பாம்பு கடியால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 50,000 பேர் இறக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 52,000 பேர். அதாவது ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒருவர்.
எதனால் இது சரிசெய்யப்படாமல் இருக்கிறது? ஏனெனில் இதில் பெரும்பாலோனோர் ஏழைகள், விவசாயிகள்.
#SnakeBite#India#Science#Snake 2/n
உலகம் முழுதும் ஆண்டுக்கு தோராயமாக 1 லட்சம் பேர் இறக்கிறார்கள். அதில் பாதி இந்தியாவில். 50,000 பேர். ஆண்டுக்கு.
அதோடு இதில் இருந்து பிழைப்பவர்களுக்கு உறுப்பு இழப்பு, கிட்னி பாதிப்பு, கோரமான வடுக்கள், உளவியல் பாதிப்பு எல்லாமே.
#SnakeBite#India#Science#Snake 3/n
இந்தியாவில் கிட்டத்தட்ட 300 பாம்பு வகைகள் இருக்கின்றன. அவற்றில் கிட்டத்தட்ட 60 விஷத்தன்மை உடையது. கிராமங்களில் அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் விஷமுறிவு மருந்துகள் இருப்பதில்லை.
Priyanka Kadam, Snakebite Healing and Education Society
#SnakeBite#India#Science#Snake 4/n
இப்போ கரோனா வைரஸ் antibody என்ற வார்த்தை உபயோகிக்கூறோம். இது நமது உடம்பு கரோனா வைரஸ் எதிர்க்க உற்பத்தி செய்வது. இதற்குத்தான் தடுப்பூசி போட்டு இந்த antibody உற்பத்தி செய்து நம் உடம்பை training செய்கிறோம்.
#SnakeBite#India#Science#Snake 5/n
இந்த பாம்பு விச முறிவும் இதேபோலத்தான் தயாரிக்க படுகிறது. ஆனால் எப்படி தெரியுமா? பாம்பு விஷம் குதிரைக்கு செலுத்தப்படும். குதிரையில் உற்பத்தி ஆகும் antibody பிரித்து எடுக்கப்பட்டு மனிதர்களுக்கு விச முறிவுக்கு பயன்படுத்துகிறார்கள்.
#SnakeBite#India#Science#Snake 6/n
குதிரைக்கு பாம்பு விஷம் கொடுத்து மனிதர்களுக்கு விஷமுறிவு மருந்து தயாரிப்பதில் என்ன பிரச்சினை? 1) எந்த பாம்பு விஷம் செலுத்தி குதிரையின் antibody உற்பத்தி செய்கிறதோ அந்த பாம்பின் விஷத்துக்கு மட்டுமே அது மருந்து.
2) குதிரைகள் வளர்ப்பு, சரியான விஷம் கொடுப்பது, மருந்து பிரிந்து எடுப்பது இது அதிகம் செலவு பிடிக்கும். 3) அதிகமான பாம்பு விஷம் கொடுத்தால் குதிரை இறப்பது, கண் பார்வை இழப்பது, உறுப்பு இழப்பு (கால், சிறுநீரகம்) நடக்கும். (பாவம்!) ஆனால் வழி இல்லை
#SnakeBite#India#Science#Snake 8/n
எல்லா பாம்பு கடிக்கும் பொதுவான ஒரு விஷமுறிவு மருந்து என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பாம்பின் விஷம் நரம்புமண்டலத்தை தாக்கும் என்பது உண்மை.
Ohirex என்னும் அமெரிக்க நிறுவனம் இப்படி மருந்துகள் தாயாரித்து இருக்கிறது.
#SnakeBite#India#Science#snake
இந்தியாவில் என்ன நடக்கும் என்றால் குதிரைகள் சரியாக பராமரிக்க படாது. கருவுற்ற குதிரைக்கு பாம்பு விஷம் கொடுத்து பிறந்த குதிரை உறுப்பு பாதிப்புகளுடன் பிறந்தது. கண்பார்வை போனது. இது 2000ல் என்றாலும் இப்போதும் நடக்கலாம். indiatoday.in/magazine/scien…
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உடம்புக்குள் மருந்துகள் செலுத்தப்படும்போது அதில் முக்கியமானது அந்த மருந்து தண்ணீரில் கரைய வேண்டும். ஆனால் தண்ணீரில் கரைந்தால் அது எங்கே போக வேண்டுமோ அங்கே போய் சேராது. அதோடு நம் உடம்பு அதை உடனே வெளியேற்றி விடும். அதனால் vesicles எனப்படும் particles உள்ளே அனுப்பப்படும்.
இந்த vesicles இரண்டு பகுதிகள் கொண்டது. வெளிப்புறம். பெரும்பாலும் lipids போன்ற அமைப்பில் இருக்கும். Cancer மருந்துகள் பெரும்பாலும் தண்ணீரில் குறையாது. உதாரணம் paclitaxel. இது இந்த முறையில் உள்ளே அனுப்பப்படும். #cancer
இப்போ இந்த vesicles க்கு இரண்டு வேலைகள். மருந்தை நீண்ட நேரம் உடம்பில் (சிறுநீர், கழிவு) வழியா வெளியே தள்ளாமல் வைத்திருக்க வேண்டும். அதற்கு அந்த carrier எந்த பொருளால் கட்டமைக்க பட்டிருக்கிறது என்பது முக்கியம்.
எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்த முதல்வர் கலைஞர். எமர்ஜென்சியின் எந்த பிரச்சினையும் தமிழ்நாட்டில் நடக்காமல் பார்த்துக்கொண்டார். மற்ற மாநிலங்களில் இருந்து எமர்ஜென்சியால் பாதிக்கப்பட்ட தலைவர்கள் தமிழ்நாட்டில் அடைக்கலம் அடைந்தார்கள். அதே நேரம் #MGR எமர்ஜென்சியை ஆதரித்தார். #ADMK#DMK
எமர்ஜன்ஸியை கொண்டுவந்த இந்திராவையும், எமர்ஜன்ஸியையும் ஆதரித்தவர் எம்ஜிஆர். எமர்ஜன்சி காலத்தில் எம்ஜிஆர் கலைஞரை எதிர்த்து இயங்க ஆதரவு அளித்தவர் இந்திரா. இந்திரா ஆதரவுடன் எம்ஜிஆர் அளித்த புகாரில் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது ஜனவரி 1976.
இப்படி தமிழ்நாட்டில் எமர்ஜென்சி எதிர்ப்பில் கலைஞர் உறுதியாக இருந்ததால் தமிழ்நாட்டில் அடைக்கலம் அடைந்த தலைவர்களில் சிலர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சுப்பிரமணியன் சாமி.
நேர்முக தேர்வு பற்றியும், அதன் முறைகேடுகள் பற்றியும் ட்வீட் கண்ணில் பட்டது.
என்னோட கதை வேற. ஆனா வேலை கிடைக்கல என்னும் முடிவு ஒன்றேதான்.
PhD, Postdoc எல்லாம் முடித்தும் இந்தியாவில் கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைப்பது குதிரை கொம்பு. 1/n
இந்திய அரசு ஏதோ பெரிய மனசு மனசு பண்ணி கொஞ்சம் fellowships (Ramanujam, Ramalingaswami) என்று வைத்திருக்கிறது. இதெல்லாம் project எழுதி "நேர்முக தேர்வு" மூலம் செலக்ட் ஆகனும். 2/n
அதற்கடுத்து CSIR-JRF என்று ஒன்று கடந்த சில வருடங்களாக இருந்தது. ஆனா இப்போ இல்ல.
வெளிநாடுகளில் postdoc ஆக இருப்போருக்கு மட்டும் நடத்தும் சேலெக்ஷன் இது.
இதோட நேர்முக தேர்வு நடந்து ஒவ்வொரு பாட பிரிவிலும் 10 பேர் என்ற அளவில் தேர்வு செய்வார்கள். 3/n
#Universe 1/n #Aliens இருக்கிறார்களா?
வானத்தை பார்த்துக்கொண்டே ஒரு அடி தூரத்தில் நம்ம கட்டை விரலை வைத்து அந்த இடத்தில் மட்டும் கண் பார்வையை தடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த கட்டைவிரல் அளவுள்ள வானத்தில் அருகிலும், தூரத்திலுமாக ஆயிரக்கணக்கான கேலக்சிகள் உள்ளன.
#Universe#Aliens 1/n
நாம் இருப்பது Milky Way என்னும் கேலக்சி. மொத்தம் நமது டெலஸ்கோப்புகள் பார்வையிட முடிந்த பிரபஞ்சத்தில் (Observable universe) கிட்டத்தட்ட 200 பில்லியன் (200,000,000,000 - இரண்டு லட்சம் கோடிகள்) கேலக்சிகள் இருக்கலாம் என்பது அனுமானம்.
#Universe#Aliens 3/n
நாம் இருக்கும் Milky Way அப்படி ஒரு கேலக்சி. சூரியன் அதில் ஒரு நட்சத்திரம். இந்த Milky Way இல் மட்டும் சூரியனை போல 100 முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கலாம். அதில் சூரியனை போல எல்லாவற்றுக்கும் கோள்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
மக்களே நல்லா புரிஞ்சுக்கோங்க. பொதுவாவே வைரசுக்கு மருந்து கிடையாது. சாதாரண வைரஸ் சளி, காய்ச்சல் இப்படி upper respiratory system தாக்கும் (SARS உட்பட). அது ஜெனடிக் மாற்றமடைந்து #coronavirus ஆக வந்துள்ளது. இது lower respiratory stem (lungs) பாதிக்கும். நிமோனியா வரும். #COVID19 1/n
பாக்டீரியாவால் வரும் நிமோனியாக்கு antibacterial மருந்து இருக்கு. இந்த #coronavirus ஆல் வரும் நிமோனியாவுக்கு மருந்து கிடையாது. உடம்பே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கனும். (immunity)
வயதாக ஆக இந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உடல் தடுமாறும். #COVID19 2/n
அதுபோக #coronavirus அறிகுறி சாதாரண வைரஸ் தாக்குதலின் அறிகுறி போலவே இருக்கும். சிலருக்கு இந்த அறிகுறிகளே இருக்காது என்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகளுக்கு "பெரும்பாலும்" அறிகுறிகள் இருப்பதே தெரியாது. #COVID19 3/n
ரஜினியின் பேச்சு பற்றி.
திட்டம் 1: நான் கட்சியின் தலைவர். ஆட்சிக்கு இன்னொருவர்.
திட்டம் 2: அரசியலுக்கு இளைஞர்கள் வரனும்.
திட்டம் 3: அனுபவம் வாய்ந்த, மக்களிடம் நல்ல பெயர் பெற்ற அதிகாரிகளை கட்சிக்கு கூட்டி வருவேன். 1/n
நேரடி அரசியலுக்கு வருவேன் என்று சொன்னது 2017ல். அதற்கு முன் அரசியல் கேள்வியின் போது அவரோட ஒரே பதில், மேலே கையை காட்டி ஆண்டவன்கிட்டதான் என்று சொல்வார். இது வருவேன் என்றோ வரமாட்டோன் என்றோ பதில் அல்ல. ஆனா எதிர்பார்ப்பை நீடிக்க செய்தது உண்மை. 2/n
இந்த திட்டங்களை அடுத்த டீவீட்களில் பார்க்கலாம். மூன்று திட்டங்கள் என்று சொல்லிவிட்டு இதை மக்களிடம் கொண்டு சேருங்கள். எழுச்சி உண்டு பண்ணுங்கள் என்கிறார். இதை மக்களிடம் ரசிகர்கள், மன்ற ஆட்களை விட அவரால்தான் செய்ய முடியும். 3/n