பரஸ்பரநிதியில் (mutual funds) ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் முதலீடு செய்வதே systematic investment plan (SIP)
ஏன் sip?
சிறு, குறு முதலீட்டாளருக்கு ஏற்றது
சந்தையின் ஏற்ற இறக்கங்களை தாங்கும் /~
மாதாமாதம் சேமிக்கும் பழக்கத்தை உறுதிபடுத்தும்
சந்தையின் போக்கை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டாம்.
எப்படி முதலீடு செய்வது?
1. வங்கியின் மொபைல் ஆப் / நெட் பேங்கிங் 2. நேரடியாக பரஸ்பர நிதியிடம்
இதற்கு உங்கள் kyc (know your customer) மிக முக்கியம். /~
ஏன் kyc?
சுருக்கமாக சொன்னால், உங்களை யார் என அடையாளப்படுத்தவும், சட்டவிரோத பரிவர்த்தனையை தடுக்க kyc பயன்படுகிறது. இதற்கு உங்கள் ஆதார் எண், பான் அட்டை முதலியவை தேவைப்படும்.
வங்கியில் கணக்கு இருந்தால் ஏற்கனவே உங்கள் KYC சரிபார்க்கப்பட்டு இருக்கும்.
பரஸ்பர நிதி என்றால் அவர்கள் தளத்தில் சென்று eKYC லிங்கை சுட்டவும்.அதில் உங்கள் சுயவிவரங்களையும் வங்கி விவரங்களையும் அளித்து உங்கள் ஆதார் மற்றும் பான் அப்லோடு செய்யுங்கள். பிறகு உங்கள் இருப்பை சரிபார்க்க வீடியோ காலில் IPV (inperson verification) தேதி & நேரம் குறிப்பிடுங்கள் /~
குறித்த நேரத்தில் வீடியோ காலில் ipv முடித்தால் உங்கள் ekyc தயார்.
எப்படி முதலீடு செய்ய?
முதலில் உங்கள் fundஐ தேர்ந்தெடுத்து கொள்ளவும். Equity / debt / tax saving / balanced / gilt fund என பலவகை உண்டு. தேர்ந்தெடுத்த fundஇன் கடந்த 3 ஆண்டு செயல்பாடுகளை பாருங்கள் /~
எல்லாமே கூகுள் துணை. அல்லது இது பற்றி அறிந்தவரிடம் கற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் வங்கி ஆப் அல்லது நெட் பேங்கிங் கணக்கில் investment என்று இருக்கும். அதில் உங்கள் முதலீடு செய்யும் fund, தொகை, காலம், மாதாந்திர தவணை தேதி இவற்றை நிரப்பி submit செய்தால் சிறப்பாக துவங்கியது /~
குறைந்தது மூன்றாண்டுகள் முதலீடு செய்யுங்கள்.
பரஸ்பர நிதியின் இணைய தளங்களில் உங்கள் சுயவிவரங்களை பதிவு செய்து கணக்கு துவங்கி sip முதலீடு துவங்கலாம்.
Demat கணக்கு இதற்கு தேவையில்லை.
நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ இப்புத்தாண்டு வழி காட்டட்டும் 💐💐💐
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1. Fund based - பணமாக தருவது 2. Non-fund based - உத்திரவாதமாக தருவது
Fund based:
இது மேலும் இருவகைப்படும்
1. Cash credit / Overdraft 2. Term loan
CC / OD: இது உங்கள் தொழிலின் அன்றாட தேவைகளை (working capital) பூர்த்தி செய்ய
வழங்கப்படும். உங்கள் முதலீடானது ஸ்டாக், வர வேண்டிய கடன் (விற்பனைக்கு பிறகு) போன்றவையால் முடங்கி இருக்கும். அதிலிருந்து உங்கள் வியாபாரத்தை சரிவின்றி நடத்த CC / OD பயன்படும். பொதுவாக உங்கள் ஆண்டு டர்னோவரில் 20% ஆக லிமிட் இருக்கும். இதை வைத்து மூலப்பொருள் வாங்க, சம்பளம் கொடுக்க,
மின்கட்டணம், அரசு வரிகள் கட்ட, மூலப்பொருள் வாங்கிய கடன் அடைக்க போன்ற செலவுகளுக்கு பயன்படுத்தலாம். இதை வைத்து எந்தவித சொத்தும் (நிலம், கட்டிடம், இயந்திரம்) வாங்கக் கூடாது. அப்படி செய்தால் உங்கள் working capital கடுமையான பாதிப்புக்கு ஆளாகி தொழில் முடங்கலாம். இதை running limit என்று
குறிப்பு: இந்த பதிவு ஒரு புரிதலுக்கு மட்டுமே. யாரும் இதன் மீது எந்தவித உரிமையும் கோர முடியாது.
தகவல்களை வேறு தளங்களில் உங்கள் திருப்திக்கு சரி பார்க்கவும்.
தனிநபர் மருத்துவ காப்பீடு பற்றி அறிய வேண்டிய தகவல்கள்.
(இதை அரசுக் காப்பீடு திட்டத்தோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்)
Sum assured (SI) உங்கள் காப்பீட்டு தொகையை குறிக்கும்.
1.உங்கள் SI 5லட்சம் என வைத்துக் கொள்வோம். நீங்கள் மருத்துவ சிகிச்சை எடுத்த பிறகு பில் 3 லட்சம் என வைத்துக் கொள்வோம். அத்தனையும் உங்களுக்கு க்ளைம் வராது. பொதுவாக ஒரு நாள் ரூம் வாடகை SIயில் 1%, ஒரு நாள் ICU பெட் சார்ஜ் 2%
கடந்த சனி அன்று இரவு 8 மணிக்கு ஒரு நல்லவர் எனது காரின் பின்புற பம்பரை சிதைக்க, நான் 100ஐ அழைக்க, ஏட்டைய்யா திருப்பி என்னை அழைத்தார். சம்பவத்தை விவரித்தேன். யாருக்கும் எந்தவித காயம் இல்லை. எனவே spot photo எடுத்து விட்டு கிளம்புங்கள்.
நாளை மாலை 3 மணிக்கு ஸ்டேஷன் வாருங்கள் என கூறினார்.
நெல்லையில் ஆய்வாளராக இருக்கும் நண்பரை அழைத்து process சரியா என cross check செய்து கொண்டே வீட்டுக்கு கிளம்பினேன்
ஞாயிறு மாலை மீண்டும் ஏட்டைய்யாவை அழைத்தேன். திங்கள் காலை 11 மணிக்கு வரச் சொன்னார்.
10.45க்கே சென்றேன். மனு, RC, Licence, Insurance etc கையில். கொடுத்து விட்டு காத்திருந்தேன். யாருக்கும் உட்கார இடம் இல்லை. என்னைப்போல ஒரு பத்து பேர். பெரும்பாலும் கூட 2/3 பேர். நானும் இன்னொருவரும் மட்டுமே தனியாக இருந்தோம். 30 நிமிடம் கழித்து வந்து வேலை குடும்ப விபரங்களை கேட்டார்.
உங்களிடன் குறிப்பிட்ட அளவு சேமிப்பு இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை வங்கியின் சேமிப்பு கணக்கில் வைத்தால் வட்டி குறைவாகவே கிட்டும். டெபாசிட் போட்டால் அவசரத்திற்கு உடைக்க முடியாது. முதிர்வுக்கு முன்பு எடுத்தால் சில சமயம் penalty வரும்.
என்ன செய்யலாம்?
Flexi-deposit கணக்கை துவங்கி அதில் வையுங்கள். குறிப்பிட்ட இருப்பிற்கு மேல் (எ.கா. ௹10,000) டெபாசிட்டாக மாறி விடும். வட்டியும் சேமிப்புகணக்கு விட அதிகம் கிடைக்கும். 24×7 உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
புதிய தலைமுறை தனியார் வங்கிகள் (Axis, Hdfc, Icici) இந்த வசதியை வழங்குகிறது.
இந்த வசதி ஒரு சில பொதுத்துறை வங்கிகளிலும் உள்ளது. உங்கள் கணக்கு இருக்கும் கிளையை அணுகுங்கள் 🙂
வங்கி சம்பந்தப்பட்ட பதிவுகள் என்னுடைய சொந்த அனுபவம் மட்டுமே. இது நான் பணிபுரியும் வங்கி / வேறா எந்த ஒரு நிறுவனத்தின் கருத்தோ அல்ல. இதை எந்தவித சட்ட நடவடிக்கைக்கு பயன்படுத்த அனுமதி இல்லை.
முன் அனுமதியின்றி காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்
👍🏼👍🏼👍🏼
புதிய தொழிலுக்கு வங்கிக் கடன் - Project Finance
பலருக்கு தொழில் துவங்கி சொந்த காலில் நிற்க ஆசை, வேட்கை, கனவு.. ஆனால் எல்லோரும் அது நடப்பதில்லை. அவர்கள் சொல்லும் முதல் குறை 'எந்த பேங்க் கடன் தரான்'
உங்கள் project உங்களுக்கு தான் கனவு. மற்றவருக்கு அது just ஒரு project தான்
உங்கள் project viability / visibility இல்லாமல் எந்த வங்கியும் கடன் தராது. ஏன், உங்கள் பெற்றோர் தருவது சந்தேகமே.
Related industry இல் அனுபவம் இல்லையா? கடன் இல்லை. MBA படித்துவிட்டு 5 வருடம் இன்சூரன்ஸ் துறையில் பணியாற்றி விட்டு garment unit போட project ready செய்தால் எந்த