📍ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஒன்றிணைக்கவும், நாளை முதல் 3 நாட்கள் நடைபெற உள்ள G7 முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளவும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜெர்மனி செல்கிறார்.
🔴 #THREAD | பன்முக கலாச்சார நிலத்தில், பல வண்ண மலர்கள் மலர முடியுமா? மதவாத நாட்டில் 'கருணை' நிலவு ஒளிர முடியுமா?
அர்த்தநாரீஸ்வரர் தன் சொந்த பக்தர்களின் தேசத்தில்,நடமாடி வாழ முடியுமா?
"ஆம்" என்று பதில் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும்; ஆனால்... (1/n)
✍️Writes, @donAshoklive
துரதிர்ஷ்டவசமாக, நமது வெளிவேஷ, அதிநவீன (பிற்போக்கு) மனித சமுதாயத்தில் பதில் மாற்றப்பட்ட ஒன்றாகவே உள்ளது.
சமூக ஊடகங்கள் பலருக்கு உதவியாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருக்கலாம்; ஆனால் சிலருக்கு, அதுவும் குறிப்பாக LGBTQ வாக அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்களுக்கு...(2/n)
வெறுப்பை உமிழும் தளமாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியைச் சேர்ந்த ஒப்பனைக் கலைஞரான பிரன்சுவும், ஆன்லைன் வெறுப்பு உமிழ்வில் சிக்கிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். (3/n)
🔴 #BREAKING | 2016 முதல் 2021 ஆட்சி காலத்தின் செயல்திறன் குறித்து CAG வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்
⏬ 1/11
📌 கடந்த 2016-21 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாடு அரசு உயர்நிலை பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 14.76% சதவீதமும், மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 11.84% சதவீதமும் குறைந்துள்ளது
⏬ 2/11
📌 2016-21 ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட 528 பள்ளிகளில் 515 பள்ளிகள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை மற்றும் போதிய உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவில்லை.
🔴 இன்று முதல், உயிரை இழக்கப்போகும் அனைத்து உக்ரேனிய மக்களுக்கான காரணம், நீங்கள் மட்டுமே.
உங்கள் பலவீனத்தாலும் உங்கள் ஒற்றுமை இன்மையாலும் தான், மக்கள் உயிரிழக்க போகிறார்கள்.
- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, NATO நாடுகள் மீது கடுமையான விமர்சனம் (1/5)
வெறும் 50 டன் டீசலை உங்களால் உக்ரைனுக்கு வழங்க முடிந்துள்ளது. அதை வைத்து நாம் "Budapest குறிப்பாணையை" வேண்டுமானால் எரிக்கலாம்.
#BudapestMemorandum: சோவியத் கால அணு ஆயுதங்களை உக்ரைன் கைவிட்டதற்கு ஈடாக, 1994இல் அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்களின் குறிப்பாணை ஆகும்.
அவர் மேலும் கூறியதாவது: உக்ரைனின் வான்வெளியை மூடினால், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை நேரடியாகத் தூண்டும் என NATO நாடுகளே ஒரு கதையை உருவாக்கியுள்ளன.
இது பலவீனமான, தன்னம்பிக்கை இல்லாதவர்களின் செயலாகும். 3/5
🔴#BREAKING | கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் SWIFT சேவையின் பயன்பாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு தடை விதிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
விரைவில் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், ரஷ்யாவுக்கு வரும் பாதிப்பு என்ன? #இழை🧵 (1/6)
ஒரு நாட்டின் எல்லையை தாண்டி நடைபெறும் பண பரிவர்த்தனையை சுமூகமாக நடைமுறை படுத்த 1973 ஆம் ஆண்டு முதல், SWIFT என்ற அமைப்பு பெல்ஜீயத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
ரஷ்யா உட்பட சுமார் 200 நாடுகளில் 11,000 நிதி நிறுவனங்களால் இந்த SWIFT சேவை பயன்படுத்தப்படுகிறது. (2/6)
உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத் தொடர்புகளுக்கான சமூகம் என்ற இந்த SWIFT அமைப்பை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள் ஒருங்கிணைந்து உருவாக்கியது.
ரஷ்யாவை அதிலிருந்து தடை செய்வதால், உதாரணமாக: எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு ரஷ்யா பணம் பெறுவதில் இழப்பு ஏற்படும். (3/6)