரு 2 எம்.பி சீட்டு வாங்கி, மேடைல மட்டும் சமூக நீதி, சாதி ஒழிப்பு,மயிறு மட்டைன்னு
பேசிக்கிட்டு.

'இது கொள்கைக் கூட்டணி இல்ல தேர்தல் கூட்டணி, தமிழர்களின் நலனுக்கான கூட்டணி இது' ன்னு சொல்லி ஒரு ரெண்டு எம்.எல்.ஏ சீட்டு வாங்கி , திமுக கூட கூட்டணி வெச்சி, எம்.எல்.ஏ ஆகி, ராகுல் காந்தியப் பிரதமர் வேட்பாளரா ஏத்துக்கிட்டு, ஒரு 100 கோடி ஆட்டையப் போட்டு செட்டில் ஆக,
என்ன மாதிரி லட்சோப லட்சம் படித்த சிந்திக்கக் கூடிய இளைஞர்கள பொதுவுல அவமானப்பட வெக்க சீமானுக்கு எவ்ளோ நேரம் ஆகும்.

சீமான் ஒரு 50 கோடி வாங்கி செட்டில் ஆகக்கூடாதா.

பாஜகவோ இல்ல அதிமுக இல்ல திமுக ஏதாவது ஒரு கட்சி 50கோடி தராதா.

ஒரு வேள சீமான் அப்டி செஞ்சிருந்தா??
தலைவான்னு பொங்கியிருப்பானுங்க.

காரணம் இவனுங்களுக்கு சோரம் போறவங்க தான் தலைவனுங்க. இவனுங்க தலைவனா ஏத்துக்கிட்டவனுங்க லிஸ்ட்டுலாம் எடுத்துப் பாரு, பூரா திருடனுங்க தான். சந்தர்ப்பவாத அரசியல் பேர்வழிங்க தான். ஒரு யோக்கியனுங்கள உன்னாலக் காட்ட முடியாது.
சரி அப்படியே சீமான எடுத்துக்கங்க, 10 வருஷமா ஒத்த ஆளா நின்னு, தமிழ் தேசியங்கற வெறும் அறையில மட்டும் பேசப்பட்ட தத்துவத்தை வெகுஜனப்படுத்தி, அம்பலத்தில் ஏற்றி, இங்க இல்ல உலகம் முழுக்கக் கட்டி எழுப்பியிருக்கான், ரெண்டு சீட்டுக்கோ, ரெண்டு சூட்கேஸுக்கோ சமரசமில்லாம சண்ட போட்றுக்கான்.
பாஸ்போர்ட்ட புடுங்கியாச்சு வெளிநாடு போக முடியாது, 100+ கேஸ், இன்னைய வரைக்கும் அவன் யாருக்காக அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கானோ அவன் தான் சீமான ஆமைக்கறி, இட்லிக்கறின்னு நாளெல்லாம் கேவலப்படுத்திக்கிட்டு இருக்கான். பெண்கள சம உரிமை கொடுத்தப் பெண்கள் தான் முகநூல்ல
சீமான அசிங்கபடுத்திக்கிட்டு இருக்காங்க.

சீமானு ஒருத்தன் இல்லனா, இன்னிக்குத் தேசியத் தலைவர் #பிரபாகரன் னு ஒருத்தர இலங்கைத் தீவிரவாதின்னு வரலாறு எழுதியிருப்பானுங்க. வீரப்பனுக்கு நீ என்ன பேரு வெச்சிருந்த, சந்தனக் கடத்தல் காரன், கொள்ளைக்காரன்,கொலகாரன்னு.
இதே வரலாறத்தான் சீமானுக்கும் எழுதியிருப்பானுங்க திராவிடக் கோஷ்டிங்க.

சீமான் என்னப் பண்ணாரு, சினிமா அடிமையா இருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள அரசியல்மயப் படுத்தினாரு, அரசியல் சாக்கடைன்னு சொன்னவனை எல்லாம், 'சரி சாக்கடை தான், அது உங்கப்பனும் ஆத்தாளும் ஓட்டுக்கு காசு வாங்கிட்டு
உருவாக்குன திராவிடச் சாக்கடை தான்,அத அள்ள வேண்டியது உன் பொறுப்புக் கடமைன்னு எறங்கி உன்னையும் அள்ள வெச்சாரு, தனி ஆளா கட்சி ஆரம்பிச்சி, தொண்டக்கிழியக் கிழியக் கத்தி, இன்னிக்கு நாம் தமிழருக்கு ஓட்டு விழாத வாக்குச்சாவடியே இல்லன்னு சொல்ற அளவுக்கு கட்சிய வலுப்படுத்தினாரு,
கடந்த 10 வருஷத்துல தமிழ்நாட்டுலையே தான் துறையில அசுர உழைப்புனா அது சீமானுடையது. ஜெயமோகனனை விட மிகப்பெரியது சீமானின் உழைப்பு.

60வருட சினிமா அனுபவம், மிகப்பெரிய சினிமா புகழ், பிக் பாஸ் மாதிரி மேடைன்னு இருக்கக் கமலஹாசன விட, ஓட்டுக்கு காசே குடுக்காம, கூட்டணி இல்லாம,
சின்னம் மறைக்கப்பட்டும், 4% ஓட்டு வாங்கியதெல்லாம் இன்னைக்கும் இமாலயச் சாதனை, தமிழக அரசியல் வரலாறப் படிச்சிப்பாரு எம்.ஜி.ஆர் இல்லனா‌ திமுக இல்ல, ஆனா சினிமா பலம், சாதி பலம்னு எதுவும் இல்லாம, இங்க தமிழர்களுக்கான கட்சின்னு ஒன்னு இருந்ததே கிடையாது.
அதத்தாங்குமுடியாம பயந்துக்கிட்டுத் தான் அவனவன் சவுக்கு, சாமான அறுத்துடுவேன் கேச எல்லாம் களமிறக்கியிருக்கான்.

சீமான் மட்டும் இல்லனா இங்க தமிழ் தேசியம்னு ஒன்னு உனக்குத் தெரிஞ்சிருக்காது, திராவிடத்தின் பேரால் எப்படித் தமிழர்களின் உரிமை பறிக்கப்படுகிறதுன்னு தெரிஞ்சிருக்காது,
பிரபாகரன், பூலித்தேவன், மருது சகோதரர்கள், அழகு முத்துக்கோன், வேலு நாச்சியார்னு யார்னே உனக்குத் தெரிஞ்சிருக்காது, முப்பாட்டன் முருகன்னு பேசியிருக்க மாட்ட, தமிழர் மெய்யியல், தமிழர் மரபு இதெல்லாம் பைத்தியக்காரத்தனம்னு பேசியிருப்ப. இது எல்லாத்தையும் ஒத்த ஆளாக் கட்டி எழுப்பனது சீமான்.
ஓட்டுக்குக் காசு கொடுப்பது கேவலம்னு உனக்குக் காமிச்சது யாரு ?இப்டி சொல்லிக்கிட்டே போகலாம்.

திமுகவுல இருந்து வெளிய வர்றவன் அதிமுக போவான் பாஜக போவான்.

அதிமுக வுல இருந்து வர்றவன் திமுக போவான்.

பாஜகவுல இருந்து வர்றவன் அதிமுக போவான்.

ஆனா நாம் தமிழரில் இருந்து வெளியேற்றப்பட்ட
துரைமுருகன், கிட்டு, பாரிசாலன் வரை நாம் தமிழருக்காகத் தான் இன்னைக்கு வர பேசிக்கிட்டு இருக்காங்க, வீடியோ போட்டுக்கிட்டு இருக்காங்க, ஏன்? வேற கட்சில சேர்ந்து காசு பதவி பாத்திருக்கலாம்ல. ஏன்போகல? இந்தக் கேள்விக்கு பதில் தேடு, பின்னாடி கெத்தா மாஸா மீசைய முறுக்கிட்டு சீமான் நிப்பான்.
ஃபேஸ்புக்குல் இருக்கச் சல்லிப் பயலுவ கிண்டல் பண்றான், நக்கல் பண்றான்னு பேசிக்கிட்டு இருக்க,கொஞ்சம் யோசி கிண்டல் பண்ற மொண்ணைங்க யாரு, அவன் வாழ்க்கைல இந்த சமூகத்துக்காக என்ன பண்ணியிருப்பான், அவன் வீட்டு முன்னாடி ஒருமரம் நட்ருப்பானா? அவன் பேச்ச அவன்/அவ பெத்தப் புள்ள கேப்பானா? அண்ணண்
சவுக்கு சங்கர் இத செய்டான்னு சொன்னா அவர் புள்ள செய்யுமா?

ஆனா சீமான் சொல்லி லட்சம் பேரு ரத்தம் குடுத்திருக்கான், இன்னிக்கு உனக்கோ, உன் குடும்பத்துக்கோ ரத்தம் வேணும்னா ஒடனே உன் ஒடம்புல ஏற்றது நாம் தமிழர் கட்சிக்காரன் குடுத்த ரத்தமாகத்தான் இருக்கும்.
தமிழ்நாட்டுலேயே அதிகம் ரத்த தானம் செஞ்சது நாம் தமிழர் குருதிக் கொடை பாசறை தான். அரசாங்கம் 3முறை அவார்ட் குடுக்குது.

நாளைக்கே சீமான் உடல் உறுப்பு தானம் பண்றான்னா ஆயிரம் பேரு பண்ணுவான், சாக்கடைல எறங்கி சுத்தம் பண்ணுடான்னா பண்ணுவான், மரம் நடுவான், நீர் நிலைகள தூர் வாறுவான்.
Because the name is #Seeman.

சொல்றது யாருன்னு முக்கியம்,அவங்களோட ரெபியுடேஷன் ரொம்ப முக்கியம்.

திமுக,அதிமுக, பாஜக,காங்கிரஸ் இன்னும் எந்தக் கட்சிய விட்டு, பதவில பொறுப்புல இருக்க யார் வெளிய போய் வேற கட்சில சேர்ந்தாலும், கூட்டணி வெச்சாலும் அது ஒரு இயல்பான, சாதாரணமான விஷயம்.
ஆச்சரியப்படுறதுக்கு ஒன்னுமே இல்ல. ஆனா நாம் தமிழர் கட்சிய விட்டு ஒரு முக்கியமான பேச்சாளர் போறாருன்னு சொன்னதுக்கே, இப்டி கதறுறான்னா சந்தோஷப்பட்றான்னா ஏன்னு யோசிச்சியா, ஒரே காரணம் சீமான்.

உனக்கு சீமான எதிர்க்க கிண்டல் பண்ண அதிகபட்சம் ஆமைக்கறி, இட்லிக்கறி,
எங்களுக்கு ஆதரிக்க நூறு காரணம் இருக்கு, பின்னாடி நிக்க ஆயிரம் காரணம் இருக்கு, நாம் தமிழர் கட்சிக்கு டெபாசிட்டே வாங்கலனாலும் நாங்க வழக்கம் போல எங்க வேலைய செஞ்சிக்கிட்டே இருப்போம்.காரணம் தோத்தா இழக்க ஒண்ணுமே இல்ல.

அண்ணண்.கல்யாணம் சுந்தரமும், அண்ணண் ராஜிவ் காந்தியும்
எங்கடா போகப் போறாங்க, பிஜேபிக்கா இல்ல திமுகவுக்கா. தமிழ் தேசியத்துல தான இருக்கப் போறாங்க. பிறகு ஏதோ நாலு சில்வண்டு கத்தனா கத்திட்டுப் போறான் இல்ல கட்சிய விட்டுப் போறான்.

நாம் தமிழர் நாலு பேர நம்பி இருக்க கட்சி இல்ல, முப்பாட்டன் முருகனே நம்ம பக்கம் தான்.
சட்டமன்றத் தேர்தல்ல கொறாஞ்சது 50லட்சம் ++ வாக்கு வாங்கி கெத்தா மாஸா கால் மேல கால் போட்டு ஒக்காரும் போது, பல்லு மேல நாக்குப் போட்டு பேசின நாய்லாம், மூக்கு மேல நாக்க வெப்பான் டா.

#நாம்தமிழர்
#NTKforTamilNadu

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Abdullah_

Abdullah_ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Abdullah_twitz

12 Aug
#அதிமுக ஆட்சி முடியபோகிறது அடுத்து என்ன? #திமுக தானே??

ஒரு மன்னன் தன் குடிமகன் ஒருவனை அழைத்து, உனக்கு ஒரு தண்டனை, அங்கே தட்டிலிருக்கும் 100 வெங்காயத்தை திங்க வேண்டும் அல்லது செருப்பால் 100 அடி வாங்கிக்கொள்ள வேண்டும்" என்றான்.

அந்த மனிதன், செருப்படி வாங்கினால் கேவலம் என்று +
எண்ணி, வெங்காயம் திண்பதாக ஒத்துக் கொண்டார்.

அதன்படி வெங்காயம் திங்க தொடங்கினான். 30-35 வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை. எனவே அவன் "மன்னா, என்னால் வெங்காயம் திங்க முடியவில்லை எனவே நான் செருப்படியே வாங்கிக் கொள்கிறேன்" என்றான். +
அதன்படி செருப்பால் அடி வாங்க தொடங்கினான்.

40-50 செருப்படி வாங்கியவன் வலி தாங்க முடியாமல் அலறியபடி தன்னால் செருப்படி வாங்க முடியவில்லை எனவே மீண்டும் வெங்காயமே தின்பதாக கூறினான்.

மீண்டும் சில வெங்காயம் திண்றவனால் அதற்குமேல் முடியவில்லை, எனவே செருப்படி வாங்க தொடங்கினான், +
Read 5 tweets
11 Aug
#இந்து உண்மை வரலாறு? இன்று இந்தியா என்றால் அது இந்து நாடு என்கின்றார்களே பெரும்பான்மையினர்.. அந்த நிலை எதனால் வந்தது?

வட நாட்டில் தோன்றிய பௌத்த மற்றும் சமண மதங்கள் தமிழகத்தில் கூட வேருன்றி இருந்த சூழ்நிலையில் எவ்வாறு தங்கள் செல்வாக்கினை இழந்தன? +
இந்து மதம் என்றால் என்ன? இது தான் உலகில் மிகவும் பழமையான மதம் என்கின்றார்களே..உண்மையா?

இந்தக் கேள்விகளுக்கு பதிலினைக் காண நாம் முதலில்
இந்து மதத்தினை சற்று வரலாற்று சம்பவங்களை வைத்துப் பார்ப்போம்.!

1794..

கொல்கத்தா - பிரிட்டுசு இந்தியாவின் அன்றைய தலைநகரம்.!! +
தங்களின் ஆளுமைக்குட்பட்ட இந்தியாவின் மக்களை அவர்களின் மதங்களுக்கு உரிய சட்டங்களை வைத்துப் பிரித்து அவர்களுக்கு சட்டங்களை இயற்ற அப்போதைய பிரிட்டுசு உச்ச நீதி மன்றத்தின் #நீதிபதி சர் வில்லியம் சோன்ஸ் (sir William Jones) முயன்றுக் கொண்டு இருக்கின்றார். அவருக்கு முன்னே ஒரு சோதனை.+
Read 8 tweets
8 Aug
#இந்தி திணிப்பால் அழிந்த மாநிலங்களின் தாய் மொழிகள்.

இந்தி கற்றிருந்தால் நமது மாநிலம் இன்னும் முன்னேறியிருக்கும்
இந்தி கற்கவிடாமல் நம் மாநிலத்தை பின்தங்கவைத்துவிட்டார்கள் என்கிற சங்கிகளே.!

இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த #பீஹார் இன் நிலையை பாருங்களேன்.+
பீஹாரின் தாய்மொழி #போஜ்புரி மற்றும் #மைத்திலி.

உத்திரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான். அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள்.

வடமேற்கு உ.பியின் தாய்மொழி #பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி #புந்தேல்கண்டி வடகிழக்கு உ.பி யின் +
தாய்மொழி #போஜ்புரி,#பிரதாப்கர் போன்ற மத்திய உ.பி யில் பேசப்படுவது #ஆவ்தி,பிறகு #கன்னோஜி என்கிற மொழியும் பேசப்படுகிறது.

அடுத்ததாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான். போதாதற்கு #சமஸ்கிருதம் additional அலுவலக மொழி.
ஆனால் உத்ராகாண்டின் உண்மையான தாய்மொழி #கடுவாலி
Read 9 tweets
10 Jul
*தமிழர்களின் நீர்நிலைகள் பற்றிய தொகுப்பு*

01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

03. *ஆழிக்கிணறு* - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு +
04. *ஆறு* - (River) – பெருகி ஓடும் நதி.

05. *இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

06. *உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

07. *ஊருணி* -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை. +
08. *ஊற்று* – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

09. *ஏரி* -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

10. *ஓடை* (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர். +
Read 16 tweets
30 May
1967 - ஆம் ஆண்டுவரை பெரியாரைப் பற்றி கருணாநிதி உள்பட திமுகவினர் என்னவெல்லாம் பேசினார்கள்? முரசொலியில் கருணாநிதி என்னவெல்லாம் எழுதினார்? என்பவையெல்லாம் கனிமொழி, தயாநிதி மாறன் போன்றோருக்கு தெரிய வாய்ப்பில்லை. இதனைத் தொடர்ந்து பெரியாருக்கு முரசொலி பத்திரிகையில் கருணாநிதியால் +
கேட்கப்பட்ட கீழ்த்தரமான கேள்விகளில் சில: - 1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன?

2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட நாயக்கரின் பூர்வீகம் எது?

3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள்?

4. இவர் 5 - ஆம் வகுப்பு படிக்கும்போது இடுப்பை கிள்ளியதால் +
இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன?

5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிரூபணமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய பெண் குழந்தை, யாருக்குப் பிறந்தது?

6. எதனால் மனைவிமேல் கோபம் கொண்டு இவர், காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார்? +
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!