#Sales
இதுல முக்கியமான இன்னொரு விஷயம்..! 😊
பொதுவா எல்லா பொண்ணுங்களுக்குமே அண்ணன் அல்லது அண்ணன் முறையில ஒருத்தரு இருப்பாரு. அவரு அந்த பொண்ணு மேல ஏகத்துக்கும் பாசம் வச்சிருப்பாரு..!
அவரை இந்த சமூகம்,
பாடி கார்ட்,
நலம் விரும்பி,
பாசமலர் ன்னு
எப்படி வேணும்னாலும் சொல்லலாம்..!😊
ஆனா, அந்தப் பொண்ணு மட்டும் அவரு சொல்றத தான் தட்டாம கேட்பாங்க.! அவ்ளோ பாசம் & நம்பிக்கை..!
பெரும்பாலும் அவருதான் வில்லன் ரோல் ப்ளே பண்ணுவாரு.
அவருக்கே நம்மள புடிச்சு போச்சுன்னா அப்புறம் பெருசா குறுக்கீடுகள் ஏதும் இருக்காது..!
நம்மளா.. சொந்த செலவுல ஏதாச்சும் சூனியம் வச்சிகிட்டா தான் உண்டு, மத்தபடி 99% சக்சஸ் & சுபம் தான்..!😊
இது மாதிரியே நம்ம Productsஐ Sales பண்ண போற இடத்துலையும் அந்த நிறுவத்தில பெரியஅண்ணன் மாதிரி ஒருத்தரு இருப்பாரு.!அவரு கம்பெனி மேல காட்டுற விசுவாசத்தில 'கட்டப்பா'வுக்கே Tough குடுப்பாரு.!
அவரை அந்த கம்பெனி,
சீனியர் மேனேஜர்,
லீகல் அட்வைஸர்,
குவாலிட்டி Incharge,
விசுவாச ஊழியர் ன்னு
ஏதாவது ஒரு விதத்தில எப்பவுமே முக்கியத்துவம் கொடுத்து தக்க வச்சுக்கும். மேலும் அவர் சொல்றத அந்த கம்பெனியும் முழுமையாக நம்பும் & கேட்கும்.
பெரும்பாலும் அவர்தான் வில்லன் ரோல் ப்ளே பண்ணுவாரு..!
நம்ம Products அ பத்தி அதனுடைய சிறப்பம்சங்கள் எல்லாம் நல்லா விளக்கமா எடுத்துச் சொல்லி
Purchase Order Release பண்ற லெவலுக்கு போயிருப்போம்.
அங்க வந்துகிட்டு,
"தம்பி உங்க கம்பெனி பெயர் என்ன சொன்னீங்க...! இல்ல இதே Productஐ இன்னொருத்தர் இதைவிட 10% ரேட் கம்மியா தர்றதா சொல்றாரு.. அதான் கேட்டேன், வேற ஒன்னும் இல்ல..!"
ன்னு பெரிய குண்டா போடுவாரு..!
அப்பறமா அவருகிட்ட
"அந்த Product நாகபதனி சார்,
நம்மளோடது நாகப்பதனி சார்,
ஒரு 'ப்' கூடுதலாக வரும் சார்..
இப்படி எல்லாம் சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும்"
இந்த மாதிரி பெரிய அண்ணன்கள் நமக்கு OK சொல்லிட்டாங்கன்னா நம்ம ஆர்டர் 99% உறுதி ஆயிடுச்சுன்னு அர்த்தம்..!
பெரும்பாலும் இவங்க எதிர்பார்ப்பது மரியாதை + புகழ்ச்சி..! சிலர் Compliments..!
இந்த மாதிரி ஆளுங்களை கரெக்டா Point Out பண்ணி,
"சார், நீங்க இந்த கம்பெனில எவ்ளோ பெரிய ஆளு..!
நீங்க சொன்னா
MD/Owner/முதலாளி கண்டிப்பா கேட்பாரு,
இந்த ஆர்டரை கிடைக்கிற மாதிரி ஏதாவது பார்த்து பண்ணுங்க சார்"
அப்படின்னு சொல்லிட்டு தலைவரை கொஞ்சமா கவனிச்சா போதும்..!
பிறகு எல்லாம் சுபம்😊
அந்த சரியான 'கட்டப்பாவை' தேடி கண்டுபிடிப்பதில் தான் இருக்கு நம்ம எக்ஸ்பிரியன்ஸ் & திறமை.!
இந்த கலை கைவந்தால் Sales என்பது நோகமால் நொங்கு திண்பது போன்றது..!
😂😂😂
எனக்கும் நண்பருக்கும் சில எலக்ட்ரானிக்ஸ் & வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், தற்சமயம் #Amazon & #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே..
எனவே, Online ல் Order செய்யலாமா அல்லது கடைகளிலேயே சென்று வாங்கலாமா என்பதை அறிய ஒரு Mini Market Survey செய்தோம்.!😊
திருச்சியில்,
🔥Home Appliances கடைகள் உள்ள சாலை ரோடு,
🔥பர்னிச்சர் & எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ள மதுரை ரோடு,
🔥திருச்சியின் Commercial Hubஆன NSB Road & Super Bazarல் உள்ள கடைகள்
🔥 மொபைல் ஷோரூம்கள்,
என, இவற்றில் அவர்கள் தரும் ஆஃபர்கள் மற்றும் விலை நிலவரங்களை கேட்டறிந்தோம்..!😊
நமது ஆண்ட்ராய்டு சாதனங்களில கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள்..!🤔
அது பற்றிய #Thread#இழை
வாங்க ஜாலியா Secure பண்ணலாம்..!🧞
உதாரணத்துக்கு "நாம ஒரு வெளியூர் Trip போறோம். ஒரு 10 நாள் ஊருல இருக்க மாட்டோம்..!"
வீட்ல என்னெல்லாம் பண்ணுவோம்..!🙋
🔥வெறுமனே Main Doorஐயும், Gate ஐயும் பூட்டிட்டு பொய்டுவோமா, இல்ல,
🔥தண்ணி எல்லாம் Pipe எல்லாம் Closeல இருக்கா,
🔥Gas Regulatorஅ Off பண்ணிட்டோமா,
🔥எல்லா Electrical சாதனங்களையும் Switch off பண்ணியாச்சா,
🔥ஜன்னல் எல்லாம் சாத்தியாச்சா,
🔥Back Door அ சரியா Lock பண்ணிட்டோமா,
🔥பீரோ key எல்லாம் பத்திரப்படுத்திட்டமா
இப்படி எல்லாம் முடிச்சு கடைசியாக தானே Main Doorஐயும் Gateஐயும் பூட்டுவோம்.!🔐
ஒரு 10 நாள் ஊருக்கு போறதுக்கே இந்த அக்கப்போர்ன்னா,😂
Minimum ரெண்டு மூனு வருஷமாச்சும் Use பண்ற Mobileக்கு என்ன பண்ணனும்.!
#வந்தாரை_வாழவைக்கும்_தமிழகம்😊
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு இருக்கும்,
ராஜஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வந்த சில குடும்பங்கள் சிறியதாக அவங்க வசதிக்கு ஏற்ப பைனான்ஸ் தொழிலை ஆரம்பிக்கிறாங்க.!
அப்போ அதைபத்தி இங்க இருந்தா யாரும் பெருசா கவலைப்படவும் இல்லை அலட்டிக்கவும் இல்லை.🙄
அவங்களுக்கு அந்த தொழிலை நடத்த ஒரு அமைதியான நிலப்பரப்பும் அதை சார்ந்த எளிமையான மக்களும் தேவை.!
நம்ம மக்களோட
🔥நேர்மை,
🔥சரியான படி பணத்தை திருப்பி செலுத்துதல்
🔥காசு விஷயத்தில் கரெக்டா நடந்து கொள்வது,
அப்புறம் முக்கியமா,
🔥நம்ம வீடுகளில் இருந்த தங்கம்.!🙄
இதெல்லாம் பார்த்த அவங்க ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டாங்க..!
நம்ம தொழில் நடத்த இதைவிட சிறந்த இடம் வேற எதுவுமே கிடையாதுன்னு முடிவு பண்றாங்க..!
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பதற்கு பதிலாக
"யாம் பெற்ற இன்பம் பெருக எம் இனம்" என்பது போல இங்கு உள்ள நிலவரம்,தொழில் வாய்ப்புகள் பற்றி
என்னுடைய மிக நெருங்கிய நண்பர்ன்னு சொல்றத விட அண்ணன்னு சொல்லலாம்.!
அவருடைய வீடுக்கு ஒரு வேலை விஷயமா கூப்பிட்டிருந்தாரு.!
ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் அதே ஏரியால வேற வீடு மாத்தியிருந்தாரு.!
அதனால அவரு அட்ரஸ் சொன்ன அந்த சந்து வரைக்கும் போய்ட்டேன்.
அதுல தான் வீடுன்னும் தெரியும்..!, ஆனா, அதுக்குள்ள எந்த வீடுன்னு கண்டுபிடிக்க முடியல..! ஃபோன் பண்ணா 'நாட் ரீச்சபிள்' . சரி நம்மளால முடியாதா..!
விசாரிச்சு கேட்டு போகவேண்டியது தான்னு முடிவு பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சேன்.
அவர் பேரை சொல்லி விசாரிச்சா பக்கத்துல தெரியாதுன்னு சொல்லிட்டாங்க..!
அப்புறம் அவரு வேலை பார்க்குற இடத்தை பற்றி சொல்லி கேட்டுபார்த்தேன் அப்பவும் தெரியலன்னு சொல்லிட்டாங்க..!
அவரை பத்தி மேலும் சில விபரங்களை சொல்லி கேட்டேன்..!
யாருக்கும் சரியா தெரியலை..!
என்னடான்னு நினைக்கும் போது,
இந்த வரிகளில்
அந்த முண்டாசு தலைப்பாகை மற்றும் முறுக்கு மீசைக்குள்
ஒளிந்து இருக்கும் காதல் நம்முன் பரிணமித்து நிற்கிறது..!
உவமைகளின் அரசன் என்றுமே பாரதிதான்..!
🔥காதலியின் ஒரு சிறு புன்னகையை அவன் இவ்வாறு வர்ணிக்கிறான்.
சோலை என்பது பூக்களும் பூஞ்செடி கொடிகளும் நிறைந்த மனதிற்கு பிடித்த ரம்மியமான சூழல் நிறைந்த இடம். அந்த ரம்மியமான சூழலில்
நிலவின் ஒளியானது பூக்களின் மீது உள்ள நீர் திவலைகள் வழியே பிரதிபலிக்கும் போது அந்தப் பூக்கள் ஒளிர்வது போல தோற்றமளிக்கும். இதனால் அந்த அழகிய பூக்களின் அழகு இன்னும் மேம்பட்டு மிகவும் மனதை கவரும் படி பேரழகாக தெரியும்.
"நானும் அந்த பூஞ்சோலையில் உன்னுடைய அந்த சிறிய புன்னகையை
OTT தளங்களின் பயன்பாடு அதிகமான பிறகு இப்போது நம்மில் பலர் நமது TV ஐ 40" + திரைகொண்ட Full HD அல்லது 4K TV ஆக Update செய்திருப்போம்.!
எல்லாம் ஒரு நல்ல Movie Watching Experience கிடைக்க வேண்டும் என்பதற்காக தான்.!
ஒரு முழுமையான Movie Watching Experience என்பது பெரிய திரையில் படம் பார்ப்பது மட்டும் அல்ல அதை நல்லஒலி அனுபவத்துடன் கேட்டு ரசிப்பதும் ஆகும்.
இந்த நல்லஒலி அனுபவத்தை நமக்கு தரவல்லது தான்,
🔥 Sound Bar
🔥 Home Theater
சரி இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்ன்னு முதல்ல பார்ப்போம்.😊
#Sound_Experience#ஒலி_அனுபவம்
சின்ன பிசிறு கூட இல்லாத முழுமையான ஒலி.! #இசைஞானி யின் பாடல்களில் தவழும் Bass Guitar, #ARR ன் பாடல்களில் இழையோடும் Beats இப்படி குண்டுசி விழும் சத்தம் முதல் டைனோசர் கத்தும் அலறல் வரை எல்லாம் அதன் அளவுகளில் மிகச்சரியாக தெளிவாக இருக்கவேண்டும்.😊