எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெலுக்குத் தேநீர் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் குறிப்பாக, இந்தியா, இலங்கை நாடுகளைச் சேர்ந்த தேநீர் என்றால் அவ்வளவு பிடிக்கும்! |1
ஆனால், தேநீரில் சர்க்கரை போடுவது அவருக்குப் பிடிக்காது. ‘நீங்கள் உண்மையான தேநீர்ப் பிரியராக இருந்தால், தேநீரில் சர்க்கரையைப் போட்டு அதன் உண்மையான சுவையைக் கெடுக்காதீர்கள்’ என்று எழுதியிருக்கிறார் அவர். |2
‘யாராவது தேநீரில் மிளகுத்தூளைப் போடுவார்களா? உப்பைச் சேர்ப்பார்களா? சர்க்கரையும் அப்படிதான். தேநீர் என்பது கொஞ்சம் கசப்பாகதான் இருக்கவேண்டும், சர்க்கரை சேர்த்து அதை இனிப்பாகிவிட்டீர்களென்றால் நீங்கள் குடிப்பது தேநீரே இல்லை, வெறும் சர்க்கரைக் கரைசல்!’ |3
‘ம்ஹூம், அதெல்லாம் எனக்குச் சரிப்படாது. சர்க்கரை இருந்தால்தான் நான் தேநீர் குடிப்பேன்’ என்கிறீர்களா? உங்களுக்கு ஜார்ஜ் ஆர்வெல் சொல்லும் ஆலோசனை: |4
இரண்டு வாரத்துக்குச் சர்க்கரை இல்லாமல் தேநீர் குடித்துப் பாருங்கள். அதன்பிறகு ஒருபோதும் சர்க்கரையைப் போட்டு உங்கள் தேநீரை வீணடிக்கமாட்டீர்கள்! |5/5
என்னுடைய 'ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்' (எளிய ஸ்போக்கன் இங்கிலீஷ் கையேடு) நூலைப் படித்த தினேஷ் என்ற வாசகர் ட்விட்டரில் தனிச்செய்தி அனுப்பியிருந்தார். 'இந்த நூலில் ஆங்கிலப் பேச்சின் அடிப்படை அம்சங்களை நன்கு விளக்கியுள்ளீர்கள். இதைப் படித்தபிறகு வேறு என்ன படிக்கலாம்? |1
எங்களுடைய திறனை எப்படி மேம்படுத்திக்கொள்ளலாம்?' என்று கேட்டிருந்தார். அவருக்கு எழுதிய பதில் இன்னும் பலருக்குப் பயன்படும் என்பதால் பொதுவில் வெளியிடுகிறேன். உங்களுக்குத் தேவைப்படாவிட்டாலும், தேவையுள்ள மற்றவர்களுக்கு இதை ஃபார்வர்ட்/ஷேர் செய்யுங்கள். |2
1. ஆங்கிலம்மட்டுமில்லை, எந்த மொழியையும் விதிகளை மனப்பாடம் செய்து கற்றுக்கொள்ள இயலாது. செந்தமிழும் நாப்பழக்கம், செவ்வாங்கிலமும் அதேதான். |3
‘எழுத்தாளர்களில் இரண்டு வகை’ என்கிறார் அமெரிக்க நாவலாசிரியர் ஜார்ஜ் R. R. மார்ட்டின், ‘சிலர் வீடு கட்டுகிறார்கள்; வேறு சிலர் தோட்டம் போடுகிறார்கள்.’ |1
வீடு கட்டுகிற ஒருவருக்கு அந்த வீட்டைப்பற்றி எல்லாம் முன்கூட்டியே தெரிந்திருக்கும்: அறைகள், கூரை, மின் இணைப்புகள், குழாய்கள் என்று அனைத்தையும் கச்சிதமாகத் திட்டமிட்டுவிட்டுதான் அவர் கட்டத் தொடங்குகிறார். |2
தோட்டம் போடுகிறர் அப்படியில்லை. தரையில் ஒரு விதையை ஊன்றித் தண்ணீர் ஊற்றுகிறார். அது என்ன விதை என்று அவருக்குத் தெரியும், ஆனால், அதிலிருந்து வரப்போகும் செடி இப்படிதான் இருக்கும் என்று அவருக்குக் கச்சிதமாகத் தெரியாது, செடி வளர வளர அதைத் தெரிந்துகொள்கிறார். |3
கேரட் என்பது அப்படியே எடுத்துக் கழுவிக் கடித்துச் சாப்பிடவேண்டிய ஒரு காய். அதைப் பொரியலாக்கவேண்டும் என்று நினைத்த மனிதர் நிச்சயம் ஒரு பொழுது போகாத பொம்முவாகதான் இருந்திருக்கவேண்டும். |1
சொல்லப்போனால், கேரட் பொரியல் என்பது கேரட்டின் இயற்கையான சுவையைக் கெடுத்துவிடுகிறது. அல்வாவைத்தவிர வேறெதற்காகவும் கேரட்டை அடுப்பில் ஏற்றக்கூடாது என்று மதிப்பிற்குரிய அரசாங்கத்தார் ஒரு சட்டம் போடவேண்டும். |2
முட்டைக்கோஸும் இப்படிதான். வெறுமனே சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதையே பொரியலாக்கினால் பல்லிளிக்கும். |3
எனக்கு அலுவலக வெள்ளைப் பலகைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதன்முன் நின்று ஒரு பேனாவைத் திறந்துகொண்டால் போதும், 'கவித அருவிமாதிரி கொட்டுது' ஃபீலிங்தான். |1
இத்தனைக்கும் என்னுடைய கையெழுத்து திராபையானது, சுமாரான கோட்டுப்படங்களைக்கூட வரையத் தெரியாது. ஆனாலும் எதையும் வெண்பலகையில் சிந்திப்பதையே விரும்புவேன். எப்பேர்ப்பட்ட பிரச்னையை எடுத்துக்கொண்டாலும் சரி, அதைப் பலகையில் விரித்து விவாதிக்கத் தொடங்கிவிட்டால் போதும், |2
சிறு கட்டங்கள், வட்டங்கள், கோடுகள், அம்புக்குறிகளின் துணையோடு மளமளவென்று அதை உடைத்துத் தீர்வை நோக்கி நகர்ந்துவிடலாம் என்பதாக ஓர் எண்ணம்.
முன்பு நான் நிறையப் பயிற்சி வகுப்புகள் நடத்திக்கொண்டிருந்தேன். அங்கெல்லாம் பவர்பாயின்ட் பிரசன்டேஷனைவிட வெண்பலகையைத்தான் மிகுதியாக நம்புவேன்.|3
Bonafide Certificate என்ற சொல்லைப் பல இடங்களில் கேட்டிருக்கிறேன். 'இவர் எங்கள் பள்ளி/கல்லூரி/நிறுவனத்தைச் சேர்ந்தவர்' என்று அந்தப் பள்ளி/கல்லூரி/நிறுவனத்தின் நிர்வாகத்தினர் வழங்கும் சான்றிதழ் இது என்று தெரியும், ஆனால், |1
அதை ஏன் 'Bonafide Certificate' என்று அழைக்கிறார்கள் என்றோ, இதிலிருக்கும் 'Bonafide' என்ற சொல்லின் நேரடிப் பொருள் என்ன என்றோ யோசித்ததில்லை.
இன்றைக்கு ஒரு கட்டுரையில் 'Mala fide' என்ற சொல்லைப் பார்த்தேன். இதை எங்கேயோ கேள்விப்பட்டதுபோல் இருக்கிறதே என்று யோசிக்கும்போது, |2
இதற்கும் Bonafideக்கும் தொடர்பு இருக்குமோ என்று தோன்றியது, கூகுள் செய்து பார்த்தேன், இவை இரண்டும் எதிர்ச்சொற்கள் என்று தெரிந்துகொண்டேன்.
முதலில், Bonafide என்பது ஒரு சொல் இல்லையாம், ‘Bona fide’ என்று இதை இரண்டு சொற்களாகப் பிரித்து எழுதவேண்டும். |3
ஹைதராபாதில் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கருகில் ஒரு சிறிய உணவகம், அசைவ உணவுக்கு மிகவும் புகழ் பெற்றது. எப்போது அங்கு சென்றாலும் பெரிய கோழிகள் ஒன்றிரண்டை அப்படியே உரித்துக் கம்பியில் குத்திச் சுட்டுக்கொண்டிருப்பார்கள். |1
அப்போது என்னுடன் தங்கியிருந்த இருவரும் அசைவம் சாப்பிடுகிறவர்கள் என்றுதான் நினைவு. ஆனால், ஆந்திரக் காரத்தை ருசிப்பதில் அவர்களுக்கு ஏதோ தயக்கம் இருந்தது. ஆகவே, அவர்களும் தாற்காலிகமாகத் தாவர உண்ணிகளாகியிருந்தார்கள், ஊருக்குப் போகும்போதுமட்டும்தான் மாமிச உணவு. |2
இதனால், அவ்வளவு பக்கத்தில் இருக்கிற அந்தப் புகழ் பெற்ற உணவகம் எங்களுக்குப் பயன்படவே இல்லை. நாள்தோறும் இருமுறை அந்தப் பக்கமாக நடந்து செல்வதோடு சரி, எப்போதும் உள்ளே நுழைந்ததில்லை. |3