#Thread
#தெரிஞ்சிக்கோங்க

பிரபஞ்சம் விட பெரிதான ஒன்று இருக்கிறதா என்பதினை அறிந்துகொள்ள பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதினை முதலில் அறிய முயற்சிப்போம்
அதற்கு முன் நமது சூரியனை (சூரியன் ஒரு நட்சத்திரம்) போன்ற பிற நட்சத்திரத்தையும், மாபெரும் நட்சத்திரத்தையும், அதை விட மிகவும் பெரிய நட்சத்திரத்தையும் பற்றி காணலாம். இவைகளின் குறுக்களவை நமது பூமி, மற்றும் நமது சூரிய குடும்பத்தின் இதர கோள்களின் குறுக்களவோடு ஒப்பிட்டு பார்க்கலாம்.
கீழிருப்பது நாம் வசிக்கிக்கும் பூமி, இதன் குறுக்களவு 12,742 கிமீ. சுற்றளவ்வு சுமார் 40,000கிமீ. நாம் எந்த ஒரு வணிக விமானத்தில் பயணம் செய்தாலும், பூமியை சுற்றி வர குறைந்தது 42 மணிநேரமாவது ஆகும்
நமது சூரிய குடும்பத்திலேயே மிகவும் பெரிய கோள் வியாழன், அதன் குறுக்களவு 1,39,820 கிமீ சுற்றளவ்வு 4,39,264 கிமீ. வியாழனுக்கு முன் நமது பூமி சிறியதாக தோன்றும்
சூரியனுக்கு முன் வியாழன் கிரகம் மிகவும் சிறியதாக தோன்றும், சூரியனின் குறுக்களவு 13,91,000 கிமீ சுற்றளவு 43,79,000 கிமீ
Antares நமது சூரியனை விட பெரியது Antares யின் ஆரம் நமது சூரியனை விட 850 மடங்கு பெரியது. நமது சூரியனை தூக்கிவிட்டு அந்த இடத்தில் Antares ஐ நிறுவினால் அதன் விளிம்பு நமது செவ்வாயின் சுற்றுப்பாதையை தாண்டி அமைந்திருக்கும்.
Betelgeuse நமது சூரியனை விட 1000 மடங்கு பெரியது. நமது சூரியனை இடத்தில் Betelgeuse ஐ நிறுவினால் அதன் விளிம்பு நமது வியாழனின் சுற்றுப்பாதையை தாண்டி அமைந்திருக்கும்
UY Scuti நமது சூரியனை விட 1700 மடங்கு பெரியது. நமது சூரியனை இடத்தில் UY Scuti ஐ நிறுவினால் அதன் விளிம்பு சனி கோளின் சுற்றுப்பாதையை தாண்டி அமைந்திருக்கும்.
UY Scutiயின் முன் நமது சூரியன் ஒரு புள்ளியை போன்று தோன்றும். நமக்கு தெரிந்த வரையில் UY Scuti தான் மிகவும் பெரிய நட்சத்திரம்.
அடுத்ததாக நமது கோள்களில் இருந்து மெதுவாக நகரலாம். நமது சூரிய குடும்பத்தை பல Asteroid மற்றும் dwarf planet சூழ்ந்துள்ளது. அந்த பகுதியை kuiper belt பகுதி என்று அழைக்கிறார்கள். இது நமது சூரியனிலிருந்து 1,207 கோடி கிமீ தூரத்திலிருந்து 1,497 கோடி கிமீ தூரம் வரை நீடிக்கிறது.
அடுத்ததாக Oort cloud பகுதி, இது உறைந்த நிலையில் இருக்கும் தண்ணீர், மீத்தேன், எதேன், கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சயனைடுகளை கொண்ட வால்மீன்கள் நிறைந்த பகுதி.
நிலவின் ஈர்ப்பு பூமியில் உள்ள கடல்களில் அலைகளை உண்டாக்குவது போல, நமது பால்வெளி மண்டலத்தின் விசையாலும், கடந்து செல்லும் பிற நட்சத்திரத்தின் விசையாலும் சில விண்மீன்கள் நமது சூரியனை நோக்கி தள்ளப்படுகிறது.
உறைந்த நிலையில் உள்ள இந்த வாள்மீன் நமது உட்புற சூரிய மண்டலத்தை நுழையும் போது சூடேறுகிறது, மெல்ல அது கரைய துடங்குகிறது, இதனை தான் நாம் வால் நட்சத்திரமாக பூமியிலிருந்து காண்கிறோம்.
இப்படி சூரியன்னை நோக்கி தலைப்பட்ட ஏதோ ஒரு வால்நட்சத்திரத்தின் மூலமே பூமிக்கு நீர் கிடைத்தது என்று விஞ்ஞானிகள் பரவலாக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த Oort cloud பகுதி 18.91 லட்சம் கோடி முதல் 29.9 லட்சம் கோடி கிமீ வரையிலான குறுக்களவு கொண்டது.
ஒளியின் வேகத்தில் பயணித்தால் பூமியிலிருந்து ஒரு வருட காலம் பயணித்தால் Oort cloud ஐ கடக்கலாம். (ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு 2,99,792 கிமீ ஒரு ஆண்டிற்கு 9,45,424 கோடி கிமீ) 1977லில் நாம் விண்ணில் செலுத்திய voyager probe வினாடிக்கு 16.99 கிமீ வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
வருடத்திற்க்கு 53.61 கோடி கிமீ தூரத்தை மட்டுமே கடக்கிறது. 2016ஆம் ஆண்டில் வியாழனை நோக்கி செலுத்தப்பட்ட ஜூனோ விண்வெளி ஆய்வுகோளே இன்றளவில் மனிதனால் எட்ட முடிந்த விரைவு வாகனமாக திகழ்கிறது.
வினாடிக்கு 73.88 கிமீ வேகத்தில் வருடத்திற்கு 233 கோடி கிமீ தூரத்தை கடந்துகொண்டிருக்கிறது. (ஒளியின் வேகமான வருடத்திற்கு 9,45,424 கோடி கிமீ தூரம் எங்கே நமது வேகமான 233 கோடி கிமீ தூரம் எங்கே)
வருடத்திற்க்கு 53.61 கோடி கிமீ தூரத்தை கடக்கும் வேகத்தில் 42 வருடங்களாக பயணித்துக்கொண்டிருக்கும் voyager 1 விண்வெளி ஆய்வுக்கோள் இன்னும் Oort cloud பகுதிக்குள் இன்றளவும் நுழையவில்லை
நமது சூரியனுக்கு அடுத்ததாக நம்மக்கு அருகாமையில் இருக்கும் நட்சத்திரம் Alpha Centauri. இது பூமியில் இருந்து சுமார் 4.22 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது.
கீழிருக்கும் படம் என்ன என்று கேட்டால் பலர் பால்வெளி மண்டலம் என்றுரைப்பர். இது உண்மையிலேயே பால்வெளி மண்டலம் என்று கூறுவதை விட, நமது அருகாமையில் இருக்கும் மற்றொரு சுழல் மண்டலத்தின் உருவத்தை உத்வேகமாகக் கொண்டு வரையப்பட்ட கற்பனை படமே என்று கூறுவது பொருந்தும்.
ஏன் அவ்வாறு கூறவேண்டும் என்று பார்க்குமுன் நமது பால்வெளி மண்டலத்தின் குறுக்களவு 1,00,000 ஒளி ஆண்டுகள் என்பதினை தெரிந்து கொள்ளவேண்டும். நாம் அனுப்பிய voyager 1 விண்வெளி ஆய்வுக்கோள் இன்னும் Oort cloud பகுதியையே எட்டவில்லை என்பதினை பார்த்தோம்,
இந்தவேளையில் இது தான் நமது அச்சு அசல் பால்வெளி மண்டலம் என்று கூறுவது, நமது பல அடுக்கு வீட்டை வீட்டினுள் இருந்தே நாம் புகைப்படம் எடுத்ததாக கூறும் செயலுக்கு ஒப்பாகும்.
நமது விஞ்ஞானிகள் கண்டத்திலேயே பெறிய மண்டலமாக திகழ்வது IC 1101, இது 60 லட்சம் ஒளி ஆண்டு குறுக்களவை கொண்டது. இதன் முன் நமது பால்வெளி மண்டலம் ஒரு சிறு புள்ளி போன்றதே.
நமது பால்வெளி மண்டலத்திற்கு 25.37 லட்சம் ஒளி ஆண்டு தூரத்தில் உலாவிவரும் மற்றொரு மண்டலமான andromeda நமது பால்வெளி மண்டலத்துடன் 375 கோடி ஆண்டுகளில் மோத இருக்கிறது. அந்த பொழுதில் பூமியில் மனித இனம் முற்றிலுமாக அழித்து போயிருக்கும்.
நமது சூரியனின் ஆயுட்காலம் சுமார் 500 கோடி ஆண்டுகள் என்று கணிக்கின்றனர். இன்னும் சுமார் 100 கோடி ஆண்டுகளில் பூமியில் உள்ள அணைத்து நீர்களும் ஆவியாகும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். அந்தவேளையில் அநேக நுண்ணுயிர்களும் வெப்பத்திற்கு இரையாகும்.
சுமார் 500 கோடி ஆண்டுகளில் சூரியனின் விளிம்பு செவ்வாயை விழுங்கும் தூரத்திற்கு விரிவடையும் என்று ஒரு கருத்தும், சூரியன் விரிவடைகையில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான ஈர்ப்பு குறையும், ஆதலால் பூமி மெல்ல சூரியனை விட்டு நகரும் என்று மற்றோரு கருத்தும் நிலவுகிறது
Hubble space telescope எடுத்த புகைப்படம் இது...இதில் தெரிவது அனைத்துமே galaxy தான், ஒரு galaxy யின் அளவே இவ்வளவு பெரிதாய் இருக்கும் போது, இத்தனை galaxy களையும் உள்ளடக்கிய Universe எவ்வளவு பெரிதாய் இருக்க வேண்டும்
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with 🔥தோர்™🔥

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Trending hashtags

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!