#ரஜினிகாந்த் அவர்களின் அறிக்கை என்று ஒன்று, அதற்கு அவரின் ட்விட்டர் பதிவு. இதை வைத்து இன்று அனைத்து ஊடகங்களும் விவாதம் நடத்தியது. அதில் பேசியவர்களும் & நெறியாளர்களும் முக்கியமாக ஒன்றில் குறியாக இருந்தனர். ஒன்று அவர் புனிதர் என்பதிலும் & வரும் தேர்தல் #திமுக.& #அதிமுக என 1/15
சொல்வதிலும் குறியாக இருந்தனர். #கமல்ஹாசன் அவர்களின் பெயரை மறந்து கூட உச்சரிக்க கூடாது என்பதில் கவணமாக இருந்தனர். #ரஜினிகாந்த் உடல்நலம் பற்றி அனைவரும் கவலைப்பட்டனர். அவர் அரசியலுக்கு வந்தால், அவர் உடல்நிலை மிக மோசமாகிவிடும் என்பதை பற்றி பேசினார்கள். தமிழகத்தை காப்பாற்றவும், 2/15
கெட்டுப் போன சிஸ்டத்தை சீரமைக்கவும் நான் அரசியலுக்கு வருவேன் எனக் கூறிய #ரஜினிகாந்த் இன்று தனது உடல்நிலையை காரணம் காட்டியுள்ளார். அது அவரின் நிலைப்பாடு. அதில் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், இன்று பேசியவர்களும் & ஊடகங்களும் அதற்கு முட்டுக் கொடுத்ததே, முடியவில்லை. 3/15
பேசிய அனைவரும் சற்றே அனுபவம் வாய்ந்தவர்கள் தான். அவர்களிடம் கேட்கிறேன், காந்தி போராடிய போது அவருக்கு வயது என்ன? அவரின் உடல் நிலை என்ன? பெரியார் தமிழகமெங்கும் தனது மூத்திரப் பையை தூக்கிக் கொண்டே சென்று, அனைத்து மேடையிலும் ஊர்வலத்திலும் கலந்து கொண்டாரே, அவரின் உடல் நிலை என்ன? 4/15
ராஜாஜி, காமராஜர், மொரார்ஜி, ஜெகஜீவன்ராம், இங்கே தமிழகத்தில் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா இவர்களெல்லாம் கடைசி காலத்தில் பூரண உடல் நலத்தோடு தான் அரசியல் செய்தார்களா? மக்களை சந்தித்தார்களா? அவர்களுக்கு எல்லாம் இருந்ததை விடவா மிக மோசமான நிலையில் உள்ளார் #ரஜினிகாந்த்
5/15
தமிழகம் முழுக்க சிஸ்டம் கெட்டுப் போயிருக்கு, அதை தன்னால் தான் மாற்ற முடியும் என்று வீர வசணம் பேசியவர், இன்று பின் வாங்குகிறார் என்றால் உடல் நிலை மட்டும் தான் காரணமா? என்னமோ, அவர் பெரிய புனிதர் மாதிரி பேசுகிறால்கள். அவர் வராத போதும் ஒரு நல்ல யோக்கியமான பிம்பத்தை கட்டமைக்க 6/15
முயல்கிறது ஊடகங்கள். அவர் வந்திருந்தால் அவர் தான் மாற்று என்றும் திராவிட கட்சிகளுக்கு அவர் மட்டும் தான் போட்டியாக இருந்திருப்பார் என்கிற மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றது. வருவதற்கே பயப்படும் ஒருவரை யோக்கியசீலராகவும், அரசியலில் வலிமை உள்ளவராகவும் கட்டமைக்கும் இந்த ஊடகங்கள், 7/15
தனது உடலையே தமிழக மக்களுக்கு தானமாக அளித்து விட்டு, தனது எஞ்சிய வாழ்நாள் இனி தமிழக மக்களுக்காகத் தான் என்று, தனது வாழ்வையே அர்பணித்த #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் பற்றி பேசாமல், தவிர்க்கின்றனர். மக்களுக்கு அவர் செய்துவரும் நேர்மையான அரசியலை எடுத்து கூறாமல் வேண்டுமென்றே 8/15
மறைக்கின்றனர். தமிழகத்தை மாறி மாறி கொள்ளையடித்த திராவிட கட்சிகளுக்கு மாற்றாக துணிவோடு களத்தில் நிற்கும் #கமல்ஹாசன் அவர்களை திட்டமிட்டே மறைக்கின்றனர். #கமல்ஹாசன் அவர்கள் எந்த தமிழக பிரச்சனைகளுக்கு குரல் தரவில்லை. நீட், மாட்டுகறி உண்பது, தேசிய கீதம், காவிரி நதி நீர், 9/15
இந்தி எதிர்ப்பு, ஆர்டிக்கிள் 370 நீக்கம் எதிர்ப்பு, CAA விற்கு எதிர்ப்பு, டாஸ்மாக் எதிர்ப்பு, கிராமசபை, தலித் மக்களின் பிரச்சனைகள், ஆசிரியர்கள் தேர்வு பிரச்சனை, விவசாயிகளுக்கு ஆதரவு, வேளான் சட்டம் எதிர்ப்பு, #கொரோனா வந்த போது தனது வீட்டையே கொடுக்க தயாராக இருந்தது, 10/15
மக்கள் பிரச்சனைக்காக நீதிமன்றம் சென்றது, ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு, மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு, #கொரோனா வால் வாடும் மக்களுக்காக #நாமேதீர்வு என கொண்டு வந்து உதவியது, கஜா புயலின் போது நேரடியாகச் சென்று கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது, 11/15
தமிழகத்தை புணரமைப்போம் என்று 5டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என திட்டம் கொண்டு வந்தது, பிரதமரையே #கொரோனா விற்காக கேள்வி கேட்டது, தமிழக மக்களின் கடன் சுமையை ஏற்றி வைத்த இந்த ஆட்சியை கண்டித்தது என இன்னும் எவ்வளவோ தமிழக மக்களுக்காக #கமல்ஹாசன் அவர்கள் குரல் கொடுத்துவருவது 12/15
ஊடகங்களுக்குத் தெரியாதா? #கமல்ஹாசன் அவர்கள் மக்களிடையே மாற்று சக்தியாக உருவெடுத்து வருவது தெரியவில்லையா? ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தாலும், #மக்கள்நீதிமய்யம் கட்சியும் #கமல்ஹாசன் அவர்களும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்பதை திராவிட கட்சிகளாலும், 13/15
அதற்கு துணை போகும் ஊடகங்களாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் #கமல்ஹாசன் என்ற பெயரையே சொல்ல மறுக்கின்றன. வரும் மே 2021 தேர்தலில் மக்கள் #கமல்ஹாசன் அவர்களின் பெயரை உரக்கச் சொல்லி வாக்களித்து, முதல்வராக அமர்த்தும் போது, இதே ஊடகங்கள் அவர் பக்கம் திரும்பும். 14/15
@redpixnews@irajashekaran
கதை விடுவதில் சீமான் அவர்களை மிஞ்சிட்டீங்க. அண்ணா இறந்த பின்னர்தான் எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார். அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வைகோ & திருமா அவர்களை முதல்வர் ஆக வேண்டும் என சொன்னேன்னு மக்கள் நலக் கூட்டணியில் கதை பிரமாதம். 1/7 #பொய்கூலிகள்
கட்சி ஆரம்பிப்பதற்கு முன் கேரவேனில் அமர்ந்து எப்படி கட்சி ஆரம்பிப்பதுன்னு இன்னொரு கதை. அதற்கு ஆமாம் போட ஒரு நெறியாளர். கதை விடுவதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை. கட்சி ஆரம்பித்த போது தேர்தல் கமிசனுக்கு முன் மொழியும் பத்திரத்தில் கையெழுத்து போட்டீங்களா நீங்க. உங்களை கட்சியின் 2/7
வழக்கறிஞராக ஆக்குவாங்கன்னு பார்த்தீர்கள். அதுவும் முடியவில்லை. ஊடகத் தலைவராக போடுவாங்கன்னு போடுவாங்கன்னு பார்த்தீங்க. அதுவும் முடியாததால், கட்சியை விட்டு தானா, வெளியே போனவர் நீங்க. போகும் போது மாதிரி கிராமசபை கூட்டத்தில் நீங்க பேசியதை மறந்துட்டீங்களா? 3/7
இது போல் பல வகைகளில், பல நேரங்களில் 2017 முதல் #நீட் தேர்வை எதிர்த்து வருபவர் #கமல்ஹாசன் . மத்திய மாநில அரசுகளை கடுமையாக எதிர்த்து தமிழக மாணவர்களுக்காக அன்று முதல் இன்று வரை ஒரே நிலையாக #நீட் வேண்டாம் என்கிற கொள்கையுடன் எதிர்த்து வருவது #மக்கள்நீதிமய்யம் கட்சி. 3/4
அதற்கு @maiamofficial கட்சி பற்றி தவறாக எழுதுவீர்களா? கட்சியில் கட்டமைப்பு இல்லாததை நீங்க பார்த்தீங்களா? யாரோ பெயர் கூற விரும்பாத #ரஜினிமன்றம் நிர்வாகியின் கருத்தை எழுதி, அதை சரிதான் என முடிக்கத் தெரிந்த உங்களுக்கு, #மக்கள்நீதிமய்யம் கட்சி நிர்வாகிகளிடம்கருத்து கேட்கதெரியாதா? 2/5
@maiamofficial நிர்வாகியிடம் ரஜினியுடன் கூட்டணி பற்றி கேள்வி கேட்க வேண்டியது, அங்கே வேறுமாதிரி கேட்க வேண்டியது? என்ன மாதிரி பத்திரிக்கை பிழைப்பு இது. இதற்கு பிச்சை எடுக்கலாம் நீங்க. ரஜினிகாந்ததின் தோளில் ஏறி சவாரி செய்ய இங்கே யாரும் விரும்பவில்லை.அப்படி ஒரு எண்ணமும் கிடையாது. 3/5
நடுவன் அரசு புதிய கல்வி திட்ட வரைவை ஏற்றுக் கொண்டுள்ளது. #கொரோனா தொற்றுக்காலத்தில் பல அவசரச் சட்டங்களை நிறைவேற்றும் முன்னெடுப்பைத்தான் இதில் நாம்காணமுடிகிறது. 1. தற்போது தமிழகத்தில் உள்ள கல்விமுறையே, அதாவது +2 (12) வகுப்புவரைஎன்பது நல்லபடியாகத் தான் உள்ளது. 1/ #TNRejectsNEP2020
அது இனிமேல் மாறும். அதாவது 5 + 3 + 3 + 4 என்றுவர இருக்கின்றது. இதனால், 3 வயதிலிருந்தே குழந்தைகள் கல்வி கற்க நிர்பந்தப்படுத்தப்படுவார்கள். விளையாடும் குழந்தைக்கு படிப்பு & தேர்வு என வர உள்ளது. 3 வயது குழந்தைக்கு படிப்பு எதற்கு என நாம் முதலிலேயே எதிர்த்தோம். 5 வகுப்பிற்கு 2/
பொதுதேர்விற்கே கண்டனம் தெரிவித்த நாம் இதற்கு என்ன செய்யப் போகின்றோம்? 2. 5-ம் வகுப்பு அல்லது 8ம் வகுப்பு வரை தாய்மொழி/மாநில மொழியில் கல்வி கட்டாயம். இது வரவேற்கபடவேண்டியது. ஆனால், அதை கொண்டாட முடியாமல், மீண்டும் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்குகிறது இந்த புதிய கல்வி முறை. 3/
அன்புள்ள ஊடகங்களுக்கு, #கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, ஊரடங்கு அறிவிப்பு வந்த நாள் முதல் நீங்கள் நடத்தும் விவாதங்களில் பங்கேற்று பேசுவது, #அதிமுக & அதன் தோழமைகட்சிகள் (தமாகா,பாமக), #திமுக & அதன் தோழமைகட்சிகள் (காங்கிரஸ், கம்யுனிஸ்ட், விசிக), நடுநிலையாளர்கள் என்று தேர்ந்தெடுத்த 1/1
சிலர், வலதுசாரி சிந்தனையாளர்கள், சில சமயங்களில் பொருளாதார நிபுணர்கள் என வழக்கமாக பங்கேற்கின்றனர். ஆட்சி என்பதனால் #அதிமுக சரி, எதற்கு அவர்களின் தோழமை கட்சி என இன்னொருவர், எதிர்கட்சி என்பதனால் #திமுக சரி, எதற்கு அவர்களின் தோழமை கட்சி என இன்னொருவர் என நான்கு பேர் 2/2
கட்டாயமாக அனைத்து விவாதங்களிலும் இடம் பெறுகின்றனர். ஏன் மற்ற கட்சிகள் இல்லையா? தேர்தல் கூட்டணி என வைத்துக் கொண்டால், அவர்களைத் தவிர, அவர்களுடன் கூட்டணி வைக்காமல், அரசுகள் செய்யும் தவறுகளை தொடர்ந்து தட்டிக் கேட்கும் @maiamofficial கட்சியோ, அல்லது #நாம்தமிழர்கட்சி யோ 3/3
#கமல்ஹாசன் கடிதத்தை எதிர்க்க வேண்டும் என்கிற ஒரே நோக்கம் தான் உள்ளதே தவிர, வேறு ஒன்றும் இல்லை. சென்னை உள்ளிட்ட 75 இடங்களுக்கு மட்டும் ஊரடங்கு என அறிவித்து, அதற்கு மக்கள் தயாராவதற்குள், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை திட்டமிடாமல் பிறப்பித்ததால் நேர்ந்த அவலத்தைத் தான் 1/1
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றதை ஏன் பாண்டே நீங்க குறிப்பிடவில்லை. பால்கனி என்பது பணக்காரர்களை குறித்த சொல் என்பது தெரிந்தும் தெரியாதது போல், பால்கனி என சொன்னதை விமர்சனம் செய்யலாமா? டெல்லி நடந்த கூட்டத்திற்கு அனுமதி கொடுத்தது 2/2
யார் என்ற விவரத்தையும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை முறையாக பரிசோதனை செய்யாமல் விட்டதை ஏன் சொல்லவில்லை பாண்டே! வட மாநிலங்களில் நடந்த திருவிழாக்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கலந்து கொண்டதை ஏன் சொல்லவில்லை பாண்டே? டெல்லியை பற்றி மட்டுமே குறிப்பிட்டு, 2 நிமிடத்திற்கு பேச 3/3