#உஷார்_அய்யா_உஷாரு 😊
#Online_Offers_உஷாரு 😊

ஆன்லைன் ஷாப்பிங் வலை தளங்களான #Amazon #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே உண்மையான மார்க்கெட் கள நிலவரம் தான் என்ன.!

அது பற்றிய #இழை #Thread
வாங்க ஜாலியா Shopping பண்ணலாம்..!🧞

#MarketSurvey #OnlineShopping #Offers
எனக்கும் நண்பருக்கும் சில எலக்ட்ரானிக்ஸ் & வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், தற்சமயம்
#Amazon & #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே..
எனவே, Online ல் Order செய்யலாமா அல்லது கடைகளிலேயே சென்று வாங்கலாமா என்பதை அறிய ஒரு Mini Market Survey செய்தோம்.!😊
திருச்சியில்,
🔥Home Appliances கடைகள் உள்ள சாலை ரோடு,
🔥பர்னிச்சர் & எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ள மதுரை ரோடு,
🔥திருச்சியின் Commercial Hubஆன NSB Road & Super Bazarல் உள்ள கடைகள்
🔥 மொபைல் ஷோரூம்கள்,

என, இவற்றில் அவர்கள் தரும் ஆஃபர்கள் மற்றும் விலை நிலவரங்களை கேட்டறிந்தோம்..!😊
இதில் கிடைத்த சிலபல அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.!😊

(நேற்று மாலை மிதமான குளிர்ந்த காற்று லேசான தூறல், இன்று காலை மேக மூட்டமான வானிலை எல்லாம் நமக்கு உகந்ததாக இருந்தது.!

நேற்று இரவு பெய்த மழையில் திருச்சி மாநகரமே கழுவி விட்டது போல் பளிச்சென்று இருந்தது.!😊)
1. #Mobiles
மொபைலை பொருத்தவரை ShowRoom களைவிட ஆன்லைனில் நல்ல அதிகப்படியான மாடல்களும், Offer களும் உள்ளன. ஷோரூம் செல்வதே டெமோ பார்க்கலாம் என்பதற்காகத்தான். பெரும்பாலான மாடல்களுக்கு டெமோ பீஸ் அங்கு இல்லை.மேலும் ஆன்லைன் விலைக்கும் அவர்கள் சொல்லும் விலைக்கும் 5 முதல் 10% வித்தியாசம்
அதிகமாக உள்ளது..! மேலும் மொபைல்களுக்கு ஆன்லைனில் நல்ல Exchange Offer, Bank Offer வேற உள்ளது. அதையும் சேர்த்து பார்த்தால் நமக்கு இன்னும் கூடுதலான லாபம் கிடைக்கும்.

எனவே மொபைல், Laptops மற்றும் Electronics பொருட்கள் போன்றவற்றுக்கு ஆன்லைன் சிறந்தது..! விலையும் குறைவாகவே உள்ளது.‌.!
2.#Home_Appliances
'நேரில் சென்று விசாரித்து வாங்கலாம்' என்று எடுத்த முடிவு எவ்வளவு நல்லது என உணர்ந்து கொண்டது இங்கேதான்.
TV, Fridge, Washing Machine, AC இவற்றில் பெரும்பாலான Branded (Sony, Samsung, LG, Panasonic) Model களுக்கு ShowRoom FinalPrice க்கும்
Online OfferPrice க்கும்
பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை என்பதே நிதர்சனம்..!
ஒரு Branded TV யின் Online Price 43000. Show Room Price 45000. விலையை சொல்லும்போதே சேல்ஸ்மேன் இது இறுதியான விலை அல்ல, நாம் மேனேஜரிடம் பேசி வாங்கும் போது மேலும் குறைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.
Online விலையை காண்பித்து பேரம்பேசிய பிறகு 43500க்கு இறுதி செய்தார்கள். பெரிய அளவில் மெனக்கெடல் எதுவும் இல்லை.
மேலும் ஸ்டெபிலைசர் நல்ல விலைக்கு குறைத்துக் கொடுத்தார்கள்.
(Onlineஐ விட சிறிது கம்மி)
இங்கு நாம் Picture Clarity, Sound, Connectivity போன்றவற்றை வாங்கும்போதே Check பண்ணி
வாங்கிக்கொள்ளலாம். ஏதாவது குறைகள் இருந்தால் அங்கேயே புதிது மாற்றிக்கொள்ளலாம். இரண்டு மாதம் முன்பு நண்பன் ஆன்லைனில் TV வாங்கிய பொழுது அவனுக்கு Sep 2019 Mfg தான் அனுப்பியிருந்தார்கள்.
ஆனால் தற்போது ஷோரூமில் உள்ளதெல்லாம் 2020 ஜூன், ஜூலை மாடல்கள்..! இது மிகவும் முக்கியமானது..!
3. #Kitchen_Appliances
Online ல் Offer என்ற பெயரில் எப்படி கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறார்கள் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் வேறு எதுவும் இல்லை..!

Cookers, Tawa, Stove, Stand, Vessels, Containers எல்லாமே Online தள்ளுபடி விலையை விட மிகக் குறைவான விலையில் மார்க்கெட்டில்
கடைகளில் கிடைக்கிறது..! மேலும் இவற்றை நேரடியாக வாங்கும் போது,
🔥கைப்பிடி லூசா இருக்கிறதா,
🔥மூடி நன்றாக மூடுகிறதா,
🔥பொருளின் தரம்,
🔥Finishing (பிசிறு, கோட்டிங் கலர்)
🔥அளவில் ஒப்பீடுகள்
(Size Comparison)
🔥 Functioning

என நமக்கு பிடித்த மாதிரி பார்த்து பார்த்து வாங்கலாம்..!
4. #Furnitures
இந்த Survey Program Start பண்ணதுக்கு‌ முக்கிய காரணம் நண்பருக்கு Sofa ஒன்று வாங்க வேண்டும் என்ற காரணம் தான்.
3 Seater Sofa க்கள் 7000 முதல் கிடைக்கிறது.! நல்லவே இருக்கு.!
நார்மலான Online Price ஐ விட 10 - 15% கம்மியா தான் இருக்கு..!🙄
பேரம் பேசினால் இன்னும் நல்லா கம்மியா வாங்கலாம்.அது நம்ம திறமையை பொறுத்து.!
Show Rooms ல Customised Options கிடைக்குது. நம்ம சொல்ற மாதிரி, 🔥Rexin Colour,
🔥Rexin Quality,
🔥Sofa Leg Height,
🔥Inclination Angle
🔥Arms
இதெல்லாம் கூட நம்ம விருப்பத்திற்கு ஏற்ப செஞ்சு தர்றாங்க..!
Order குடுத்தா செஞ்சு வர்றத்துக்கு ஒரு 15-20 நாள் ஆகும். அதே மாதிரி கட்டில், பீரோ, இதுக்கும் நிறையவே நல்ல நல்ல Options இருக்கு.!
Diwali offer ஆ Free Pillows வேற தர்றாங்க..!😂

ஆனா, Wooden TV Stands ஐ பொறுத்த வரை Onlineல தான் விலை குறைவாகவும், நிறைய Modelsம் இருக்க..!
Furniture Itemsஐ பொறுத்த வரை Online ல உள்ள பெரிய பிரச்சனை நம்ம இடத்துக்கு டெலிவரி பண்ணுவாங்களா அப்படிங்கறது தான். நிறைய மாடல்ஸ்க்கு தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊர்களுக்கே டெலிவரி ஆப்ஷன்ஸ் இல்லை. (நெல்லை, மதுரை,கோவை)
சென்னை மட்டும் ஏதோ பரவால்ல.!
அதனால Local Show Rooms தான் Bestu.!😊
5. #Dress_And_Fashion
ஒரு மாதத்திற்கு முன்பு சென்ற போது அவ்வளவாக புது புது டிசைன்கள் வந்திருக்கவில்லை. இப்பொழுது நிறைய கலெக்ஷன்ஸ் வந்துள்ளது.துணியை பொருத்தவரை அதைத்தொட்டு பார்த்து வாங்கும் போது தான் திருப்தி கிடைக்கும்.
ஆன்லைனுடன் ஒப்பிடும் போது பெரிய அளவில் ஆஃபர்கள் இல்லை
என்றாலும் விலை திருப்திகரமாகவே உள்ளது.!
மேலும் துணிகள் மற்றும் ஆயத்த ஆடைகளை பொருத்தவரை ஜவுளிக்கடைகள் தான் Best..!

ஆன்லைனை விட
📜ஏகப்பட்ட டிசைன்கள்
📜பல்வேறு ரகங்கள்
📜பல்வேறே தரங்கள்
என விதவிதமாக Show Room கள் என்றுமே முன்னிலை வகிக்கிறது..!
மேலும்,பெண்களின் பேராதரவு உள்ளவரை எந்த Online தளங்களாலும் ஜவுளிக்கடைகளை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பது நிதர்சனம்.!

#Conclusion
🔥ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்கள் வாங்குவதற்கு முன் நம்ம ஊர்களில் உள்ள பெரிய கடைகளில் ஒரு ரவுண்டு விசிட் அடித்துவிட்டு முடிவு செய்வது நல்லது..!
#மேலும்_சில_அனுபவங்கள்..!😊

🔥கொரோனா காலமென்பதால் முக கவசம் இல்லாமல் எந்த கடையிலும் நம்மை அனுமதிப்பதில்லை..!

🔥பெரும்பாலான ஷோரூம்களில் உள்ளே செல்லும் முன் நம் உடல் வெப்பநிலை பரிசோதித்தார்கள். மேலும் Sanitizer தருகிறார்கள்.
🔥ஆனால் பெரிய பெரிய Show Room ங்களில் ஏசி போடவில்லை என்பதால் நமக்கு மூச்சு முட்டல் தான் ஏற்படுகிறது.

🔥பெரிய பெரிய Fans வைத்திருந்தாலும் போதுமான அளவுக்கு காற்று கிடைப்பதில்லை.

🔥கடைகளில் கூட்டம், நெருக்கடி, இதனால் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் சிரமம்.
🔥 போதுமான காற்றோட்ட வசதியும் இடைவெளியும் இல்லாததால் நமக்கு வியர்த்துக் கொட்டுகிறது. மேலும் மூச்சு முட்டல் வேறு.!

🔥 எப்படியாவது சீக்கிரம் ஷாப்பிங் முடித்தால் போதும் என்ற எண்ணம் தான் மனதில் ஓடுகிறது.!

🔥தண்ணீர் பாட்டிலை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.இது மிகவும் அவசியமானது.!😊
🔥நிறுவனங்களை பொறுத்தவரை
Lock Down க்கு பிறகு மிகப் பெரிய பண்டிகை காலம் மற்றும் வியாபார வாய்ப்பு இது என்பதால், வரும் வாடிக்கையாளர்களை முன்பை விட நன்றாகவே நடத்துகிறார்கள்.

🔥 நம்மை எப்படியாவது வாங்க வைத்து விட வேண்டும் என்பதில் தான் பெரும் முனைப்புடன் இருக்கிறார்கள்..!
இந்த மாபெரும் பண்டிகை கால சலுகை என்பது ஆன்லைன் தளங்களில் மட்டுமல்ல நம்மைச் சுற்றியுள்ள கடைகளிலும் ஷோரூம்களில் கிடைக்கிறது என்பதே உண்மை..!
மேலும் இந்த சலுகைகள் தீபாவளி வரை தொடரும் என்று அவர்கள் சொல்கிறார்கள்..! 😊
(எனவே ஆன்லைனில் தவறவிட்டோமே என்று கவலை கொள்ள வேண்டாம்.!)
ஒருவேளை இது LockDown னினால் ஏற்பட்ட வியாபார பாதிப்பின் விளைவாக கூட இருக்கலாம்..!
எது எப்படியோ வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வது தான் நமது புத்திசாலித்தனம்...!😊

மற்றும் ஒரு நல்ல பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்..!😊

நன்றி மக்களே..!
🙏🙏🙏

#NivaThreads

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with நிவா 🦋

நிவா 🦋 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @theroyalindian

17 Oct
#Sales
இதுல முக்கியமான இன்னொரு விஷயம்..! 😊
பொதுவா எல்லா பொண்ணுங்களுக்குமே அண்ணன் அல்லது அண்ணன் முறையில ஒருத்தரு இருப்பாரு. அவரு அந்த பொண்ணு மேல ஏகத்துக்கும் பாசம் வச்சிருப்பாரு..!
அவரை இந்த சமூகம்,
பாடி கார்ட்,
நலம் விரும்பி,
பாசமலர் ன்னு
எப்படி வேணும்னாலும் சொல்லலாம்..!😊

ஆனா, அந்தப் பொண்ணு மட்டும் அவரு சொல்றத தான் தட்டாம கேட்பாங்க.! அவ்ளோ பாசம் & நம்பிக்கை..! Image
பெரும்பாலும் அவருதான் வில்லன் ரோல் ப்ளே பண்ணுவாரு.
அவருக்கே நம்மள புடிச்சு போச்சுன்னா அப்புறம் பெருசா குறுக்கீடுகள் ஏதும் இருக்காது..!
நம்மளா.. சொந்த செலவுல ஏதாச்சும் சூனியம் வச்சிகிட்டா தான் உண்டு, மத்தபடி 99% சக்சஸ் & சுபம் தான்..!😊 Image
Read 9 tweets
14 Oct
#Android_Security 😊
#ஆண்ட்ராய்டு_பாதுக்கப்பு

நமது ஆண்ட்ராய்டு சாதனங்களில கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள்..!🤔

அது பற்றிய #Thread #இழை
வாங்க ஜாலியா Secure பண்ணலாம்..!🧞

உதாரணத்துக்கு "நாம ஒரு வெளியூர் Trip போறோம். ஒரு 10 நாள் ஊருல இருக்க மாட்டோம்..!"
வீட்ல என்னெல்லாம் பண்ணுவோம்..!🙋
🔥வெறுமனே Main Doorஐயும், Gate ஐயும் பூட்டிட்டு பொய்டுவோமா, இல்ல,
🔥தண்ணி எல்லாம் Pipe எல்லாம் Closeல இருக்கா,
🔥Gas Regulatorஅ Off பண்ணிட்டோமா,
🔥எல்லா Electrical சாதனங்களையும் Switch off பண்ணியாச்சா,
🔥ஜன்னல் எல்லாம் சாத்தியாச்சா,
🔥Back Door அ சரியா Lock பண்ணிட்டோமா,
🔥பீரோ key எல்லாம் பத்திரப்படுத்திட்டமா

இப்படி எல்லாம் முடிச்சு கடைசியாக தானே Main Doorஐயும் Gateஐயும் பூட்டுவோம்.!🔐

ஒரு 10 நாள் ஊருக்கு போறதுக்கே இந்த அக்கப்போர்ன்னா,😂
Minimum ரெண்டு மூனு வருஷமாச்சும் Use பண்ற Mobileக்கு என்ன பண்ணனும்.!
Read 26 tweets
9 Oct
#வந்தாரை_வாழவைக்கும்_தமிழகம்😊
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு இருக்கும்,
ராஜஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வந்த சில குடும்பங்கள் சிறியதாக அவங்க வசதிக்கு ஏற்ப பைனான்ஸ் தொழிலை ஆரம்பிக்கிறாங்க.!

அப்போ அதைபத்தி இங்க இருந்தா யாரும் பெருசா கவலைப்படவும் இல்லை அலட்டிக்கவும் இல்லை.🙄
அவங்களுக்கு அந்த தொழிலை நடத்த ஒரு அமைதியான நிலப்பரப்பும் அதை சார்ந்த எளிமையான மக்களும் தேவை.!

நம்ம மக்களோட
🔥நேர்மை,
🔥சரியான படி பணத்தை திருப்பி செலுத்துதல்
🔥காசு விஷயத்தில் கரெக்டா நடந்து கொள்வது,
அப்புறம் முக்கியமா,
🔥நம்ம வீடுகளில் இருந்த தங்கம்.!🙄
இதெல்லாம் பார்த்த அவங்க ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டாங்க..!
நம்ம தொழில் நடத்த இதைவிட சிறந்த இடம் வேற எதுவுமே கிடையாதுன்னு முடிவு பண்றாங்க..!

"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பதற்கு பதிலாக
"யாம் பெற்ற இன்பம் பெருக எம் இனம்" என்பது போல இங்கு உள்ள நிலவரம்,தொழில் வாய்ப்புகள் பற்றி
Read 18 tweets
8 Oct
#எண்ணங்களில்_மாற்றம் 🙋

என்னுடைய மிக நெருங்கிய நண்பர்ன்னு சொல்றத விட அண்ணன்னு சொல்லலாம்.!

அவருடைய வீடுக்கு ஒரு வேலை விஷயமா கூப்பிட்டிருந்தாரு.!
ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் அதே ஏரியால வேற வீடு மாத்தியிருந்தாரு.!
அதனால அவரு அட்ரஸ் சொன்ன அந்த சந்து வரைக்கும் போய்ட்டேன்.
அதுல தான் வீடுன்னும் தெரியும்..!, ஆனா, அதுக்குள்ள எந்த வீடுன்னு கண்டுபிடிக்க முடியல..! ஃபோன் பண்ணா 'நாட் ரீச்சபிள்' . சரி நம்மளால முடியாதா..!
விசாரிச்சு கேட்டு போகவேண்டியது தான்னு முடிவு பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சேன்.
அவர் பேரை சொல்லி விசாரிச்சா பக்கத்துல தெரியாதுன்னு சொல்லிட்டாங்க..!
அப்புறம் அவரு வேலை பார்க்குற இடத்தை பற்றி சொல்லி கேட்டுபார்த்தேன் அப்பவும் தெரியலன்னு சொல்லிட்டாங்க..!
அவரை பத்தி மேலும் சில விபரங்களை சொல்லி கேட்டேன்..!
யாருக்கும் சரியா தெரியலை..!
என்னடான்னு நினைக்கும் போது,
Read 10 tweets
6 Oct
#காதலின்_வரம்_கண்ணம்மா 😊

"சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்...!

நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ.!

கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ.!

வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்.!"

💃😍💃

இந்த வரிகளில்
அந்த முண்டாசு தலைப்பாகை மற்றும் முறுக்கு மீசைக்குள் Image
ஒளிந்து இருக்கும் காதல் நம்முன் பரிணமித்து நிற்கிறது..!

உவமைகளின் அரசன் என்றுமே பாரதிதான்..!

🔥காதலியின் ஒரு சிறு புன்னகையை அவன் இவ்வாறு வர்ணிக்கிறான்.
சோலை என்பது பூக்களும் பூஞ்செடி கொடிகளும் நிறைந்த மனதிற்கு பிடித்த ரம்மியமான சூழல் நிறைந்த இடம். அந்த ரம்மியமான சூழலில்
நிலவின் ஒளியானது பூக்களின் மீது உள்ள நீர் திவலைகள் வழியே பிரதிபலிக்கும் போது அந்தப் பூக்கள் ஒளிர்வது போல தோற்றமளிக்கும். இதனால் அந்த அழகிய பூக்களின் அழகு இன்னும் மேம்பட்டு மிகவும் மனதை கவரும் படி பேரழகாக தெரியும்.
"நானும் அந்த பூஞ்சோலையில் உன்னுடைய அந்த சிறிய புன்னகையை
Read 10 tweets
28 Sep
#Home_Theatre & #Sound_Bar 😊
(Purchasing Tips)

OTT தளங்களின் பயன்பாடு அதிகமான பிறகு இப்போது நம்மில் பலர் நமது TV ஐ 40" + திரைகொண்ட Full HD அல்லது 4K TV ஆக Update செய்திருப்போம்.!
எல்லாம் ஒரு நல்ல Movie Watching Experience கிடைக்க வேண்டும் என்பதற்காக தான்.!

#Shopping #Gadgets
ஒரு முழுமையான Movie Watching Experience என்பது பெரிய திரையில் படம் பார்ப்பது மட்டும் அல்ல அதை நல்லஒலி அனுபவத்துடன் கேட்டு ரசிப்பதும் ஆகும்.
இந்த நல்லஒலி அனுபவத்தை நமக்கு தரவல்லது தான்,
🔥 Sound Bar
🔥 Home Theater
சரி இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்ன்னு முதல்ல பார்ப்போம்.😊
#Sound_Experience #ஒலி_அனுபவம்
சின்ன பிசிறு கூட இல்லாத முழுமையான ஒலி.!
#இசைஞானி யின் பாடல்களில் தவழும் Bass Guitar,
#ARR ன் பாடல்களில் இழையோடும் Beats இப்படி குண்டுசி விழும் சத்தம் முதல் டைனோசர் கத்தும் அலறல் வரை எல்லாம் அதன் அளவுகளில் மிகச்சரியாக தெளிவாக இருக்கவேண்டும்.😊
Read 26 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!