#எம்பார்#அறிவோம்_ஆச்சார்யர்கள்
மதுரமங்கலத்தில் கமலநயன பட்டர் ஸ்ரீதேவி அம்மாள் தம்பதியினருக்கு கிபி 1026ஆம் ஆண்டு தை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் திருக்குமாரராய் திருவவதாரம் செய்தவர். ஸ்ரீதேவி அம்மாள் எம்பெருமானார் இராமானுசருக்கு சிற்றன்னையாவார். தாய் மாமனான பெரிய திருமலை
நம்பி இவருக்கு இட்ட பெயர் கோவிந்தப் பெருமாள். திருப்புட்குழியில் தன் அண்ணன் இராமானுசருடன் யாதவ பிரகாசரிடம் கல்வி கற்றார். யாதவ பிரகாசரிடம் கல்வி பயின்றபோது குருவின் கருத்துக்களோடு இராமானுசருக்கு பலமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் விளைவாக அவரை குருவுக்குப் பிடிக்காமல் போயிற்று.
அதன் தொடர்ச்சியாக யாதவப்ரகாசரின் காசி யாத்திரையில் இராமானுசரின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து அவரைக் காப்பதில் முக்கிய பங்கு வகித்தார் கோவிந்தபட்டர். எம்பெருமானாரைக் காப்பாற்றிய பின்பு இவர் தம் குருவான யாதவப்ரகாசருடன் காசி யாத்திரையைத் தொடர்ந்தார். கங்கை கரையில் நீராடுகையில்
கோவிந்தப்பெருமாளின் கையில் சிவலிங்கம் எதிர்படவே அதனை காளஹஸ்தி தலத்துக்கு எடுத்துச் சென்று அங்கேயே தங்கிவிட்டார். இச்சம்பவத்தால் "உளங்கைக் கொணர்ந்த நாயனார்" என சைவர்களால் அழைக்கப்பட்டார். இவரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம் கொண்ட எம்பெருமானார், அப்பணியை சரியாக செய்து முடிக்க
பெரிய திருமலை நம்பிகளை வேண்டினார். பெரிய திருமலை நம்பிகளும் உடனே காளஹஸ்திக்குச் சென்று, கோவிந்தப்பெருமாள் நந்தவனத்திற்குப் பூக்களைப் பறிக்க வரும் நேரத்தில் “தேவன் எம்பெருமானுக்கல்லால் பூவும் பூசனையும் தகுமே” (அதாவது ஸ்ரீமன் நாராயணனே பூக்களைக்கொண்டு ஆராதிக்கத்தக்கவன் தவிர வேறாரும்
அல்லன்) என்னும் திருவாய்மொழிப் பாசுரத்தைக் கூறினார். இதை கேட்ட நொடியே அவர் தமது தவறை உணர்ந்து பரமசிவனாரிடத்தே தாம் வைத்த பற்றையும் துறந்து, பெரிய திருமலை நம்பிகளை சரண் புகுந்தார். பெரிய திருமலை நம்பிகள் இவருக்கு பஞ்சசம்ஸ்காரங்களைச் செய்து வைத்து இவருக்கு அர்த்தங்களை
உபதேசித்தார். கோவிந்தபட்டரும் தேவுமற்றறியாதவராய் பெரிய திருமலை நம்பிகள் திருவடிகளே எல்லாமாகக் கொண்டு பெரிய திருமலை நம்பிகளிடத்தே இருந்து வந்தார். ஸ்ரீ இராமானுசர் பெரிய நம்பிகளிடம் ஸ்ரீமத் இராமாயணம் பயில கீழ் திருப்பதியில் தங்கியிருந்தபோது கோவிந்தப்பெருமாள் தனது ஆசார்யனான பெரிய
திருமலை நம்பிகளுக்குப் படுக்கை தயாரித்து அதில் தான் முதலில் படுத்துப் பார்க்கிறார். இதைக் கண்ட எம்பெருமானார் இதைப் பெரிய திருமலை நம்பிகளிடம் தெரிவிக்க அவரும் இது பற்றி கோவிந்தப்பெருமாளிடம் விசாரிக்கிறார். அதற்கு கோவிந்தப்பெருமாள், ஆசார்யன் படுப்பதற்குப் படுக்கை சரியாக உள்ளதா
என்பதை அறியவே தாம் இவ்வாறு செய்வதால் அதனால் தமக்கு நரகமே வாய்க்கும் என்றாலும் கவலை இல்லை ஆசார்யன் திருமேனியை பற்றியே தாம் கவலை கொள்வதாகக் கூறினார். ஒரு முறை பாம்பின் வாயில் சிக்கியிருந்த முள்ளை அகற்றுவதை எம்பெருமானார் பார்த்து அவரின் ஜீவ காருண்ய சிந்தையைக் கண்டு வியந்தார்.
திருவேங்கடத்திலிருந்து எம்பெருமானார் கிளம்பும் தருவாயில், பெரிய நம்பிகள் எம்பெருமானார்க்கு தாம் ஏதேனும் தர விருப்பப் படுவதாகக் கூறினார். எம்பெருமானார் கோவிந்தப்பெருமாளைக் கேட்டார். நம்பிகளும் மகிழ்ந்து கோவிந்தப் பெருமாளிடம் எம்பெருமானாரைத் தாமாக கொள்ளும் படிக்கு அறிவுறுத்தி
அனுப்பிவைக்கிறார். அவர்கள் குடும்பத்தார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எம்பெருமானார் கோவிந்தப்பெருமாளின் திருமணத்தைச் செய்துவைக்கிறார். ஆனால் அவர் இல்லற வாழ்கையில் ஈடுபடாதிருந்தார். எம்பெருமானாரிடத்தில் வந்து தான் எல்லா இடங்களிலும் பெருமாளைப் காண்பதால் தன்னால் இல்லறத்தில் ஈடுபட
முடியவில்லை என்று கூறினார். எம்பெருமானார் இவரின் நிலையை அறிந்து இவர்க்குத் துறவறம் அளித்து #எம்பார் என்னும் திருநாமத்தைச் சாற்றித் தம்மோடே இருக்கும் படிக்கு ஆணையிட்டார். கூரத்தாழ்வாரின் மனைவி ஆண்டாள் பெரிய பெருமாள் அனுப்பிவைத்த பிரசாதத்தின் அருளால் இரண்டு திருக்குமாரர்களை
ஈன்றெடுத்தார். அவர்களின் பெயர் சூட்டு விழாவிற்கு எம்பாருடன் இராமானுசர் கூரேசரின் திருமாளிகைக்கு வருகை தந்தபொழுது குழந்தைகளை எடுத்துகொண்டு வரும்படிக்கு எம்பாரிடம் சொன்னார். எம்பார் குழந்தைகளை எடுத்து வரும்போது அவர்களின் ரக்ஷைக்கு வேண்டி த்வயானுஸந்தானம் செய்தார். குழந்தைகள்
எம்பாரிடமிருந்து த்வய மஹாமந்திரத்தை உபதேசிக்க பெற்றார்கள் என்றுணர்ந்த எம்பெருமானார் எம்பாரையே அவர்களுக்கு ஆசார்யனாய் இருக்கும்படி நியமித்தார். இதனைத் தொடர்ந்து பராசர பாட்டரும் வேத வ்யாச பட்டரும் எம்பாரின் சிஷ்யர்கள் ஆனார்கள். மண்ணுலக விஷயங்களில் எப்போதும் வெறுப்பு கொண்டும் ஆனால்
பகவத் விஷயங்களில் பெரும் ஈடுபாட்டுடனும் இருந்தார். பெரியாழ்வார் திருமொழியின் இறுதிப் பாசுரத்தில் “சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே” என்பதற்குப் பொருள் கூறும்படி சில வைணவர்கள் கேட்க அதற்கு எம்பார் இந்தப் பாசுரத்திற்கு தான் எம்பெருமானாரிடம் அர்த்தம் கேட்டதில்லை என்று
சொல்கிறார். ஆயினும் எம்பெருமானாரின் பாதுகைகளைத் தமது திருமுடி மேல் வைத்து ஒரு கணம் தியானித்த பின் அக்கணமே எம்பெருமானார் இதற்கான விளக்கத்தை தமக்கு உணர்த்தியதாகவும், இதன் பொருள் எவர் ஒருவர் இப்பாசுரங்களைப் பாடுகிறார்களோ அவர் எம்பெருமானின் நிழல் போன்று அவரை விட்டுப் பிரியாமல்
இருப்பார் என்று புரிந்து கொள்ளப்பட வேண்டியது என்று அருளினார். கண்ணன் எவ்வாறு அனைவரையும் அச்சுறுத்துகிறான் என்று விளக்கும் பெரியாழ்வார் திருமொழியின் 2.1 பதிகத்திற்கு உய்ந்தபிள்ளை என்னும் அரையர் கண்ணன் தன் திருக்கண்களை அச்சுறுத்தும் விதத்தில் வைத்து ஆயர் பிள்ளைகளை அச்சுறுத்துகிறார்
என்று அபிநயித்துக் காட்டியதைப் பின்னே இருந்து கவனித்து வந்த எம்பார் சங்கையும் சக்கரத்தையும் தோளில் வைத்துக் காட்டி கண்ணன் ஆயர் சிறுவர்களை அச்சுறுத்துகிறார் என்று காட்ட, அதைப் புரிந்துகொண்ட அரையர் எம்பார் காட்டிய படி அடுத்த முறை அபிநயம் காட்டினார். இதைக் கண்ட எம்பெருமானார்
எம்பாராலேயே இவ்வாறாக அர்த்தங்கள் தர இயலும் என்பதால் கோவிந்தப்பெருமாளே இருந்தீரோ என்று கேட்டு மகிழ்ந்தார். இவரின் குண நலத்தால் "எம்பெருமானார்" என்ற இராமானுசரின் பெயரையே அடியார்கள் இவருக்கு இட்ட போதும், ஆச்சாரியன் மீது கொண்ட அளவுக்கடந்த பக்தியினால் ஏற்பட்ட அடக்கத்தின்பால் எம்பார்
என தன் பெயரை சுருக்கிக்கொண்டார். இவர் இயற்றிய நூல்கள் விஞ்ஞான ஸ்துதி, எம்பெருமானார் வடிவழகு பாசுரம், சரமகுரு விசயம் ஆகியவை ஆகும். தனது அந்திம காலத்தில் எம்பார் தன் சிஷ்யர் பட்டரை அழைத்து, சச்சம்பிரதாயத்தைத் திருவரங்கத்தில் இருந்து நிர்வகித்து வரும்படியும், எம்பெருமானார்
அசல் மனு ஸ்மிருதியை நாம் மதிப்பாய்வு செய்தால், பெண்களுக்கு இதை விட உயரிய மரியாதை மற்றும் உரிமைகளை அளிக்கும் வேறு எந்த உரையும் (வேதங்களைத் தவிர) உலகில் இல்லை என்பது தெரியவரும். நவீன பெண்ணிய புத்தகங்கள் கூட மனு ஸ்மிருதிக்கு இணையாக வர மேலும் திருத்தங்களை செய்யவேண்டியிருக்கும். மனு
ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் கூறப்பட்டிருக்கிறது.
சம்சார சாகரத்தில் சிக்கி உழலுகிறோம் என்று நினைத்தால் நாம் எம்பெருமானின் அருளுக்கு ஆளாகிறோம். சம்சார சாகரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக எண்ணினால் நாம் எம்பெருமானின் லீலைக்கு உகந்தவர்கள் ஆகிறோம் - #பெரியவாச்சான்பிள்ளை. இவர் வைணவ உரையாசியர்களுள் முதன்மையானவர். இவர் நாலாயிர
திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் உரையெழுதியுள்ளார். இதனால் இவரை “வியாக்கியானச் சக்கரவர்த்தி” (வியாக்கியானம் என்றால் விளக்க உரை) என்கிற பட்டத்தைப் பெற்றவர். இவர் வடமொழி தமிழ் இரண்டிலும் பெரும் புலமை பெற்றவர். பெரியவாச்சான் பிள்ளை ஆவணி ரோகிணியில் யாமுனாசார்யர் நாச்சியாரம்மன்
இருவருக்கும் மகனாக திருவெள்ளியங்குடி என்னும் திவ்யதேசத்திற்கு அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் ஊரில் கிபி 1167ல் அவதரித்தார். ஆவணி ரோகிணியில் அவதரித்ததால் இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார். இயற்பெயர் ஸ்ரீ கிருஷ்ண பாதர். கலிகன்றியாகிய திருமங்கையாழ்வார் திருக்கலிகன்றிதாஸராகிய
இந்த கோவில் - ஆனந்தபத்மனாப சுவாமி கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில். இந்தக் கோவில் உருவான விதம் ஒரு பெரிய அதிசயம்! இந்தக் கோவிலை அடையாளம் காட்டியவர் மகாபெரியவா. (ஸ்ரீ சுரேஷ் பஞ்சநாதன் தளத்தில் உள்ள கட்டுரைக்கு நன்றி). ஒருமுறை காஞ்சி மகாபெரியவா மடத்தில் பக்தர்களுடன் உரையாடும்
போது அவர்களிடம், காஞ்சியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு அருகிலுள்ள சிவன்-விஷ்ணு கோவில் பற்றி உங்களில் யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா, அது எங்கிருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டார். அக்கோவிலைப் பற்றி யாரும் அறிந்ததாகத் தெரியவில்லை. எனவே, கோவில் பற்றிய வரலாற்று
குறிப்புகளை சரிபார்த்த பிறகு அடுத்த நாள் காலையிலேயே அந்த இடத்தைக் கண்டுபிடிக்க சுவாமிகள் முடிவு செய்தார். அவரும் அவருடைய சீடர்களும் அந்த இடத்திற்குச் சென்றபோது, ஒரு வீட்டைக் கண்டு அவர்கள் ஏமாற்றமடைந்தார்கள். எந்த ஆலயத்தின் அடையாளங்களும் அங்கு இல்லை! சுவாமிகள் பின்னர் ஒரு
இன்று #நவராத்திரி ஆரம்பம். நவராத்திரியில் துர்கா, லக்ஷ்மிய, ஸரஸ்வதி தேவிகளை பூஜிக்கிறோம். இருப்பது ஒரே பராசக்திதான். துர்க்கையாக இருக்கும்போது வீரம், சக்தி தருகிறாள். மஹாலக்ஷ்மியாகி தனங்களைத் தருகிறாள். ஸரஸ்வதியாகி ஞானம் தருகிறாள்.
ஆதிபராசக்தியான துர்க்கையைப் பார்வதியோடு
ஐக்கியப்படுத்திச் சொல்லலாம். ஹிமவானின் மகளானதால் மலைமகள். மஹாலக்ஷ்மி பாற்கடலில் தோன்றியதால் அலைமகள். ஸரஸ்வதி எல்லா ஞானமும் தருவதால் கலைமகள். பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், பாற்கடலில் பிறந்த மஹாலக்ஷ்மியும், இரண்டு மஹரிஷிகளுக்குப் பெண்களாகவும் அவதரித்திருக்கிறார்கள்.
மஹாலக்ஷ்மியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்க வேண்டும் என்று பிருகு மஹரிஷி தபஸ் செய்தார். அதற்கிணங்கவே லக்ஷ்மிதேவி அவருக்குப் மகளாக பிறந்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால் பார்கவி என்று பெயர் ஏற்பட்டது.
‘பார்கவி லோக ஜனனி க்ஷீரஸாகர கன்யகா’ எனறு ஸம்ஸ்கிருத அகராதியான ‘அமர கோசம்’
Who is the real culprit behind the crimes committed by Vijay Mallya? Shame on #ManmohanSingh and #Chidambaram to be named by the British court as being behind the fraud committed by Mallya. Hearing the Mallya case on Friday, Justice Emma Arbaughnott stated in clear terms that,
that, "Indian banks had grossly violated their own rules and regulations in lending to Mallya's airline company Kingfisher. This can be seen 'with closed eyes' she stated. The above remarks were with reference to the then Prime Minister Manmohan Singh and Finance Minister
Chidambaram ordering the loan to Mallya, despite the bank's objection. On Friday Judge Emma Arbhannot of the Westminster Magistrate Court of London has openly exposed the malpractices and corruption committed by Indian banks in giving loans to Vijay Mallya. "Does any bank officer
#சரம_ஸ்லோகம்
ஸ்ரீ வைஷ்ணவர்களாக இருப்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய சுலோகம் இது. ஜீவாத்மாக்களை கரை சேர்க்கும் உயர்வான விஷயம் இதிலுள்ளது.
"சர்வ தர்மான் பரித்யஜ்ய
மாமேகம் சரணம் விரஜ
அஹம்த்வா சர்வ பாபேப்யோ
மோஷயிஷ்யாமி மாசுச"
இந்த நாலு வரிகளில் ஒவ்வொரு சொல்லுக்கும் உயர்வான பொருளுள்ளது.
1. சர்வதர்மான் பரித்யஜ்ய- இந்தப் பதத்திற்கு மட்டும் ஆசார்யர் வேதாந்த தேசிகன் ஆறு அர்த்தங்களைக் கற்பிக்கிறார்.
(அ) பக்தியோகம் முதல் வேறெந்த யோகத்தையும் முழுமையாக கடைபிடிக்க முடியாத நம் இல்லாமையை உணர்ந்து, இங்கிருக்கும் வெறுமையினை உணர்ந்து எல்லா வழிகளையும் விட்டுவிடு என்பது முதல்
பொருள்.
(ஆ) நம் கையில் ஒன்றுமில்லை. எந்த விதமான சக்தியும் இல்லாதவர்கள் என்ற நமது சிறுமையை உணர்வது இரண்டாவது அர்த்தம்.
(இ) சரணாகதிக்குச் சொல்லப்பட்ட விஷயங்களைத் தவிர வேறு அங்கங்கள் இல்லையென்று உணர்வது, ப்ரபத்தியொன்று தான் இறுதியானது, உத்தமம் என்று அறிவது தான் மூன்றாவது பொருள்.