, 48 tweets, 5 min read
My Authors
Read all threads
சாதி ஒழிப்பும், சாதிச்சான்றிதழ் ஒழிப்பும் !

#Thread

இச்செய்தியை அனுப்பி, இது தமிழ்நாட்டிலும் செய்யப்பட வேண்டும் என்கிறார்கள் சிலர். இச்செய்தி தவறு; தொழில்நுட்ப கோளாறால் தவறான புள்ளிவிவரங்கள் வெளியானது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால்,
சாதிஒழிப்பும், சான்றிதழ் ஒழிப்பும் ஒன்றா? Image
சாதியை ஒழிக்கவேண்டும் என எல்லோரும் விரும்புவதாக நாம் நம்புவோம். சரி. எங்கிருந்து சாதி இயங்குகிறது நாம் ஒழிக்க விரும்பும் சாதி?
நாம் அன்றாடம் நூற்றுக்கணக்கான செயல்களில் ஈடுபடுகிறோம். இது அத்தனைக்கும் இயங்குதளம் என்று ஒன்றிருக்கும். குறிப்பிட்ட இயங்குப்புள்ளியிலிருந்தே (Operating point) எந்த ஒரு செயலும், எண்ணமும், நடவடிக்கையும் தொடங்கும்.
சாதி முழுக்க முழுக்க மனிதர்கள் சார்ந்தது; இந்தியர்களை மட்டுமே சார்ந்தது. எனில், சாதியின் இயங்குப்புள்ளி எது?

மனிதர்களின் பிழைப்பின அகவுணர்வு (survival instinct) என்பேன் நான்.
பேரரசு உருவாக்கக் காலகட்டத்திலேயே சாதியின் விரிவும் ஆழமும் தொடங்குகிறது. கோடிக்கணக்கான மக்களை ஒற்றைப் பேரரசின் கீழ் கட்டி நிறுத்தும் வேட்கையும், பேரரசின் அதிகாரம் குழு அதிகாரமாக - குறிப்பிட்ட பிரிவினரின் கீழ் மட்டும் கட்டுண்டு கிடக்கும் வடிவமைப்பாகவுமே சாதி விரிவடைகிறது.
எண்ணற்றத் தொழில்கள், சமூக உறவுகள், உற்பத்தி உறவுகள் இவை அனைத்தையும் பேரரசின் அதிகார லட்சணத்துக்குள் கட்டிப்போடும் உத்தி சாதி; அந்த சாதியின் இயங்குதளம் பிறப்பு. மாற்றத்துக்கே இலக்காகாத, ஒரே ஒருமுறை மட்டுமே நடக்கக்கூடிய மனித வாழ்வின் மீப்பொன் நிகழ்வான பிறப்பே சாதியின் இயங்குதளம்.
பிறத்தல் என்கிற முழுமுதல் செயல் நடந்தபிறகு, பிழைத்திருத்தல் என்கிற அடுத்த உடனடி செயல் தொடங்கிவிடுகிறது.
பிழைத்திருத்தலுக்கான மூலத்தேவை உழைப்பைக் கையாளுதல். தன் உழைப்பையும், சமூக உழைப்பையும் கையாளுவதன் சூத்திரமே பிழைத்திருப்பதற்கான அடிப்படை. இச்சூத்திரத்தின் வெற்றியைப் பொறுத்தே நாம் என்னவாக பிழைத்திருக்கப்போகிறோம் என முடிவுவாகும். நம் திறனைப் பொறுத்து ராஜாவாகவும், கூஜாவாகவும் ஆகலாம்
யோசித்துப் பாருங்கள். நம் சமூகத்தில் திறன்சார் முன்னேற்றம் மட்டுமே அடிப்படை என இருந்து, அவரவர் திறமைக்கு நாம் முன்னேறலாம் என இருந்தால் எப்படி இருக்கும்?
திறன்சார் முன்னேற்றம் இருந்தால் அதிகாரம் தொடர்ச்சியாக கை மாறிக்கொண்டே இருக்கும். நிரந்தரமற்ற சொத்தாக அதிகாரம் உருவெடுக்கும். எவனுக்குத் திராணி இருக்கிறதோ, எவன் வெல்லும் ஆற்றலோடு இருக்கிறானோ அவன் அதிகாரத்துக்கு வருவான்.
ஆனால், அதிகார கைமாற்றம் நடக்கவே கூடாது, எந்தச் சூழலிலும் அதிகாரத்தின் பிடிமானம் ஒரு குழுவின் கையில் இருக்கவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?

அணுகல் துண்டிப்பு (Accessibility Cut) !
உங்கள் திறன், ஆற்றல், உழைப்பு இது மூன்றும் எத்தகையதாக இருந்தாலும் அதை நீங்கள் பயன்படுத்த முடியாத ஒன்றாக மாற்றவேண்டும். அதற்கு திறன், ஆற்றல், உழைப்பு இவை மூன்றும் எங்கு செயல்படவேண்டும், எங்கு செயல்படக்கூடாது என உங்களை அணுகல் எல்லைகளை ( accessibility range) வரையறுக்க வேண்டும்.
சாதி என்ன செய்கிறது? நம் ஒவ்வொருவருடைய அணுகல் எல்லையைத் தீர்மானிக்கிறது. சிலரை பார்க்கவே கூடாது, சிலரைத் தீண்டவே கூடாது, சிலரிடம் பேசவேக்கூடாது எனத்தொடங்கி, 'கூடாது' என்கிற துண்டிப்பை மையப்படுத்தி நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் தீர்மானிக்கிறது.
தீர்மானிக்கப்பட்ட சமூக உறவுகள், கட்டுப்படுத்தப்பட்ட உற்பத்தி உறவுகள், கறாராக வரையறுக்கப்பட்ட உழைப்புக்கான பயன்விளைவு என மிக மிக நுணுக்கமாக நம்முடைய எல்லைகள் முடிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்த எல்லைகளைத் தாண்டி நாம் புதிய வரையறையை உருவாக்க நினைத்தாலும், இந்தியச் சூழலில் அதுவும் சாதிக்குள் தொடங்கி சாதிக்குள்ளாகவே முடியும். உதாரணமாக, இசுலாமிய படைப்பு காலத்தில் இந்து மத கற்பிதத்தை வைத்து நடந்த நாயக்கர்களின் எழுச்சியை சொல்லலாம்.
திடீரென வீறுகொண்டு எழுந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய நாயக்கர்கள் சாதியை ஒழிக்கவோ, கரைக்கவோ செய்யவில்லை. மாறாக சாதியை துல்லியமாக மறு ஆக்கம் செய்து அதன் எல்லைகளை அன்றைய மாறும் சூழலுக்கு ஏற்ப இறுக்கினர்.
மிகக்கறாரான சாதி அமைப்பு, தெரு, சாலைகள், வீடு, கோவில், தொழில், மயானம் என அனைத்துத்தளத்திலும் பௌதிகக்கட்டுமானத்தை இறுக்கிக்கொண்டது.
ஆனால், பிரிட்டிஷ் காலத்தில், நவீன ஜனநாயகம் மெல்ல உருவாகத்தொடங்கியதிலிருந்து சாதியின் அமைப்பு ஒரு மிகப்பெரும் சிக்கலுக்கு உள்ளானது. 'சமவாய்ப்பு' எனும் சிக்கல். 'ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு' எனும் சிக்கல். எல்லாவற்றையும் 'ஜனநாயகப்படுத்தல்' என்கிற கோட்பாட்டின் சிக்கல்.
ஒருபக்கம் ஒரு ஓட்டு - ஒருமதிப்பு என சமவாய்ப்பு. இன்னொருபக்கம் முற்றான ஏற்றத்தாழ்வான சமூகம்.

இவன் எனக்கு கீழானவன் - நான் அவனுக்கு மேலானவன் என நம் மனம் முடிவுசெய்து சமூகக்தைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது. அதனால் உருவானஏற்றத்தாழ்வுகள் பொருளாதாரம்,வாழ்க்கைத்தரம்என புறவயமாகஇருந்தது.
ஆனால், அரசு என்பது முழுக்க முழுக்க புறவயமான செயல்களில் ஈடுபடவேண்டிய ஒரு அதிகார நிறுவனம். எனவே, ஜனநாயக அரசு என்கிற கோட்பாடு மேலெழுந்து வருகையில் சாதிக்கு எதிரான புறவயசெயல்பாடுகளை தொடங்கவேண்டிய கட்டாயத்தை அன்றைக்கு இருந்த சமூக இயக்கங்களும், சீர்திருத்தப் போராளிகளும் ஏற்படுத்தினர்.
பெரியார், அம்பேத்கர் போன்ற சீர்திருத்தவாதிகள் இதில் பிதாமகர்கள்.
இப்போது அரசு செயல்படுகிறது. ஆனால், சிக்கல் மாறுகிறதா? சாதியின் இயங்குதளமான பிறப்பையொட்டிய நம்பிக்கைகளை அரசால் நெருங்க முடிந்திருக்கிறதா? இல்லை.
ஏனென்றால், ஜனநாயகம் என்பது பெரும்பான்மை. வாக்கரசியல் என்பதும் பெரும்பான்மை. எனவே, சமூகத்தின் பெரும்பான்மை சாதியைக் கைவிட மறுப்பதன் விளைவைத் தாண்டிய தாக்கத்தை, பெரும்பான்மையின் தேர்வுக்கு உள்ளாகும் எந்த அரசும் செய்ய முடியாது.
சரி. ஏன் மக்கள் சாதியைக் கைவிட மறுக்கிறார்கள்? முன்பு சொன்னதுதான் விடை. 'பிழைப்பின அகவுணர்வு'.
திறன், ஆற்றல், உழைப்பு இது மூன்றையும் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பது 'வாய்ப்பு'. வாய்ப்பை தீர்மானிக்கும், நிர்ணயிக்கும் மறைமுகக் காரணிகளாகவும், செயலாக்கக் காரணிகளாகவும் இருப்பவை சமூக அந்தஸ்தும், அதன் வழி கிடைக்கும் உரிமைகளும்.
ஒரு பொது அரசாங்கம் சமவாய்ப்பை ஏற்படுத்தி சமூகத்தட்டை சீர்செய்ய நினைக்கிறது. ஆனால், அதிகார பிடிமானத்தை இழந்துவிட நினைக்காத ஆதிக்கக் குழுக்கள் உழைப்பு, திறன், ஆற்றல், வாய்ப்பு இவற்றுக்கு அப்பாலான பொது சமூக அதிகாரக் காரணிகளை வலுப்படுத்த நினைக்கின்றன.
மதம், கடவுள், ஆச்சாரம், ஒழுக்கம் என்கிற பெயரிலான உறவுக்கட்டுப்பாடுகள் என பலவற்றையும் இப்படிச் சொல்லலாம்.
யோசித்துப் பாருங்கள்.

ஒரு பார்ப்பனர், இன்றைக்கும் தனித்த ஆச்சாரங்களை கடைபிடிக்கிறார். இந்த ஆச்சாரங்களால் உண்டாகும் பொருளாதார விளைவுகள் என்ன? நேரடியாக ஒன்றுமில்லை. ஆனால், உடனடியான சமூகப்பலன்களை அவை உண்டாக்குகின்றன.
நம் சமூகத்தின் உற்பத்தி உறவுக்கும், சமூக உறவுக்கும் கொஞ்சமும் தொடர்பில்லாத ஆச்சாரங்கள் ஒரு பார்ப்பனரின் தனித்துவத்தை உயர்த்துகிறது.
உழைப்புக்கும், பிழைப்பினத்துக்கும் அப்பாலான சமூக அந்தஸ்த்துகளை உருவாக்குகிறது. பிறர் கடைபிடிக்காத அநாவசியங்களை, அன்றாட நடவடிக்கைகளாக ஒரு பார்ப்பனர் கடைபிடிக்கும்போது உழைப்பால், திறனால், ஆற்றலால் சமூகத்தில் கிடைக்காத கூடுதலான இடத்தை கற்பிதமாகவாவது ஒரு பார்ப்பனர் பெருகிறார்.
இன்றைய நவீன வாழ்க்கைக்குத் தேவையில்லாத, அதன் சமூக - பொருளாதார உறவுகளுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத வழமைகளைக் கடைபிடிப்பது வெற்று முரட்டித்தனமோ, அசட்டுத்தனமோ, பழமைவாதமோ மட்டுமே அல்ல.
எனக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்பதைவிட, எனக்கு கீழ் ஒருவனாவது இருக்கிறான் குறைந்தபட்ச திருப்தி ஒருவரின் பிழைப்பின அகவுணர்வை வலுப்படுத்துகிறது.
எந்த உழைப்பும் இல்லாமல், எந்தப்பங்கீடும் இல்லாமல் பிறந்த உடனேயே, வெறும் பிறப்பால் மட்டுமே கிடைக்கும் இந்த சமூக அதிகாரத் தொடர்பை கைவிடுவதற்கான மறுப்பு அது.
எந்தவொரு சூழலிலும் சமூக அதிகாரமும், அரசியல் அதிகாரமும் சமவாய்ப்புக்குரியதாக மாறிவிடக்கூடாது என்கிற நிரந்தர விருப்பம்.
இந்த விருப்பம் பதற்றத்துக்கு உள்ளாகும்போதுதான் வன்முறைகள், வெறியாட்டங்கள், படுகொலைகள் நடக்கின்றன. வன்முறையினால் உண்டாகும் மனித சமூக அழிவைக் காட்டி, ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக அதிகாரம் கைமாறுவதை தொடர் இடைஞ்சல்களால் தாமதப்படுத்துகிறார்கள்.
இந்தபுரிதலின் பின்னால் நின்று பார்த்தால், சாதியை ஒழிக்க சாதிச்சான்றிதழ் ஒழிப்பு எவ்வளவு மட்டகரமான திட்டம் என்பது புரியும்.

சாதியை ஒழிக்க அதன் இயங்குதளத்தை (பிறப்பை) ஒழிக்கவேண்டும்; அதன் இயங்குபுள்ளியான பிழைப்பின அகவுணர்வை உருமாற்ற வேண்டும்.
திராவிட இயக்கத்தின் மகத்தான பணியே இந்த இரண்டு தளத்தையும் நிறைவுசெய்வதற்கான உழைப்புதான்.
பிறப்பைக் குறித்து நம்பிக்கைகளை ஒழிப்பது என்பது பிரச்சாரம் சார்ந்தது. பிழைப்பின அகவுணர்வை ஒழிப்பது என்பது சமூக - பொருளாதார மாற்றங்கள் சார்ந்தது.
ஆனால், பிரச்சாரத்தைவிட வலிமையானதும், நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதும் சமூக பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தி, பிழைப்பின அகவுணர்வை மாற்றுவதற்கான பணிகள் தான்.
சாதி ஒழிப்பு என்பது பிழைப்பதற்கு சாதி தேவையில்லை என்பதில் மெல்லத் தொடங்கி சாதி இருந்தால் பிழைப்பினமே சிக்கலுக்கு உள்ளாகும் என்கிற பெருங்கட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டிய பெரும் இலக்கு.
கல்வி, வேலைவாய்ப்பு, சமவாய்ப்பு, சம உரிமை, சமூக அந்தஸ்து, வாழ்க்கைத்தரம், பொது மரியாதை என பல்வேறு தளத்திலும் சாதி இயங்குவதற்கான களத்தை ஒழிக்கவேண்டும். சாதி எப்படி அணுகல் துண்டிப்பை நிகழ்த்துகிறதோ, அதைப்போலவே சாதி இயங்குவதற்கான தேவைகளைத் துண்டிப்பதே பெரும் அடியாக இருக்கும்.
ஆனால், அது சுலபமானதல்ல. இந்தியாவின் நிலவுடைமைத் தாக்கத்தோடு இருக்கும் ஜனநாயகத்தில் அது எவ்வளவு கடினமான பணி என நாம் தொடர்ந்து பார்த்துவருகிறோம். ஆனால் அதைத்தாண்டியும், நவீன ஜனநாயகக் கோட்பாடும், வாழ்க்கை முறையும் கணிசமான அளவுக்கு சாதிக்கரைப்பில் பணியாற்றியுள்ளன.
நமக்கிருக்கும் ஒரேவாய்ப்பு. நவீன ஜனநாயகக் கோட்பாடுகளின்படி இயங்கி சாதியை ஒழிக்க நினைக்கும் இயக்கத்தையும், பணிகளையும் வலுப்படுத்துவதே.
சாதியின் அணுகல் எல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாகத் துண்டிப்பதற்கு சாதியைக் கண்டடைந்துகொள்வதும், அடையாளம் காண்பதும் முக்கியம். உங்கள் பெயர் என்னவென்று தெரியாமல் உங்களை அழைக்கமுடியாது என்பதைப் போன்ற சிக்கல் இது.
சாதிச்சான்றிதழ் என்பது உங்களது வரலாற்றுரீதியான இழப்பை, உங்கள் திறன், ஆற்றல், உழைப்பு அடைந்த நட்டங்களை கண்டுபிடிப்பதற்கான ஆவணம். அதை ஒழிப்பதால், வரலாற்றில் உங்கள் பழங்காலத்தை உங்களால் ஒரு போதும் அழித்துவிட முடியாது.
சாதி என்பது ஒருவகையில் நம் உடல் போல. குரங்கு மனிதன் உலக, புவியியல் மாற்றத்துக்கு ஆட்பட்டுஆட்பட்டு இன்றைக்கு நாம் காணும் உருவத்தோடு இருக்கிறான். 7 அடி உயரமனிதன், மிகதடித்த ரோமம், மிகக்கடுமையான பற்கள், பச்சை இறைச்சியை செரிக்கும் அளவு அதீதமான செரிமான ஆற்றல் எதுவும் இன்று தேவையில்லை.
நூடல்ஸ்க்கும், பிரட்டுக்கும் ஏற்ப நம் குடலும் செரிமானமும் மாறியுள்ளதைப் போல ஒருநாள் சாதியின் தயவே இல்லாத சமூக பொருளாதார உறவுகள் முழுமையாய் சாத்தியப்படும். இன்று எங்கெல்லாம் சாதி கழிந்திருப்பதை, சாதி தேய்மானத்தை பார்க்கிறீர்களோ அங்கு இந்த சமூக பொருளாதார மாற்றமே நடந்திருக்கிறது.
நம் வேலை என்பது இதற்கான வழித்தடத்தை அமைப்பதற்கான ஆவணங்களை அழிப்பதல்ல; வழித்தடத்தை உருவாக்க நம் பங்கைச் செலுத்துவது மட்டுமே.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vivek Gananathan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!