🔴 இன்று முதல், உயிரை இழக்கப்போகும் அனைத்து உக்ரேனிய மக்களுக்கான காரணம், நீங்கள் மட்டுமே.
உங்கள் பலவீனத்தாலும் உங்கள் ஒற்றுமை இன்மையாலும் தான், மக்கள் உயிரிழக்க போகிறார்கள்.
- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, NATO நாடுகள் மீது கடுமையான விமர்சனம் (1/5)
வெறும் 50 டன் டீசலை உங்களால் உக்ரைனுக்கு வழங்க முடிந்துள்ளது. அதை வைத்து நாம் "Budapest குறிப்பாணையை" வேண்டுமானால் எரிக்கலாம்.
#BudapestMemorandum: சோவியத் கால அணு ஆயுதங்களை உக்ரைன் கைவிட்டதற்கு ஈடாக, 1994இல் அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்களின் குறிப்பாணை ஆகும்.
அவர் மேலும் கூறியதாவது: உக்ரைனின் வான்வெளியை மூடினால், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை நேரடியாகத் தூண்டும் என NATO நாடுகளே ஒரு கதையை உருவாக்கியுள்ளன.
இது பலவீனமான, தன்னம்பிக்கை இல்லாதவர்களின் செயலாகும். 3/5
உக்ரைன் மீது குண்டுவீசுவதற்கு NATO நாடுகளே பச்சைக் கொடி காட்டுகிறது.
நீங்கள் உக்ரைனின் வான்வெளியை மூடியிருக்கலாம்.
உங்களால் யாரைப் பாதுகாக்க முடியும்? நீங்கள் உண்மையில் NATO-வில் உள்ள உறுப்பினர்களையாவது பாதுகாப்பீர்களா? என்று கூட தெரியவில்லை: ஜெலன்ஸ்கி 4/5
[#NoFlyZone: ஒரு வல்லரசு நாடு, தானாகவோ அல்லது பெரிய வல்லரசுகள் ஒன்று சேர்ந்து கூட்டாகவோ வேறொரு நாட்டின் வான்வெளி இறையாண்மை மீது விதிக்கப்படுவது No fly zone உத்தரவாகும்; அதை மீறி வேறோரு நாட்டின் விமானம் பறந்தால், அந்த நாடுகள் தாக்குதல் நடத்தி அழிக்கும்] 5/5
🔴#BREAKING | கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் SWIFT சேவையின் பயன்பாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு தடை விதிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
விரைவில் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், ரஷ்யாவுக்கு வரும் பாதிப்பு என்ன? #இழை🧵 (1/6)
ஒரு நாட்டின் எல்லையை தாண்டி நடைபெறும் பண பரிவர்த்தனையை சுமூகமாக நடைமுறை படுத்த 1973 ஆம் ஆண்டு முதல், SWIFT என்ற அமைப்பு பெல்ஜீயத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
ரஷ்யா உட்பட சுமார் 200 நாடுகளில் 11,000 நிதி நிறுவனங்களால் இந்த SWIFT சேவை பயன்படுத்தப்படுகிறது. (2/6)
உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத் தொடர்புகளுக்கான சமூகம் என்ற இந்த SWIFT அமைப்பை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள் ஒருங்கிணைந்து உருவாக்கியது.
ரஷ்யாவை அதிலிருந்து தடை செய்வதால், உதாரணமாக: எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு ரஷ்யா பணம் பெறுவதில் இழப்பு ஏற்படும். (3/6)
📍ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஒன்றிணைக்கவும், நாளை முதல் 3 நாட்கள் நடைபெற உள்ள G7 முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளவும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜெர்மனி செல்கிறார்.
#BREAKING | இந்தியர்கள், குறிப்பாக மாணவர்கள் தற்காலிகமாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு அறிவுறுத்தல்.
உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் இந்தியா அறிவுறுத்தல்.
📍அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, கனடா, நார்வே, எஸ்டோனியா, லிதுவேனியா, பல்கேரியா, ஸ்லோவேனியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு தங்கள் குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளன.
📍உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என மறுத்து வரும் ரஷ்யா, ஏற்கனவே 2014 இல் தான் கைப்பற்றிய உக்ரைனின் கிரிமியாவை கட்டுப்படுத்தி வருகிறது.
📍 கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கட்டுப்படுத்தி வரும் பிரிவினைவாத சக்திகளுக்கு, ரஷ்யா ஆதரவு அளித்தும் வருகிறது.
2021ஆம் ஆண்டில் 84% இந்திய குடும்பங்களின் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது.
அதேநேரத்தில் நாட்டில் உள்ள செல்வந்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில், 102லிருந்து '142' ஆக அதிகரித்துள்ளது.
- ஆக்ஸ்பாம் ஆய்வு அறிக்கை (1/7)
📍"Inequality Kills" என்ற தலைப்பில் ஆக்ஸ்பாம் தனது 2021ஆம் ஆண்டின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
📍கொரோனா காலக்கட்டத்தில் மட்டும் (மார்ச் 2020 - நவ.2021 வரை) இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 23.14 லட்சம் கோடியில் இருந்து 53.16 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. (2/7)
📍இதற்கு நேர்மாறாக, 2020ல் மட்டும் 4.6 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் தீவிர வறுமையில் வீழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
📍"ஐநா சபையின் கூற்றுப்படி, இந்த எண்ணிக்கை உலகளாவிய புதிய ஏழைகளில் கிட்டத்தட்ட பாதியளவு," என்று ஆக்ஸ்பாம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. (3/7)