தோழர்களே வெற்றிகரமாக 2 வருடம் கழித்து இந்தியா வந்தாச்சு. கும்பலா சுத்துவோம் 2 மாசத்துக்கு இந்தியால இருந்து செயல்படும். இந்தியா வந்த கதையை சிரிப்பு கலந்து பார்ப்போம்.(Thread) #Sweden#gumbalasuthuvom#tamilyoutuber
முதல் நாள்: தொடர்ந்து பனிப்பொழிவு இருப்பதால் இந்தியா பக்கம் போலாமா இல்ல இங்கேயே இருந்து கஷ்டபடவானு ஒரு நல்ல சீட்டா போது ராசா 😂😂😂
சரி இந்தியா பக்கமே போலம் என்று முடிவு செஞ்சு covid rules பற்றி பார்க்கலாம் என்று முடிவு செஞ்சா இவ்ளோ பெரிய rules சொன்னாங்க...
2 நாள் கண் விழித்து எல்லா form உம், fill செஞ்சு, printout எல்லாம் எடுத்து தயார் ஆனாலும் மனசுல கொஞ்சம் பயம் எந்த ஊர்ல நம்மை பிடிச்சு வைப்பாங்களோ என்று 😶😌
ஸ்வீடன் - ஜெர்மனி Lufthansa airlines மூலம் வந்தோம். சுவீடன் விமான நிலையத்தில் பெரிய கூட்டம் இல்லை இருப்பினும் நாங்கள் வந்த விமானத்தில் கிட்டத்தட்ட house full தான். எங்கள் மனநிலை இது தான் 😂
வாக்கபட்டது தான் விருசம்பழம் என்றால் சென்ற Frankfurt அதை விட கொடுமையாக இருந்தது. 1 மணிநேரத்திற்க்கு மேல் வரிசையில் (திருப்தி கோவில் போல) நின்று கால்கள் வலிக்க ஆரம்பிக்க. ஒரு வழியாக immigration முடித்தோம். ஸ்வீடனை காட்டிலும் கூட்டம் அதிகம் தான் (அதிக விமான சேவை இருக்கலாம்)
அப்பாடா இனி அவ்ளோ தான் நேரா gate க்கு போலாம் என்று நடக்க நடக்க போய்கிட்டே இருந்தது. கிட்டத்தட்ட இந்த படத்தில் இருந்தது போல தான் நிலை.. என்ன தூரம்?!.. Frankfurt ல இறக்கி விட்டுட்டு Hamburg வரை நடக்க விட்டுடங்கப்பா 😌😶
ஒரு வழியா விமானம் உள்ளே போயாச்சு. பெருசா எந்த formality உம் இல்ல. உணவு சாப்பிட வட இந்திய உணவு தந்தாங்க. பாலக் பன்னீர் குழம்பு + ராஜ்மா மசாலா குடுத்தாங்க. சாப்பிட ஓரளவு நல்லா தான் இருந்தது. 4 மணிநேரம் கழித்து ஸ்நாக்ஸ் குடுத்தாங்க சமோசா + ketchup. 👌👌👌(10 hour flight)
பெங்களூரு வந்தவுடன் கொரோனா டெஸ்ட் எடுத்த ரசீது + உடல் வெப்பத்தை பரிசோதனை செய்தனர் + self declaration form வாங்கிக்கொண்டார்கள். விடியற்காலை என்பதால் கூட்டம் சுத்தமாக இல்லை. கூட்ட நெரிசலும் இல்லை 👌
பெங்களூருவில் இருந்து தமிழ்நாடு வர ஏர் இண்டிகோ மூலம் வந்தோம். விமான நிலையத்தில் அத்தனை கூட்டம் பெரிய கவலையே இல்லை.. என்ன இருந்தாலும் பாதுகாப்பு கவசம், face shield, PPE kit Ellam குடுத்தாங்க. என்ன இருந்தும் சமூக இடைவெளி வைக்க வைப்பே இல்லை ராசா..
ஒரு வழியா நம்ப ஊர் வந்து சேரும்போது எங்கள் நிலமை இதுவே 😂😂😂 நன்றி!
#Thread#Covid19#TrueStory நெருங்கிய நண்பரின் தந்தை கொரோனவால் இறந்துவிட்டார். ஒரு வாரமாக காய்ச்சல், சளி என்று இருந்தும் வீட்டிலேயே மருத்துவம் பார்த்துள்ளார். மூச்சு விடவே ரொம்ப சிரமம் ஆனா பின்தான் மருத்துவமனை சென்று பார்த்தார். (1/10)
வெள்ளிக்கிழமை பார்த்துவிட்டு கொரோனா பரிசோதனைக்கு கொடுத்துத்துவிட்டு திங்கள் வருமாறு கூறியுள்ளனர் (மருத்துவமனையில்). ஞாயிறு அன்றே ரொம்ப முடியாமல் போனதால் உடனே அனுமதிக்கப்பட்டார் (அரசு மருத்துவமனையில்). (2/10)
திங்கள் காலை கொரோனா தொற்று உறுதி செய்தபின் பார்த்தால் நுரையீரலில் 85% கொரோனா தொற்று பரவி விட்டதாம். காப்பாற்ற கொஞ்சம் கஷ்டம் என்று சொல்லி வெண்டிலேட்டர் மூலம் காப்பாற்ற முயலும் முன்பே வலியில் இறந்துள்ளார். (3/10)
ஒரு சில ஐரோப்பா நாடுகள் போல ஸ்வீடெனிலும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதாக செய்தி. ஸ்டோக்ஹோல்ம் நகரில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகரிப்பதாகவும் வெளியில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. உஷாரு அய்யா உஷாரு! #coronavirus
கொரோனா முடிந்துவிட்டது என்று நினைக்காமல் விழித்திரு என்ற தொனியில் மருத்துவ துறை சார்ந்த வல்லுனர் கூறியுள்ளார். இந்த தொற்று முடிவடைய பல காலம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.